இந்த ஆண்டு 5 மற்றும் 8ஆம் வகுப்புமாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தும்முடிவிலிருந்து தமிழக அரசுபின் வாங்காது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்செங்கோட்டையன்திட்டவட்டமாகக்கூறியுள்ளார்.
சென்னைநுங்கம்பாக்கத்தில் உள்ளதனியார் அரங்கில், தமிழர்திலகம் பத்திரிகையின்2ஆம் ஆண்டு துவக்கவிழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்செங்கோட்டையன்கலந்துகொண்டார்.நிகழ்ச்சியில் பேசிய அவர்,அனைத்து அரசுபள்ளிகளிலும் எல்கேஜி,யுகேஜி வகுப்புகள் கொண்டுவருவதற்கானநடவடிக்கைகள் விரைவில்மேற்கொள்ளப்படும்என்றார். 1 ஆம் வகுப்பு முதல்12ம் வகுப்பு மாணவர்கள்வரை சரளமாக ஆங்கிலம்பேச, ஆயிரம் ஆங்கிலவார்த்தைகள் என்றபாடத்திட்டத்தின் கீழ் வாரம்45 நிமிடங்கள் பயிற்சிஅளிக்கப்பட்டு வருவதாகபள்ளிக் கல்வித்துறைஅமைச்சர் தெரிவித்தார்.
விடுமுறை நாட்களில், ஓய்வுபெற்ற தமிழாசிரியர்களைகொண்டு தமிழ் பயிற்சி,மற்றும் நீதிபோதனைவகுப்புகள் நடத்தவும் அரசுமுயற்சிகள் மேற்கொண்டுவருவதாகசெங்கோட்டையன்தெரிவித்தார்.
தொடர்ந்துசெய்தியாளர்களிடம் பேசியஅவர், 5 மற்றும் 8 ஆம்வகுப்பு மாணவர்களுக்குபொது தேர்வை ரத்துசெய்திட வேண்டும் என்றுஎழுந்துள்ள கோரிக்கைகள்பற்றி, அடுத்த ஆண்டு முதல்பரிசீலிக்கப்படும் என்றுகூறினார்.
நடப்பாண்டுகட்டாயம் பொது தேர்வுநடத்தப்படும் எனவும்உறுதிபட தெரிவித்தார்.இவ்விழாவில் முன்னாள்அமைச்சர் எச்.வி ஹன்டேமற்றும் சின்னத்திரைபிரபலங்கள் உள்ளிட்டோர்கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment