அமிதாப் பச்சன் சொன்னது...
எனது வாழ்க்கையில் புகழின் உச்சக் கட்டத்தில் நான் இருந்த போது, விமானம் மூலம் ஒரு முறை பயணம் செய்தேன்.
எனக்கு அருகில் இருந்த பயணி,
ஒரு சாதாரண சட்டை,பேண்ட்
அணிந்து அமர்ந்திருந்தார்.
வயதான மனிதர்,
நடுத்தர வர்க்கம்,
நன்கு படித்தவர் போன்று அவர் தோன்றினார்.
நான் யார் என்பதை மற்ற பயணிகள் கண்டு கொண்டார்கள்.
என் இருக்கையின் அருகில் வந்து ஹலோ சொல்லி கை கொடுத்தனர்.
ஆனால் இந்த மனிதர் மட்டும் என் இருப்பை உணரவும் இல்லை.
என்னை கண்டு கொள்ளவும் இல்லை.
ஒருவேளை, அவர் நாளிதழை உன்னிப்பாக படித்துக் கொண்டிருந்ததால்,
என்னை கவனிக்கவில்லையோ என எண்ணினேன்.
தேநீர் வழங்கப்பட்ட போது, அமைதியாக அதை எடுத்து, ரசித்து பருக ஆரம்பித்தார்.
என்னை அவருக்கு யார் என்று தெரியவில்லையா?
அல்லது தெரிந்தும் தவிர்க்கிறாரா?
என்னால் பொருத்து கொள்ள முடியாமல்,
அவருடன் ஒரு உரையாடலைத் துவக்கும் முயற்சியில் நான் அவரை பார்த்து சிரித்தேன்.
அந்த மனிதரும் புன்னகை செய்து, 'ஹலோ' என்று சொன்னார்.
நாங்கள் பேச ஆரம்பித்தோம்.
சமூகம்,
பொருளாதாரம்,
அரசியல்,
என்று பல விஷயங்களை பற்றி பேசினோம்.
அவரின் பேச்சில், ஒரு லயிப்பும் ஈர்ப்பும், தேர்ந்த ஒரு நேர்த்தியும் இருந்ததை நான் உணர்ந்தேன்.
சினிமா மற்றும் திரைப் படங்கள் சம்பந்தமான விஷயங்களை நான் வேண்டுமென்றே கொண்டு வந்தேன்.
நீங்கள் திரைப்படங்கள் பார்ப்பீர்களா என வினவினேன்.
ஓ, மிக சில. பல ஆண்டுகளுக்கு முன்பு நான் பார்த்திருக்கிறேன் என அந்த மனிதர் பதிலளித்தார்.
நான் திரைப்பட துறையில் தான் இருக்கிறேன் என்று குறிப்பிட்டேன்.
அப்படியா? ரொம்ப நல்லது.
நீங்கள் அந்த துறையில் என்ன செய்கிறீர்கள் என கேட்டார்.
நான் ஒரு நடிகர் என பதிலளித்தேன்.
அவரிடமிருந்து எந்த வித சலனமும் இல்லை.
அதன் பின் நாங்கள் இறங்கி வெளியேறும் போது,
உங்களுடன் பயணம் செய்தது மிக்க மகிழ்ச்சி.
நல்லது,
என் பெயர் அமிதாப் பச்சன் என்றேன்.
அந்த மனிதரும் மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டே,
உங்களை சந்தித்த இந்த நாள்,
நல்ல நாளாக இருக்கட்டும் என கூறி:
என் பெயர்: JRD டாட்டா.
மோட்டார் தொழில் செய்கிறேன் என்றார் பணிவுடன்.
நான் விக்கித்து நின்று விட்டேன்.
அன்றுதான் நான் கற்றுக் கொண்டேன் பணிவை பற்றி.
பேரையும், புகழையும் வைத்து,
நாம் தான் பெரிய ஆள், என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.
ஆனால், நம்மை விட வசதியிலும்,
அறிவிலும், படிப்பிலும் உயர்ந்தவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள்.
எப்போதுமே பணிவாய் பேசுங்கள்.
நல்ல நடத்தை, பண்பு என்பது அறிவை விட மேலானது.
வாழ்க்கையில் பல கால கட்டங்களில்,
அறிவு, பணிவிடம் தோற்றுப் போய் உள்ளது.
பணிவும் நல்ல நடத்தையும்,
எல்லா இடத்திலும் வென்றுள்ளது.
அது உங்களை சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் கொண்டு போய் வைக்கும்...♥♥♥
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteGood morning mam
ReplyDeleteGood morning Ano Mam
ReplyDeletetrt epa varuum mam
ReplyDeletepg posting poduvngala illa june thana anu mam
ReplyDeleteTNPSC பிரச்சனையில இப்பொழுது எந்த பட்டியலும் வருவதற்கு வாய்ப்பு குறைவே
ReplyDelete