சேலம் உள்பட ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வியாழக்கிழமை பிறப்பித்தார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட உத்தரவு:- (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்)
எம்.விஜயலட்சுமி- திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் (அரியலூர் மாவட்ட ஆட்சியர்)
டி.ஜி.வினய்- அரியலூர் மாவட்ட ஆட்சியர் (திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்)
எஸ்.ஏ.ராமன் - சேலம் மாவட்ட ஆட்சியர் (வேலூர் மாவட்ட ஆட்சியர்)
டி.எஸ்.ராஜசேகர்- மதுரை மாவட்ட ஆட்சியர் (தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளர்) -மதுரை மாவட்ட ஆட்சியர் பொறுப்பை வருவாய் கோட்ட அதிகாரி எஸ்.சாந்தகுமார் கூடுதலாக கவனித்து வந்தார்.
ஆர்.சீதாலட்சுமி- சென்னை மாவட்ட ஆட்சியர் (தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகப் பதிவாளர்)
ஏ.சண்முகசுந்தரம் - வேலூர் மாவட்ட ஆட்சியர் (சென்னை மாவட்ட ஆட்சியர்)
ரோகிணி ஆர்.பாஜிபாகரே- தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகப் பதிவாளர் (சேலம் மாவட்ட ஆட்சியர்)
Comments
Post a Comment