2017-18இல் முடித்த +2 மாணவர்களுக்கு அடுத்த 3 மாதத்தில் மடிக்கணினி வழங்கப்படும்-அமைச்சர் செங்கோட்டையன்
கோவை, ''பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகர்களுக்கும் அடுத்த மூன்று மாதங்களில் லேப்டாப் வழங்கப்படும்'', என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.கோவை விமான நிலையத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி:பள்ளிக்கல்வித் துறையை பொருத்தவரை, பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கடந்த ஆண்டு படிப்பு முடித்து சென்றவர்களுக்கும் விலையில்லா லேப்-டாப் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 2017- 18 ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு அடுத்த மூன்று மாதத்தில் லேப்டாப் வழங்கப்படும்.
பள்ளிக் கல்வித் துறையை பொறுத்தவரை பல்வேறு புதிய திட்டங்கள் வரும் 2ம் தேதி சட்ட சபையில் அறிவிக்கப்படும். கடந்த 2006 ல் ஆசிரியர் பணியமர்த்தப்படும் போதே ஓய்வூதிய திட்டம் பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதைத்தான், தமிழக அரசும் பின்பற்றி வருகிறது.மனித நேயத்தோடு அனைவருக்கும் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்ற வேண்டும் என நினைத்தாலும், நிதி நெருக்கடியால் எல்லோரும் வாழ வேண்டும், என்ற நோக்கத்தோடு பல்வேறு திட்டங்களை அரசு கொண்டுவருகிறது. இதற்கு ஆசிரியர்களும் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
Comments
Post a Comment