கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் பள்ளி கல்லூரி தேர்வுகள் மற்றும் வேலைவாய்ப்பு குறித்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் சிஏ தேர்வுக்கூட ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இன்று காலை செய்திகள் வெளிவந்தன என்பதை பார்த்தோம் இந்த நிலையில் தற்போது இந்த ஆண்டு மே மாதம் 3 ஆம் தேதி நடக்கவிருந்த நீட் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வு நீட் தேர்வுக்கு ஹால் டிக்கெட்டுகள் இன்னும் வினியோகம் செய்யப்படவில்லை என்றும் கொரோனா வைரஸ் பரபரப்பு முடிந்த பின்னரே ஹால் டிக்கெட் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் எனவே நீட்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சற்று முன்னர் அறிவித்துள்ளது
Comments
Post a Comment