Skip to main content

வேப்பிலை, மஞ்சள் தூள் போதும்; படிகார நீரிலும் கை கழுவலாம்!



சென்னை:''படிகார நீரை, கிருமி நாசினியாக பயன்படுத்தி கை கழுவினால் போதும்; கொரோனா பாதிப்பில் இருந்து தப்பலாம். வீடுகளில் வேப்பிலை, மஞ்சள் தண்ணீர் கலந்து தெளிக்கலாம்,'' என, மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் முன்னாள் இயக்குனர் ஜெகஜோதி பாண்டியன் கூறினார்.இது குறித்து, அவர் கூறியதாவது:கொரோனா உள்ளிட்ட நோய் தொற்று பரவுவதை தடுக்க, வசதி படைத்தவர்கள், 'சானிடைசர்' போன்ற கிருமி நாசினிகளை பயன்படுத்துகின்றனர். முககவசம் அணிகின்றனர்.


வீடுகளை சுத்தம் செய்ய, 'டெட்டால், லைசால், ஹார்பிக்ஸ்' போன்றவற்றை பயன்படுத்துகின்றனர்.வசதி குறைந்தவர்களும், கிராமப்புறங்களில் வசிப்பவர்களும், இவற்றை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. காரணம், அவர்களுக்கு பொருளாதாரம் இடம் கொடுக்காது. இயற்கை வழி என்ன?கொரோனா உள்ளிட்ட வைரஸ் பாதிப்புகளில் இருந்து தப்ப, இயற்கையிலேயே பல கிருமி நாசினிகள் உள்ளன. அவற்றை பயன்படுத்தினால் போதும்.வேப்பங்கொழுந்து, மஞ்சள் துாள் கலந்து துவையல் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும். இதை, வீட்டிற்கு வெளியேசெல்லும்போது, கையில் தேய்த்து கழுவி கொள்ளலாம்.வெறும் மஞ்சள் துாளில் கைகழுவினாலும் கிருமிகள் அழிந்து விடும்.




கடலைமாவிற்கு எதையும் சுத்தப்படுத்தும் தன்மை உள்ளது. கடலை மாவு தேய்த்து, கைகளை கழுவலாம்.படிகாரம் கிருமியை கொல்லக்கூடிய தன்மை உடையது. அதனால் தான், முன்பெல்லாம், முடி திருத்தும் கடைகளில், முகச்சவரம் செய்தபின், படிகாரத்தை தேய்த்து அனுப்புவர். இதனால், முகத்தில் ஏற்பட்ட சிறிய வெட்டு காயங்கள் வழியாக, கிருமிகள் பாதிப்பு தடுக்கப்படும்.படிகாரத்தை நீரில் கரைத்து கைகளை கழுவினால், கொரோனா பாதிப்பில் இருந்து தப்பலாம்.




வீடுகளிலும் அவற்றை தெளித்தால், கிருமிகள் அழிந்து விடும்.வேப்பிலை, மஞ்சள் தண்ணீரை கலந்தும், வீடுகளில் தெளிக்கலாம். வீட்டு வாசலில் மாட்டு சாணத்தை தெளித்தாலும், கிருமிகள் வராது. வாசலில் வேப்பிலையை தோரணமாக தொங்க விடலாம். முன்பெல்லாம், அம்மை பாதிப்பில் இருந்து தப்ப, இதைத்தான் நம் முன்னோர்கள் பயன்படுத்தினர்.வேப்பமர பட்டையை நீரில் கொதிக்க வைத்து, அதை வடிகட்டி பாட்டிலில்வைத்து, கிருமி நாசினியாகபயன்படுத்தலாம்.




இவற்றை, டாய்லெட்சுத்தம் செய்யவும் பயன்படுத்தலாம். எனவே, இயற்கை கொடுத்த இந்த இயற்கை கிருமி நாசினிகளை, பொதுமக்கள் பயன்படுத்தி, கொரோனா பாதிப்பில் இருந்து எளிதாக தப்பலாம்.இவ்வாறு, ஜெகஜோதி பாண்டியன் கூறினார்.கபசுர குடிநீர்'சளி, காய்ச்சல், இருமல் வராமல் தடுத்தால், கொரோனா பாதிப்பில் இருந்து தப்பலாம்; அதற்கு, கபசுர குடிநீர் கை கொடுக்கிறது' என, சித்த மருத்துவர்கள் கருதுகின்றனர். இது தொடர்பான செய்தி, நம் நாளிதழில், 16ம் தேதி வெளியானது.இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள அரசு தலைமை மருத்துவமனைகளில் இலவசமாக, கபசுர குடிநீர்வழங்கும் பணி துவங்கியுள்ளது. கபசுர குடிநீர், 15 வகையான மூலிகைகளை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.




இது தொடர்பான, துண்டு பிரசுரங்களும்,பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. 'கொரோனா தொற்றாமல் இருக்க இம்பூறல்'-மூலிகை மணி சித்த மருத்துவர், க.வெங்கடேசன் கூறியதாவது:*பல காரணங்களால், இருமல் உண்டாகும். நுரையீரலில் உருவாகும் சளி, நுண்ணிய காற்று அறைகளை அடைத்து, நுரையீரலை செயல்படாமல் தடுக்கும். இதற்கு துாதுவளை, ஆடாதொடை, இஞ்சி, சித்தரத்தை, முசுமுசுக்கை, உத்தாமணி என, பல மூலிகைகளை சித்தர்கள் மருந்தாக்கி சாப்பிடச் சொன்னாலும், தீவிரமானஇருமல் வரும் போது, நுரையீரலிலிருந்துசளி ரத்தத்துடன் வெளியேறும்.* அந்த காலத்திலேயே, இது போன்ற வைரஸ்கள் நுரையீரலை தாக்கிய நிலையில், ரத்தம் கக்கி மரணநிலையை உண்டாக்கிய போது, இம்பூறல், அதிமதுரம், இஞ்சி, ஆடாதொடை, மிளகு, கிராம்பு சேர்த்த கஷாயம் மிகச்சிறப்பாக வேலை செய்து காப்பாற்றியுள்ளது.




காலை, மாலை இருவேளையும், பெரியவர்கள், 100 மில்லியும், சிறியவர்கள்,50 மில்லியும் பருக, கொரோனா வைரஸ் உடம்பில் நுழையாது*கொரோனாவுக்கு எதிராக இம்பூறல் சிறப்பாக செயல்படும். இது, வைரஸ் தொற்றை தடுப்பதுடன், நுரையீரல் பாதிப்பையும் சரி செய்கிறது. இம்பூறல் மூலிகையை ஒரு பிடி வேருடன் பிடுங்கி, சுத்தமான நீரில் அலசி, நிழலில் ஒரு மணி நேரம் காயவைக்க வேண்டும். பின், அதை நன்கு அரைத்து, ஒரு டம்ளர் நீரில் கொதிக்க விட்ட பின், அதில், அதிமதுரம், 10 கிராம்; இஞ்சி, இரண்டு துண்டு; ஆடாதொடை, ஐந்து இலை; மிளகு, 10 கிராம்; கிராம்பு 5 கிராம் ஆகியவற்றை இடித்து போட்டு, 10 நிமிடம் கொதித்த பின் இறக்க வேண்டும். அதை வடிகட்டி, அதில், 2 ஸ்பூன் அளவு, தேன் கலந்து பருக வேண்டும்* இம்பூறல் கிடைக்கவில்லை என்றால், சென்னை அடையாறில் உள்ள, 'இம்ப்காப்ஸ்' என்ற, மத்திய நிறுவனத்தில், இம்பூறல் மாத்திரை விற்கப்படுகிறது. அதை வாங்கியும், மேற்சொன்ன கஷாயத்துடன் சேர்த்து பருகலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

அமைதி..

நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம். ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான். இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள். மன்னன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக் கொண்டே வந்தான். அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்து இருந்தார்கள். ஒருவர் அழகான ஏரியை வரைந்திருந்தார். ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமாக இருந்தது. மற்றொருவர் மலர்களை வரைந்திருந்தார். பார்த்தவுடனே பறிக்கத் தூண்டும் வகையில் அம்மலர்கள் தத்ரூபமாக இருந்தது. இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றியவாறு ஓவியத்தில் பிரதிபலித்திருந்தனர். ஒரு ஓவியத்தில் ஒரு மலையின் மீதிருந்து ஆக்ரோஷமாக கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்தது. அதுமட்டுமா இடியுடன் மழை வேறு பொழிந்து கொண்டிருந்தது. இது அமைதியே அல்ல. ...