தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி செய்யப்படுவார்கள் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதுமே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் 12 ஆம் வகுப்பிற்கு அனைத்துத் தேர்வுகளும் முடிவடைந்த நிலையில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மற்ற வகுப்புகளுக்கும் தேர்வு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி செய்யப்படுவார்கள் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, உத்தரப்பிரதேசம், குஜராத், புதுச்சேரி மாநிலத்தில் இதுபோன்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment