கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இன்று இரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு குறித்து பிரதமர் மோடி தொலைக்காட்சி மூலம் இரண்டாவது முறையாக நாட்டு மக்களுக்காக உரையாற்றினார். அப்போது அவர், தனக்கு ஒவ்வொரு இந்தியரும் முக்கியம் என்றும், ஊரடங்கு மூலம் பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும் நாட்டு மக்களின் பாதுகாப்பே முதன்மையானது என தெரிவித்தார். மக்கள் அனைவரும் கொரோனாவுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.
குழந்தைகள், பெரியவர்கள், வியாபாரிகள் என அனைவரும் ஒன்றாக கொரோனா வைரஸூக்கு எதிராக செயல்பட வேண்டும் என கூறியுள்ள அவர், 22ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்ட மக்கள் ஊரங்கு வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் கொரோனாவை வீழ்த்த சமூக விலகல் மிக முக்கியம் என அவர் வலியுறுத்தியுள்ளார். அரசுடன் மக்கள் அனைவரும் ஒத்துழைத்தால் மட்டும் 100% கொரோனாவை ஒழிப்பது சாத்தியம் என்று கூறியுள்ள மோடி, இந்தியாவில் உள்ள விஞ்ஞான அறிவைக்கொண்டு வைரஸ் பரவுவதை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த ஒரேவழி வீட்டைவிட்டு வெளியே வராமல் இருப்பது தான் என்றும், பொதுமக்கள் உறவினர்கள், வெளியாட்கள் என யாரையும் வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.
வல்லரசு நாடுகளாலேயே கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறியுள்ள பிரதமர், சமூக விலகல் மட்டுமே கொரோனா தடுக்கும் ஒரே வழி என கூறியுள்ளார். ஒருவருக்கு தெரியாமலேயே கொரோனா தொற்று இருக்கக்கூடும், அதனால் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என மோடி எச்சரித்துள்ளார். கொரோனாவை தடுக்க ஒவ்வொரு மாநிலமும், ஒவ்வொரு நகரமும், ஒவ்வொரு கிராமமும் முழுமையாக அடைக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ள பிரதமர், கொரோனாவை தடுக்க 3 வாரங்கள் சமூக விலகம் என்பது மிக முக்கியம் என குறிப்பிட்டுள்ளார். நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ, அங்கேயே இருங்கள் என்று கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொள்கிறேன் என பிரதமர் கூறியுள்ளார். மருத்துவர்கள், மருத்து பணியாளர்களின் சிரமங்களை மக்கள் உணர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள பிரதமர், அடுத்த 21 நாட்களை மக்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.
சுயக்கட்டுப்பாட்டுடன் இல்லையெனில் நாம் அழிவை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ள மோடி, நம்பிக்கை தான் வாழ்க்கையின் அச்சாணி எனவும் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஊரடங்கு என்பது உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் காப்பாற்ற எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தான் என பிரதமர் விளக்கம் அளித்துள்ளார். மருத்தவர்கள் இரவு, பகலாக ஓய்வின்றி உழைத்து வருகின்றனர் என்றும், கொரோனாவை தடுக்க மத்திய மாநில அரசுகள் முழுவீச்சில் பணியாற்றி வருகின்றன என தெரிவித்துள்ளார். 24 மணி நேரமும் பணியாற்றும் ஊடகத்தினருக்கும், காவல்துறையினர் உள்ளிட்ட சேவை பணியாளர்களுக்கும் மக்கள் நன்றி தெரிவித்து அவர்களுக்காக பிரார்த்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கும் என்று கூறியுள்ள பிரதமர், பொருட்கள் வாங்க எல்லோரும் ஒரே இடத்தில் குவியக் கூடாது என அறிவுறுத்தியுள்ளார். மக்கள் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், கொரோனா சிகிச்சைக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்த ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார். 21 நாட்கள் ஊரடங்கு என்பது அதிகநாட்கள் தான் என்றாலும் கூட உங்களின் குடும்பத்தின் பாதுகாப்புக்கு இது முக்கியமானது என்றும், மருத்துவர்களின் ஆலோசனையின்றி யாரும் மருந்துகளை வாங்கவோ, உட்கொள்ளவோ கூடாது என தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment