Skip to main content

மாணவர்கள் அலைபேசி, 'டிவி'யை புறந்தள்ள வேண்டும்' 'நாசா' செல்லும் மதுரை மாணவி அறிவுரை

மதுரை, அமெரிக்காவின் 'நாசா' விண்வெளி ஆராய்ச்சி மையம் செல்லும் வாய்ப்பை இந்திய அளவில் பெற்ற மூவரில் ஒருவரான மதுரை மாணவி தான்யா தஸ்னிம், 'மாணவர்கள் அலைபேசி, 'டிவி'யை புறந்தள்ள வேண்டும்' என்றார்.'கோ 4 குரு' என்னும் அமைப்பு இந்திய அளவில் சர்வதேச விண்வெளி அறிவியல் போட்டியை இணையதளம் மூலம் நடத்துகிறது. வெற்றி பெறுவோரை 'நாசா' விண்வெளி மையத்துக்கு அழைத்துச் செல்லும். நடப்பாண்டிற்கான போட்டியில் 11 ஆயிரத்து 700 பேர் பங்கேற்றனர்.

முடிவில் மூவர் தேர்வு செய்யப்பட்டனர்.அதில் மதுரை கடச்சனேந்தலை சேர்ந்த தான்யா தஸ்னிம் 15, என்ற பத்தாம் வகுப்பு மாணவியும் ஒருவர். இவரது தந்தை ஜாபர் உசேன் டீக்கடை வைத்துள்ளார். தாயார் சிக்கந்தர் ஆசிரியை. தான்யா தஸ்னிம் கூறியதாவது:சிறு வயதிலிருந்தே அறிவியல் மீது அதீத காதல் உண்டு. 5ம் வகுப்பிலேயே எனது கதாநாயகனாக அப்துல்கலாமை தேர்ந்தெடுத்தேன். புத்தகங்கள் மூலம் அவரை ஆழமாக படித்தேன். இதனால் விண்வெளி அறிவியல் மீது ஈடுபாடு ஏற்பட்டது. 'கோ 4 குரு' அமைப்பு நடத்திய போட்டியில் பங்கேற்று 'நாசா' விண்வெளி ஆராய்ச்சி மையம் செல்லும் வாய்ப்பு கிட்டியுள்ளது. இதில் எல்லையற்ற மகிழ்ச்சி.அக்., 1ல் துவங்கும் இப்பயணம் 10 நாள் கொண்டது. முதல் 3 நாட்கள் 'நாசா' விண்வெளி மையத்தில் இருப்பேன். அப்போது அங்குள்ள நடைமுறைகளை விளக்குவர்.

விண்வெளி தொடர்பான உபகரணங்களை நேரில் பார்வையிட முடியும். வான்இயற்பியல் படித்து விண்வெளியில் பறப்பதே என் கனவு. அது நனவாக இப்பயணம் உதவி புரியும். இளம் வயதிலேயே என் தேடலை விரிவுபடுத்தினேன். மாணவர்கள் அலைபேசி, 'டிவி'யை புறந்தள்ளிவிட்டு படிப்பிலும், உலக அறிவை பெறுவதிலும் கவனம் செலுத்தினால் எட்டா உயரத்தையும் எட்டிப்பிடிக்கலாம், என்றார்.

Comments

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..