Skip to main content

அனைத்தும் அவர் அறிவார்..

நமது நாட்டு ஆலமரம் போல துருக்கி நாட்டில் மல்பெரி என்ற ஒரு மரம் உண்டு நீண்ட கிளைகளுடன்.


உயர்ந்து அடர்ந்து செழித்து அந்த மரம் காணப்படும. ஆனால் அந்த மரத்தின் பழமோ சிறிய கோலிக் குண்டு அளவுக்கு மிகச் சிறியதாக இருக்கும்.

ஒருநாள் முல்லா அந்த மல்பெரி மரத்தின் நிழலில் அமர்ந்து களைப்பாறிக் கொண்டிருந்தார். அப்போது வழிப்போக்கனான ஒர் இளைஞன் அங்கே வந்து சேர்ந்தான்.

நீண்ட தூரத்திலிருந்து வெய்யிலில் அவன் நடந்து வந்திருக்கு வேண்டும் நிழலைக் கண்டதும் அவனுக்குப் பேரானந்தமாய் இருந்தது.

மரத்திலிருந்து வேரின் மீது தலைவைத்துப் படுத்துச் சற்று நேரம் களைப்பாறினான்.

அவன் பார்வை முல்லாவின் மீது விழுந்தது. பிறகு அண்ணாந்து மரத்தைப் பார்த்தான் மரத்தின் சின்னஞ்சிறு பழங்கள் அவன் கண்களில் பட்டன.

அவன் உரக்கச் சிரித்தான்.
முல்லா அவனைத் திரும்பிப் பார்த்துவிட்டு என்ன சிரிக்கிறீர்? என்று கேட்டார்.

கடவுளின் முட்டாள்தனத்தை எண்ணிச் சிரிக்கிறேன் என்றான் அந்த வழிப்போக்கன்.

கடவுள் அப்படி என்ன முட்டாள்தனம் செய்து விட்டார் என்று முல்லா ஆச்சரியத்துடன் கேட்டார்.

இந்த மரத்தைப் பாருங்கள் ஒரு பெரிய கூடாரத்தைப்போல எவ்வளவு பெரிதாக இருக்கின்றது. 

இந்த மரத்தின் பழங்களைப் பாருங்கள் எவ்வளவு சிறியனவாக நுண்ணியவையாக உள்ளன இவ்வளவு பெரிய மரத்தின் பழங்கள் எவ்வளவு பெரியவையாக இருக்கவேண்டும் என்று கூட தீர்மானிக்க முடியாத கடவுளை முட்டாள் என்று கூறுவதில் என்ன தவறு இருக்க முடியும்? என்றான் வழிப்போக்கன்.

முல்லா பதில் ஒன்றும் பேசாமல் வாயை மூடிக் கொண்டார்.
சற்று நேரம் கழித்து காற்று பலமாக அடித்தது. மரத்தின் கிளைகள் வேகமாக அசைந்தாடிக் கிளைகளில் இருந்த சின்ன்சிறு பழங்கள் பொலபொலவெனக் கொட்டின.

சில பழங்கள் வழிப்போக்கனின் தலையிலும் விழுந்தன.
முல்லா அவனைப் பார்த்து நண்பரே உமது தலைமீது ஏராளமான பழங்கள் விழுந்தன போலிருக்கிறதே! என்று கேட்டார்.

ஆமாம் காற்றில் அவை உதிர்ந்துவிட்டன என்றான் வழிப்போக்கன்.

கடவுள் முட்டாளாக இல்லாமலிருந்து புத்திசாலியாக இருந்து பெரிய பாறைக்கல்லைப் போன்ற பெரிய பழங்களை இந்த மரத்திலே உற்பத்தி செய்திருந்தாரானால் என்ன ஆகியிருக்கும்.

 உமது தலை நசுங்கி நாசமாகப் போயிருக்குமல்லாவா? என்று கேட்டார் முல்லா.

வழிப்போக்கன் யோசித்தான்.
நண்பரே, கடவுள் சிருஷ்டியில் அனாவசியமானதும் அர்த்தமற்றதும் எதுவும் இல்லை எதையும் ஒரு காரணத்தோடுதான் இறைவன் சிருஷ்டித்திருக்கிறாரர்.

இவ்வளவு விசாலமான மரக்கிளைகளின் நிழலில் நிறைய மனிதர்களும் விலங்குகளும் நிழலுக்காக வந்து அண்டும் என்று கடவுளுக்குத் தெரியும் இதனால்தான் கடவுள் நிழல்தரும் பெரிய மரத்தின் பழங்களை மிகவும் சிறியனவாகப் படைத்திருக்கிறார் என்றார் முல்லா.

ஐயா தாங்கள் யார் என்று தெரியவில்லையே ஒரு மகான் போல் பேசுகிறீர்களே என்று பயபக்தியுடன் கேட்டான் வழிப்போக்கன்.

கடவுள் மகான்களை சிருஷ்டிப்பதில்லை மற்ற உயிர்களைப் போல மனிதர்களையும் சிருஷ்டிக்கிறார். நான் உம்மைப்போல ஒரு மனிதன்தான் என்றார் முல்லா.

யாருக்கு எதை செய்ய வேண்டும்..
எப்போது செய்ய வேண்டும்..
எந்த நேரத்தில் செய்ய வேண்டும்..
என அனைத்தையும் அவர் அறிவார்...

நம்பிக்கை கொள்ளுங்கள், நன்மை அடையுங்கள், நல்லதே நடக்கும்.....

Comments

 1. Wishing everyone a blessed day ahead..

  ReplyDelete
 2. நாட்டுல ஏதோ ஒரு அரசியல்வாதியாச்சும் நமக்காக அறிக்கை விடுறாரே.

  ReplyDelete
  Replies
  1. டெட்க்காக எப்பவும் குரல் கொடுக்கும் அய்யா ராமதாஸ் தான்

   Delete
  2. 2019 pg chemistry தேர் வர்களின் வாழ்க்கையை ஒரு வருடம் வீண் செய்ததும் இந்த ராமதாஸ் தான்

   Delete
 3. அரசு ஊழியர், ஆசிரியர்ன்னு எல்லார்கிட்டயும் அதிருப்திய சம்பாதிச்ச திமுக நமக்கு என்ன பண்ண காத்திருக்கோ

  ReplyDelete
 4. Follow seniority with tet best idea

  ReplyDelete
 5. அதிக முறை பாஸ் பண்ணவங்களுக்கு முன்னுரிமை வேண்டும்

  ReplyDelete
 6. Madam , what is the age limit for tet posting?

  ReplyDelete
  Replies
  1. No specific age limit for tet alone, generally for teachers its 45 with relaxation for backward communities

   Delete
 7. Mam mark increase pannanum u ninaikkuravanga again exam eluthalam nu solli irukkangale so tet mark ku importance kodukkuranga nu ninaikkuren mam
  What's your opinion

  ReplyDelete
  Replies
  1. Kandippa tet marks ku preference kudupanga dhan but adhukaga based on tet marks posting varumnu solida mudiyathu. Vera edhavathu weightage protocol kondu varuvanga.. Mark increasing kaga tet eludha solradhu avanga fees collection kaga tet marks ku importance kudukka illa..

   Delete
  2. TRT exam எழுதற அணைவருக்கும் posting போடா மாட்டாங்க, 90 ஆயிரம் பேர் trt எழுதன 4 ஆயிரம் பேருக்கு குறைவா தான் posting போடுவாங்க, so trt தேர்வும் பணம் collection பன்றதுக்கு தான் வைக்கிறாங்க

   Delete
  3. Super appu🤪🤪😁

   Delete
  4. Apdi paatha ella exams yum collection ku dhan nadakuthu adhukaga eludhama vitruvingala??

   Delete
  5. மார்க் தேவைப்படுறவங்க எக்ஸாம் எழுதலாம்னு தான் சொன்னாங்க அதுக்காக டிஆர்டி வராதுன்னு அர்த்தம் இல்ல

   Delete
  6. Government a trt varaathunu sonna kuta nenga athellam ketaiyathu trt tha varumnu solluvinkapola mam..

   Delete
  7. ராஜா சார் டிஆர்டி வராதுன்னு உங்களால உறுதியா சொல்ல முடியுமா? இப்போதைக்கு அதுக்கு அரசாணை இருக்கு. வராம இருந்தா நல்லது தான் ஆனா வேற எந்த முறையில் போஸ்டிங் போட்டாலும் கேஸ் போட ஒரு குரூப் இருக்கு அதுக்கு டிஆர்டி எவ்ளோவோ தேவல

   Delete
  8. என்னால் உறுதியாக கூற முடியும் திமுக என்றால் சீனியாரிட்டி.. அரசின் கொள்கை முடிவில் யாரும் தலையிட முடியாது..

   Delete
  9. 🤪🤪🤪
   திமுக சொன்ன பல விஷயம் நடக்கல. NEET 😁😁
   WAIT AND SEE

   Delete
  10. TRT kuda kolgai mudivu dhan.. Maatram varanumnu vendikkalam, muyarchigal kuda edukkalam. But adhu kandippa nadakkumnu yaarum solla mudiyathu..

   Delete
 8. Employment seniority 5 mark + TET mark weightage 5 + TRT mark 90 =100, இப்படி பணி நியமனம் செய்தால் சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. Yen neenga tet la low mark pola trt la um kammi mark eduthu marupadium innoru exam vaikka solli poradunga ok va
   Tet posting podathathukku government reason illa pass panna athuvum 13 and kammi mark la pass pannavanga than karanam
   Entha method sonnalum poraduvanga very selfish people's

   Delete
  2. 82 எடுத்தாலும் pass தான், 150 எடுத்தாலும் pass தான், so trt தான் correct method

   Delete
  3. Mr Unknown


   வாய்ப்பு இல்ல ராஜா

   Delete
  4. Mr Unknown

   TRT க்கு வாய்ப்பு இல்ல ராஜா

   Delete
  5. அரசு சொல்லணும் சார்

   Delete
  6. அத அப்போ பாக்கலாம். நீங்க இப்போவே சொல்ல வேணாம்

   Delete
  7. Athey than ungalukkum trt varuma nu government sollattum neenga solla venam

   Delete
 9. 26 date nanmai nadakkuma illai namathai poda porangala nu therila

  ReplyDelete
 10. BE HAPPY
  😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

  ReplyDelete
 11. சீனியரிட்டின்னு டெட்ல ,90-95 எடுத்தவங்க கூட ஏஜ்ல பெரியவங்களா இருப்பாங்க அதனால கண்டிப்பா அவங்களுக்கு கிடைக்கும் அப்போ எங்க நிலைமை?

  ReplyDelete
  Replies
  1. Tet mark 90% employment seniority 10% padi pottal yarukkum pirachanai varrathu

   Delete
  2. Yes seniority should not be encouraged..we will file case if that is implemented

   Delete
  3. Government ninacha entha case um onnum panna mudiyathu
   Vanniyar Ida othukeetil kuda evlo case pottanga ethuvum onnum panna mudiyala

   Delete
  4. Unga nilamaya Exam eluthi eluthi nasamathan poganum

   Delete
  5. டிஆர்டி க்கு எதிராக கேஸ் போட்டாலும் அது பொருந்தும் சார்

   Delete
  6. Apaaaaaaa mudila pa sami🤦🤦🤦🤦

   Delete

Post a Comment

Popular posts from this blog

தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு ஜூலை 15-க்கு ஒத்திவைப்பு.

  தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு ஜூலை 15-க்கு ஒத்திவைப்பு.   தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கானது 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. விசாரணையின் போது ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த 1,50,648 பேரில் 28,984 பேர் மட்டுமே தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசு தெரிவித்தது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை முதலில் பரிசீலிக்க வேண்டும் என ஐகோர்ட் அரசை அறிவுறுத்தி வழக்கை ஜூலை 15 க்கு ஒத்திவைத்தது.

TET தேர்வுத் தேதி மாற்றம் - TRB அறிவிப்பு

TET தேர்வுத் தேதி மாற்றம் - TRB அறிவிப்பு   தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் .01 / 2022 , நாள் 07.03.2022 அன்று வெளியிடப்பட்டது . 06.07.2022 பத்திரிகை செய்தியின்படி ஆகஸ்டு மாதம் 25 முதல் 31 வரை உள்ள தேதிகளில் தாள்- I ற்கு மட்டும் முதற்கட்டமாக தேர்வுகள் கணினிவழியில் மட்டுமே நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்பட்டது. தற்பொழுது நிர்வாக காரணங்களினால் , தாள்- I ற்கான தேர்வு 10.09.2022 முதல் 15.09.2022 வரை நடத்தப்படவுள்ளது . மேற்படி கணினிவழித் தேர்விற்காக ( Computer Based Examination ) பயிற்சித் தேர்வு ( Practice Test ) மேற்கொள்ளவிரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்வதற்கு , தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு வழங்கப்படும். அனைத்து பணிநாடுநர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம் . இது குறித்த அறிவிக்கை , தேர்வுகால அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டு ( Admit card ) வழங்கும் விவரம் செப்டம்பர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் .

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.