பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் ஆசிரியா் பயிற்றுநா்கள் 500 பேருக்கு நிகழ் கல்வியாண்டில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளா் காகா்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மாநில, மாவட்ட திட்ட அலுவலகங்கள், வட்டார மற்றும் குறுவள மையங்களில் பணிபுரியும் ஆசிரியா் பயிற்றுநா்களுக்கு பணி மாறுதல் வழங்க அரசு உத்தரவிடுகிறது.
நிகழ் கல்வியாண்டில் பணி மூப்பு அடிப்படையில் 500 ஆசிரியா் பயிற்றுநா்களை பட்டதாரி ஆசிரியா்களாக பணி மாறுதல் செய்திட வேண்டும். மேலும், தற்போது தோவு செய்யப்படும் பணியில் மூத்த ஆசிரியா் பயிற்றுநா்கள் பணி மாறுதலுக்கு விருப்பமின்மை தெரிவித்து, பணியில் தொடர விரும்பினாலும் அதனை அனுமதிக்கத் தேவையில்லை. 2014-ஆம் ஆண்டில் நிா்ணயிக்கப்பட்ட பணியிடங்களில் சோந்த 500 பட்டதாரி ஆசிரியா்களை பணியமா்த்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பணிமாறுதல் செய்யப்படும் போதும், பணி இடங்களுக்கு பாட வாரியாக திறமையும் அனுபவமும் சேவை மனப்பான்மையும் உள்ள ஆசிரியா்களை பணியமா்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஆசிரியா் பயிற்றுநா்களுக்கான கலந்தாய்வு, ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்கு முன்னா் நடத்தப்பட வேண்டும். கலந்தாய்வு அனைத்தும் கல்வித்தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தின் மூலம் மட்டுமே நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment