Skip to main content

புதிய கல்வி கொள்கையின்படி பல்கலை, ஐஐடி பாடத்திட்டம்: இந்த கல்வி ஆண்டில் அறிமுகம்


ஒன்றிய அரசு தயாரித்து அறிமுகம் செய்துள்ள புதிய கல்விக் கொள்கை மீது பல்வேறு விமர்சனங்கள் வந்திருந்தாலும், அதன் மீது பொதுமக்கள், கல்வியாளர்களின் கருத்து கேட்டு அதற்கு பிறகே புதிய கல்விக் கொள்கையை அறிமுகம் செய்வோம் என்று ஒன்றிய அரசு அறிவித்தது. அதன் பேரில் தற்போது புதிய கல்விக் கொள்கை நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், இந்த புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்களை பின்பற்றி, தங்களுக்கான பாடத்திட்டங்களை தயாரிக்கும் பணியில் பல்வேறு பல்கலைக் கழகங்களும், ஐஐடி நிர்வாகங்களும் ஈடுபட்டுள்ளன.

இந்த கல்வி ஆண்டிலேயே புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் அவை தெரிவித்துள்ளன. புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்களின் அடிப்படையில், புதிய பாடத்திட்டத்தை உருவாக்கி வரும் பல்கலைக் கழகங்களை எடுத்துக் கொண்டால், மத்திய பல்கலைக் கழகங்கள், முதுநிலைப் பட்டப் படிப்பில் தொழில் படிப்புகள் அல்லாத, முதுநிலைப் பட்டப் படிப்புகளில் பிளஸ் 2 படித்து முடித்த மாணவர்கள் நேரடியாகவே சேரும் வகையில் ஒரு புதிய முதுநிலைப் பட்டப் படிப்புக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றன.

புதுடெல்லி ஐஐடி இயக்குநர் ராம்கோபால் ராவ் கூறுகையில், புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்களை ஐஐடிகள் முன்னெடுக்க உள்ளன. அதில், செயற்கை நுண்ணறிவுப் பள்ளிகளும் ஒன்று. இது தவிர டெல்லி ஐஐடியில் போக்குவரத்து ஆராய்ச்சி மற்றும் காயத்தடுப்பு மையம், எரிசக்தி அறிவியல் மற்றும் பொறியியல் துறை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும், புதிய கல்விக் கொள்கையை மனதில் வைத்து, மின் போக்குவரத்து வாகனங்கள், பொதுக் கொள்கைள் ஆகிய தலைப்புகளில் முதுநிலைப் பட்டப் படிப்புகளையும் தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக, புதிய கல்விக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு மூன்று புதிய ஒருங்கிணைந்த படிப்புகளை ஹரியானா மத்திய பல்கலைக் கழகம் அறிமுகம் செய்ய உள்ளது. அதன்படி, இந்த மூன்று புதிய படிப்புகளும் இயற்பியல், வேதியியல், கணக்கு ஆகியவற்றில் 2021-2022ல் அறிமுகமாக உள்ளது. அவை, பிஎஸ்சி-எம்எஸ்சி இயற்பியல், பிஎஸ்சி-எம்எஸ்சி வேதியியல், பிஎஸ்சி-எம்எஸ்சி கணக்கு என்று இணைந்து இருக்கும். இந்த படிப்புகளுக்கான சேர்க்கையை மத்திய பல்கலைக் கழகம் நுழைவுத் தேர்வு மூலம் நடத்தும். இந்த படிப்புகள் புதிய கல்விக் கொள்கையை மனதில் கொண்டு தொடங்கப்பட்டுள்ளது.

அதன் மூலம் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் முதுநிலைப் பட்டப்படிப்புவரை நேரடியாக படிக்க முடியும். இந்த பட்டப் படிப்புகள் தனித்துவமாக வடிவமைக்கப்படுகிறது. அதாவது மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக்கானதாகவும், தற்சார்பு உடையதாகவும் இந்த படிப்புகள் இருக்கும். மேற்கண்ட படிப்புகளுக்காக நடத்த இருக்கின்ற நுழைவுத் தேர்வுக்கு ஒரு மண்டல அதிகாரியையும் மத்திய பல்கலைக் கழகம் நியமித்துள்ளது. இதையடுத்து, இந்த மூன்று படிப்புகளும் அடிப்படை அறிவியல் இருக்கையின் கீழ் தொடங்கப்படும் என்று அந்த மண்டல அதிகாரி தெரிவித்துள்ளார். இதற்கான விண்ணப்பங்கள் இந்த பல்கலையின் மற்ற இளநிலைப் படிப்புக்கான சேர்க்கை நடக்கும் போது கிடைக்கும்.

இருப்பினும், புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் இந்த புதிய படிப்புகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் விரும்பினால் அதிலிருந்து வெளியேறவும் வாய்ப்பு வழங்கவும் மத்திய பல்கலைக் கழகம் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லி பல்கலைக் கழகத்துடன் இணைப்பு பெற்றுள்ள 30க்கும் மேற்பட்ட கல்லூரிகள், வேலை வாய்ப்புகளை வழங்கும் தொழில் படிப்புகளை தொடங்க உள்ளன. அத்துடன் பல்வேறு கல்லூரிகள், டிப்ளமோ படிப்புகள், சான்றிதழ் படிப்புகளையும் இந்த தொழில் படிப்புகளின் மூலம் விரைவில் தொடங்க உள்ளன.

Comments

Popular posts from this blog

தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு ஜூலை 15-க்கு ஒத்திவைப்பு.

  தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு ஜூலை 15-க்கு ஒத்திவைப்பு.   தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கானது 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. விசாரணையின் போது ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த 1,50,648 பேரில் 28,984 பேர் மட்டுமே தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசு தெரிவித்தது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை முதலில் பரிசீலிக்க வேண்டும் என ஐகோர்ட் அரசை அறிவுறுத்தி வழக்கை ஜூலை 15 க்கு ஒத்திவைத்தது.

TET தேர்வுத் தேதி மாற்றம் - TRB அறிவிப்பு

TET தேர்வுத் தேதி மாற்றம் - TRB அறிவிப்பு   தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் .01 / 2022 , நாள் 07.03.2022 அன்று வெளியிடப்பட்டது . 06.07.2022 பத்திரிகை செய்தியின்படி ஆகஸ்டு மாதம் 25 முதல் 31 வரை உள்ள தேதிகளில் தாள்- I ற்கு மட்டும் முதற்கட்டமாக தேர்வுகள் கணினிவழியில் மட்டுமே நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்பட்டது. தற்பொழுது நிர்வாக காரணங்களினால் , தாள்- I ற்கான தேர்வு 10.09.2022 முதல் 15.09.2022 வரை நடத்தப்படவுள்ளது . மேற்படி கணினிவழித் தேர்விற்காக ( Computer Based Examination ) பயிற்சித் தேர்வு ( Practice Test ) மேற்கொள்ளவிரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்வதற்கு , தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு வழங்கப்படும். அனைத்து பணிநாடுநர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம் . இது குறித்த அறிவிக்கை , தேர்வுகால அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டு ( Admit card ) வழங்கும் விவரம் செப்டம்பர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் .

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.