TET தேர்வுத் தேதி மாற்றம் - TRB அறிவிப்பு தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் .01 / 2022 , நாள் 07.03.2022 அன்று வெளியிடப்பட்டது . 06.07.2022 பத்திரிகை செய்தியின்படி ஆகஸ்டு மாதம் 25 முதல் 31 வரை உள்ள தேதிகளில் தாள்- I ற்கு மட்டும் முதற்கட்டமாக தேர்வுகள் கணினிவழியில் மட்டுமே நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்பட்டது. தற்பொழுது நிர்வாக காரணங்களினால் , தாள்- I ற்கான தேர்வு 10.09.2022 முதல் 15.09.2022 வரை நடத்தப்படவுள்ளது . மேற்படி கணினிவழித் தேர்விற்காக ( Computer Based Examination ) பயிற்சித் தேர்வு ( Practice Test ) மேற்கொள்ளவிரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்வதற்கு , தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு வழங்கப்படும். அனைத்து பணிநாடுநர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம் . இது குறித்த அறிவிக்கை , தேர்வுகால அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டு ( Admit card ) வழங்கும் விவரம் செப்டம்பர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் .
Mam appo trt exam or employment seniority yah சீக்கிரம் நமக்கு தெரிந்து விடும் , வாழ்நாள் சான்றிதழ் கொடுத்தது மகிழ்ச்சி தான் ஆனால் அதைவிட மகிழ்ச்சி அனனத்து ஆசிரியர்களும் எதிர்பார்த்த மாதிரி எந்த முறையில் பணிநியமனம் நடைபெறும் என்ற கேள்விக்கு விரைவில் ஒரு முடிவு கிடைத்துவிடும் தோன்றுகிறது.....(விரைவில்_என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கு அனைத்து ஆசியர்களும் மன்னிக்கவும் நமக்கெல்லாம் பிடிக்காத ஒரே வார்த்தை விரைவில்.....)அப்ப இருந்த கல்விஅமைச்சரும் இப்போ இருக்க கல்வி அமைச்சரும் இந்த வார்த்தையைத்தான் பயன்படுத்துகிறார்கள்
ReplyDeleteஅனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள் வாழ்நாள் சான்றிதழ் வழங்கப்படுவதற்காக
ReplyDelete