Skip to main content

TODAY'S THOUGHT..

எலி சாதாரணமாக இருக்கும்போது மரத்தால் ஆன பொருட்களை ஓட்டை போட்டு நாசம் செய்யும்.


அதே எலி அதற்கென வைக்கப்பட்ட மரப்பொறியில் சிக்கிக் கொண்டால், எப்படி தப்பிக்கலாம் என பயத்தில் அங்கும் இங்கும் அலையுமே தவிர, மற்ற மரப்பொருட்களை ஓட்டை போட்டது போல, இம்மரப் பொறியையும் ஓட்டை போட்டு வெளியில் சென்று விடலாம் என யோசிக்கவே யோசிக்காது.

ஆமாம், இப்படி யோசித்தால், அதிகபட்சம் ஐந்து நிமிடத்தில் பொறியையே ஓட்டை போட்டு வெளியேறி விடும்.

ஆனால், மரப்பொறியில் சிக்கிய எலியை நீங்கள் ஐந்து நாட்கள் அப்படியே வைத்திருந்தாலும், அது தன்னால் வெளிவர முடியாத ஏதோவொரு பொறியில் அடைத்து வைத்து விட்டது போன்றே அங்கும் இங்கும் அலைபாயும்.

நம்மை யாரும் காப்பாற்ற மாட்டார்களா என ஏக்கத்தோடு பார்க்கும்.

அதற்கே உயிர் பிழைக்க வழி தெரிந்தாலும்  அந்த பதட்டத்தில் அதனது மூளை வேலை செய்யாது.

மனிதனும் பல நேரத்தில் இப்படித்தான் பல பிரச்சினைகளிலிருந்து வெளியே வர தெரிந்தும் பொறுமை இல்லாததால் தனது வாழ்க்கையை துறக்கிறான்.

பிரான்ஸ் மன்னர் மாவீரன் நெப்போலியன் புரட்படையினரால் கைது செய்யபட்டு செயின்ட் ஹெலினா தீவில் தனிமையில் அடைக்கபட்டார்.

அவரை பார்க்க வந்த அவரது நண்பர் ஒரு சதுரங்க போர்டும் காயின்களும் கொடுத்துவிட்டு போனார்.

தனிமையில் சதுரங்கத்தில் விளையாடியே நாட்களை கழித்து இறந்தும் போனார்.

சிறிது காலத்திற்கு முன் அவர் விளையாடிய சதுரங்க அட்டையை பிரான்ஸ் அரசு ஏலம் விட்டது.

அதை வாங்கிய நபர் அதை பிரித்து பார்த்த போது ஹெலீனா தீவிலிருந்து தப்பிப்பதற்கான வரைபடம் இருந்தது.

எப்பேற்பட்ட திறமையான மாவீரன் ஆனால் இனிமேல் தப்பிக்க முடியாது என்ற எண்ணமே நெப்போலியனை அடுத்த கட்ட நகர்விற்கு செல்ல முடியாமல் தடுத்து விட்டது...

சிந்தித்து செயல்பட்டால் வெற்றி உறுதி..

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. செங்கோட்டையனே தேவலாம் போல

    ReplyDelete
  3. அன்பில் மகேஷ் கல்வி துறை அமைச்சர் அவர்களுக்கு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் நீங்கள் MCA படித்தவர் so ungaluku படித்தவர்களின் கஷ்டம் புரியும்...தேர்வு எழுதி தேர்ச்சி பட்டியல் வந்த பிறகு பணி நியமனம் தராமல் இருபது ஏன்?முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தமிழுக்கு முன்னுரிமை தருபவர்கள் ஆனால் இங்கு தமிழ் வழியில் படித்தவர்களுக்கு இன்று வரை பணி நியமனம் செய்யவில்லை

    ReplyDelete
  4. இதுக்கெல்லாம் காரணம் பிரசாந்த் கிஷோர் தான்...

    கண்டா வர சொல்லுங்க
    அண்ணன கையோட கூட்டி வாருங்க

    ReplyDelete
  5. TNTET-2021
    COACHING CLASSES AVAILABLE FOR ALL SUBJECTS...
    ONLINE ₹25000/-
    WEEKEND CLASS ₹15000/-




    அப்டினு யார்னா ஆரம்பிங்க

    ReplyDelete
    Replies
    1. அதுக்கும் ஆள் ரெடியா இருப்பாங்க

      Delete
  6. Second list. Come or not

    ReplyDelete
  7. Pg trb English best COACHING centre சொல்லுங்க
    ano mam and friends

    ReplyDelete
    Replies
    1. Sai materials ella subjects kum nalla irukum vino sir..

      Delete
  8. G.O.134 --500 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாறுதல் (Conversion) வழங்குதல் மற்றும் பணியிட மாறுதல் அரசாணை வெளியீடு!... இருந்த 500 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களும் காலி....

    ReplyDelete
    Replies
    1. Teacher instructor eppudi select pannuvanga mam

      Delete
    2. Brte dhan apdi povanganu nenaikraen.. Avangakukum posting la oru percentage undu..

      Delete
    3. Thappa edhum sollathinga......Ungalukku theriyalana ....theriyadhu solluinga.....entha percentage um ....illai.............education department fulla therichikka try pannuinga................

      Delete
    4. Hello thappa sonnanu mudinja prove panunga.. Brte dhan teacher instructor and avangaluku BT ah convert aga kuripitta percentage iruku, adhuku GO kuda iruku.. SGT ku epdi follow panrangalo apdi dhan idhum..

      Non teaching staff ku kuda indha madhiri options iruku.. Chumma kora solradha velaya vachutu irukathinga.. Enna sollanumnu enaku theriyum, u need not teach me..

      Delete
    5. Entha percentage yum illai.........see previous year counseling........2019 ,2018 ,2017,2016

      Delete
    6. Am not talking about counselling. Number of postings sonnen..

      Delete
  9. என்னடா வாழ்க்கை இது. 😱😱😱😱😱😱😱😱😱😱😱

    ReplyDelete
  10. பணியிடமே இல்லனு சொன்னிங்களே டா

    ReplyDelete
  11. என்ன டா நடக்குது

    ReplyDelete
  12. Pg trb expected month sollunga mam

    ReplyDelete
    Replies
    1. November or December ku possibilities adhigam..

      Delete
    2. What about age case........physical handicapped case over ra????? Still pending madam.........

      Delete
    3. So what if its pending also, government will have options to conduct exam with reserved option. Question papers are being prepared so soon pgtrb might come..

      Age criteria is doubtful only..

      Delete
  13. ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நடந்தபின்பு தான் Trb Notification வரும்....கலந்தாய்வு நடத்தாமல் Pg notification வெளியிடுவதில் சட்டச் சிக்கல் ஏற்படும்...என்று Sai சுவாமிநாதன் Sir எங்களிடம் கூறியுள்ளார்..எனவே நம்பிக்கையுடன் தொடர்ந்து படியுங்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு ஜூலை 15-க்கு ஒத்திவைப்பு.

  தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு ஜூலை 15-க்கு ஒத்திவைப்பு.   தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கானது 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. விசாரணையின் போது ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த 1,50,648 பேரில் 28,984 பேர் மட்டுமே தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசு தெரிவித்தது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை முதலில் பரிசீலிக்க வேண்டும் என ஐகோர்ட் அரசை அறிவுறுத்தி வழக்கை ஜூலை 15 க்கு ஒத்திவைத்தது.

TET தேர்வுத் தேதி மாற்றம் - TRB அறிவிப்பு

TET தேர்வுத் தேதி மாற்றம் - TRB அறிவிப்பு   தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் .01 / 2022 , நாள் 07.03.2022 அன்று வெளியிடப்பட்டது . 06.07.2022 பத்திரிகை செய்தியின்படி ஆகஸ்டு மாதம் 25 முதல் 31 வரை உள்ள தேதிகளில் தாள்- I ற்கு மட்டும் முதற்கட்டமாக தேர்வுகள் கணினிவழியில் மட்டுமே நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்பட்டது. தற்பொழுது நிர்வாக காரணங்களினால் , தாள்- I ற்கான தேர்வு 10.09.2022 முதல் 15.09.2022 வரை நடத்தப்படவுள்ளது . மேற்படி கணினிவழித் தேர்விற்காக ( Computer Based Examination ) பயிற்சித் தேர்வு ( Practice Test ) மேற்கொள்ளவிரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்வதற்கு , தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு வழங்கப்படும். அனைத்து பணிநாடுநர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம் . இது குறித்த அறிவிக்கை , தேர்வுகால அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டு ( Admit card ) வழங்கும் விவரம் செப்டம்பர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் .

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.