மறுநாள் காலை நிச்சயம் எழுந்து விடுவோம் என்று நமக்கு இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையின் அடிப்படையில் தான் நாம் ஒவ்வொரு இரவும் நிம்மதியாக தூங்கச் செல்லுகிறோம்.
வீட்டிற்கு நிச்சயமாய்த் திரும்பி விடுவோம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தான் நாம் தினம் தினம் வீட்டை விட்டுப் புறப்படுகிறோம்.
ஆக, நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வுகள் நம்பிக்கையின் அடிப்படையிலேயே நிகழ்கிறது என்றால் அது மிகையாகாது..
அமெரிக்காவைக் கண்டுபிடித்தவர் கொலம்பஸ். ஆனால், ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்கு கடல்வழியைக் கண்டுபிடிக்கவே திட்டமிட்டார். எதிர்பாராதவிதமாக அமெரிக்காவைக் கண்டுபிடித்தார்.
அட்லாண்டிக் பெருங்கடலில் நெடும்பயணம் மேற்கொண்டால் இந்தியாவை அடைந்து விடலாம் என்று நம்பிக்கை இவருக்கு ஏற்பட்டது. ஸ்பெயின் மன்னரின் உதவியோடு சிலரைத் துணைக்கு அழைத்துக் கொண்டு கப்பலில் பயணத்தைத் தொடங்கினார்.
பயணம் பல மாதங்கள் நீடித்தன. கொலம்பஸ் உடன் வந்தவர்கள் அனைவரும் நம்பிக்கை இழந்து விட்டார்கள். அவர்களுக்குத் தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றி விட்டது.
அவர்கள் கொலம்பஸிடம் வந்த வழியாகத் திரும்பிச் சென்று விடலாம் என்று வற்புறுத்தினார்கள். ஆனால் கொலம்பஸ் அவர்களின் சொற்களைக் காதில் வாங்கவே மறுத்து விட்டார். திரும்பிச் செல்லும் பேச்சுக்கே இடமில்லை என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார்.
உடன் வந்தவர்கள் ஒன்று கூடி சதித்திட்டம் ஒன்றைத் தீட்டினார்கள். அதன்படி கொலம்பஸைக் கடலில் தள்ளிக் கொன்று விட்டு தாங்கள் அனைவரும் தங்கள் நாட்டிற்குத் திரும்ப முடிவு செய்தார்கள்.
ஒருநாள் கொலம்பஸ் கப்பலின் மேற்பரப்பில் நம்பிக்கையுடன் ஏதாவது நிலப்பகுதி தெரிகிறதா ?என்று பார்த்தவாறே நின்று கொண்டிருந்தார்.
உடன் வந்தவர்களில் சிலர் அவருக்குப் பின்புறமாக மெல்ல வந்தார்கள். இன்னும் சற்று நேரத்தில் அவரைப் பிடித்துத் தள்ளப் போகிறார்கள்.
அச்சமயத்தில் கொலம்பஸ் மகிழ்ச்சியில் கத்த ஆரம்பித்தார். காரணம் கடலின் மேற்பரப்பில் இலைகளும், சிறுசிறு கிளைகளும் மிதந்து கொண்டு இருந்தன. அருகில் நிலப்பகுதி இருக்கிறது என்பது இதன் மூலம் புரிந்தது.
தொடர்ந்துப் பயணித்து சில தினங்களில் ஒரு நிலப்பரப்பினை அடைந்தார்கள். கொலம்பஸ் எதிர்பார்த்தது போல அது இந்தியா அல்ல.. அமெரிக்கா.
கொலம்பஸின் மனதில் இருந்த ஆழ்ந்த நம்பிக்கையே அவருக்கு வெற்றியைத் தேடித் தந்தது. கொலம்பஸின் அசைக்க முடியாத நம்பிக்கையே அவருடைய பெயரை சரித்திரத்தில் பதிவாகக் காரணமானது.
*ஆம்.,நண்பர்களே..,*
நம் மனம் ஆற்றல் மிக்கது. என்னால் எதையும் செய்ய முடியும் என்று நீங்கள் உங்களுக்குள் அடிக்கடி சொல்லிக் கொள்ளுங்கள்.
எந்த ஒரு செயலையும் நம்பிக்கையோடு எதிர்கொள்ளுங்கள். உறுதியாய் நம்புங்கள்.
*நிச்சயம் உங்கள் எண்ணம் ஈடேறும்...* *உங்கள் கனவெல்லாம் பலிக்கும்.வாழ்க்கை என்னும் வெற்றிப் பாதையில் நீங்கள் பயணிக்கலாம்.*
🏃🏼♀🏃🏼♀🏃♂️🏃♂️🏃♂️
Wishing everyone a blessed morning ahead..
ReplyDeleteகாலை வணக்கம் அட்மின்.... PGTRB EXAM எப்ப வர வாய்ப்பு இருக்கு மேடம்.... ஏதாவது தகவல் இருந்தா சொல்லுங்க...
ReplyDeleteGudevng sir..
DeleteIpo polytechnic exam ae postpone aga chances iruku, so Pg dec end or jan dhan..
This comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteIndha nakkal panra vela ellam vechukita mariyaadha ketrum. Situation ku yetha madhiri kedaikra information ah dhan share panna mudiyum..
DeleteNeenga nalini advocate ah vachu stay vaanga try panunga, semma move. Nalla aapu vekkum TRB.. ALL THE BEST😁
அவனவன் தகவல் கிடைக்காம இருக்கான் ஏதோ அவங்க தெரிஞ்சத சொல்ராங்க உங்களுக்கு எல்லாம் என்ன வயித்தெரிச்சல். கேக்கறவங்களுக்கு அவங்க பதில் சொன்ன உங்களுக்கு என்னயா பிரச்சனை?
DeleteGood afternoon mam
ReplyDeleteGudevng sir..
DeleteMam tet sambanthama ethuvum case live la irukka mam
ReplyDeleteஎன்ன வழக்கு, பணிநியமனம் செய்கிறேன் என்று சொன்னாள், நமது நண்பர்கள் வேண்டுமென்றால் வழக்கு தொடருவார்கள், எனக்கு மட்டுமே முன்னுரிமை கொடு என்று
DeleteAma unknown frnd, TRT kaga case iruku..
DeleteTet teacher Ku consolidate salary la job kodunga nu
ReplyDeleteCm cell Ku mail pannirukean
Ellarum pannunga sir/madam
Government think pannuvanga
ஒரே வரியில் முடித்து விடுவார்கள்
Deleteவாய்ப்பில்லை ராஜா என்று பதில் கூறி
இருப்பினும் நானும் மனு செய்கிறேன், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தில் பணி வழங்க வேண்டி, முதலமைச்சர் தனிப் பிரிவிற்கு cmcell.tngov.in
DeleteCm cell ku mail pannuvathu eppadinu solunga sir ,nannum anupuraen
ReplyDeleteCmcell.tn.gov.in ponga
ReplyDeletePage open akum then new user register pannunga
Profile create akum Then
Lodge your grievance ponga
மனு செய் nu varum poi mail pannunga
Posting kekama y consolidated la kakureenga avlo than yerkanave nammala pathi kavalaiye illa intha Mari ketuneenga na suthama Kali panniduvanga pls don't ask consolidate.
ReplyDeleteBrother avanga consolidated podrenu edhavatha sollatumae apuram adha vachu case kuda podalam, but tet ah marandhutu irukanga..
DeleteEllarum edhavathu steps edunga.. Sangangal ellam saadhikadha vishayatha saamaniyan saadhikka mudiyum..
ReplyDeleteகாலிப்பணியிடம் இல்லை
ReplyDeleteYaru sonnathu unakku
Delete