நாம் சமூகத்திற்கு, அடுத்தவற்கு, இயற்கைக்கு என்ன கொடுக்கிறோமோ, அதுவே சமூகம் நமக்கு தருகின்றது.
நன்மை கொடுத்தால் நன்மை கிடைக்கும்.
தீமை கொடுத்தால், தீமை நல்கும். ஆகவே எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க விரும்பினால் பிறர்க்கு எப்போதும் நன்மையே செய்யுங்கள். பிறரும் உங்களுக்கு நல்லதையே வழங்குவார்கள்.
வாழக்கை இனிமையானதாக மாறும்.
மகிழ்ச்சியாக இருக்க, 20 வழிகள் !
1. *எல்லோரையும் கொண்டாடுங்கள்!*
உங்களைச்சுற்றி இருக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் கூர்ந்து கவனியுங்கள்.. . நமது மனம் மிகவும் ரசனை மிக்கது. . உங்களை சுற்றியிருக்கும் எல்லாரையும் ரசியுங்கள்..கொண்டாடுங்கள்..மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது..
2.*நல்ல நண்பர்களை சம்பாதியுங்கள்!*
மிகவும் மகிழ்ச்சியான நண்பர்கள், உங்களுக்கு ஊக்கமளிக்கும் நண்பர்கள், உங்களை குறைசொல்லாத, உங்களை நம்பிக்கையை சிதைக்காத நண்பர்களுடனேயே நேரத்தை செலவிடுங்கள்..! இது உங்கள் பாசிட்டிவ் எனர்ஜியை குறைக்காமல் வைத்திருக்கும்.
3. *கற்றுக்கொள்வதை நிறுத்தாதீர்கள்!*
“வாழ்க்கையில் எப்போதும், கற்றுக்கொள்வதை நிறுத்தாதீர்கள். ஏனெனில் வாழ்க்கை உங்களுக்கு கற்றுக்கொடுப்பதை நிறுத்தாது” நீங்கள் புதிய விஷயங்களை கற்றுக்கொண்டே இருப்பதன் மூலம், உங்களை மூளை எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்கும். இதனால் உங்களது துன்ப நினைவுகளை அது அசைபோடாது எப்போதும் பிசியாக இருக்கும். எனவே மனம் எப்போதும், மகிழ்ச்சியாக இருக்கும்.
4. *தடை..அதை உடை.!*
எப்போதும், எந்த இடத்திலும் பிரச்சினைகளே இருக்கக்கூடாது என நினைக்காதீர்கள். எந்த பிரச்சினை வந்தாலும், அதனை தாங்கும் வலிமை வளரவேண்டும் என நினையுங்கள். பிரச்சினைகளை வெற்றிகரமாக எதிர்கொள்ள, எதிர்கொள்ள உங்கள் தன்னம்பிக்கை தானாக அதிகரிக்கும். வருங்காலத்தில் உங்கள் முன்பு எந்த பிரச்சினை வந்தாலும், “இதை எப்படி சமாளிக்கப்போகிறோம்? “ என்ற கேள்வி வரவே வராது. இந்த திறமையை வளர்த்துக்கொண்டால், பிரச்சினைகளால், உங்களுக்கு பிரச்சினை இல்லை.
5.*நினைத்தை முடிக்கவும்!*
நமக்கு பிடித்த விஷயங்களை செய்யம்போது, நமது மனம் அளவற்ற மகிழ்ச்சியுடன் இருக்கும். மகிழ்ச்சி மெல்ல மெல்ல அதிகரிக்கும்.
6.*எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது*
இல்லாத, கடந்த காலத்தை நினைத்து, நிகழ்கால மகிழ்ச்சியை இழக்காமல், நிகழ்காலத்தில் வாழ்வோம் இல்லாத, கடந்த காலத்தை நினைத்து, நிகழ்கால மகிழ்ச்சியை இழக்காமல், நிகழ்காலத்தில் வாழுங்கள். நடப்பதை மட்டுமே நினையுங்கள்.. பாதி கவலைகள் பறந்தோடும்.
7.*மன்னிக்க கற்றுக்கொள்வோம்!*
கோபம் என்பது அடுத்தவர்களின் தவறுக்காக, நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் சுயதண்டனை. அவர்களை மன்னித்துப்பாருங்கள்.. உங்கள் மனமும் மகிழும்..உங்கள் குணமும் வளரும்.. மன்னிப்போம்..மறப்போம்..
8.*கொள்கையில் உறுதி வேண்டும்!*
நீங்கள் விரும்பிய செயல்களை, செய்து முடிக்க வேண்டும் என முடிவெடித்திருக்கும் செயல்களை எப்பாடு பட்டாவது செய்துமுடித்துவிடுங்கள். அந்த உறுதிதான் உங்கள் மீதான, தன்னம்பிக்கையை உங்களிடம் அதிகம் வளர்க்கும்.
9.*நம்பிக்கை..அதானே எல்லாம்*!
வாழ்க்கையில், தோல்விகள் வந்தாலும் கூட, அதில் இருக்கும் எதிர்மறை விஷயங்களை விட்டுவிட்டு, நேர்மறையாக ரசியுங்கள். அதுதான் நேர்மறை சிந்தனை. இந்த குணத்தை மட்டும் வளர்த்துகொண்டால், உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். தோல்விகள் கற்றுக்கொடுக்கும் பாடங்கள் அதிகரிக்கும். அப்படியே, மகிழ்ச்சியும் !
10.*முயற்சியை கைவிடாதீர்கள்!*
உங்களால் முடிக்க முடியாத சவால்கள், ஜெயிக்க முடியாத சந்தர்ப்பங்கள் வரும் போதெல்லாம், உங்கள் நம்பிக்கையின் மீது, உங்களுக்கே சந்தேகம் வரும். அப்போதெல்லாம், உங்கள் முயற்சியை மட்டும் கைவிட்டு விடாதீர்கள். தோல்வி என்பது தற்காலிகமானதே.. வீழ்வது என்பது தவறல்ல..வீழ்ந்தே கிடப்பதுதான் தவறு..எனவே இன்னொரு முறை முயற்சி செய்துபாருங்கள்.
நல்லதே செய்வோம். மகிழ்ச்சியாக இருப்போம்.
Wishing everyone a blessed morning ahead..
ReplyDeleteIntha kannakeduppuku apparam sgt, bt vacant fill pannuvangala mam
ReplyDeleteAdhu promotion and counseling kaga sir..
DeleteGud mrg admin mam, poly technic exam dec 12 mudiyuthu. 16 la ctet exam start aguthu, so 13,14,15 la pg trb exam varumnu soldranga, unmaiya mam
ReplyDeleteGudnoon frnd..
DeleteNeriya coaching centers oru oru date solranga.. Enaku therinju after polytechnic immediately trb vekka chances koraivu..
Gud ev mam
ReplyDeleteGudevng jagaseesan sir..
DeletePg trb exam date epo irukkum mam
ReplyDelete