மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், அலகு விட்டு அலகு மாறுதல் கோரிய விண்ணப்பங்கள் மீது - பதில் வழங்குதல் - சார்பு.
பார்வை:-
முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் கடித ஓ.மு. எண்.012591/இ3/2021 நாள்.10.11.2021. உடன் இணைக்கப்பட்ட கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து (மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்களிடமிருந்து நேரடியாக பெறப்பட்ட) 08.11.2021 நாளன்று பெறப்பட்ட மனு எண்.012595
பார்வையில் காண் கடிதத்தில் இணைக்கப்பட்டுள்ள மனுவில், கோவை மாநகராட்சி பள்ளி 39 ஆசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு, பட்டதாரி / முதுகலை ஆசிரியர்களாக (பெரும்பாலும் பெண் ஆசிரியர்களாகவும்) பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளதாலும் எட்டு ஆண்டுகளுக்கு மேலாக கணவன் / மனைவி குழந்தைகள் மற்றும் வயதான உடல்நிலை இயலாத பெற்றோர்களை கவனிக்க இயலாததாலும் பல்வேறு மன அழுத்தங்களுக்கிடையே பணிபுரிந்து வருவதாலும் அவரவர் சொந்த மாவட்டத்திற்கு, அலகு விட்டு அலகு பணியிட மாறுதல் மற்றும் பொதுமாறுதலில் கலந்து கொள்ள அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளனர்.
2021-2022-ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொதுமாறுதல் வழிகாட்டு நெறிமுறைகள் சார்ந்த அரசாணை வெளியிடப்பட்டபின், அதனடிப்படையில் மனுதாரர்களுக்கு அலகு விட்டு அலகு மாறுதல் வழங்குதல் சார்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
-
மாநகராட்சி கல்வி அலுவலர்,
- கோயம்புத்தூர் மாநகராட்சி,
பெறுநர் :
சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் மாறுதல் கோரிய கோவை மாநகராட்சி. ஆசிரியர்களுக்கு சுற்றுக்கு விட்டு கையொப்பம் பெற்று கோப்பு பராமரிக்க தெரிவிக்கப்படுகிறது.
நகல் : முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள்,
முதன்மைக் கல்வி அலுவலகம்,
கோயம்புத்தூர் - 641 001.
நகல் : துணை ஆணையாளர், கோயம்புத்துார் மாநகராட்சி. நகல் : ஆணையாளர் அவர்களின் மேசைக்கு,
நகல் : மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment