Skip to main content

தமிழக அரசு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஏன் தயங்குகிறது?

அரசு பள்ளிகளில் ஆசிரியர் எண்ணிக்கை குறைந்தால், இன்னும் மாணவர் சேர்க்கை குறையும். அப்படி மாணவர் சேர்க்கை குறைந்தால் அதையே காரணம் காட்டி அரசு பள்ளிகளை மூடிவிடுவது சுலபம். அதன்மூலம், பள்ளிக்கல்வியை முழுக்க முழுக்க தனியார் மயமாக்குவது எளிதாகிவிடும்”, என்கிறார் பிரின்ஸ்.
இனிமேல் அரசு பள்ளிகள் உயிர்பிழைக்க வழியே இல்லையா என்ற கேள்விதான் நம் எல்லோரிடமும் மேலோங்கியிருக்கிறது. அரசு பள்ளிகளை காப்பாற்ற முக்கியமாக, உடனடியாக தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன?
“குறிப்பிட்ட புவியியல் எல்லைக்கு இதுதான் பள்ளி என தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.. சிறியது, பெரியது என கிட்டத்தட்ட 80 நாடுகளில் சாத்தியமான இந்த முறை ஏன் இந்தியாவில் சாத்தியமாகாது? 1964-66ல் கோத்தாரி கமிட்டி அரசிடம் அளித்த அறிக்கையில் இந்தியாவை சேர்ந்த கல்வியாளர்கள் மட்டுமின்றி, உலகிலுள்ள பல கல்வியாளர்களும் அளித்த பரிந்துரைகளில் இத்தகைய பொதுப்பள்ளி முறைமையும் ஒன்று. 1968-ல் உருவாக்கப்பட்ட முதல் கல்விக்கொள்கையில் பொதுப்பள்ளி முறைமையும் குறிப்பிடப்பட்டுள்ளதே”, என்கிறார் பிரின்ஸ்.
இந்தியா முழுவதும் புவியியல் எல்லைக்கு ஏற்ப அருகாமைப் பள்ளிகள் உருவாக்கப்பட்டு பொதுப்பள்ளி முறைமையை 20 ஆண்டுகளுக்குள் ஏற்படுத்த வேண்டும் என 1964-லேயே கோத்தாரி கல்விக்குழு இந்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
அருகாமை பொதுப் பள்ளிகள் மூலமாகத்தான் மாணவர்களுக்கு சமமான கல்வியை வழங்கி, அதன்மூலம் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் எனவும் கோத்தாரி கல்விக் குழு அளித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எந்தவொரு சாதாரண குடிமகனும், தன் குழந்தையை தனியார் பள்ளிகளுக்கு அனுப்ப தேவையில்லை என நினைக்கும் அளவுக்கு, அந்த பொதுப் பள்ளிகளின் தரம் இருக்க வேண்டும் என கோத்தாரி குழு பரிந்துரைத்தது.
இந்தப் பரிந்துரையை 1968-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் கல்விக்கொள்கையும் ஏற்றுக்கொண்டது. ஆனால், இன்று வரை பொதுப்பள்ளி முறைமை இந்தியாவில் சாத்தியப்படவில்லை, சாத்தியப்படுத்தப்படவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
பொதுப்பள்ளிகளின் தேவை, முக்கியத்துவம் குறித்து இப்போதல்ல நீண்ட நெடுங்காலமாகவே இந்தியாவில் இதுகுறித்து பேசப்பட்டிருப்பதாக பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறுகிறார்.
“இந்தியாவில் பொதுப்பள்ளிகளின் தந்தை என அழைக்கப்படும் ஜோதிராவ் பூலே, 1882-ல் பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் கல்விக்குழுவான ஹண்டர் கமிஷன் முன்பு, அரசே பள்ளிகளை நடத்தினால்தான் பெண்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் முறையான கல்வி கிடைக்கும் என பரிந்துரை செய்தார்”.
2006-ஆம் ஆண்டு அப்போதைய திமுக ஆட்சியின்போது முத்துக்குமரன் கமிட்டி அளித்த பரிந்துரையில், “பொதுப்பள்ளிகள் தான் சமூகத்தை ஊடுருவும், சமூகத்தை மேம்படுத்தும்”, என கூறியிருக்கிறார். முத்துக்குமரன் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையிலேயே சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டதை இப்போது நாம் நினைத்துகொள்ள வேண்டியது கட்டாயம்.
மாணவர்களிடையே நிலவிவந்த மெட்ரிக்குலேஷன், மாநில பாடத்திட்டம் என்ற பாகுபாட்டை பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு ஒழித்து, செயல்வடிவிலான பாட முறை சமச்சீர் கல்வியால்தான் சாத்தியமானது. “சமச்சீர் கல்வி மிக எளிமையாக இருக்கிறது”, என கேலி செய்பவர்களெல்லாம் உண்டு. ஆமாம், மாணவர்களுக்கு பாடத்திட்டம் எளிதாக புரிந்துகொள்ளும்படிதானே இருக்க வேண்டும்.
இவ்வளவு பிரச்சினைகளையும் சிக்கல்களையும் வைத்துக்கொண்டு ஏன் அரசுப் பள்ளிகள் வேண்டும் என நமக்குள்ளேயே கேள்வி எழுப்பிப் பார்ப்போம். குழந்தைகளுக்கு பாலின சமத்துவம், சமூகத்தில் புரையோடிருக்கும் சாதியப் பாகுபாடு, அதிகார வர்க்கம், எதிர்கால தலைமுறையையே பாதிக்கும் வளர்ச்சி திட்டங்கள் குறித்தெல்லாம் ஒரு மாணவன் இளம் பருவத்திலேயே அறிந்துகொள்ள பொதுப் பள்ளிகள் தான் வேண்டும்.
பொதுப் பள்ளிகளை இனிமேலாவது உயிர்பிழைக்க வைக்க கல்வியாளர்களும், இந்த ஆய்வறிக்கையின் மூலமும் பல பரிந்துரைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அவற்றை முறையாக செய்யல்படுத்தினாலே அரசுப் பள்ளிகளைக் காப்பாற்றலாம்.
கல்வித்துறைக்கென ஒதுக்கப்படும் நிதியை மடைமாற்றாமல் கல்வி வளர்ச்சிக்கே செலவிட வேண்டும்.
அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களை கல்வி கற்பித்தல் மற்றும் அவை சார்ந்த பணிகளை மட்டுமே செய்யவிட வேண்டும். மக்கள் வசிப்பிட எல்லைகளையும், மலைவாழ் மக்கள் உள்ளிட்ட எளிதில் அணுக இயலாத இடங்களில் புவியியல் எல்லைகளுக்குட்பட்டே பொதுப்பள்ளிகள் அமைக்கப்பட வேண்டும்.
ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒரு தனியார் பள்ளி குறிப்பிட்ட இடத்தில் அமைகிறது என்றால், அதற்காக பள்ளியைத் தொடங்கும் தனியார் அமைப்பு என்ன காரணங்களைச் சொல்கிறதோ அதை ஆராய்ந்து அருகாமையில் உள்ள பொதுப்பள்ளிகளை மேம்படுத்த வேண்டும்.
மாணவனின் வசிப்பிடத்திற்கு 5 கி.மீ. தொலைவை தாண்டி அமைந்திருக்கும் தனியார் பள்ளியின் உரிமத்தை ரத்து செய்வது. அரசு ஊழியர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என மக்களின் வரி மூலம் ஊதியம் பெறும் அனைவரும் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் அனுமதிக்க வேண்டும் என சட்டம் இயற்றல்.
பொதுப் பள்ளிகளை தூக்கி நிறுத்த இனிமேலாவது அரசாங்கம், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என முத்தரப்பு மக்களும் முன்வர வேண்டும். “அரசுப் பள்ளிகளில் தரம் இல்லை”, “சரியான கல்வி கிடைக்காது” என எண்ணும் மக்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும்.
கும்பகோணத்தில் பள்ளிக் கட்டிடம் இல்லாமல் தீயில் எரிந்த 94 பிஞ்சுக் குழந்தைகள் அரசுப் பள்ளியில் படிக்கவில்லை.சென்னையில் முறையான பயிற்சியின்றி நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த மாணவி படித்தது நகரின் 'மிக முக்கியமான' தனியார் பள்ளியில். “அரசுப் பள்ளியில் படித்ததால்தான் அனிதா நீட் தேர்வில் தோற்றாள்” என நம்புபவர்களுக்கு ஒன்று, அனிதா படித்தது அரசுப் பள்ளியில் அல்ல. ஆனால், இங்கே அனிதா படித்தது அரசுப் பள்ளியா? தனியார் பள்ளியா? என்பது வாதமல்ல. நீட் தேர்வின் கொடுமைகளை, அதுவொரு சமூக அநீதி என மாணவர்கள் புரிந்துக்கொள்ள பொதுப் பள்ளிகள் ஒன்றே தீர்வாக இருக்க முடியும்


Comments

Popular posts from this blog

சிந்தனைச் சிதறல்..

மனம் ஒருமுகப்பட.. *காற்று ஒருமுகப்பட புயலாகிறது! மேகம் ஒருமுகப்பட மழையாகிறது.!  நீர் ஒருமுகப்பட நதியாகிறது!  நதி ஒருமுகப்பட கடலாகிறது!  மனம் ஒருமுகப்பட வெற்றி உருவாகிறது!  உங்களைக் கையாள மூளையைப் பயன்படுத்துங்கள்! மற்றவரைக் கையாள இதயத்தைப் பயன்படுத்துங்கள்!  இதயத்தைக் கவர்ந்துவிட்டு, எதைச் செய்தாலும், அது இணக்கமாகவே இருக்கும்.  வாயில் உதிரும் வார்த்தைகளை விட இதயத்திலிருந்து உதிரும் வார்த்தைகளால் அன்பு மலரும்! அன்பே ஆனந்தம் தரும்.*_ கோபம் ஒரு சுயதண்டனை, அடுத்தவர் செய்த தவறுக்கோ அல்லது அடுத்தவர் தவறு செய்திருக்கலாம் என்ற நிலையிலோ நமக்கு நாமே கொடுத்துக் கொள்கிற தண்டனைதான் கோபம்!  கோபத்தில் நடிப்பிருக்கலாம்! துடிப்பிருக்கக்கூடாது!*_  *உறவுகள் கூட நிலவைப் போன்று தான்..!* *"தூரத்தில்" இருக்கும் வரை* *ரசித்துக் கொண்டாடப்படும்..!!* *எதிர்பார்ப்பை* *குறைத்துக் கொள்ளுங்கள்..!* *ஏமாற்றத்தால் சோர்வடையத்* *தேவையில்லை..!!* *அன்று "வயதைப்"* *பார்த்து வந்தது..* *இன்று "வசதியைப்"* *பார்த்து தான் வருகிறது..!!* *"மரியாதை"* *செல்லும் பாதை*  *சரியானதாக இல்லாத போது..*

அமைதி..

நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம். ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான். இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள். மன்னன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக் கொண்டே வந்தான். அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்து இருந்தார்கள். ஒருவர் அழகான ஏரியை வரைந்திருந்தார். ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமாக இருந்தது. மற்றொருவர் மலர்களை வரைந்திருந்தார். பார்த்தவுடனே பறிக்கத் தூண்டும் வகையில் அம்மலர்கள் தத்ரூபமாக இருந்தது. இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றியவாறு ஓவியத்தில் பிரதிபலித்திருந்தனர். ஒரு ஓவியத்தில் ஒரு மலையின் மீதிருந்து ஆக்ரோஷமாக கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்தது. அதுமட்டுமா இடியுடன் மழை வேறு பொழிந்து கொண்டிருந்தது. இது அமைதியே அல்ல.

படித்ததில் பிடித்தது..

 கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான். ”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன தெரியும்? நீ  நினைத்தபோது மழையை அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது. பேசாமல், இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்!” என்றான். கடவுள் உடனே,  “ அப்படியா? சரி.  இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்” என்று வரம் அருளிவிட்டுப் போய்விட்டார். விவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. அடுத்த விதைப்பிற்கான பருவம் வந்தது. ”மழையே பெய்” என்றான். பெய்தது. நிறுத்தச் சொன்னபோது,  மழை நின்றது. ஈரமான நிலத்தை உழுதான். தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து,  விதையை தூவினான். மழை, வெயில், காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன. பயிர் பச்சைப்பசேல் என வளர்ந்தது. வயல்வெளியைப் பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருந்தது. அறுவடைக் காலமும் வந்தது. விவசாயி ஒரு கதிரை அறுத்தான். அதனை உதிர்த்து, திறந்து பார்த்தான். அதிர்ந்தான்.. உள்ளே தானியத்தைக் காணவில்லை, மிகச் சிறிய பதர்தான் இருந்தது. அடுத்தது, அதற்கடுத்தது என்று ஒவ்வொரு தானியக்கதிராக வெட்டி