Skip to main content

நாம் சேர்ந்து பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே

இளம் வயது பெண் ஒருவர் ஒரு பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தார். அடுத்த நிறுத்தத்தில் பருமனான இன்னொரு பெண்  பல பைகளுடன் அந்தப் பேருந்தில் ஏறி அந்த இளம் வயது பெண்ணின் பக்கத்தில் அமர்ந்தார்.
அவரது பருத்த உடலும் பைகளும் அந்த இளம் பெண்ணை நெருக்கிக் கொண்டிருந்தன.
அந்த இளம் பெண்ணிற்கு அடுத்தப்பக்கத்தில் அமர்ந்திருந்த பயணி  இதனைப் பார்த்து அதிருப்தி அடைந்தார்.
உடனே அந்த இளம் பெண்ணிடம், "பேருந்து முழுவதும் நிறைய இடம் காலியாக உள்ளதை கூறுங்கள்" என  ஆதங்கப்பட்டார்.
அந்த பெண் புன்னகைத்தவாறு கூறினார்:
"நாம் சேர்ந்து பயணிக்கப்போவது மிகக் குறுகிய நேரம்தான்.
எனவே, அற்பமானதொரு விஷயத்திற்காக  பேசுவதோ வாதிடுவதோ தேவையற்றது.
நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்கத்தானே போகிறேன்," என்றார்.
அப்பெண்ணின் இந்தப் பதில் பொன்னெழுத்துகளில் பதிக்கப்பட வேண்டியவை!
*"அற்பமானதொரு விஷயத்திற்காக மரியாதைக் குறைவாக பேசுவதோ வாதிடுவதோ தேவையற்றது. நாம் சேர்ந்து பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே"*
இங்கு நாம் வாழப்போகும்
காலம் மிகவும் குறைந்தது என்பதை உணர்வோமாயின், 
வாய்ச்சண்டை போடுவது,
வீண் வாதத்தில் ஈடுபடுவது,
பிறரை மன்னிக்க மறுப்பது,
எதிலுமே அதிருப்தியும்
குற்றமும் காணும்
போக்கினைக் கொண்டிருப்பது
நம் நேரத்தையும் சக்தியையும்  வீணடிக்கும் செயல் என்பது புரிந்திடும்.
ஒருவர் உங்களைப் புண்படுத்திவிட்டாரா? அமைதியாக இருங்கள்,  *பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே*
எவரேனும் உங்களுக்குத் துரோகம் புரிந்தாரா, உங்களை ஆக்கிரம வதை செய்தாரா(bully) ஏமாற்றினாரா, மட்டம் தட்டி முந்தப் பார்த்தாரா,
அவமானப்படுத்தினார? அமைதியாக இருங்கள்,  பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே*
ஒருவர் நமக்கு எப்பேற்பட்ட தொல்லைகளை ஏற்படுத்தினாலும், ஒன்றை நினைவிற்கொள்ளுங்கள், *பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே*
இப்பயணம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது ஒருவருக்கும் தெரியாது. அவர்கள்பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே*
உறவையும் நட்பையும் போற்றுவோம். ஒருவரை ஒருவர் மதித்து வாழ்வோம்,
ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவோம், மன்னிப்போம் மறப்போம்.  நன்றி பாராட்டி மகிழ்ச்சியாக வாழும் வழியைப் பார்ப்போம்.
ஏனெனில், *நாம் சேர்ந்து பயணிக்கப்போவது ஒரு குறுகிய காலமே*

Comments

 1. Good morning ano sis and friends

  ReplyDelete
 2. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

  ReplyDelete
 3. Ridhan sir..

  Nothing like that, I didn't come to d website after that and u asked a common question so only I didn't replied.

  PTA posting ku pakathula iruka government school or government aided school poi approach pani resume kudunga, temporary ah work pana viruppamnu solunga apuram avangale andha particular subject or post ku vacancies irundha ungala kandippa kupduvanga.

  ReplyDelete
 4. Yellarum ungalaiyea ketutey erukanga nu thaan common ah quesques ketten . Then yaarumay ans panala neengalum ans panalanu kettuten mam....... Thanks for ur valuable info mam

  ReplyDelete
  Replies
  1. Its ok ridhan sir, thanks for ur patience and understanding the situation....

   Delete
 5. Good morning Ano mam and all my friends

  ReplyDelete
 6. Neraiya friendsa kanom .why mam?

  ReplyDelete
  Replies
  1. Elam may be busy ah irupanga mam, moreover endha news yum ila so adhu kuda reason ah irukalam..

   Delete
 7. Helo mam trt exam pathi etha news iruka.... i hav two kids... and dont know weather to prepare for trt or not.... pls give some idea

  ReplyDelete
  Replies
  1. Hi Arul mam..

   I can understand your feelings very well.. All I can say is go ahead with preparation of trt or pg, sure we can expect those exams sooner or later. But am damn sure, there are vacancies, there's gonna b exams, so better prepare well..

   Delete
 8. tet ku june aakum posting poda wait pannei than aakunum

  ReplyDelete
 9. Good noon, sister and friends.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிந்தனைச் சிதறல்..

மனம் ஒருமுகப்பட.. *காற்று ஒருமுகப்பட புயலாகிறது! மேகம் ஒருமுகப்பட மழையாகிறது.!  நீர் ஒருமுகப்பட நதியாகிறது!  நதி ஒருமுகப்பட கடலாகிறது!  மனம் ஒருமுகப்பட வெற்றி உருவாகிறது!  உங்களைக் கையாள மூளையைப் பயன்படுத்துங்கள்! மற்றவரைக் கையாள இதயத்தைப் பயன்படுத்துங்கள்!  இதயத்தைக் கவர்ந்துவிட்டு, எதைச் செய்தாலும், அது இணக்கமாகவே இருக்கும்.  வாயில் உதிரும் வார்த்தைகளை விட இதயத்திலிருந்து உதிரும் வார்த்தைகளால் அன்பு மலரும்! அன்பே ஆனந்தம் தரும்.*_ கோபம் ஒரு சுயதண்டனை, அடுத்தவர் செய்த தவறுக்கோ அல்லது அடுத்தவர் தவறு செய்திருக்கலாம் என்ற நிலையிலோ நமக்கு நாமே கொடுத்துக் கொள்கிற தண்டனைதான் கோபம்!  கோபத்தில் நடிப்பிருக்கலாம்! துடிப்பிருக்கக்கூடாது!*_  *உறவுகள் கூட நிலவைப் போன்று தான்..!* *"தூரத்தில்" இருக்கும் வரை* *ரசித்துக் கொண்டாடப்படும்..!!* *எதிர்பார்ப்பை* *குறைத்துக் கொள்ளுங்கள்..!* *ஏமாற்றத்தால் சோர்வடையத்* *தேவையில்லை..!!* *அன்று "வயதைப்"* *பார்த்து வந்தது..* *இன்று "வசதியைப்"* *பார்த்து தான் வருகிறது..!!* *"மரியாதை"* *செல்லும் பாதை*  *சரியானதாக இல்லாத போது..*

அமைதி..

நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம். ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான். இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள். மன்னன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக் கொண்டே வந்தான். அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்து இருந்தார்கள். ஒருவர் அழகான ஏரியை வரைந்திருந்தார். ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமாக இருந்தது. மற்றொருவர் மலர்களை வரைந்திருந்தார். பார்த்தவுடனே பறிக்கத் தூண்டும் வகையில் அம்மலர்கள் தத்ரூபமாக இருந்தது. இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றியவாறு ஓவியத்தில் பிரதிபலித்திருந்தனர். ஒரு ஓவியத்தில் ஒரு மலையின் மீதிருந்து ஆக்ரோஷமாக கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்தது. அதுமட்டுமா இடியுடன் மழை வேறு பொழிந்து கொண்டிருந்தது. இது அமைதியே அல்ல.

படித்ததில் பிடித்தது..

 கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான். ”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன தெரியும்? நீ  நினைத்தபோது மழையை அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது. பேசாமல், இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்!” என்றான். கடவுள் உடனே,  “ அப்படியா? சரி.  இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்” என்று வரம் அருளிவிட்டுப் போய்விட்டார். விவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. அடுத்த விதைப்பிற்கான பருவம் வந்தது. ”மழையே பெய்” என்றான். பெய்தது. நிறுத்தச் சொன்னபோது,  மழை நின்றது. ஈரமான நிலத்தை உழுதான். தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து,  விதையை தூவினான். மழை, வெயில், காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன. பயிர் பச்சைப்பசேல் என வளர்ந்தது. வயல்வெளியைப் பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருந்தது. அறுவடைக் காலமும் வந்தது. விவசாயி ஒரு கதிரை அறுத்தான். அதனை உதிர்த்து, திறந்து பார்த்தான். அதிர்ந்தான்.. உள்ளே தானியத்தைக் காணவில்லை, மிகச் சிறிய பதர்தான் இருந்தது. அடுத்தது, அதற்கடுத்தது என்று ஒவ்வொரு தானியக்கதிராக வெட்டி