Skip to main content

ஆசிரியர் தகுதித் தேர்வு-2022-க்கு விண்ணப்பிப்பது எப்படி?

 

தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது நடத்தப்படும் என ஆசிரியர் வேலை தேடும் பி.எட்., மற்றும் பிளஸ்-2 முடித்துவிட்டு ஆசிரியர் பயிற்சி முடித்த லட்சக்கணக்கானவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I மற்றும் தாள் II-க்கு மார்ச் 14 ஆம் தேதி முதல் ஏப்ரல் 13 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

தேர்வின் பெயர்: ஆசிரியர் தகுதித் தேர்வில்(டெட்)

தகுதிகள்:

தாள்-I: இதற்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பிளஸ் தேர்ச்சியுடன் இரண்டு ஆண்டு ஆசிரியர் பயிற்சி கல்வியை முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தாள்-II: அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் இளநிலைப் பட்டம் பெற்று பி.எட் முடித்தவர்கள், முதுநிலைப் பட்டம் பெற்று பி.எட் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.


வயது வரம்பு: குறைந்தபட்ச 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினர், எம்பிசி, பிசி பிரிவினர் ரூ.500, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.250 செலுத்த வேண்டும்,

தேர்வுசெய்யப்படும் முறை: தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு நடைபெறும் நாள்: தாள்-I ஜூன் 27 மற்றும் தாள் - II ஜூன் 28 ஆம் தேதி நடைபெறலாம் என கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பின்னர் வெளியாகும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.trb.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 13.04.2022

மேலும் விவரங்கள் அறிய http://www.trb.tn.nic.in/TET_2022/07032022/Notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Comments

  1. CM officeku g.o. 149 file anupi irukanga school education department.... 💯 cm nalla mudiuve eduparu ..... wait and watch.....and also school education department la entha g.o .parthi discuss poguthu.....

    ReplyDelete
  2. Tet mark Ku important kodukalam....so Tet 2022 mark low ah irukavanga eluthunga friends....

    ReplyDelete
    Replies
    1. Tet marks ku important tharalamnu solringalae trt la intha marks ku important tharuvangala or tet marks base pani Posting poduvangala

      Delete
    2. Tet marks+ seniority method

      Pgtrb mari ya sir

      Delete
    3. Ennum Enna method nu confirm agala....and trt g.o um ennum cancel pannala....cm kitta file poi iruku ....wait and watch .....

      Delete
    4. Eppo sir theriya varum ovaru nalum ethir patukitte iukkirom

      Delete
  3. Shanmugam sir neenga news podurathala konjam positive energy kidaikuthu sir thankyou sir

    ReplyDelete
  4. March 18 nadaiperum budget thakkaala tet related good news varuma sir


    ReplyDelete
  5. 100% TRT thaan varum .( தற்போது ஆட்சியில் இருப்பது தி மு க தான். But முதல்வராக இருப்பது கலைஞர் ஐயா இல்லை . முதல்வர் ஸ்டாலின்).. நேரத்தை வீணடிக்க வேண்டாம்.......

    ReplyDelete
    Replies
    1. சார் எப்படி சொல்றிங்க

      Delete
  6. Application la DOB la calendar open aga matikithu sir.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சா...

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர். குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார். இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவர...

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..