Skip to main content

துணிந்தபின் மனமே, துயரம் கொள்ளாதே..

ரோஜாக்கள் மிக அழகாக பூக்கின்றன. ஏனெனில் அவை, தாமரைகளாக மாற முயலுவதில்லை.


தாமரைகள் மிக அழகாக பூக்கின்றன. ஏனெனில் மற்ற மலர்களை பற்றிய கதைகளை அவை கேட்பதில்லை. 


இயற்கையில் எல்லாமே மிக அழகாக ஒருங்கிணைந்து செல்கின்றன. ஏனெனில் எதுவும் எதுவோடும் போட்டி போடுவதில்லை.


எதுவும் மற்றொன்றாக மாற முயல்வதில்லை. 


எல்லாமே அதனதன் வழியே செல்கின்றன.


சற்றே இதை கவனியுங்கள்.


நீங்கள் நீங்களாக இருங்கள். 


மேலும் நீங்கள் என்ன செய்தாலும் வேறுவிதமாக ஆக முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். 


எல்லா முயற்சிகளும் பயனற்றவையே. 


நீங்கள் நீங்களாக இருக்க மட்டுமே முடியும்.

            

மனிதன் பேராற்றல் மிக்கவன் என்பதை உணர்ந்து கொண்டவர்கள் அரும் பெரும் செயல்களில் ஈடுபடுகிறார்கள். செயற்கரிய செயல்களை செய்யவேண்டும் என்று பாடுபடுகிறார்கள். அவர்கள் நடந்து செல்லும் பாதை, அவர்கள் கடந்து செல்லும் பாதை இருள் பூசிய காடாக இருக்கலாம். ஒளி பாய்ந்த பாலைவனமாக இருக்கலாம், கரு மேகங்கள் கட்டிதழுவி உறவாடும் மலை முகடாக இருக்கலாம் வானநிலாவைக் கைதொடத் தாவி எழும் அலைகடலாக இருக்கலாம். 


இதுதான் பாதை, இதுதான் பயணம் என்று சிரமங்களோடு உறவாடிக்கொண்டே செல்கிறார்கள். தூரத்தே தென்படும் ஒளிமயமான காலம் விரைவில் வந்துவிடும் என்ற நம்பிக்கை அவர்களை இயக்கிச்செல்கிறது. கரணம் தப்பினால் மரணம் என்றாலும் அவர்கள் அஞ்சுவதில்லை.


முன்னேறு! முன்னேறு! என மனம் ஓயாமல் ஊக்குவிக்கக் கால்களில் ஒட்டியிருக்கும் இரும்புச் சங்கிலிகளை இலவம் பஞ்சுகளாக எடுத்தெறிந்து வெற்றியாளர்களின் பயணம் கம்பீரமாகத் தொடரும். முயற்சி செய்தால் முன்னேறலாம் என்பது தன்னம்பிக்கையாளர்களின் மனத்திரையில் எழுதி வைத்த ஓவிய வாசகம்!!


Comments

  1. Wishing everyone a blessed Sunday ahead..

    ReplyDelete
  2. https://t.me/TetSucc

    டெட் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கவனத்திற்கு இந்த டெலிகிராம் குழுவில் இணையுமாறு அன்புடன் வேண்டுகிறேன்������������������Hello to all TET teachers, This group was created just for you, and I kindly ask everyone to join in and we will continue to make the difference from you. #CancelGo149
    Election manifesto 177. Executive. ������

    ReplyDelete
    Replies
    1. ஒருமுறை பதிவிட்டால் நன்றாக இருக்கும்

      Delete
  3. Enna method la posting poda solli kekka poringa

    ReplyDelete
  4. அவங்க கேட்டா நடந்துருமா

    ReplyDelete
  5. டிஆர்டி வரதான் வாய்ப்பு. சில நாட்களில் அறிவிப்பு வரவுள்ளது

    ReplyDelete
    Replies
    1. எப்படி சொல்றிங்க

      Delete
  6. சண்முகம் சார் இப்ப என்ன நிலவரம்

    ReplyDelete
  7. *🌹TET 2013 ஆசிரியர் சங்கம்-36/2017,பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் குழு🌹*

    TET 2013 முதல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு முதன் முதலாக உருவாக்கப்பட்ட சங்கம்.

    🌹சங்கத்தின் நோக்கம்🌹*

    1) வழக்கு For Cancel GO 149 & For Cancel further tet Exam.

    2) உண்ணாவிரத போராட்டம் For Cancel GO 149.

    *🌹ஆசிரியர் குழு🌹*

    MAIN ASSOCIATION GROUP-TELG.

    https://t.me/+_SudZu3-PWY1MzRl



    *🌹TET 2013 PAPER -1 & 2 (82 to 150 Marks)🌹*

    மாநில தலைவர்:

    *R.SHEELA PREMKUMARI.,M.Sc.,M.Ed.,M.phil.,*

    *98945 72404*

    மாநில செயலாளர்:

    *K. SHANMUGA PRIYA.,M.Sc.,B.Ed.,*

    *9994549014*

    மாநில பொருளாளர்:

    *Misses E. Ponmani *

    *98940 20613*

    மாநில ஒருங்கிணைப்பாளர்:

    *Mr.Minnal Ravi*

    ++91 93444 66092*

    இப்படிக்கு,

    *🌷ASSOCIATION-36/2017🌷*

    ReplyDelete
  8. இவர்கள் பண்ணும் இந்த செயல்களால் உடனே நியமனத் தேர்வு வரும்.

    ஆசிரியர் படிப்பு படித்தவர்கள் சுயமாக சிந்திக்க தெரிந்தவர்கள் !

    நல்லது எது?
    கெட்டது எது?
    என்று உணர்ந்து செயல்படுங்கள் !

    யாருடைய சுய லாபத்திற்காக உங்களுடைய சிந்தனையை இழக்க வேண்டாம் .

    காலம் கடந்து போகும் அல்லது
    படிப்பதற்கு நேரம் இல்லாமல் போகும் .

    இருக்கும் காலத்தை பயனுள்ளதாக பயன்படுத்தி நேர்மையாக வேலை வாங்க முயற்சி செய்யுங்கள் !

    போட்டி உலகில் படிப்பு திறமையை கொண்டு வேலை வாங்க முடியும் .

    குறுக்கு வழியில் எதுவும் சாத்தியம் இல்லை .

    ReplyDelete
  9. Pgtrb response sheet and answer key eppo varum mam

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here