மழை! ஓயாத மழை! ஏரி நிறைந்து வழியும் அளவுக்கு மழை.அந்த ஏரி நீர் குளிர்ச்சி அடைந்து விட்டது.
அந்தக் குளிரைத் தாங்க முடியாத ஒரு தவளை, மழை ஓய்ந்ததும் சற்று தூரத்திலுள்ள ஒரு கிணற்றுக்கு வந்தது.
கிணற்று நீர் வெது வெதுப்பாக இருக்குமே என்பதால் கிணற்றிற்குள் குதித்தது.
அந்தக் கிணற்றில் பல காலமாக வாழ்ந்து வந்த தவளைகளில் ஒரு தவளை இந்தப் புதிய தவளையை வரவேற்றது.
‘நான் வெகு நாட்களாகப் பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன்.
உன்னைக் கண்டதும் எனக்கு மகிழ்ச்சி’ எனக் கூறிப் பொந்தில் வைத்திருந்த உணவு வகைகளைப் புதிய தவளைக்குத் தந்தது.
இரண்டு தவளைகளும் பேசிக் கொண்டிருந்தன.
கிணற்றிலிருந்த மற்ற தவளைகளுக்குப் புதிய தவளை
வந்தது பிடிக்கவில்லை.
‘இங்கே கிடைக்கும் உணவு நமக்கே போதவில்லை. இதில் புதிய விருந்தாளி வேறு’ எனக் கவலைப்பட்டன.
புதிய விருந்தாளியை எப்படியும் துரத்தி விட முடிவு செய்தன.
நல்ல சமயம் பார்த்து கொண்டு இருந்தன.இரண்டு தவளைகளும் பேசிக்கொண்டிருப்பதை அருகே சென்று வேடிக்கை பார்த்தன.
அப்போது அக்கிணற்றுத் தவளை ஏரித்தவளையிடம்,
நண்பனே!நீ இத்தனை நாளும் எங்கே தங்கியிருந்தாய்?’ எனக்கேட்டது.
‘நான் ஏரியில் தங்கி இருந்தேன்’ என்றது ஏரித்தவளை.
ஏரியா? அப்படியென்றால் என்ன?’ எனக் கேட்டது கிணற்றுத் தவளை.
‘இந்தக் கிணற்றைப் போன்று பல மடங்கு பெரிய நீர் நிலை.அதில் மீன், ஆமை, முதலை ஆகியவை உண்டு’ என்றது ஏரித் தவளை.
‘இந்தக் கிணற்றைப் போன்றதில் அவ்வளவு உயிரினங்களா?’ என்று கேட்டது கிணற்றுத் தவளை.
‘இந்தக் கிணற்றைவிட மிக,மிகப் பெரியது ஏரி’ என்றது ஏரித் தவளை.கிணற்றுத் தவளை ஏரித் தவளை சொல்வதை நம்பவில்லை.
‘நண்பா நீ பொய் சொல்லுகிறாய்.எங்களுக்கு நன்றாக தெரியும்.இந்த கிணற்றைவிட பெரிய நீர் நிலை உலகத்தில் வேறு எங்கும் இருக்க முடியாது’ என்றது.
ஏரித் தவளை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும்,
கிணற்றுத் தவளை நம்பவில்லை. கூட இருந்த மற்ற தவளைகளும் நம்பவில்லை.
எல்லாத் தவளைகளும் ஏரித் தவளையைப் பார்த்து,
‘நீ பொய்யன்,புரட்டன்,உன்னை நம்பி இங்கே வைத்திருந்தால் எங்களுக்கு ஆபத்து’ என்று கூறி ஏரித் தவளையை எல்லா கிணற்று தவளைகளும் தாக்க முயன்றன.
"இந்த முட்டாள்களோடு இனியும் விவாதிப்பது புத்திசாலித்தனம் அல்ல" என்று நினைத்த ஏரித்தவளை உடனே கிணற்றை விட்டு வெளியேற நினைத்தது.
அப்போது,
கிணற்றிலிருந்து நீர் எடுக்க ஒரு பெண் தோண்டியை இறக்கியபோது, அதனுள் சட்டென்று தாவிச்சென்று குதித்த ஏரித் தவளை, தோண்டித் தண்ணீருடன் மேலே சென்றது.
தாவிக் குதித்து ஏரி நோக்கிச் சென்றது.
ஆம்,நண்பர்களே.,
*முட்டாள்களிடம் வாதாடுவதை விட,அவர்களிடம் இருந்து நீங்கள் ஒதுங்கிச் செல்வதே சாலச் சிறந்தது..*
Wishing everyone a blessed morning ahead..
ReplyDeleteடிஆர்டி வர வாய்ப்பு இல்லை. அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
ReplyDeletePlease don't confuse us.
DeleteYaaruya neenga epdi sodringa
DeleteKuzhappa vathikal kuzhapi konde iruparkal so pls padinga friends bcos syllabus very tough so namaku material collect pannave time poidum so be prepare.nadavadikkaikal eduthal nallathu nadanthal santhosam athuku yen nama padikama irukanum padithal subject knowledge increase agum enaku ellam touch ye illa so useful ah irukum padikira velaiya parunga UG maths material irunthal sollunga
DeleteAdmin mam..
ReplyDeleteD.t.ed + B.A (Tamil)..
Tet paper 2 elutha eligible ah!
(Paper 1 already pass)
D.ted Plus B.Lit Tamil only eligible
DeleteNotification la graduation with elementary education paper 2 eligible iruke athan keten sir
Delete