நேர்மையின் விலா எலும்புகள் சிற்சில நேரங்களில் நொறுங்கித்தான் போகிறது
பாலெது கள்ளெதுவென இனங்காணலில் தவறிழைக்கிறோமோ என்னவோ?
சட்டாம்பிள்ளைகள் நியாயத்தீர்ப்பெழுதும் என்பதில் ஐயப்பாடேதுமில்லை
தவறிட வாய்ப்பே இல்லையென சொல்வதற்குமில்லை
சேர்த்து வைக்கிற உழைப்புப்பெயரையெல்லாம் ஓர் நொடியில் பொடியாக்குகின்றன ஊடக வாய்கள்.
வாழ்க்கை எனும் ஓட்டத்தில் நிறைய நபர்களை சந்தித்திருக்கலாம்
நிறைய பேரை நண்பர்கள் ஆக்கியிருக்கலாம்
நிறைய பேரை தவிர்த்திருக்கலாம்
நிறைய பேரை
ஒதுக்கி இருக்கலாம்
நிறைய பேரை விலக்கி இருக்கலாம்
நிறைய பேரை உங்கள் தோல் கொடுத்து தூக்கி நிறுத்தியிருக்கலாம்
ஆனாலும் எல்லா நேரத்திலும்
எல்லாரும் ஒரேமாதிரியாய் இருப்பார்கள்
என்று நினைப்பதுதான்
மனிதனின்
மிகப்பெரிய முட்டாள்தனம்.,
உண்மை வெல்லுமென பலகைகளில் தான் இப்போதெல்லாம் காண நேர்கிறது
கோபங்கள் கையறு நிலைதனில் கிடந்திட வெட்கமின்றி வாசித்துத் தொலைக்கிறேன்
பொய்களின் தலைப்புச் செய்திகளை
ஓர் ஓரமாய் வக்கிரங்கள் சிரித்துக்கிடக்க
யாருமறியாமல் அழுகிறது நிஜங்களின் கண்கள்
இதோ
பெருக்கெடுக்கும் என் பெருமூச்சிலேனும் அணைந்து போய்த்தொலையுமா அநியாயங்கள்???
Wishing everyone a blessed day ahead..
ReplyDeleteTrt syllabus is true news then why many saying its fake..They also say trt will not come..What is the true status madam
ReplyDeleteSwetha sis konjam porunga trb website la vanthal ellorukkum puriyum I mean date announced na
Delete