*அற்புதமான சிற்பி ஒருவர், ஒருநாள் தெருவில் போய்க்கொண்டிருந்தபோது ஒரு கடையருகே கனத்த பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார்.*
*ஏதோ பெரிய புதையலைப் பார்த்த மகிழ்ச்சி அவருக்கு. அதன்பின் அந்தக் கடைக் காரரிடம், 'ஐயா, இந்தப் பாறாங்கல் தங்களுக்குத் தேவையா அல்லது இதை நான் எடுத்துச் செல்லலாமா?' என்று கேட்டார்.*
*'தாராளமாய் எடுத்துச் செல்லுங்கள். இது இந்த இடத்தில் பெரிய இடையூறாய்க் கிடக்கிறது. போவோர் வருவோரெல்லாம் இடறி விழுகின்றனர்! என்றார் கடைக்காரர்.*
*பாறாங்கல்லை உருட்டிச் சென்ற அந்தச் சிற்பி, அதை நுட்பமாகச் செதுக்கி அற்புதமான கடவுள் சிலை ஒன்றை உருவாக்கினார்.*
*அந்தச் சிலை கடைத்தெருவில் விலை க்கு வந்தது. போட்டி போட்டுக் கொண்டு மக்கள் அதை விலைக்குக் கேட்டனர். அப்படிக் கேட்டவர்களுள் கல்லைக் கொடுத்த கடைக்காரரும் ஒருவர்.*
*முடிவில் அந்தக் கடைக்காரரே அதிக விலை கொடுத்து அந்தச் சிலையைப் பெற்றுக் கொண்டார்.*
*அந்தச் சிற்பியை மறந்துவிட்ட அந்தக் கடைக்காரர், 'இந்த அற்புதமான சிலை க்குரிய கல்லை எந்த மலையிலிருந்து எடுத்து வந்தீர்கள்?'… என்று கேட்டார்.*
*அதற்குச் சிற்பி, 'வேறு எங்கிருந்தும் இல்லை. தங்கள் கடை வாச லில்தான் இதைக் கண்டெடுத்தேன். என்னை நினைவில்லையா தங்களுக்கு? ஆறு மாதங் களுக்குமுன் இடையூறாய்க் கிடக்கிறது என்று சொல்லி என்னிடம் நீங்கள் கொடுத்த கல்தான் இது என்றார். கடைக்காரர் வியந்தார்.*
*தங்கள் பார்வையில் இது தடைக்கல்லாய்த் தெரிந்தது. என் பார்வையில் கடவுளைப் பொதிந்து வைத்தி ருக்கும் சிற்பக் கல்லாய்த் தெரிந்தது.*
*வேண்டாத பகுதியையெல்லாம் செதுக்கி எடுத்தேன். உள்ளே இருந்த கடவுளின் உருவம் வெளிப்பட்டது!' என்றார் சிற்பி.*
*நம்மை நாமே செதுக்கிக் கொண்டால் அற்புத மனிதராக மாறிவிடு வோம், அதற்கு நாம் செய்யவேண்டிது ஒன்றே உளியை கையில் எடுப்போம் வேண்டாத குணங்களை உளி கொண்டு அப்புறப்படு த்துவோம்.*
*நாமும் வாழ்வில் தேவையற்ற வார்த்தைகளை நீக்கினால் விலை மதிப்பற்ற மனிதராய் வாழ்ந்து காண்பிக்கலாம்.*
*பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*
*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!*
*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!*
*#வாழ்த்துக்கள்.*
Wishing everyone a blessed day ahead..
ReplyDeleteஅட்மின் மேடம் இந்த அமைச்சர் என்ன தான் சொல்ல வராரு?
ReplyDeleteதயவு செஞ்சு யாராவது சொல்லுங்க
ReplyDeleteடிஆர்டி தான் வரப்போகுதுன்னு தெளிவா சொல்றாரு இதுல புரிய என்ன இருக்கு
ReplyDeleteஅமைச்சருக்கும் இரு தேர்வு வைத்து தேர்ந்து எடுத்தால் சரியாக இருக்கும்
ReplyDeleteMam,TETET PAPER -1 SYLLABUS.NOT HAVING IN THE TRB WEB.
ReplyDeleteபுதிய ஆசிரியர் நியமனம் இல்லை, சமோசா விக்க போங்க
ReplyDeleteபுதிய ஆசிரியர் நியமனம் கண்டிப்பாக உண்டு, சுமார் 10,000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்... கல்வி மானிய கோரிக்கை யில் கட்டாயம் அறிவிப்பு வெளிவரும்!
ReplyDeleteஉங்கள் கடமை கடினமாக இழைத்து படித்து தேர்ச்சி பெற்று ஆசிரியராக வாருங்கள்
கேரளா, மேற்கு வங்கம், மராட்டியம் மாநில கல்வித்துறையை விட தமிழக கல்விதுறை சிறந்ததா என்ன, அத்தனையும் ஏமாற்று வேலை, மோடியை விட கேவலமான அரசியல் செய்பவர்கள் திராவிட ஆட்சியாளர்கள், ஏழைகள் எத்தனை முறை தேர்வு எழுதுவர்கள், குடும்பம், பிள்ளைகள், உழைப்பு என்று சென்று விட்டார்கள், ஏழைகளால் வையதாகி குடும்பத்தை கவனித்து கொண்டு எப்படி வெற்றி பெற முடியும், பணம் உள்ளவர்கள் மட்டுமே வெற்றி பெற வைக்கும் சூழ்ச்சி தான் போட்டி தேர்வு, tnpsc தேர்வில் 90 எடுத்தால் வெற்றி என்று சொல்கிறீர்கள், ஆனால் யார் அதிக மதிப்பெண் எடுக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே பணி போடுகிறீர்கள், TET யும் இந்த method ல இனைக்கலாம், ஆனால் கல்வித்துறை அதிகாரிகள், கல்வி அமைச்சர் go 149 ல் உறுதியாக உள்ளனர், எங்களை தோல்வி உற்றவர்கள் என்று அப்போதே அறிவித்து இருந்தால் நாங்கள் எதாவது ஒரு தனியார் கம்பெனியில் சேர்ந்து செட்டில் ஆகி இருப்போம், அந்த method எந்த method னு எங்களை காக்க வைத்து ஏமாற்றி விட்டீர்கள், வயதான காலத்தில் யாரு எங்களை பணியில் சேர்த்துகொள்வார்கள்,23 வயதுக்கும் 47 வயதுக்கும் போட்டி வைத்தால் யார் வெற்றி பெறுவார்கள், இந்த சிந்தனை கூட இல்லாத குடிகார கல்வித்துறை
ReplyDeleteநெத்தியடி
Deleteவலியின் உச்சம்
Deleteஅருமை அருமை
Deleteஆசிரியர்கள் வேலை பற்றி எ
ReplyDeleteஒரு வார்த்தை கூட பேசவில்லை... இதான் விடியல் ஆட்சி யா..இல்ல ஆசிரியர்களுக்கு விடியாத ஆட்சி யா
இருண்ட ஆட்சி
Deleteஇதுல மோடி என்ன செய்வாரு. நாடு நல்லா இருக்கு. ேவியா
ReplyDeletepermanent post
ReplyDeletepgt chemistry
tgt chemistry
at sainik school amaravadinagar..
100% pure recruitment...
😔😔😔
Delete