Skip to main content

உடைந்த காலம்..

*நட்பு உடைந்து முகநூலானது..*.

*சுற்றம் உடைந்து வாட்சப் ஆனது.*..

*வாழ்த்துக்கள் உடைந்து ஸ்டேட்டஸ் ஆனது.*..

*உணர்வுகள் உடைந்து ஸ்மைலியாய் ஆனது...*


*குளக்கரை உடைந்து குளியலறை ஆனது..*.

*நெற்களம் உடைந்து கட்டடமானது.*..

*காலநிலை உடைந்து வெப்பமயமானது..*.

*வளநிலம் உடைந்து தரிசாய் ஆனது...*


*துணிப்பை உடைந்து நெகிழியானது..*.

*அங்காடி உடைந்து அமேசான் ஆனது...*

*விளைநிலம் உடைந்து மனைநிலம் ஆனது...*

*ஒத்தையடி உடைந்து எட்டு வழியானது...*


*கடிதம் உடைந்து இமெயிலானது...*

*விளையாட்டு உடைந்து வீடியோகேம் ஆனது...*

*பல்பம் உடைந்து பால்பாயின்ட் ஆனது...*

*புத்தகம் உடைந்து இ-புக் ஆனது...*


*சோறு உடைந்து 'ஓட்ஸ்'சாய்ப் போனது..*

*இட்லி உடைந்து பர்கர் ஆனது...*

*தோசை உடைந்து பிட்சாவானது...*

*குடிநீர் உடைந்து குப்பியில் ஆனது...*


*பசும்பால் உடைந்து பாக்கெட் ஆனது...*

*வெற்றிலை உடைந்து பீடாவானது...*

*தொலைபேசி உடைந்து கைபேசியானது...*

*வங்கி உடைந்து  பே டி எம் ஆனது...*


*நூலகம் உடைந்து கூகுளாய்ப் போனது...*

*புகைப்படம் உடைந்து செல்ஃபியாய் ஆனது...*

*மார்க்கம் உடைந்து மதவெறியானது...*

*அரசியல் உடைந்து அருவெறுப்பானது...*


*பொதுநலம் உடைந்து சுயநலமானது...*

*பொறுமை உடைந்து அவசரமானது...*

*ஊடல் உடைந்து விவாகரத்தானது...*

*காதல் உடைந்து காமமாய்ப் போனது...*


*நிரந்தரம் உடைவது நிதர்சனம்* *ஆகையால்...*

*உடைவது உலகினில் நிரந்தரமானது...*

*தீயவை உடைத்து நீ தீங்கறச் செய்திடில்...*

*அல்லவை உடைந்திங்கு நல்லவை வாழுமே...*

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. உடைந்த காலம் - என்னே அழகான உருவகம். அருமை சகோதரி.

    ReplyDelete
  3. மனோ சகோதரரே தங்கள் மனதில் தோன்றுவதற்குல்லாம் இங்கு அனைவரும் பதில் கூற இயலாது. எந்த பதிவிற்கு என்ன கருத்து பதிவிட வேண்டும் என்பது அவரவர் உரிமை. நான் 2017 டெட் தேர்ச்சி பெற்றேன். இந்த வலைத்தளத்தில் மட்டுமே எதார்த்தமான உண்மையான கருத்துக்கள் பதிவிட படுகின்றன. மேலும் அட்மினும் டெட் தேர்ச்சி பெற்றவர் பலமுறை டெட் தீர்வுகளுக்காக அமைச்சர் மற்றும் பள்ளி கல்வி ஆணையரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார். எனவே உங்கள் சொந்த அவதுறுகளை பரப்ப வேண்டாம்

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. ௮ப்படியா ௮ப்ப ௨லகம் ௮றிந்த ௨த்தமரா?

      Delete
    3. அறிவுகெட்ட அன்நோன் நீ அத பத்தி எல்லாம் பேசாத.

      Delete
    4. மானம் கெட்ட ௮ன்நோன் ஜால்ரா போடத

      Delete
    5. 1:2 உங்களுக்கு சாதகமா பேசினா நல்லவங்க இல்லனா ஜால்ராவா

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. மனோ அவர்களே அதற்காக இந்தியாவில் உள்ள அனைவரும் இங்கு வந்து தினம் தினம் கருத்துக்களை பதிவு செய்வார்களா

      Delete
    8. யார் யார் பார்க்கிறார்களோ அதில் யார் கருத்து பதிவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள் அவர்கள் தான் பதிவிடுவார்கள். உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் வலைத்தளத்தை பார்க்க வேண்டாம். உங்கள் சொந்த கருத்துக்களை திணிக்க வேண்டாம்

      Delete
    9. எல்லா வலைத்தளமும் இப்படி தான். "Gang" என்ற வார்த்தை எல்லாம் தேவையற்றது. சொல்லில் கவனம் தேவை.

      Delete
    10. மனோராக் அப்டியே gang கமெண்ட் பண்னா உங்களுக்கு என்ன? அதுக்குன்னு டெய்லி பத்து பேர கூட்டிட்டு வந்தா கமெண்ட் போடுவாங்க. முட்டாள். உனக்கு வேணாம்னா பாக்காத. தேவை இல்லாம பேசிட்டு.

      Delete
    11. மனோராக் கல்விசெய்தில மணியரசனா வச்சு மணி ஆட்டிட்டு இருந்தாங்க அது கூட தெரியாம இங்க வந்து பேசிட்டு இருக்கிங்க. ஏதோ இந்த அட்மின் உண்மையான தகவலை கேட்டு சொல்ராங்க அது பொறுக்கலயா? பொண்ணுங்கன்னு சொன்னாலே மட்டம் தட்ட வந்துருவிங்க. பொம்பளைங்கள மட்டம் தட்டு உங்க அம்மா உங்களை சரியா வளக்கலைன்னு காட்டிக்க வேணாம்.

      Delete
    12. I have been watching this website from 2017. It has never been gangs or nothing. And moreover admin is a women who is full of courage. Every time some rogues will be disturbing like this only. This website has been true motivation for many people.

      Manorag you don't have rights to impose your perceptions on others. I strongly oppose your damn useless thoughts.

      Delete
  4. Very nice thought madam

    ReplyDelete
  5. Admin mam pg case details therinchatha

    ReplyDelete
  6. Pg case hearing is on 6th of July..

    ReplyDelete
  7. அட்மின் மேடம் தாங்கள் எந்த தகவலும் பதிவிடாதிர்கள். இந்த மனோராக் யார்?? அவருக்கு என்ன தெரியும் இந்த வலைத்தளம் பற்றி?? ஒரு 10நாட்களாக கருத்து பதிவிடுகிறேன் என்ற பெயரில் குறை கூறுவதை மட்டும் குறிக்கோளாக வைத்துள்ளார். இதில் 1:2 என்று வேலை கேட்க தகுதி இல்லாத அந்த கும்பல் வேறு. நீங்கள் தகவல் தெரிந்தாலும் பதிவு செய்ய வேண்டாம். நன்றி.

    ReplyDelete
  8. நன்றிகெட்ட மனிதர்கள்.

    ReplyDelete
  9. ஆமா அட்மின் சிஸ்டர் நீங்க தகவல் சொல்லாதிங்க.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சா...

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர். குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார். இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவர...

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..