Skip to main content

TODAY'S THOUGHT..

சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது இது. திருப்பூரில் உள்ள ஒரு மிகப்பெரிய வேட்டி நிறுவனம் அண்ணன் ராஜ்கிரணை தனது விளம்பரப் படத்தில் நடிக்க கேட்டது. 


"எங்க வேட்டியை கட்டிக்கிட்டு நீங்க ஒரு 10 மீட்டர் நடந்தா போதும், மற்றதையெல்லாம் நாங்க பார்த்துக் கொள்கிறோம். சம்பளம் ஒரு கோடி" என்றது அந்த நிறுவனம்.


திரும்பிய பக்கம் எல்லாம் கடன் இருந்த போதும் அண்ணன் ராஜ்கிரண் அந்தக் கம்பெனி பக்கம் திரும்பி பார்க்கவில்லை. அந்த நிறுவனத்திற்கு அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா? "எனக்கு தர்ற சம்பளத்தை மீட்க என் சகோதரன் வாங்குற வேட்டியில தானே விலை வைப்பீங்க, வேட்டி கட்டத் தெரிஞ்சவனுக்கு நல்ல வேட்டி பார்த்து வாங்கவும் தெரியும்"னு சொல்லிட்டாரு.


சில்க் ஸ்மிதாவை ஒரு சோப்பு நிறுவனம் தனது விளம்பரப் படத்தில் நடிக்க அழைத்தது. அதற்கு அவர் "உங்க சோப்பைக் கொடுங்கள், நான் ஒரு மாதம் வரை உபயோகித்து பார்த்து விட்டு அப்புறம் நடிக்கிறேன்" என்றார். கம்பெனி அவருக்கு இருக்கிறதுலேயே நல்ல சோப்பாக கொடுத்தது, ஒரு வாரத்திலேயே சோப்பை அந்த கம்பெனி முகத்தில் விட்டெறிந்து விட்டு "வேற ஆளப் பாருங்க"ன்னு சொல்லி விட்டார். 


மலையாள நடிகை பார்வதியிடம் ஒரு சிவப்பழகு கிரீமில் நடிக்கக் கேட்டார்கள். "கருப்பு அழகில்லைன்னு சொல்ற உங்க பாலிசியில தீய வைக்க... நடிக்க மாட்டேன் போடா"ன்னு சொல்லிட்டாரு.


இதுதான் நிஜ ஹீரோக்களின் கதை. ஆனால் சில ஹீரோக்கள் படத்தில் ஊருக்கு உபதேசம் செய்து விட்டு ஆன்லைன் ரம்மி விளையாட்டு, வான்கோழி வளர்ப்பு, கொள்ளை அடிக்கிற ரியல் எஸ்டேட் கம்பெனிகள், ஆஸ்பத்திரிகளுக்கு கியாரண்டி கொடுத்துக் கொண்டிருப்பார்கள். ஒரு நடிகர் நகை வாங்கச் சொல்வார், இன்னொரு நடிகர் அதை அடகு வைக்கச் சொல்வார்..


இப்போது விஷயத்துக்கு வருவோம்...


தற்போது யூரோ கோப்பைக்கான லீக் கால்பந்து போட்டிகள் நடந்து வருகிறது. இந்த போட்டியை ஸ்பான்சர் செய்து வருகிறது கோகோ கோலா நிறுவனம். இந்த போட்டி தொடர்பான எல்லா விஷயத்திலும கோகோ கோலோ பாட்டிலை நுழைத்துக் கொண்டிருந்தது அந்த நிறுவனம். 


இந்த போட்டி தொடர்பாக போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் ரொனால்டோ பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த போது அவரோடு சேர்த்து டிவியில் தெரிய வேண்டும் என்பதற்காக இரண்டு கோகோகோலா பாட்டில்களை கொண்டு வைத்தார்கள். வந்தவர் முதல் வேலையாக அந்த பாட்டில்களை வேகமாக எடுத்து ஓரமாக வைத்து விட்டு அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து 


"வாட்டர் குடிங்க" என்றார். அதன் பிறகு கோகோகோலா என்று நக்கலாக மைக்கில் பேசினார். அவரது முகத்தில் வெடித்த கோபத்தையும், வெறுப்பையும் உற்றுப் பார்த்தால் தெரியும்.


உடனே நம் தமிழ்நாட்டு மூளை சிந்திக்கும். அவருக்கும் அந்த கம்பெனிக்கும் ஏதாவது கொடுக்கல், வாங்கல் பஞ்சாயத்து இருக்கும் என்று. ரொனால்டோ தூய தண்ணீருக்கு ஆதரவாகவும், குளிர்பானங்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறவர் என்பது அவரை அறிந்தவர்களுக்கு தெரியும். இத்தனைக்கும் உலகம் முழுக்க கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டவர் அவர்.


ரொனால்ட்டின் இந்த 5 விநாடி வீடியோவால் கோகோ கோலாவின் ஷேர் மார்க்கெட் சரிந்து கிட்டத்தட்ட 25 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது அந்த நிறுவனம்.


*திரையில் நடிப்பவர்களல்ல ஹீரோக்கள், தரையில் நிமிர்ந்து நடப்பவர்களே ஹீரோக்கள்...*

Comments

  1. Wishing everyone a blessed Sunday..

    ReplyDelete
    Replies
    1. செம்ம நியூஸ் தல

      Delete
  2. Goodmor admin mam. Realistic thought.

    ReplyDelete
  3. Manorag unknown namela comment panavaru..avar nokkam thappanathu athukaga neenka thagaval sollama irukathiga madam..

    ReplyDelete
    Replies
    1. mr arun i am manorag nan thappana nokkathil solla villa comment panra ellarom ore gang pola iruku enaku santhegam varuthu thideernu oru nal tet pathiyum oru nal pg pathiyum mathi mathi argument panranga enaku theriyala nan police deparmentla si ah iruken enaku etho ivanga ellarum veen vilamparathukaga pidurangalonu thonuthu nanum 2013 batch tet passed ok va

      Delete
    2. SIன்னு சொல்றிங்க இங்க வெட்டியா கமெண்ட் பன்னிட்டு இருக்கிங்க. இந்த பூச்சாண்டி எல்லாம் இங்க நடக்காது

      Delete
    3. mr arun am manorag na si ila theruvula kuppa porukura vela athan inka comment panravagala elam summa vampiluthu time pass panren na lighta mental neenga velaya paruga

      Delete
    4. எஸ் ஐ சார். 2013 தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்கிறீர்களா? ???ஆசிரியர் வேலைக்கு வருவதற்கு விருப்பமா? ??ஒருவேளை ஆசிரியர் வேலை கிடைத்தால். ????
      டீச்சர் வேலைக்கு வந்து விடுவீர்களா? ????
      SI வேலையே சூப்பர்தானே??

      Delete
    5. வேணாம் si நீங்க அங்கேயே வேல பாருங்க. ஆனா வாங்குற சம்பளதுக்கு வேலைய ஒழுங்கா பாருங்க. இங்க என்ன வேல உங்களுக்கு

      Delete
    6. வாங்க மனோராக் SI எப்படி இருக்கிங்க? நா கூட IGஆ தான் இருக்கேன் 😁😁😁

      Delete
    7. SIன்னு சொல்றிங்க புத்தியே இல்லையா? டெட் எழுதுறவங்க pg எழுத மாட்டாங்களா? இல்ல அத பத்தி பேச தான் மாட்டாங்களா? என்னையா அநியாயம்

      Delete
  4. 2013 நலச்சங்கம் ரொம்ப அமைதியா ஆயிட்டாங்க போல? ?????????

    ReplyDelete
    Replies
    1. இல்ல அவங்க மினிஸ்டர பாத்துட்டு தான் இருகாங்க

      Delete
    2. ஆமா 2013க்கு தான் முன்னுரிமை

      Delete
    3. கடைசி வர போஸ்டிங் போட மாட்டாங்க

      Delete
  5. அட்மின் மேம் pgtrb பத்தி trbக்கு கால் பண்ணி கேக்கலாமா

    ReplyDelete
    Replies
    1. வாய்பில்லை ராஜா.....

      Delete
    2. Unknown frnd..

      Kandippa call pani kelunga, cm and education minister ku kuda mail pannunga..

      Delete
    3. Mam I tried calling no one is responding

      Delete
    4. Hasini mam..

      All government offices are working with 50% employees so keep calling.. Try for landline numbers rather than cell phone numbers..

      Delete
    5. Cm cell only mam ,I keep on trying mam

      Delete
    6. No chance waste of time

      Delete

Post a Comment

Popular posts from this blog

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சா...

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர். குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார். இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவர...

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..