Skip to main content

Posts

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சா...
Recent posts

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை...

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

SUNDAY'S THOUGHT..

வாழ்க்கையில் மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் ஏதாவது ஒரு விதத்தில் இன்பம், துயரம் போன்றவை வரவே செய்யும். இது இயற்கை. மேடு,பள்ளங்கள் இருப்பது போல மனிதனுக்கும் இன்ப, துன்பம்  இரண்டுமே மாறி மாறி வருவது இயல்பு. மின்சாரத்தில் ''positive, negative'' என்ற இரண்டும் இருந்தால் தான் ஒளியை நாம் பெற முடியும். இன்பம், துன்பம், சுகம், துக்கம், வெற்றி,தோல்வி என அனைத்தும் கலந்திருப்பது தான் வாழ்க்கை. வாழ்க்கை அனைவருக்கும் சுலபமாக அமைந்து விடுவதில்லை. கோடீஸ்வரனாகவே இருந்தால் கூட, அவர்களுக்கு இருக்கும் வலி என்ன,, அவர்கள் கடந்து வரும் கடினமான சூழல் என்ன என்பது குறித்து நாம் அறிய இயலாது. பொதுவாகவே, ஒரு தொழிலதிபர், அரசியல்வாதி, நடிகர் இருந்தால், ‘’அவங்களுக்கே என்னப்பா சொகுசான வாழ்க்கை, ஆடம்பரமா இருக்காங்க.’’. என்று நாம் இயல்பாகக் கூறுவதுண்டு. ஆனால், அந்த இடத்தைப் பிடிக்க அவர்கள் எத்தனை துயரங்களை, தோல்விகளை, தடைகளைக் கடந்து வந்தார்கள். அவர்களது கடந்த கால வாழ்க்கையானது எத்தகைய கரடுமுரடான பாதையாக இருந்தது என நாம் அறிந்து இருக்க மாட்டோம். அதில் ஒருவர் தான் ஸ்டீவ் ஜாப்ஸ்..( ஸ்டீவ் ஜொப்ஸ், 1976 இல் ஆ...

PGTRB - முதற்கட்டமாக தற்காலிக தேர்ந்தோர் பட்டியல் (Provisionally Selection List) வெளியீடு!

PGTRB - முதற்கட்டமாக வரலாறு, புவியியல் மற்றும் இயற்பியல் பாடங்களுக்கு தற்காலிக தேர்ந்தோர் பட்டியல் (Provisionally Selection List) வெளியீடு! 2020-2021 ஆம் ஆண்டு முதுகலைப் பட்டதாசி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை I / கணினிப் பயிற்றுநர் நிலை -1 நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை ( Notification ) எண் .01 / 2021 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09.09.2021 அன்று வெளியிடப்பட்டது . அதனைத் தொடர்ந்து 12.02.2022 முதல் 20.02.2022 வரை கணினி வழித் தேர்வுகள் ( Computer Based Test ) நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் 04.07.2022 அன்று இவ்வாரியத்தால் வெளியிடப்பட்டன.  25.08.2022 நாளிட்ட ஆசிரியர் தேர்வு வாரிய பத்திரிக்கை செய்தியில் பணிநாடுநர்கள் தமிழ் வழியில் பயின்றதற்கான தங்களது சான்றிதழ்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் வழியாக 26.08.2022 முதல் 30.08.2022 வரை பதிவேற்றம் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது . பணிநாடுநர்கள் விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் ஆவணங்கள் மற்றும் கூடுதலாக பதிவேற்றம் செய்யப்பட்ட தமிழ்வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களின் அடிப்படையில் பணிநாடுநர்கள் விவரங்கள் பரிசீலிக்கப்ப...

முதுநிலை ஆசிரியா் பணியிடங்களுக்கு செப்.2 முதல் 4 வரை சான்றிதழ் சரிபாா்ப்பு: ஆசிரியா் தோ்வு வாரியம்..

 முதுநிலை ஆசிரியா் பணியிடங்களுக்கு செப்.2 முதல் 4 வரை சான்றிதழ் சரிபாா்ப்பு: ஆசிரியா் தோ்வு வாரியம் முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு செப். 2-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரை ஆசிரியா் தோ்வு வாரிய வளாகத்தில் நேரடியாக நடைபெறும் என்றும், அப்போது கைப்பேசி, பைகள் உள்ளிட்ட பொருள்கள் எடுத்து வர அனுமதியில்லை என்றும் ஆசிரியா் தோ்வு வாரியம் தெரிவித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 3,236 பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியா் தோ்வு வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதில் நிதழாண்டில் 2, 955 காலி பணியிடங்களும், ஏற்கனவே நிரப்பப்படாமல் காலியாக உள்ள 251 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளது. இதற்கான திருத்தப்பட்ட பட்டியலை ஆசிரியா் தோ்வு வாரியம் இன வாரி ஒதுக்கீட்டின் அடிப்படையிலும் வெளியிட்டுள்ளது. இந்தநிலையில் இது தொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: முதுநிலை ஆசிரியா் பணியிடங்களில் 17 பாடங்களுக்கு ஒரு பணியிடத்துக்கு இருவா் வீதம் சான்றிதழ் சரிபாா்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு செப். 2-ஆ...

TET தேர்வுத் தேதி மாற்றம் - TRB அறிவிப்பு

TET தேர்வுத் தேதி மாற்றம் - TRB அறிவிப்பு   தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் .01 / 2022 , நாள் 07.03.2022 அன்று வெளியிடப்பட்டது . 06.07.2022 பத்திரிகை செய்தியின்படி ஆகஸ்டு மாதம் 25 முதல் 31 வரை உள்ள தேதிகளில் தாள்- I ற்கு மட்டும் முதற்கட்டமாக தேர்வுகள் கணினிவழியில் மட்டுமே நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்பட்டது. தற்பொழுது நிர்வாக காரணங்களினால் , தாள்- I ற்கான தேர்வு 10.09.2022 முதல் 15.09.2022 வரை நடத்தப்படவுள்ளது . மேற்படி கணினிவழித் தேர்விற்காக ( Computer Based Examination ) பயிற்சித் தேர்வு ( Practice Test ) மேற்கொள்ளவிரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்வதற்கு , தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு வழங்கப்படும். அனைத்து பணிநாடுநர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம் . இது குறித்த அறிவிக்கை , தேர்வுகால அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டு ( Admit card ) வழங்கும் விவரம் செப்டம்பர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் .

ஞாயிறு போற்றுதும்..

கவிப்பேரரசு பாா்வையில் ஞாயிற்றுக் கிழமை. ஞாயிற்றுக்  கிழமையென்பது சக்தி. ஞாயிற்றுக் கிழமையென்பது மனசைத் தூசுதட்டி  வைக்கும் துப்புரவுநாள். பலருக்கு வாழ்க்கையே விடுமுறையாய் இருப்பதனால் ஞாயிற்றுக் கிழமையின் பெருமையே தெரிவதில்லை. சனிக்கிழமை சாயங்காலத்தில் உயிரோடிருக்கிற  ஞாயிற்றுக் கிழமை பிறக்கும்போது இறந்தே பிறக்கிறது. ஞாயிற்றுக் கிழமை என்பது ஒய்வுகளின் உன்னத மண்டபம். மிகை ஊதியம் கிடைத்தால் ஞாயிற்றுக் கிழமையை விற்பதற்கு நாம் தயாா். அதற்கு வாய்ப்பில்லாதவா்கள் மட்டுமே ஞாயிற்றுக் கிழமையைக் கட்டாயக் கல்யாணம் செய்து கொள்கிறாா்கள். ஞாயிற்றுக் கிழமை என்பது உறக்கமல்ல விழிப்பு. பூமி விழிக்குமுன்பே புலன்கள் விழித்து விடவேண்டும். பித்தளைப் பாத்திரங்களை மாதம் ஒரு முறை புளி போட்டுத் துலக்குவது மாதிரி, புலன்களை வாரம் ஒரு முறை புடம் போட்டுத் துலக்க வேண்டும். ஆனால் ஞாயிற்றுக் கிழமையென்றால் பதினொரு மணிக்குப் பல் துலக்குவது என்றுதான் இங்கு பலா் இல்லற அகராதிகளில் எழுதப் பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் இந்தியாவுக்கு பாரத் பந்த் தாகவே இருக்கிறது. ஜன்னல்களையும் புலன்களையும் ச...

பள்ளிகளில் 12.08.2022 முதல் 19.08.2022 வரை விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்க பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!!!

  பள்ளிகளில் 12.08.2022 முதல் 19.08.2022 வரை விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்க பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!!! பள்ளிகளில் 12.08.2022 முதல் 19.08.2022 வரை விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்க பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!!! செயல்முறைகள் கீழே உள்ள link ஐ கிளிக் செய்து download செய்து கொள்ளுங்கள் 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇 Click here to download pdf file 

வாழ்க்கையின் நீதி கதை!

தற்போதைய காலகட்டத்திற்கு  இந்த கதை இந்த சமூகத்திற்கு அவசியம் தேவை! 🐀🐀எலிப்பொரியும் எஜமானியும். (சிறு கதை)🐀🐀 ஒரு பண்ணயார் வீட்டில் ஒரு எலி வசித்து வந்தது... ஒரு நாள் அது தனது இரவு நேர இரை தேடப் புறப்பட்டுக் கொண்டிருந்தது. எலி வலையை விட்டு தலையை உயர்த்திப் பார்த்தது. வீட்டின் எஜமானனும், எஜமானியும்,  ஒரு பார்சலைப் பிரித்துக் கொண்டிருந்தார்கள். ஏதோ நாம் சாப்பிடக்கூடிய ஒரு பொருள் தான் உள்ளே இருக்கும் என்று ஆவலோடு பார்த்தது எலி. அவர்கள் வெளியே எடுத்தது ஒரு எலிப்பொறி. அதைப்பார்த்ததும் அந்த எலிக்கு மூச்சே நின்று விடும் போல இருந்தது... உடனே ஒரே ஓட்டமாக வீட்டில் இருந்த கோழியிடம் போய் சொன்னது... "பண்ணையார் ஒரு எலிப்பொறி வாங்கி வந்துள்ளார். எனக்கு பயமாக இருக்கிறது என்றது.." இதைக் கேட்ட கோழி விட்டேற்றியாகச் சொன்னது.." உன்னைப் பொறுத்தவரை இது கவலைப்பட வேண்டிய விஷயம்தான். நல்ல வேளையாய் இந்த எலிப்பொறியால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்றது கோழி.." உடனே அது .. பக்கத்தில் இருந்த வான்கோழியிடம் சென்று.. அதே விஷயத்தைப் போய்ச் சொல்லியது. வான்கோழியும் அதேபதிலைச் சொல்லியதோடு, "ந...

ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்புதல் - வழிகாட்டு முறைகள் ( Guide lines ) - Commissioner Proceedings

ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்புதல் - வழிகாட்டு முறைகள் ( Guide lines ) - Commissioner Proceedings தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அரசு / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 2022-23ம் கல்வியாண்டில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்புதல் - சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால ஆணையின்  அடிப்படையில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு முறைகள் ( Guide lines ) தெரிவித்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்  https://drive.google.com/file/d/1iC0RclGofwqfL138nXmfB-FGcZ1ck4KX/view?usp=sharing

இலக்குகள் அடைவதற்கு..

உங்கள் இலக்குகளின் மீது முழுதாக நம்பிக்கை வையுங்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்களிடம் இருந்து கிடைக்கும் உற்சாக வார்த்தைகளுக்கு மேல் உங்களுக்குள் இருக்கும் ஆழமான நம்பிக்கை தான் அடுத்தடுத்த தளங்களுக்கு நகர்த்திச் செல்லும் அதே நேரத்தில் இலக்கு குறித்தத் தெளிவும் வேண்டும்.  இலக்குகள் இல்லாத யாரும் சாதனையாளர்களாக மாறிய வரலாறு இல்லை என்பதை அழுத்திச் சொல்லலாம்.  இலக்குகளைத் தெளிவாக வரையறுத்துக் கொள்ளும் அதேநேரம், அதை அடைவதற்கான முயற்சிகளை சோர்வில்லாமல் முன்னெடுக்க வேண்டும்.. இரண்டு பேர் ஒரு பெரிய மலை முகட்டின் முன் நின்று கொண்டு இருக்கிறார்கள். இருவரில் முதலில் மலையின் உச்சியைத் தொடுபவருக்கு மிகப் பெரிய தொகை பரிசாகக் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.  இரண்டு பேருக்குமே மலையேற்றம் குறித்து அனுபவம் துளியும் கிடையாது. ஆனால் கண் முன்னே பணமுடிப்பு மின்ன, உற்சாகம் பொங்கி வழிகிறது. 'இருவரில் ஒருவர் வேகவேகமாக ஓடி மலையில் ஏறத் தொடங்குகிறார். இன்னொருவரோ அமைதியாக அவர் மலை ஏறுவதை கவனித்துக் கொண்டு இருக்கிறார்.  சுற்றியிருக்கும் கூட்டம் ஆர்ப்பரித்துக் கத்துகிறது. அதுவோ பாறைகள் ந...

PGTRB - கூடுதலாக சுமார் 1030 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை வெளியீடு! - Notification pdf

  PGTRB - கூடுதலாக சுமார் 1030 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை வெளியீடு! - Notification pdf   நடைபெற்று முடிந்த போட்டித் தேர்வின் மூலம் கூடுதலாக சுமார் 1030 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை வெளியீடு! It is hereby informed that 01/2021 , dated 09.09.2021 for the direct recruitment for Post Graduate Assistants / Physical Education Director Grade I / Computer Instructor Grade - I in School Education and other Departments for the year 2020-21 . , in para 1 Number of vacancies , the following amendments are issued . PG Additional TRB Notification - Download here...

News about Temporary posting..

TET - விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அனுமதி

TET - விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அனுமதி ஆ சிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2022-ம் ஆண்டுக்கான, தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு(தாள்1, தாள் 2) அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளம் வாயிலாக கடந்த மார்ச் 7-ம் தேதி வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க ஏப்ரல் 26-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. மேலும், ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கு 2 லட்சத்து 30 ஆயிரத்து 878 பேரும், தாள் 2-க்கு 4லட்சத்து ஆயிரத்து 886 பேரும் மொத்தம் 6 லட்சத்து 32 ஆயிரத்து 764 பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள பல கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இந்த கோரிக்கையை ஏற்று, ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1 மற்றும் தாள் 2-க்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டு, சில தொழில்நுட்ப காரணங்களால் திருத்தம் மேற்கொள்ளும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது, ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2க்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண...

Temporary Post - Selected Teachers List

  Temporary Post - Selected Teachers List   பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி அரசு தொடக்க / மேல்நிலைப்பள்ளிகளில் 2022-2023 ம் கல்வியாண்டில் காலியாகவுள்ள நடுநிலை / உயர் நிலை / இடைநிலை / பட்டதாரி / முதுகலை ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்புதல் - சென்னை உயர்நீதி மன்ற வழக்கு எண் . WP.No.16704 / 2022 மீதான இடைக்கால ஆணையின் அடிப்படையில் திருத்திய வழிகாட்டு நெறிமுறைகள் படி தற்காலி நியமனத்திற்கான ஒப்புதல் அளித்து ஆணை வழங்குதல் சார்பாக தருமபுரி முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள். இணைப்பில் காண் பட்டியலில் படி ஏற்பளிக்கப்பட்ட தற்காலி நியமனத்திற்கு பள்ளி மேலாண்மைக்குழு ஒப்புதல் அளித்து தற்காலிக நியமனம் பெற்றவர்கள் 20.072022 பணியில் சேர்த்துக்கொள்ள தெரிவிக்கப்படுகிறது . தற்காலிக நியமனம் பெற்று பணியில் சேர்ந்த அறிக்கையினை சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைப்பு செய்திட சார்ந்த தெரிவிக்கப்படுகிறது. பள்ளித்தலைமையாசிரிகளுக்கு இணைப்பு - தற்காலிக நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டவர்கள் விவரம் Temporary Post - Selected Teachers List - Download here...

செய்வன திருந்தச் செய்..

படகு ஒன்றுக்கு பெயின்ட் அடிப்பதற்கான பொறுப்பு ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் ப்ரஷ், பெயின்ட் என்பவற்றைக் கொண்டு வந்து படகு உரிமையாளர் வேண்டிக் கொண்டதைப் போலவே பிரகாசமான சிவப்பு நிறத்தில் பெயின்ட் அடித்துக் கொடுத்தார். பெயின்ட் அடித்துக் கொண்டிருக்கும் போது அந்தப் படகில் ஒரு சிறிய ஓட்டை இருப்பதை கவனித்து, உடனடியாகவே அந்த ஓட்டையை சரிவர அடைத்தும் விட்டார். வேலை முடிந்ததும் அவர் தனக்குரிய கூலியை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார். அடுத்த நாள் படகின் உரிமையாளர் அந்த பெயின்டரின் வீடு தேடி வந்து ஒரு மதிப்பு மிக்க காசோலையை கொடுத்தார். அது அவர் ஏற்கனவே கூலியாக வழங்கிய தொகையைப் பார்க்கிலும் பன் மடங்கு அதிகமானது. பெயின்டருக்கோ அதிர்ச்சி. நீங்கள் தான் ஏற்கனவே பேசிய கூலியைத் தந்துவிட்டீர்களே, எதற்காக மீண்டும் இவ்வளவு பணம் தருகிறீர்கள்? என்று கேட்டார் பெயின்டர்.  இல்லை. இது பெயின்ட் அடித்ததற்கான கூலி அல்ல. படகில் இருந்த ஓட்டையை அடைத்ததற்கான பரிசு என்றார் படகின் உரிமையாளர். இல்லை, சார்... அது ஒரு சிறிய வேலை. அதற்காக இவ்வளவு பெரிய தொகைப் பணத்தை தருவதெல்லாம் நியாயமாகாது. தயவு செய்து காசோலையை கொண்டு ...

தொகுப்பூதியத்தில் ஆசிரியர்களை நியமிக்கலாமே! உயர் நீதிமன்றம் கருத்து

  Prev Next தொகுப்பூதியத்தில் ஆசிரியர்களை நியமிக்கலாமே! உயர் நீதிமன்றம் கருத்து  மதுரை : தற்காலிக ஆசிரியர்கள் நியமன வழிகாட்டுதலுக்கு எதிரான வழக்கில், 'அரசுக்கு நிதி நிலை தான் பிரச்னை எனில், முதலில் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கலாம்.'நிதிநிலை சரியான பின் காலமுறை சம்பளத்தில் நியமிக்கலாமே' என உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது சின்னமநாயக்கன்பட்டி பர்வதம் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:பி.எஸ்சி.,- பி.எட்., மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றுள்ளேன். தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசு ஜூன் 23ல் உத்தரவிட்டது.இதற்கு தகுதித் தேர்வு தேர்ச்சி கட்டாயம் என்ற குறைந்தபட்ச தகுதியை நிர்ணயிக்கவில்லை.  இதற்கு எதிராக ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சியடைந்தோர் நலச் சங்கம் தலைவர் ஷீலா பிரேம்குமாரி உயர் நீதிமன்றக் கிளையில் மனு செய்தார்.ஜூலை 1ல் தனி நீதிபதி தற்காலிக ஆசிரியர்கள் நியமன அறிவிப்பிற்கு இடைக்காலத் தடை விதித்தார். இதைத் தொடர்ந்து தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான...

எதுவும் செய்யாமல் இருப்பது தீர்வு அல்ல..

*நமது தொழிலிலோ அல்லது தனிப்பட்ட வாழ்விலோ ஏதாவது பிரச்சனை வந்தால் ஒதுங்கிக்கொள்வது நல்லது என்றே நினைப்போம்..* *நெருக்கமானவர்களிடம்பிரச்சனை வந்தால் ஏதும் பேசினால் சண்டை வந்துவிடும் என்று பேசாமல் இருந்து விடுவோம்.* *ஆனால் இது பிரச்சனைக்கான தீர்வல்ல. எந்த பிரச்சனை என்றாலும் முறையாக பேசி அதற்கு ஒரு தீர்வு கண்டுபிடியுங்கள்.* *ஏன் வம்பு என்று ஒதுங்கினால், பின்னர் அந்த பிரச்சனையே பெரிதாகிவிடும்...* *பசியின் கொடூரம் உணருங்கள்...!* *தோல்வியைத் தழுவிக் கொள்ளுங்கள்...!* *துரோங்களைக் கடந்து செல்லுங்கள்...!* *எதற்காகவாது கதறி அழுங்கள்...!* *எவரையாவது கை தூக்கி விடுங்கள்...!* *விரும்புபவர்களுக்கு விட்டுக் கொடுங்கள்...!* *உயிர் உருகக் காதலியுங்கள்...!* *இழப்பின் வலியுணருங்கள்...!* *இவையனைத்தையும் செய்யுங்கள்...!* *இவ்வாழ்வில் ஒருமுறையேனும்....* *சோதனைகள் மனிதனின் மனவளம் கூட்டும்..!வெற்றிகள் அவனது தலைக்கனம் கூட்டும்..!தோல்விகள்.. அவனை அடையாளம் காட்டும்..!சிந்தனைகள்.. அவனுக்கு நல்வழி காட்டும்..!!* *வெறுங்கையாகும் அளவிற்கு தர்மம் செய்யாதீர்கள்..* *முகம் சிவக்கும் அளவிற்கு கோபம் கொள்ளாதீர்கள்..* *குறுக்கு...

CTET (2022) மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிப்பு

  CTET (2022) மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிப்பு  

நியமனத் தேர்வு ரத்து செய்வது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் புதிய தகவல்

 நியமனத் தேர்வு ரத்து செய்வது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் புதிய தகவல் ஆசிரியர் தகுதி தேர்வு வெற்றி பெற்றவர்களுக்காக தகவல் https://youtu.be/YE-Tr_TkL_Q

20 ஆம் தேதி தற்காலிக ஆசிரியர் பணிநியமனம் - சனி ஞாயிறு தொடக்க கல்வி கலந்தாய்வு நடத்தப்படுமா?

  20 ஆம் தேதி தற்காலிக ஆசிரியர் பணிநியமனம் - சனி ஞாயிறு தொடக்க கல்வி கலந்தாய்வு நடத்தப்படுமா?   அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமன பணிகளை ஜூலை 19-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று 24 மாவட்டங்களின் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி ஆணையர் கே.நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். ஆனால் தற்போது இடைநிலை ஆசிரியர் மாவட்ட கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. 20 ஆம் தேதி தற்காலிக ஆசிரியர் பணியேற்கும் பள்ளியில் மாறுதல் ஆணை பெற்ற ஆசிரியர் 19 ஆம் தேதியில் சேர்ந்தால் மட்டுமே தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் ஏற்படும் சங்கடங்கள் தவிர்க்கப்படும். எனவே வரும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கலந்தாய்வை நடத்தி முடித்து திங்கள் கிழமை பணிவிடுவிப்பு செய்தால் புதிய பணியிடத்தில் ஒருநாள் இரண்டு நாள் மட்டும் தற்காலிக ஆசிரியர் பணியாற்றி விட்டு மீண்டும் பணியிழப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும்.

தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு ஜூலை 15-க்கு ஒத்திவைப்பு.

  தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு ஜூலை 15-க்கு ஒத்திவைப்பு.   தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கானது 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. விசாரணையின் போது ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த 1,50,648 பேரில் 28,984 பேர் மட்டுமே தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசு தெரிவித்தது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை முதலில் பரிசீலிக்க வேண்டும் என ஐகோர்ட் அரசை அறிவுறுத்தி வழக்கை ஜூலை 15 க்கு ஒத்திவைத்தது.

TODAY'S TET CASES..

TET ஆன்லைன் தேர்வுக்கு TRB இணையதளத்தில் பயிற்சி - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.

  TET ஆன்லைன் தேர்வுக்கு TRB இணையதளத்தில் பயிற்சி - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.   தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் .01 / 2022 , நாள் 07.03.2022 அன்று வெளியிடப்பட்டது . இணையவழி வாயிலாக விண்ணப்பத்தினை விண்ணப்பதாரர்கள் 14.03.2022 முதல் பதிவேற்றம் செய்திடலாம் என தெரிவிக்கப்பட்டது. மேலும் , விண்ணப்பதாரர் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய 26.04.2022 வரை கால் அவகாசம் வழங்கப்பட்டது. அதில் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தற்பொழுது ஆகஸ்டு மாதம் 25 முதல் 31 வரை உள்ள தேதிகளில் தாள்- 1 ற்கு மட்டும் முதற்கட்டமாக தேர்வுகள் கணினி வழியில் மட்டுமே நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேற்படி கணினி வழித் தேர்விற்காக ( Computer Based Examination ) பயிற்சித் தேர்வு ( Practice Test ) மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்வதற்கு , தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு வழங்கப்படும். அனைத்து பணிநாடுநர்களும் ...