மறுநாள் காலை நிச்சயம் எழுந்து விடுவோம் என்று நமக்கு இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையின் அடிப்படையில் தான் நாம் ஒவ்வொரு இரவும் நிம்மதியாக தூங்கச் செல்லுகிறோம். வீட்டிற்கு நிச்சயமாய்த் திரும்பி விடுவோம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தான் நாம் தினம் தினம் வீட்டை விட்டுப் புறப்படுகிறோம். ஆக, நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வுகள் நம்பிக்கையின் அடிப்படையிலேயே நிகழ்கிறது என்றால் அது மிகையாகாது.. அமெரிக்காவைக் கண்டுபிடித்தவர் கொலம்பஸ். ஆனால், ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்கு கடல்வழியைக் கண்டுபிடிக்கவே திட்டமிட்டார். எதிர்பாராதவிதமாக அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். அட்லாண்டிக் பெருங்கடலில் நெடும்பயணம் மேற்கொண்டால் இந்தியாவை அடைந்து விடலாம் என்று நம்பிக்கை இவருக்கு ஏற்பட்டது. ஸ்பெயின் மன்னரின் உதவியோடு சிலரைத் துணைக்கு அழைத்துக் கொண்டு கப்பலில் பயணத்தைத் தொடங்கினார். பயணம் பல மாதங்கள் நீடித்தன. கொலம்பஸ் உடன் வந்தவர்கள் அனைவரும் நம்பிக்கை இழந்து விட்டார்கள். அவர்களுக்குத் தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றி விட்டது. அவர்கள் கொலம்பஸிடம் வந்த வழி...