Skip to main content

Posts

Showing posts from November, 2020

படித்ததில் பிடித்தது..

 ஓ ரு அரசனிடம் கொடூரமான 10 வேட்டை நாய்கள் இருந்தன. எப்போதுமே கூண்டுக்குள்ளேயே இருக்கும் அவைகளை, தனது எதிரிகளையும், வேண்டாதவர்களையும் கொல்வதற்கு மட்டுமே உபயோகப்படுத்தினான். அன்றும் அப்படித்தான்.. ஒரு சிறிய தவறு செய்தார் என்ற கோபத்தில் தனது மந்திரியைக் கொல்ல முடிவு செய்து அந்த நாய்களிடம் தூக்கி எறிய உத்தரவிட்டான். மந்திரி அரசனைப் பார்த்துக் கவலையுடன் கேட்டார். "பத்து வருடங்கள் உங்களுக்கு உண்மையாய் சேவை செய்ததற்கு இதுதான் பலனா அரசே.. பரவாயில்லை...  தண்டனையை நிறைவேற்றும் முன்  எனக்கு ஒரு பத்து நாட்கள் மட்டும் அவகாசம் கொடுங்கள் அரசே. செய்ய வேண்டிய சில கடமைகள் இருக்கிறது.!" சற்றே யோசித்த அரசன், 'பத்து நாட்கள்தானே... சரி'யென்று அனுமதிக்க மந்திரி மகிழ்வுடன் சென்றார். அடுத்த பத்து நாட்களுக்கும் மந்திரி அந்த நாய்களைப் பராமரிப்பவருடன் சென்று அவைகளுடன் பழகலானார். முதலில் அவற்றுக்கு உணவு கொடுத்து, பிறகு அவற்றுடன் விளையாடி, குளிப்பாட்டி நாய்களுடனேயே சந்தோசமாய் இருக்க ஆரம்பித்தார். பத்து நாட்கள் முடிந்தது. அரசன் சொன்னபடி தனது தண்டனையை நிறைவேற்றத் தயாரானான். சேவகர்களை அழைத்து, மந்திர...

வலுவடைந்தது புயல் சின்னம்:நாளைமுதல் கன மழை - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

      தெற்கு அந்தமான், அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்தத்தாழ்வு பகுதி ஞாயிற்றுக்கிழமை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. தமிழகம், புதுச்சேரியில் வரும் செவ்வாய்க்கிழமை (டிச.1) முதல் வியாழக்கிழமை (டிச. 3) வரை மிதமான மழையும், தென்தமிழகத்தில் மிக பலத்த மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ADVERTISEMENT இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் ஞாயிற்றுக்கிழமை கூறியது: புதிய காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி சனிக்கிழமை உருவாகி, நிலைகொண்டிருந்தது. இது, ஞாயிற்றுக்கிழமை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலை கொண்டுள்ளது. இது மேற்கு, வட மேற்கு திசையில் நகா்ந்து, திங்கள்கிழமை இரவு அல்லது செவ்வாய்க்கிழமை காலையில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையும். டிசம்பா் 2-ஆம் தேதி தென் தமிழக கடலோர பகுதியை நோக்கி நகரக்கூடும். இதனால், தமிழகம், புதுச்சேரியில் டிச. 1 முதல் டிச. 3 வரை மிதமான மழையும், தென் மாவட்டங்களில் பலத்த மழையும் பெய்யக்கூடும். இன்று மிதமான மழை: தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் திங்கள...

கண்ணுக்கு தெரியாத எதிரிகள்...!

மனித வாழ்வின் நோக்கமே மகிழ்வான வாழ்வைப் பேணுவதுதான். நாம் உழைப்பதும், ஓடுவதும், நடப்பதும், பேசுவதும், எழுதுவதும், விளையாடுவதும் இது போன்ற அனைத்து செயல்படுகளும் நாம் மகிழ்வதற்காக மட்டும் தான்... நான் கவலையாக இருப்பதற்காகதான் உழைக்கப் போகின்றேன். நான் அழுவதற்காகதான் விளையாடப் போகின்றேன் என்று யாரும் சொல்வது கிடையாது... எனவே!, சூரிய ஒளியை நோக்கித்தான் செடிகள், கொடிகள், மரங்கள் செல்லும்... அதுபோலதான் மனித வாழ்வு என்பது உன்னதமானது. அது மகிழ்வை நோக்கி மட்டும்தான் செல்லும்.  மகிழ்வை அடைய பல வழிகள் உள்ளன... 🔘 _*"தேவையற்றவையின் மீது கவனம் வேண்டாம்...!"*_ ................................................ மனித சிந்தனையானது சற்று வேற்றுமையானது. தேவையின் மீது கவனத்தை வைப்பதை விட தேவையற்றவைகளின் மீது தான் நாம் அதிக கவனம் வைக்கின்றோம்... உதாரணமாக!, உங்கள் மனத்தில் யாரைப் பற்றி அதிகமாக சிந்திக்கின்றீர்கள்...? என்ற கேள்விக்கு, எண்பது விழுக்காடு மக்கள் தங்கள் எதிரிகளைப் பற்றிதான் அதிமாக சிந்திகின்றோம் என்று சொல்கிறார்கள்... நம் அருகில் இருக்கின்றவர்களை, நம்மை நேசிக்கின்ற, நம் வாழ்வைப் பற்றி சி...

ஆன்லைனில் அரையாண்டு தேர்வுகளா?- அமைச்சர் செங்கோட்டையன்

    தமிழகத்தில் கடந்த 7 மாத காலமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு கல்வி நிறுவனங்கள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளன. அதேசமயம் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.  சமீபத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அரசு முடிவெடுத்த நிலையில், பெற்றோர்களின் கருத்து கேட்பு கூட்டத்தின் சாதகமற்ற பதிலால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போய்கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஈரோடு மாநிலம் கோபிச்செட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன், " அரையாண்டு தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெறும் என்ற தகவல் தவறானது.  பள்ளிகளில் பாடத்திட்டம் குறைப்பு குறித்து திங்கட்கிழமை முதல்வரிடம் அறிக்கை வழங்கப்பட உள்ளது. 5 நாட்களில் பாடத்திட்டங்களை குறைத்து அறிவிப்பு வெளியிடப்படும்  எனக் கூறினார்.

இன்றைய சிந்தனை..

 *நூறு கார்களை வைத்திருப்பவர் ஒரு காரையும் அனுபவிக்கமாட்டார்.* *ஒரே சைக்கிளை வைத்திருப்பவர் அதை அனுபவிப்பது மாதிரியான மகிழ்ச்சி அவருக்கு கிடைக்காது.* *குறைவான உடைமைகள் இருந்தால் தான் நிறைவாக அவற்றை அனுபவிக்க முடியும்.* *தன்னை விட அடுத்தவன் சுகமாக வாழ்கிறானே என்கிற எண்ணம்தான் எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாக இருக்கிறது.* *மகிழ்ச்சியோடு இருக்க வேண்டுமானால், எப்போதும் மகிழ்ச்சியான வார்த்தைகளைப் பேசிக்கொண்டிருங்கள்\"\"!* *பல்லுக்கு இருக்குற கூச்சம் நாக்கிற்கு இருப்பதில்லை.* *நம் கனவுகள் நிஜமாவதும் நிழற்படமாவதும் நம் முயற்சியில் அடங்கியுள்ளது.* *தேடி கிடைத்த ஒன்று தொலைந்த பின் தான் தெரிகிறது அது நமக்கானது இல்லை என்று..!!* *கோபப்படுங்கள், ஆனால் அதற்குமுன் அதைவிட மும்மடங்கு பொறுமையாய் இருங்கள். பூமி கூட பொறுத்து இருந்து தான் பூகம்பத்தை வெளிப்படுத்துகிறது.* *மழை நீரின் தன்மை அது விழும் மண்ணின் தன்மையை பொறுத்தது. அதுபோல ஒரு மனிதனின் தன்மை அவனுடன் பழகும் நண்பர்களைப் பொறுத்து அமையும்....* *உண்மையை உரக்க சொல்லிக் கொண்டே இருக்க தேவையில்லை.. பொய்யை போல...* *உறவை சொல்லிக் கொண்டே இருக்க தேவை...

வங்கக் கடலில் நாளை புதிய புயல் சின்னம் உருவாகிறது: டிச. 2ல் எங்கே கரையை கடக்கிறது?

      வங்கக் கடலில் தெற்கு அந்தமானில் வளி மண்டல காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இது மேலும் வலுப்பெற்று நாளை காற்றழுத்தமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காற்றழுத்தம் வலுப்பெறும் நிலையில் புயலாக மாறி தமிழகத்திற்கு வரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போதுதான் ஒரு புயல் தமிழகத்தை மிரட்டி சென்ற நிலையில் மீண்டும் ஒரு புதிய புயல் உருவாகலாம் என்று அறிவித்துள்ளது மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வட கிழக்கு பருவமழை தற்போது தமிழகத்தில் தீவிரம் அடைந்துள்ள நிலையில் கடந்த வாரம் தென்கிழக்கு வங்கக் கடலில் நிவர் புயல் உருவானது. அது தீவிரப் புயலாக மாறியது. வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து மரக்காணம் அருகே 25ம் தேதி இரவு பலம் இழந்து கரையைக் கடந்தது. தற்போது அந்த புயல் மகாராஷ்ட்ரா ேநாக்கி நகர்ந்து சென்றுள்ளது. நிவர் புயல் காரணமாக தமிழக கடலோரப் பகுதியில் கோடியக்கரை முதல் சென்னை வரை பலத்த மழை கொட்டித் தீர்த்தது. கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் பல பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்...

எதை விதைக்கிறீர்கள்..!!

ஒரு சிறுவனுக்கு தப்பு பண்ணா சாமி கண்ணை குத்திடும் என்று சொல்லி கொடுக்கப்படுகிறது. அது உண்மையா பொய்யா என கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் அந்த சிறுவனுக்கு வருகிறது. ஆனாலும், ஒரு வேளை உண்மையாக இருந்து சாமி கண்ணை குத்திவிட்டால் ..என பயந்து அதை பரிசோதித்து பார்க்காமல் இருக்கிறான்! பள்ளியில் அவனுடைய நண்பன் ஒருவன் ஆபீஸ் ரூமில் இருந்து பேனா திருடுகிறான். இதை இவன் கவனிக்கிறான். அவன் கண்ணை சாமி குத்துகிறதா என பார்க்கிறான் ...குத்தவில்லை! வீட்டில் போய் ஏன் குத்தவில்லை என்று கேட்கிறான், உடனே குத்தலன்னாலும் கொஞ்சநாள் கழிச்சி குத்திடும் என்று பதில் சொல்ல, கொஞ்சநாளைக்கு அவனை பின்தொடர்ந்து பார்க்கிறான்.  அவனுக்கு ஒன்றுமே ஆகவில்லை!  வீட்டில் சொல்லி கொடுக்கப்பட்டதின் மேல் நம்பிக்கை போய்விடுகிறது. அவனை போல் இவனுக்கும் பேனா எடுக்க வேண்டும் என்று ஆசை வருகிறது. அதேபோல் ஆபீஸ் ரூமில் இருந்து பேனா திருடுகிறான்! இவனை வேறு ஒருவன் பார்த்து தப்பு பண்ணா சாமி கண்ணை குத்திடும் என்று சொல்கிறான், அதெல்லாம் சும்மாடா, அவனையும் ஒண்ணும் பண்ணல இப்போ என்னையும் ஒண்ணும் பண்ணல, உனக்கு வேணும்னா நீயும் போய் எடுத்துக்கோ...

டிசம்பர் 2, 5ல் அடுத்தடுத்து தமிழகத்திற்கு வரிசை கட்டி வரும் புயல்கள்

    நிவர் புயல் கரையைக் கடந்த நிலையில் வங்கக் கடலில் அடுத்த புயல் உருவாகிறது. இந்த புயல் டிசம்பர் 2ம் தேதி தமிழகத்தில் கரையைக் கடக்கிறது.  இதையடுத்து டிசம்பர் 5ம் தேதி தெற்கு அந்தமான் பகுதியில் மேலும் ஒரு புயல் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் ஆண்டுதோறும் வரும் வட கிழக்கு பருவமழை காலத்தில் பல காற்றழுத்தங்கள் உருவாகி புயலாக மாறும்.  வங்கக் கடலில் கடந்த 20 ஆண்டுகளில் இதுவரை சுமார் 60 புயல்கள் வந்து சென்றுள்ளன. குறிப்பிட்ட சில புயல்கள் கடும் சேதங்களை ஏற்படுத்தி இன்னும் பேசப்படும் நிலையில் இருக்கின்றன. அந்த வகையில் நேற்று இரவு கரையைக் கடந்த நிவர் புயல் பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் நிவர் புயல் தரையைத்தொட்ட நிலையில், வலுவிழந்தது. தற்ேபாது இந்த புயல் வட மேற்கு திசையில் நகர்ந்து சென்று கொண்டு இருக்கிறது.  இந்த புயல் 28ம் தேதி ஆந்திராவைக் கடந்து சென்று வலுவிழந்து சாதாரண காற்றழுத்தமாக கடந்து செல்லும். இந்நிலையில், வங்கக் கடலில் இருந்த நிவர் புயல் சென்று விட்டதால், இந்த ஆண்டுக்கான அடுத்த புயல் தற்போது உருவாகும...

TODAY'S THOUGHT..

 உலகத்தையே ஜெயிக்க நினைத்த பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன் கடைசி காலத்தில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்தார். தோல்வி அடைந்த நெப்போலியனை பிரிட்டிஷ் ராணுவம் அவரை சிறை பிடித்து ஆப்பிரிக்க தனிச்சிறையில் தனிமையில் வைத்தது. சிறையில் மன உளைச்சலில் அவரின் கடைசி காலம் கழிந்தது.  அவரை பார்க்க வந்த அவரின் நண்பர் ஒருவர் அவரிடம் ஒரு சதுரங்க அட்டையை கொடுத்து “இது உங்களின் சிந்தனையை செயல்பட வைக்கும் தனிமையை போக்கும்” என்று கூறி அவரிடம் கொடுத்தார். ஆனால் சிறை படுத்தி விட்டார்களே என்ற மன உளைச்சலில் இருந்த மாவீரனுக்கு சிந்தனை செயல்படாமல் அதன் மீது கவணம் போகவில்லை. சிறிது காலத்தில் இறந்தும் போனார். பிற்காலத்தில் பிரான்ஸ் அருங்காட்சியகம் மாவீரன் நெப்போலியனிடம் இருந்த சதுரங்க அட்டையை ஏலம் விட அதை ஆய்வு செய்த போது அந்த அட்டையின் நடு பக்கத்தில் சிறிய அளவில் ஒரு குறிப்பு இருந்தது.  அதில் அந்த சிறைச்சாலையில் இருந்து தப்பிப்பதற்க்கான வழியை அந்த குறிப்பு சொல்லி இருந்தது.  ஆனால் அவரின் மன உளைச்சலும்,பதட்டமும் அவரின் சிந்தனையை செயல்படாமல் ஆக்கி வைத்து அவரின் தப்பிக்கும் வழியை மூடி மறைத்தது.... அதைப் போ...

புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது "நிவர்' புயல்

  வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த "நிவர்' புயல் புதன்கிழமை நள்ளிரவு புதுச்சேரிக்கு அருகே கரையைக் கடந்தது.  புயல் கரையைக் கடந்தபோது, மணிக்கு 110 கி.மீ. முதல் 120 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியது. பல்வேறு இடங்களில் பலத்தமழை கொட்டியது. ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல இடங்களில் மின் கம்பங்கள் சரிந்தன. தெற்கு வங்கக்கடலில் கடந்த சனிக்கிழமை உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக அடுத்தடுத்து வலுவடைந்து செவ்வாய்க்கிழமை காலையில் "நிவர்' புயலாகவும், அன்று இரவில் தீவிர புயலாகவும் மாறியது. இது செவ்வாய்க்கிழமை நள்ளிரவு  புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே 320 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கே 380 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டிருந்தது. அப்போது புயல் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்தது. புதன்கிழமை மாலையில் புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே 120 கி.மீ. தொலைவிலும், கடலூருக்கு தென் கிழக்கே 110 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டிருந்த "நிவர்' புயல்,  மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்தது. தொடர்ந்து, இது தீவிர புயலாக மேற்கு- வடமேற்கு திசையில் நகர...

கடவுள் எப்போதும், யாரையும் கைவிடுவதில்லை!!

 ஒரு நாள் நான் முடிவு செய்தேன் இந்த வாழ்க்கையை துறந்துவிடுவது என்று… ஆம், எனது வேலை, எனது உறவுகள், என் இறையாண்மை அனைத்தையும் விட்டுவிடுவதுஎன்று. துறவிகள் போல வாழ்ந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து காட்டிற்குச் சென்றேன். அப்போது, கடைசியாக இறைவனிடம் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்பினேன். “கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்?” கடவுளின் பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது… “ஒரு முறை காட்டைச் சுற்றிப் பார். காடு முழுவதும் புதர் செடிகளும் நீண்டு ஓங்கி வளர்ந்துள்ள மூங்கில்களும் காணப்படுகின்றன அல்லவா?” “ஆமாம்” என்று நான் பதிலளித்தேன். “நான் புதர் செடி மற்றும் மூங்கிலு‌க்கான விதைகளை எப்போது விதைத்தேனோ அப்போ‌தி‌ல் இரு‌ந்து அவைகளை மிகவும் பொறுப்புடன் நான் கவனித்து வந்தேன்.  அவைகளுக்குத் தேவையான வெளிச்சம், தண்ணீர், காற்று என அனைத்தையும் வழங்கினேன்.புதர் செடியின் விதை பூமியில் இருந்து சீக்கிரம் இலைகளை விட்டு வளர்ந்தது. அதன் பச்சை நிறம் பூமியை அலங்கரிக்கும் விதமாக அமைந்தது. ஆனால் அப்போது மூங்கில் விதையில் இருந்து எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் அதனை நான் க...

டிசம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது புது ரூல்ஸ்..! வங்கி சேவை முதல் சிலிண்டர் வரை!!!!

    வருகின்ற டிசம்பர் 1 முதல் வங்கி சேவையில் சில மாற்றங்கள் அமலாகவுள்ளது. அவை உங்கள் அன்றாட வாழ்க்கையில் பாதிப்பை ஏற்ப்படுத்தும் என்பதால் அதனை பற்றி கூடுதல் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம். ரியல் டைம் மொத்த தீர்வு முறை (RTGS) பெரிய மதிப்பு பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்படும் ரியல் டைம் மொத்த தீர்வு முறை (ஆர்.டி.ஜி.எஸ்) 2020 டிசம்பரில் இருந்து கிடைக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி 2020 அக்டோபரில் கூறியது. தற்போது, ​​ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளைத் தவிர, வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை வாடிக்கையாளர்களுக்கு ஆர்டிஜிஎஸ் கிடைக்கிறது. ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்தா தாஸ், இரு மாத மாதாந்திர ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை முடிவை அறிவித்து, வாடிக்கையாளர்களுக்கு ரியல் டைம் மொத்த தீர்வு (ஆர்.டி.ஜி.எஸ்) அமைப்பின் முழு நேரமும் கிடைக்கும் என தெரிவித்தார். எல்பிஜி சிலிண்டர் விலைகள் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் சர்வதேச சந்தைகளில் கச்சா விகிதங்களைப் பொறுத்து ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் எல்பிஜியின் விலையை...

Cyclone Nivar | வானிலை ஆய்வு மையம் விடுக்கும் வண்ண அலெர்ட்கள் குறித்த விளக்கம்.

    Cyclone Nivar | வானிலை ஆய்வு மையம் விடுக்கும் வண்ண அலெர்ட்கள் எவற்றை உணர்த்துகின்றன.. விளக்கம் என்ன? புயல் மற்றும் மழைக்காலங்களில் ரெட் அலெர்ட், எல்லோ அலெர்ட் என்பது போன்ற வார்த்தைகளை அடிக்கடி நாம் கேட்கிறோம். காலநிலை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த எச்சரிக்கைகளை விடுக்கிறது. இதில் கிரீன் அலெர்ட் அதாவது பச்சை எச்சரிக்கை என்பது மழை பெய்யும் அறிகுறி தென்பட்டாலே வெளியிடப்படும். பச்சையெனில் லேசானது முதல் மிதமான அளவு அதாவது15.6 மில்லி மீட்டர் முதல் 64.4 மில்லி மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு உண்டு என்கிறது வானிலை ஆய்வு மையம். இதற்கு அடுத்த இடத்தில் யெல்லோ அலெர்ட் எனப்படும் மஞ்சள் எச்சரிக்கை இருக்கிறது. வானிலை மோசமாக இருக்கிறது என்பதை தெரிவிக்கும் விதமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. மஞ்சள் எச்சரிக்கையின் போது 64.5 மில்லி மீட்டர் முதல் 115.5 மில்லி மீட்டர் வரை மழைபெய்ய வாய்ப்பிருக்கிறது. இதனால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படும் போது மக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தயார் நிலையில் வைத்துக் கொள்வது நல்லது. தமிழகத்து...

கந்தல் பொதி கிழவன்..

 அரண்மனையைஒட்டி வசித்த பிச்சைக்காரன் ஒருவன், அந்த அரண்மனைக் கதவில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பைக் கண்டான். அதில், மன்னர் விருந்தளிக்கப் போவதாகவும், அரச உடை அணிந்து வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. பிச்சைக்காரன், தான் அணிந்திருந்த கந்தல் உடைகளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துக்கொண்டான். நிச்சயமாக அரசரும், அவருடைய குடும்பத்தினரும் மட்டுமே ராஜ உடை உடுத்தியிருக்க முடியும் என எண்ணினான். திடீரென அவனுக்குள் ஓர் எண்ணம்... அந்த மாதிரி எண்ணுகிற அளவுக்குத் தனக்குள் ஏற்பட்ட துணிச்சலைப் பற்றி யோசித்த போதே, அவனுக்குள் நடுக்கம் ஏற்பட்டது. இருந்தாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அரண்மனை வாசலை அடைந்தான். வாயிற்காவலனிடம், "ராஜாவைப் பார்க்க வேண்டும்" என்றான். அந்தக் காவலன், அரசரிடம் அனுமதி வாங்கி வந்தான். உள்ளே வந்த பிச்சைக்காரனிடம், "என்னைப் பார்க்கவேண்டும் என்றாயாமே?" என்றார் அரசர். "ஆமாம்! நீங்கள் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ள எனக்கும் ஆசை. ஆனால், என்னிடம் ராஜ உடைகள் இல்லை. என்னை அதிகப்பிரசங்கி என நினைக்காவிட்டால், உங்களது பழைய ஆடையை அளித்து உ...

தீவிர புயலாகிறது ‘நிவா்’: 120 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும்3 நாள்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு

      தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி திங்கள்கிழமை வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் பின்னா், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் மாறியது. இது, செவ்வாய்க்கிழமை காலை புயலாக வலுவடைகிறது. மேலும், இந்தப் புயல் தீவிர புயலாக மாறி, காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகே நவம்பா் 25-ஆம் தேதி பிற்பகலில்  கரையை கடக்கவுள்ளது. அப்போது, மணிக்கு 100 கி.மீ. முதல் 110 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 120 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமழை: நிகழாண்டில் வடகிழக்குப் பருவமழை தாமதமாக அக்டோபா் 28-ஆம் தேதி தொடங்கியது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சி, கீழ்திசை காற்றின் வேக மாறுபாடு ஆகியவற்றால், தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வந்தது. சில இடங்களில் பலத்த மழைப்பொழிவும் இருந்தது. ADVERTISEMENT இதற்கிடையில், தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதியில் கடந்த சனிக்கிழமை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இது, ஞாயிற்றுக்கிழமை அன்று தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங...

யார் துறவி??????

 புத்தனாவது சுலபம், ஆனால் புத்தனின் மனைவியாய் இருப்பது...??? புத்தர் ஞானம் பெற்றதும் தன் மனைவி, குழந்தையை பார்க்க போகிறார். மனைவி கேட்கிறாள்: “என்னை விட்டுப் போனது பரவாயில்லை. ஆனால் என்னிடம் சொல்லி விட்டு போயிருக்கலாமே! நான் ஒன்றும் உங்களைத் தடுத்திருக்க மாட்டேன். ஆனால் நீங்கள் என்னை நம்பவில்லை என்ற நினைப்பே என்னை இத்தனைக் காலமும் மிக நோகடித்து விட்டது. ஏன் என்னை காயப்படுத்தினீர்கள்....???” புத்தர் அவளிடம் மன்னிப்பு கேட்டு விட்டு தான் பயந்தது அவளை அல்ல தன்னைத் தான் என்கிறார். மனைவி மகனின், முகம் பார்த்தால் தான் உறுதி குலைந்து அங்கேயே தங்கி விடுவேன் என பயந்ததாய் கூறுகிறார். அடுத்து அவர் மனைவி மிகச்செறிவான ஒரு கேள்வி கேட்கிறாள். அது இது தான்: “நீங்கள் இந்த அரண்மனையை விட்டு போகாமல் இங்கேயே தங்கி இருந்தால் ஞானம் பெற்றிருக்க முடியாதா...???” புத்தர் சொல்கிறார்: “தாராளமாக. அதற்கு நான் மலை, காடு, ஆசிரமங்கள் எல்லாம் தேடி அலைய வேண்டியதில்லை தான். ஆனால் இங்கிருந்து ஓடிப் போகும் போது நான் அதை அறிந்திருக்கவில்லை. உண்மையில் எங்கிருந்தாலும் எனக்கு இந்த ஞானம் கிடைத்திருக்கும். இடம் பொருட்டே அல்ல” ...

Cyclone Nivar: வருகிறது நிவர் புயல்... தமிழகத்தில் அதிகனமழை எச்சரிக்கை

  தமிழகத்தை வரும் 25-ம் தேதி புயல் தாக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுள்ளது. NEWS18 TAMIL LAST UPDATED:  NOVEMBER 22, 2020, 11:41 PM IST NEWS DESK  NEWS18 TAMIL தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது. இது அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற உள்ளது. பின்னர் அது புயலாக மாறி வருகிற 25-ந்தேதி தமிழகத்தை தாக்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. புயல் அறிவிப்பு தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தெற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த பகுதி இன்னும் 2 நாட்களில் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறுகிறது. வருகிற 25-ந்தேதி (புதன்கிழமை) அன்று அது புயலாக மாறி தமிழகத்தை தாக்கும் சாத்திய கூறுகள் உள்ளன. புயலானது மாமல்லபுரம்- காரைக்கால் இடையே குறைந்த பலத்துடன் கரையை கடக்கிறது. அப்போது 50 கி.மீட்டரில் இருந்து 75 கி.மீ. வரையில் காற்று வேகமாக வீசக்கூடும். கடல் பகுதியில் 62 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்றும் வீசும் என்...