நிவர் புயல் கரையைக் கடந்த நிலையில் வங்கக் கடலில் அடுத்த புயல் உருவாகிறது. இந்த புயல் டிசம்பர் 2ம் தேதி தமிழகத்தில் கரையைக் கடக்கிறது.
இதையடுத்து டிசம்பர் 5ம் தேதி தெற்கு அந்தமான் பகுதியில் மேலும் ஒரு புயல் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் ஆண்டுதோறும் வரும் வட கிழக்கு பருவமழை காலத்தில் பல காற்றழுத்தங்கள் உருவாகி புயலாக மாறும்.
வங்கக் கடலில் கடந்த 20 ஆண்டுகளில் இதுவரை சுமார் 60 புயல்கள் வந்து சென்றுள்ளன. குறிப்பிட்ட சில புயல்கள் கடும் சேதங்களை ஏற்படுத்தி இன்னும் பேசப்படும் நிலையில் இருக்கின்றன.
அந்த வகையில் நேற்று இரவு கரையைக் கடந்த நிவர் புயல் பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நிவர் புயல் தரையைத்தொட்ட நிலையில், வலுவிழந்தது. தற்ேபாது இந்த புயல் வட மேற்கு திசையில் நகர்ந்து சென்று கொண்டு இருக்கிறது.
இந்த புயல் 28ம் தேதி ஆந்திராவைக் கடந்து சென்று வலுவிழந்து சாதாரண காற்றழுத்தமாக கடந்து செல்லும். இந்நிலையில், வங்கக் கடலில் இருந்த நிவர் புயல் சென்று விட்டதால், இந்த ஆண்டுக்கான அடுத்த புயல் தற்போது உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதாவது தெற்கு அந்தமான் பகுதியில் 30ம் தேதி உருவாகும் காற்றழுத்தம் வலுப்பெற்று வட மேற்கு திசையில் மெல்ல மெல்ல நகர்ந்து வந்து டிசம்பர் 2ம் தேதி நாகப்பட்டினம், தஞ்சாவூர் பகுதியில் கரையைக் கடக்க உள்ளது.
இதற்கு பிறகு டிசம்பர் முதல் வார இறுதியில் இரண்டாவதாக மேலும் ஒரு புயல் டிசம்பர் 5ம் தேதி தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாக உள்ளது. இந்த புயல் வட மேற்கு திசையில் நகர்ந்து சென்னை வழியாக கரையைக்கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment