தமிழகத்தில் கடந்த 7 மாத காலமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு கல்வி நிறுவனங்கள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளன. அதேசமயம் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அரசு முடிவெடுத்த நிலையில், பெற்றோர்களின் கருத்து கேட்பு கூட்டத்தின் சாதகமற்ற பதிலால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போய்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ஈரோடு மாநிலம் கோபிச்செட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன், " அரையாண்டு தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெறும் என்ற தகவல் தவறானது.
பள்ளிகளில் பாடத்திட்டம் குறைப்பு குறித்து திங்கட்கிழமை முதல்வரிடம் அறிக்கை வழங்கப்பட உள்ளது. 5 நாட்களில் பாடத்திட்டங்களை குறைத்து அறிவிப்பு வெளியிடப்படும் எனக் கூறினார்.
- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment