Skip to main content

Posts

ஆசிரியர் பணி வாங்கி தருவதாக ரூ.3.25 கோடி

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி 38 பேரிடம் ரூ.3.25 கோடி வரை மோசடி செய்த செம்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியை 53, மாவட்ட குற்றபிரிவு போலீசார் கைது செய்தனர். சுப்பிரமணி தனக்கு சென்னை தலைமை செயலக அதிகாரிகள் பழக்கம் உள்ளது. அவர்கள் மூலம் அரசு பணி வாங்கி தருவதாக அதே பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் மாரிமுத்துவிடம் 46, கூறினார். ஆசிரியர் பணி வாங்கி தர சுப்பிரமணி ரூ.12 லட்சம் கேட்டார். அதை நம்பி மாரிமுத்து ரூ.9.80 லட்சத்தை கொடுத்தார் ஆனால் சுப்பிரமணி வேலை வாங்கி தராமல் மோசடி செய்தார். பணத்தை திருப்பி கேட்ட போது சுப்பிரமணி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இதுகுறித்து எஸ்.பி., ஸ்ரீனிவாசன் மேற்பார்வையில் குற்றப்பிரிவு டி.எஸ்.பி., இமானுவேல் ராஜ்குமார், இன்ஸ்பெக்டர் வினோதா விசாரித்தனர். 38 பேரிடம் சுப்பிரமணி ரூ.3.25 கோடி வரை மோசடி செய்தது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

பணிவு..

*நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்.*                      *உங்களையே நீங்கள் கேட்டுப் பார்க்க வேண்டிய கேள்வி இதுதான். உங்களால் ஆளுமைமிக்க மனிதராக விளங்க முடிகிறதா?* *இந்தக் கேள்வியைப் படித்த உடனேயே உங்கள் நண்பர்கள் உங்களுக்கு வேண்டியவர்கள் உங்களைப் பற்றிச் சொல்லும் பாராட்டு மொழிகளும் உங்களுக்கு கீழே பணிபுரிபவர்கள் உங்களிடம் காட்டும் பணிவும் உங்கள் நினைவுக்கு வரும்.* *ஆமாம் நான் ஆளுமை மிக்க மனிதர் தான் என்று ஒரு குரல் உள்ளே எழும். இவை உங்களுக்குள் இருக்கும் ஆளுமை பண்பின் ஆரம்ப அறிகுறிகள்தான்.*  *இதுவரை சந்தித்திராத ஒரு மனிதரைப் பார்க்க நேர்கையில் பழகத் தொடங்கி 10 நிமிடங்களுக்குள் அவரை உங்களால் ஈர்க்க முடிகிறது என்றால் உங்கள் ஆளுமை பண்பு தீர்க்கமாக இருந்ததாய் பொருள்.* *அறிமுகமான வட்டத்தில் மட்டுமன்றி உங்களுடன் பழக நேர்கிற மூன்றாம் மனிதருக்கோ உங்கள் பணிகளை பற்றி கேள்விப்படுகிற புதியவர் ஒருவருக்கும் உங்கள் மீது வியப்பு கலந்த பிரியமும் மரியாதையும் தோன்றுமே ஆனால் அதுதான் உங்கள் ஆளுமை பண்பின் அழுத்தமான அடையாள...

கேள்வித்தாள் மீண்டும் வெளியானதா? பள்ளிக் கல்வித்துறை விளக்கம்.

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வை சந்திப்பதற்கு வசதியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மேற்கண்ட வகுப்புகளுக்கு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் திருப்புதல் தேர்வுகள் இரண்டு கட்டமாக நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது. இதன்படி கடந்த பிப்ரவரி மாதம் 9ம் தேதி முதல் 16ம் தேதி வரை முதல் திருப்புதல் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது. அந்த தேர்வு நடக்கும் போதே இடையில் கேள்வித்தாள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, கேள்வித் தாள் வெளியாக வாய்ப்பாக இருந்த பள்ளிகள் மற்றும் அந்த பணியில் பொறுப்பில் இருந்த ஆசிரியர்கள் மீது பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து, இரண்டாம் திருப்புதல் தேர்வு மார்ச் 28ம் தேதி தொடங்கியது. மொழிப்பாடங்களான தமிழ், ஆங்கிலப் பாடங்களுக்கான தேர்வுகள் மற்றும் கணினி அறிவியல், சிறப்பு தமிழ், புள்ளியியல் தேர்வுகளும், வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் பாடங்களுக்கான 4 தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன. இதன் தொடர்ச்சி...

இன்றைய சிந்தனை..

நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களின், *தன்னம்பிக்கை மிக்க அருமையான வார்த்தைகள்...* வானொலிப் பேட்டியொன்றில் நாகேஷ்.. *வானொலி:* நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்? *நாகேஷ்:* நான் கவலையே படமாட்டேன் சார். ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள். கட்டடம் முடிந்து, *கிரஹப் பிரவேசத்தன்று* கட்டடம் கட்டுவதற்கு எது முக்கிய காரணமாக இருந்ததோ, அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால், எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு *கிரஹகப் பிரவேசம்* நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள். அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும். இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா? அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். ஆடுமாடுக...

தமிழ் வழி கல்வி பயின்ற சான்றிதழ் ( PSTM Certificate ) Free Download Pdf File

  CLICK DOWNLOAD Thamizhkadal Study Materials 

நம்பிக்கை..

 முல்லாவிற்கு அன்றுதான் திருமணம் முடிந்திருந்தது. புதுமனைவி மற்றும் உறவினர்களுடன் தனது ஊருக்கு புறப்பட்டார்.வழியில் பெரிய ஆற்றை கடந்து செல்லவேண்டும்! ஒரு பெரிய் படகில் மனைவி மற்றும் உறவினர்களுடன் ஆற்றை கடந்துசெல்ல புறப்பட்டார்கள்.படகு நடுஆற்றை கடக்கும் போது பெரிய சுழல்க்காற்று வீசி படகு அங்கும் இங்குமாக் தள்ளாடியது. முல்லாவை தவிர அனைவரும் பயத்தால் அலறி கொண்டிருந்தனர். முல்லா மட்டும் அமைதியாக இருந்தார். இதை பார்த்த முல்லா மனைவிக்கு மிகவும் ஆச்சரியம்!முல்லாவிடமே கேட்டுவிட்டாள்.முல்லா பதில் ஏதும் பேசாமல் மனைவி அருகில் சென்று தன் இடுப்பில் இருந்த கூரிய கத்தியை எடுத்து தன் மனைவியின் கழுத்தில் வைத்தார். மனைவி எவ்வித சலனுமுமின்றி இருந்ததை கண்ட முல்லா மனைவியை பார்த்து இந்த அபயகரமான கத்தியை பார்த்து உனக்கு பயமில்லையா? என கேட்டார். அவரது மனைவி,”கத்தி வேண்டுமானால் அபயகரமானதாக இருக்கலாம்.ஆனால் அதை கையில் ஏந்தி இருப்பவர் எனது அன்பான கணவர்” என்றாள். உடனே முல்லா பதிலளித்தார்,”அதுபோலத்தான் ஆற்றில் உருவான சூறாவளி அபயகரமானதாக இருக்கலாம்.. ஆனால் அதை உருவாக்கிய அல்லா என் மீது அன்பு கொண்டவர் நமக்கு எந்...

அடுத்த கல்வி ஆண்டு ஜூன் 13 இல் தொடக்கம் - பள்ளிக்கல்வித்துறை

 

TODAY'S THOUGHT..

 மழை! ஓயாத மழை! ஏரி நிறைந்து வழியும் அளவுக்கு மழை.அந்த ஏரி நீர் குளிர்ச்சி அடைந்து விட்டது. அந்தக் குளிரைத் தாங்க முடியாத ஒரு தவளை, மழை ஓய்ந்ததும் சற்று தூரத்திலுள்ள ஒரு கிணற்றுக்கு வந்தது. கிணற்று நீர் வெது வெதுப்பாக இருக்குமே என்பதால் கிணற்றிற்குள் குதித்தது. அந்தக் கிணற்றில் பல காலமாக வாழ்ந்து வந்த தவளைகளில் ஒரு தவளை இந்தப் புதிய தவளையை வரவேற்றது. ‘நான் வெகு நாட்களாகப் பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன். உன்னைக் கண்டதும் எனக்கு மகிழ்ச்சி’ எனக் கூறிப் பொந்தில் வைத்திருந்த உணவு வகைகளைப் புதிய தவளைக்குத் தந்தது. இரண்டு தவளைகளும் பேசிக் கொண்டிருந்தன. கிணற்றிலிருந்த மற்ற தவளைகளுக்குப் புதிய தவளை வந்தது பிடிக்கவில்லை. ‘இங்கே கிடைக்கும் உணவு நமக்கே போதவில்லை. இதில் புதிய விருந்தாளி வேறு’ எனக் கவலைப்பட்டன. புதிய விருந்தாளியை எப்படியும் துரத்தி விட முடிவு செய்தன. நல்ல சமயம் பார்த்து கொண்டு இருந்தன.இரண்டு தவளைகளும் பேசிக்கொண்டிருப்பதை அருகே சென்று வேடிக்கை பார்த்தன. அப்போது அக்கிணற்றுத் தவளை ஏரித்தவளையிடம், நண்பனே!நீ இத்தனை நாளும் எங்கே தங்கியிருந்தாய்?’ எனக்கேட்டத...

18 ஆயிரம் வகுப்பறைகள் கட்டப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

தஞ்சையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் பழுதடைந்த 10 ஆயிரம் பள்ளி கட்டிடங்கள் இடிக்கும் பணி நடந்து வருகிறது. 5 ஆண்டு காலத்தில் 18 ஆயிரம் வகுப்பறைகள், ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பில் கட்ட உள்ளோம். முதல் கட்டமாக இந்தாண்டு ரூ.1,300 கோடி மதிப்பில் பள்ளி கட்டிடங்கள் கட்டப்படும். இதில் கழிவறை, ஆய்வகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளடங்கி இருக்கும்.

பிழைகள் பிழைக்கிறது!!

நேர்மையின் விலா எலும்புகள் சிற்சில நேரங்களில் நொறுங்கித்தான் போகிறது பாலெது கள்ளெதுவென இனங்காணலில் தவறிழைக்கிறோமோ என்னவோ? சட்டாம்பிள்ளைகள் நியாயத்தீர்ப்பெழுதும் என்பதில் ஐயப்பாடேதுமில்லை தவறிட வாய்ப்பே இல்லையென சொல்வதற்குமில்லை சேர்த்து வைக்கிற உழைப்புப்பெயரையெல்லாம் ஓர் நொடியில் பொடியாக்குகின்றன ஊடக வாய்கள். வாழ்க்கை எனும் ஓட்டத்தில் நிறைய நபர்களை சந்தித்திருக்கலாம்  நிறைய பேரை நண்பர்கள் ஆக்கியிருக்கலாம்  நிறைய பேரை தவிர்த்திருக்கலாம்  நிறைய பேரை   ஒதுக்கி இருக்கலாம்  நிறைய பேரை விலக்கி இருக்கலாம்  நிறைய பேரை உங்கள் தோல்  கொடுத்து தூக்கி நிறுத்தியிருக்கலாம்  ஆனாலும் எல்லா நேரத்திலும்  எல்லாரும் ஒரேமாதிரியாய் இருப்பார்கள்  என்று நினைப்பதுதான் மனிதனின் மிகப்பெரிய முட்டாள்தனம்., உண்மை வெல்லுமென பலகைகளில் தான் இப்போதெல்லாம் காண நேர்கிறது கோபங்கள் கையறு நிலைதனில் கிடந்திட வெட்கமின்றி வாசித்துத் தொலைக்கிறேன் பொய்களின் தலைப்புச் செய்திகளை ஓர் ஓரமாய் வக்கிரங்கள் சிரித்துக்கிடக்க யாருமறியாமல் அழுகிறது நிஜங்களின் கண்கள் இதோ பெருக்கெடுக்கும் ...

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.யில், தொலைநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படாததால், மாணவர்கள் சேர வேண்டாம் என யுஜிசி எச்சரிக்கை..

    அங்கீகாரம் பெறாமல் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் நடத்தும் தொலைதூர படிப்புகளில் மாணவர்கள் சேர வேண்டாம் என்று பல்கலைக்கழக மானியக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி மற்றும் தொலைதூர கல்வித் திட்டங்களுக்கு 2014-15ஆம் ஆண்டு வரை மட்டும் தான் அனுமதி அளிக்கப்பட்டிருந்ததாகவும், அதற்கு பிறகு எந்த அனுமதியும் அளிக்கப்படவில்லை எனவும் யு.ஜி.சி. தெரிவித்துள்ளது. அங்கீகாரம் பெறாத படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பது, யூஜிசியின் அனைத்து விதிமுறைகளுக்கும் எதிரானது, மாணவர்களின் வேலை வாய்ப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ள யு.ஜி.சி., இதனால், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கும் அந்த பல்கலைக்கழகமே முழு பொறுப்பு என, தெரிவித்துள்ளது.

குரூப் 4 தேர்வு தேதி இன்று அறிவிப்பு!!

தமிழ்நாடு அரசுப் பணிகள் பெரும்பாலானவற்றுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வுகள் நடத்தப்படுகின்றன . குரூப் -1, குரூப் -2, குரூப் -4 என்ற பிரிவின் கீழ் நடத்தப்படும் தேர்வுகளுக்காக ஏராளமான இளைஞர்கள் தயாராகி வருகின்றனர். குரூப் -1 பிரிவில் தமிழக அரசின் உச்ச அதிகாரப் பணிகளான துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படும். குரூப் -2 பிரிவில் சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், சார் பதிவாளர், லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர், புலனாய்வு பிரிவு சிறப்பு உதவியாளர், குற்றப்பிரிவு சிறப்பு உதவியாளர் ஆகிய பணிகள் இடம்பெறுகின்றன. 10ஆம் வகுப்பு தேர்ச்சியை தகுதியாகக் கொண்ட குரூப் -4 தேர்வில் வி.ஏ.ஓ உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படும். இந்த ஆண்டு குரூப் - 4 தேர்வு எப்போது நடைபெறும் அரசுப் பணியை லட்சியமாகக் கொண்ட இளைஞர்கள் காத்திருந்தனர். இந்தநிலையில், குரூப் - 4 தேதி இன்று மாலை 4.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தேர்வாணைய தலைவர் கா. பாலசந்திரன் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளார்.

TODAY'S THOUGHT..

நாம் வாழ்வதற்குப் பிறந்தோம் என்று சொல்கிறோம். இந்த வாழ்க்கை என்றால் என்ன? இதை நாம் எப்படி அமைத்துக் கொண்டால் வெற்றி பெறலாம் என்ற வழிமுறைகளைத் தெரிந்து அதன்படி நாம் வாழ வேண்டும். வாழ்க்கை என்பது குடை போன்றது. அதில் வெயிலும், மழையும் உண்டு. மேடுகளும், பள்ளங்களும் கலந்தது தான் வாழ்க்கை.  இதில் சுகங்களை மட்டுமே அனுபவித்து வாழ்ந்தால் விரைவில் சலிப்பு ஏற்பட்டு விடும்.  சோகங்களை மட்டும் அனுபவித்து வாழ்ந்தால் விரைவில் தளர்ச்சி ஏற்பட்டு விடும்.  இந்த உலகத்தில் எப்படி வாழ வேண்டும் ? என்று ஒரு அறிஞரிடம் கேட்டதற்கு செயல் விளக்கம் கொடுத்தார்.  மேஜையில் மூன்று கண்ணாடிக் குவளைகளை தண்ணீருடன் வைத்தார். அதற்குப் பக்கத்தில் மூன்று பொம்மைகளையும் வைத்தார்.  முதல் பொம்மை களிமண்ணாலும், இரண்டாவது பொம்மை பஞ்சாலும், மூன்றாவது பொம்மை சர்க்கரையால் செய்யப்பட்டவை.. *முதல் வகை மனிதர்கள்....* .................................... முதல் பொம்மையை எடுத்துத் தண்ணீரில் போட்டார். அது தானும் கலங்கி தண்ணீரையும் கலக்கி அசுத்தப்படுத்தி விட்டது.  இவர்கள் தன்னையும் கலக்கி மற்றவர்களையும் கலக்கி விடுவார...

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -II க்கு பி.லிட் மற்றும் TPT முடித்தவர்கள் தேர்வு எழுத முடியுமா ? ஆசிரியர் தேர்வு வாரியம் பதில்

  ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -II க்கு பி.லிட் மற்றும் TPT முடித்தவர்கள் தேர்வு எழுத முடியுமா ? ஆசிரியர் தேர்வு வாரியம் பதில் 

SUNDAY'S THOUGHT..

தவத்தில் இருந்த ஒரு மகரிஷி, கண் திறக்காமல் தினமும் ஒருமுறை கையை நீட்டுவார். கையில் யாராவது எதையாவது போட்டால், என்ன ஏதென பார்க்காமல் விழுங்கி விடுவார். இவர் கையை நீட்டும் நேரம் பார்த்து, பக்தர்கள் கனிகள், அப்பம் முதலியவற்றை தருவர். இதனால் புண்ணியம் சேருமென கருதினர். ஒரு நாள் அந்நாட்டின் அரசன் வேட்டைக்கு வந்தான். அன்று பக்தர்கள் யாரும் வரவில்லை. அந்நேரத்தில் மகரிஷி கையை நீட்ட, அவரை பரிகாசம் செய்யும் நோக்கத்தில், மன்னன் தான் வந்த குதிரை போட்ட சாண உருண்டையைப் போட, மகரிஷியும் வாயில் போட்டார். மன்னன் சிரித்தபடியே போய்விட்டான். மறுநாள் முனிவர் ஒருவர் அரசவைக்கு வந்தார். முக்காலமும் உணர்ந்த அவர் “மன்னா! நேற்று நீ காட்டில் தவமிருக்கும் மகரிஷிக்கு குதிரைச்சாணம் கொடுத்தாய் இல்லையா? அது நரகத்தில் மலை போல் வளர்ந்து கொண்டிருக்கிறது. நீ நரகம் வந்ததும் அதை உண்ண வைப்பர்” என சொல்லி விட்டு சென்றார். மன்னன் நடுங்கி விட்டான். தர்மம் செய்து, தன் பாவங்களை குறைக்க முடிவெடுத்தான். அரண்மனை நந்தவனத்தில் ஒரு குடில் அமைத்து தங்கினான். இளம்பெண்களை வரவழைத்து, திருமணத்திற்குரிய நகை, பணம் கொடுத்து, பாவம் செய்வதின் கெடு...

பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் முற்றிலும் தற்காலிகமானது - ஒருபோதும் அரசு நியமனம் ஆகாது - மே மாத ஊதியம் வழங்கக் கோரிய மனுவிற்கு பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் விளக்கம்!- pdf

பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் முற்றிலும் தற்காலிகமானது - ஒருபோதும் அரசு நியமனம் ஆகாது - மே மாத ஊதியம் வழங்கக் கோரிய மனுவிற்கு பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் விளக்கம்!- pdf  Click here to download

PGTRB Answer Key Related Press Release by TRB!

    2020 - 2021 ஆம் ஆண்டு முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை - 1 / கணினி பயிற்றுநர் நிலை - 1 நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை ( Notification ) No. 01/2021 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09.09.2021 அன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கணினி வழித் தேர்வுகள் ( Computer Based Examination ) கடந்த 12.02.2022 முதல் 20.02.2022 வரை இருவேளைகளில் நடைபெற்றது. ஆசிரியர் தேர்வு வாரிய Master Question Paper உடன் வெளியிடப்படும் , தற்காலிக விடைக்குறிப்பின் மீதான ஆட்சேபனைகளை இணையவழியில் தேர்வர்கள் தெரிவிக்கும் முறை ( Objection Tracker ) ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இம்முறையில் முற்றிலும் கணினிபடுத்துவதில் தொழில்நுட்ப குறைபாடு உள்ளதை சீர்செய்வதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. அதற்குரிய பணிகள் நடவடிக்கையில் உள்ளது. இப்பணி முடிவு பெற்று Objection Tracker தயாரானவுடன் , தேர்வர்கள் அளித்த விடைகளுடன் கூடிய வினாத்தாள் ( View Your QP with candidate response ) ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தற்காலிக விடைக்குறிப்புடன் Master Q.P , ( Tentative Key answers with Ma...

இன்றைய சிந்தனை..

அரசர் ஒருவருக்குத் திடீரென்று ஒரு நாள், தன் பட்டத்து யானை எவ்வளவு எடை இருக்கும் என்று அறிய ஆவல் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் எடைமேடைகள் எல்லாம் இல்லை. யானையை அளக்கும் அளவுக்குப் பெரிய தராசும் கிடையாது... யானையின் எடையை எப்படி அறிவது..? என்று அமைச்சர்களிடம் கேட்டார் மன்னர். யாருக்கும் அதற்கான வழி தெரியவில்லை. அப்போது அமைச்சர் ஒருவரின் பத்து வயது மகன், 'நான் இதன் எடையைச் சரியாகக் கணித்துச் சொல்கிறேன்' என்றான். அதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். ஆனால், அவனுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தார் மன்னர். அந்தச் சிறுவன், யானையை நதிக்கு அழைத்துச் சென்றான். அங்கே இருந்த மிகப் பெரிய படகில் யானையை ஏற்றினான். யானை ஏறியதும், தண்ணீரில் ஆழ்ந்தது படகு. உடனே அவன், தண்ணீர் நனைத்த மட்டத்தைப் படகில் குறியீடு செய்தான். பிறகு, யானையைப் படகிலிருந்து இறக்கி, பெரிய பெரிய கற்களைப் படகில் ஏற்றச் சொன்னான். முன்பு குறித்து வைத்திருந்த குறியீடு அளவுக்குப் படகு தண்ணீரில் மூழ்கும் வரை, கற்கள் ஏற்றப்பட்டன. பின்பு, அரசரிடம் அந்தக் கற்களைக் காட்டி, ''அவற்றின் எடைதான் அந்த யானையின் எடை'' என்றான். அனைவரும் ...

அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தற்போதைய நிலையில் ஆசிரியருடன் கூடிய உபரியாக பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் உபரிப் பணியிடங்களில் நியமனம் பெற்று பணிபுரியும் ஆசிரியர்கள் விபரம் கோரி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

 

LIVE, LET LIVE..

ரஷ்யா-உக்ரைன் போரிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்? *என்னுடைய 6 இலக்க சம்பளம்.* *எனது 3/4 BHK வீடு / பங்களா.* *எனது கார், எனது தொழில், எனது 50 ஏக்கர் நிலம் போன்றவை.* *என் நாடு பாதுகாப்பாக இருக்கும் வரை இதெல்லாம் பாதுகாப்பானது... மற்றபடி எல்லாம் அழிந்து போக அதிக நேரம் எடுக்காது!* இன்று, *ரஷ்யா-உக்ரைன் போரில், குறைந்தது 2 மில்லியன்* *உக்ரைனியர்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வேறு நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர்.* அவர்களுக்கு மற்ற நாடுகள் அடைக்கலம் கொடுத்தன... நமக்கு *ஒரு பக்கம் பாகிஸ்தான், மறுபக்கம் வங்கதேசம், கீழே இலங்கை, மேலே சீனா... நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் தஞ்சம் புகுவதற்கு வேறு நாடு இல்லை.* எனவே வாழும் வரை யாரையும் ஏமாற்றாமல், சந்தோஷமாக வாழுங்கள். மற்றவர்களையும் சந்தோஷமாக வாழ விடுங்கள்....

TNPSC - குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு என்று சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில் அது அதிகாரப்பூர்வமானது இல்லை என்றும் அதனை விண்ணப்பதாரர்கள் கருத்தில் கொள்ள வேண்டாம் என்றும் TNPSC அறிவிப்பு

அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம் ... தற்போது வெளியான Group-4 Notification தவறானது.....  TNPSC - குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு என்று சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில் அது அதிகாரப்பூர்வமானது இல்லை என்றும் அதனை விண்ணப்பதாரர்கள் கருத்தில் கொள்ள வேண்டாம் என்றும் TNPSC அறிவிப்பு 

TNTET- 2022- ALL NEWS

TET - விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு கேட்பதற்கு Mobile Numbers & Mail id ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு CLICK HERE #NOTIFICATION- Last date to Apply -13.04.2022 -  CLICK HERE CLICK HERE-LINK -2 #G.O -128-ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் - தமிழ் நாடு பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு!!! CLICK HERE # ONLINE APPLY செய்வதற்கு முன்  தங்களது போட்டோ மற்றும் கையெழுத்து மாதிரி நகல் ஆகியவற்றை 10KP-30KP க்குள் உங்களது மொபைல் மூலமாக எளிமையாக மாற்றிக் கொள்ளும் வழிமுறை CLICK HERE- #Tn Tet Exam Online Apply/ மொபைல் மூலமாக தேர்விற்கு விண்ணப்பிப்பது எப்படி?    CLICK HERE- TNTET- SYLLABUS-  CLICK HERE

எல்லாம் மாறும், உன் மனம் மாறினால்!!

*யாரோ உன்னைப் புறக்கணித்துவிட்டதாக ஏன் கதறுகிறாய் ?* *யார் உன்னைப் புறக்கணித்தால் என்ன?* *இந்தப் பிரபஞ்சம் எப்போதும் உன்னைத் தன் அன்பால், கருணையால் அரவணைத்துக்கொண்டுள்ளது.* *சூரியனோ, சந்திரனோ என்றாவது உன்னைப் புறக்கணித்துத் தன் ஒளியை உனக்குத்தர மறுத்ததுண்டா?* *இயற்கை உன்னை ஒருபோதும் புறக்கணிப்பதில்லை.* *உன் மீது எல்லையில்லா கருணை கொண்டிருக்கும் இயற்கையை மறந்து நீ மனிதர்களின் புறக்கணிப்பு குறித்து கவலை கொள்கிறாய்...* *உண்மையில் புறக்கணிப்பு குறித்துச் சற்று ஆராய்ந்து பாரேன்.* *அது மனதின் வேலை.* *உண்மையில் எத்தனையோ மனிதர்கள் உன்னைப் புறக்கணிப்பதுண்டு. நீயும் எத்தனையோ மனிதர்களைப் புறக்கணிப்பதுண்டு.* *எல்லாப் புறக்கணிப்புகளும் உனக்கு வலியைத் தருவதில்லை.* *சில மனிதர்களை மனம் கூழாங்கற்களாக நினைக்கிறது.* *சில மனிதர்களை மனம் விலையுயர்ந்த வைரம் போல் மிக உயர்வாக நினைக்கிறது.* *அவர்களின் அன்பிற்கும், அங்கீகாரத்திற்குமாய் ஏங்குகிறது.* *கூழாங்கற்களின் புறக்கணிப்பு வலியைத் தருவதில்லை.* *வைரத்தின் புறக்கணிப்பு வலியைத் தருகிறது.* *இது மனதின் "உயர்வு-தாழ்வு மனப்பான்மை" என்ற குணத்த...

A DETAILED VIEW ABOUT TRT SYLLABUS..

Friends click the below link for details.. For whom link is not opening check with the video below.. https://drive.google.com/file/d/1dBVg_xZ0h8npQz3svcB7oeak5AO3xm6B/view?usp=drivesdk அரசுப் பள்ளிகளில் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணித்தெரிவிற்கு பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளுக்கு அனுமதி மற்றும் போட்டித் தேர்விற்கான பாடத்திட்டத்தினை பற்றிய அறிவிக்கை .  TRB Teacher Post - Gazette PDF - Download here

FLASH NEWS..

 For candidates who still have doubt the syllabus published.. Go through the tv channels, its authentic news.. And date has nothing to do with this..