Skip to main content

Posts

Showing posts from December, 2020

TODAY'S THOUGHT..

The need, necessity and urge to achieve something will make you succeed.. ஒரு நாட்டில் ஒரு இளவரசன் இருந்தான். அவன் சிறந்த போர் வீரன்! அவனுடைய வாள் வீச்சிற்கு அந்த நாடே ஈடு கொடுக்க முடியாது. அந்த அளவிற்குச் சிறந்த வீரன்!! அவன் ஒருமுறை அரண்மனையில் வாள் வீசி பயிற்சி செய்துக் கொண்டிருக்கையில், ஒரு எலி குறுக்கே ஓடியது. உடனே அதன் மீது வாளை வீசினான். அந்த எலி லாவகமாக தப்பித்துச் சென்றது. பிறகு மீண்டும் அதனைத் துரத்தி வாளை வீசினான், மீண்டும் தப்பித்து வளைக்குள் புகுந்துகொண்டது. உடனே மனம் உடைந்து போனான்... அப்போது வந்த அரசர் "ஏன் சோகமாக இருக்கிறாய்?" என கேட்க "இந்த நாடே எனது வாள் வீசும் திறமைக்கு ஈடு கொடுக்க முடியாது போது, இந்த சாதாரண எலியை என்னால் கொல்ல முடியவில்லையே!"என விவரித்தான் இளவரசன்... மன்னர் சிரித்துவிட்டு "எலியைக் கொள்ள வாள் பயிற்சி எதற்கு? அரண்மனைப் பூனையைக் கொண்டு வந்தாலே போதுமே!" என்றார்.உடனே அரண்மனை பூனை வரவழைக்கப்பட்டது... அந்தப் பூனையும் எலியை வேட்டையாட முயன்றது. ஆனாலும் அந்த எலி எளிதாக அதனிடம் இருந்து தப்பித்து, தப்பித்துச் சென்றது. மீண்டும் இளவரச...

The Most Awaited counselling for Computer Instructors was announced through online..

  முதுகலை கணினி பயிற்றுநர் தேர்வு பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 28.12.2020 அன்று வெளியிடபட்டது இதனை தொடர்ந்து அவர்களை பணிநியமனம் செய்வதறகான கல்ந்தாய்வு தேதி மற்றும் அதன் தொடர்பான விபரங்களை பள்ளி கல்வி துறை வெளியிட்டுள்ளது  2018-2019ஆம் கல்வியாண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கணினி பயிற்றுநர் நிலை-1 காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் போட்டித்தேர்வு நடத்தப்பட்டு தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்களின் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய கடிதத்தின்படி பெறப்பட்டுள்ளது.  அப்பட்டியலில் உள்ள பணிநாடுநர்களுக்கு பணியிட ஒதுக்கீட்டு ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு EMIS இணையதளம்மூலம்  வரிசை எண். 1 முதல் 400 வரை 02.01.2021 அன்றும்,  வரிசை எண். 401முதல் 742 வரை 03.01.2021 நாட்களில் நடைபெற உள்ளது.

இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்..

 இறைவனுக்கு_ நன்றி_செலுத்திக்கொண்டு_வாழுங்கள் ! *எவ்வளவு பெரிய வீடாக இருந்தாலும் கதவு சிறியது தான்.* *எவ்வளவு பெரிய கதவாக இருந்தாலும் பூட்டு சிறியது தான்.* *எவ்வளவு பெரிய பூட்டாக இருந்தாலும் சாவி சிறியது தான்.* *இவ்வளவு சிறிய சாவியை வைத்து அவ்வளவு பெரிய வீட்டை திறந்து செல்கிறோம்.* *வாழ்க்கையும் இதே மாதிரி தான்.* *நமக்கு வரும் எவ்வளவு பெரிய பிரச்சனையா இருந்தாலும் அதன் தீர்வுக்கு ஒரு சிறிய மாற்றமோ, சிறிய தீர்மானமோ போதும்.*  *அதுவே அத்தனை பிரச்சினையைத் தீர்க்கும் சாவியாக அமைந்து விடும்.* *சாவி இல்லாத பூட்டை மனிதன் உருவாக்குவதில்லை. தீர்வு இல்லாத பிரச்சினைகளை இறைவன் அனுமதிப்பதில்லை.* *எந்த சூழ்நிலையிலும் இறைவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டு இருங்கள்.* *அவன் தான் இறைவன்*  *பூமியில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் உணவு வழங்குகின்றார்.* *உலகில் மனிதனாய்ப் பிறந்திட்ட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கஷ்டங்கள்.* *இறைவன் சிலரை வறுமையால் சோதிக்கின்றார்,* *இன்னும் சிலரை நோய் நொடிகளால் சோதிக்கின்றார்,* *இன்னும் சிலரைக் கடன் தொல்லைகளால் சோதிக்கின்றார்.* *ஆக, ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமா...

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான கவுன்சலிங் இன்று தொடக்கம்

    அரசு மற்றும் நகராட்சி மேனிலைப் பள்ளிகளில் கடந்த 2018-2019ம் ஆண்டில் ஏற்பட்ட வேதியியல் பாடத்துக்கான முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்டு தற்போது அதற்கான தெரிவுப் பட்டியல் பள்ளிக்கல்வித்துறைக்கு வந்துள்ளது. அவர்களுக்கான பணியிட ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்க ஆன்லைன் மூலம் கவுன்சலிங் இன்று  தொடங்க உள்ளது. இதையடுத்து, இறத்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. * மேற்கண்ட பட்டியலில் இடம் பெற்றுள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களின் அசல் சான்றுகளின் உண்மைத் தன்மையை சரிபார்க்க வேண்டும். தகுதியற்றவர்களின் பட்டியல்கள் தயாரித்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனுப்ப வேண்டும். * கவுன்சலிங் மூலம் பணி நியமன ஆணை கள் பெற்றவர்கள் ஜனவரி 4ம் தேதி அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரை சந்தித்து பணியில் சேர வேண்டும். * தமிழ் வழி இட ஒதுக்கீடு, மாற்றுத் திறனாளி இடஒதுக்கீடு, இன சுழற்சி அடிப்படையிலான இட ஒதுக்கீடு, ஆகியவற்றை கவுன்சலிங்கின்போது சரிபார்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறைவன்..

சிறுவனை அழைத்துக்கொண்டு அவனது தந்தை ஒரு காட்டிற்குச் சென்றார். அப்போது மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார். ''மகனே, இப்போது உனக்கு முன் ஒரு பெரிய சவால் உள்ளது. அதில் வெற்றி பெற்றால், நீ பெரிய வீரனாகி விடுவாய். இன்று இரவு முழுவதும் நீ தனியாக இந்தக் காட்டிலேயே இருக்க வேண்டும். உன் கண்கள் கட்டப்படும். ஆனாலும் நீ பயப்படக்கூடாது; வீட்டிற்கு ஓடிவந்துவிடவும் கூடாது'' என்றார். சிறுவன் ஆர்வத்துடன் சவாலை சந்திக்கத் தயாரானான். அவனது கண்களைத் தந்தை துணியால் இறுகக் கட்டினார். பிறகு, தந்தை திரும்பிச் செல்லும் காலடி ஓசை, மெல்ல மெல்ல மறைந்தது. அதுவரை தந்தை அருகில் இருக்கிறார் என்ற தைரியத்தில் இருந்த அவனுக்கு, தூரத்தில் ஆந்தை கத்துவதும் நரி ஊளையிடுவதும் நடுக்கத்தைக் கொடுத்தது. காட்டு விலங்குகள் வந்து தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் அவனது இதயத்துடிப்பு வழக்கத்தைத் தாண்டி எகிறியது. மரங்கள் பேயாட்டம் ஆடின. மழைவேறு தூறத் தொடங்கியது. கடுங்குளிர் ஊசியாய் உடலைத் துளைத்தது. ‘’அய்யோ! இப்படி நிர்க்கதியாய்த் தவிக்க விட்டு தந்தை போய்விட்டாரே! யாராவது வந்து என்னைக் காப்பாற்றுங்களேன்’’ என்று பலமுறை கத்திப் ...

TRB - Direct Recruitment of Computer Instructors Grade I (PG Cadre) - 2019 - Revised Provisional Selection list Published - PDF - DATE : 28-12-2020

  Click here to download pdf

இன்றைய சிந்தனை..

 ஒரு கருவுற்ற மான், தன் மகவை ஈனும் ஒரு தருணம்... அந்த மான், ஒரு அடர்ந்த புல் வெளியைக் கண்டது. அதன் அருகே ஒரு பொங்கிப் பெருக்கெடுத்தோடும் ஆறு. இதுவே கன்றை ஈனுவதற்குச் சரியான இடம் என்று அந்த மான் அங்கு சென்றது. அப்போது, கருமேகங்கள் சூழ்ந்தன. மின்னலும் இடியும் இசையாட்சி செய்ய ஆரம்பித்தன. மான் தன் இடப்பக்கம் பார்த்தது. அங்கே ஒரு வேடன் தன் அம்பை, மானை நோக்கிக் குறி பார்த்து நின்று கொண்டிருந்தான். மானின் வலப்பக்கம் பசியுடன் ஒரு புலி அதை நோக்கி வந்து கொண்டிருந்தது. ஒரு கருவுற்ற மான்... பாவம் என்ன செய்யும்? அதற்கு வலியும் வந்து விட்டது. மேலும் எங்கோ பற்றிய காட்டுத் தீயும் எரிந்து நெருங்கி வர ஆரம்பித்து விட்டது. *என்ன நடக்கும்?...* *மான் பிழைக்குமா?...* *மகவை ஈனுமா?...* *மகவும் பிழைக்குமா?...* *இல்லை... காட்டுத் தீ எல்லாவற்றையும் அழித்து விடுமா?...* *வேடனின் அம்புக்கு மான் இரையாகுமா?...* *புலியின் பசிக்கு உணவாகுமா?...* பற்றி எரியும் கொடும் தீ ஒரு புறமும், பொங்கும் காட்டாறு மறு புறம், பசியோடு புலியும், வில்லுடன் வேடனும் எதிர் எதிர் புறம். *மான் என்ன செய்யும்?...* மான் தன் கவனம் முழுதும், தன்...

NEWS ABOUT PG CHEMISTRY..

 Newspaper cutting about PG - Chemistry..

நீங்கள் நீங்களாகவே இருங்கள்..

யாரோ புறக்கணித்துவிட்டதாக ஏன் கதறுகிறாய் ? யார் உன்னைப் புறக்கணித்தால் என்ன? இந்தப் பிரபஞ்சம் எப்போதும் உன்னைத் தன் அன்பால், கருணையால் அரவணைத்துக்கொண்டுள்ளது. சூரியனோ, சந்திரனோ என்றாவது உன்னைப் புறக்கணித்துத் தன் ஒளியை உனக்குத்தர மறுத்ததுண்டா? இயற்கை உன்னை ஒருபோதும் புறக்கணிப்பதில்லை. உன் மீது எல்லையில்லா கருணை கொண்டிருக்கும் இயற்கையை மறந்து நீ மனிதர்களின் புறக்கணிப்பு குறித்து கவலை கொள்கிறாய்... உண்மையில் புறக்கணிப்பு குறித்துச் சற்று ஆராய்ந்து பாரேன். அது மனதின் வேலை. உண்மையில் எத்தனையோ மனிதர்கள் உன்னைப் புறக்கணிப்பதுண்டு. நீயும் எத்தனையோ மனிதர்களைப் புறக்கணிப்பதுண்டு. எல்லாப் புறக்கணிப்புகளும் உனக்கு வலியைத் தருவதில்லை. சில மனிதர்களை மனம் கூழாங்கற்களாக நினைக்கிறது. சில மனிதர்களை மனம் விலையுயர்ந்த வைரம் போல் மிக உயர்வாக நினைக்கிறது. அவர்களின் அன்பிற்கும், அங்கீகாரத்திற்குமாய் ஏங்குகிறது. கூழாங்கற்களின் புறக்கணிப்பு வலியைத் தருவதில்லை. வைரத்தின் புறக்கணிப்பு வலியைத் தருகிறது. இது மனதின் "உயர்வு-தாழ்வு மனப்பான்மை" என்ற குணத்தினால் விளைவது. அந்த மனப்பான்மையினால் பிறரை உயர்வாகக...

பூஜ்ஜியம் கல்வியாண்டு என்றால்...?

    பூஜ்ஜியம் கல்வியாண்டு குறித்து கல்வித்துறை உயர் அலுவலர் ஒருவர் கூறியதாவது: நடப்பு கல்வியாண்டில், கற்பித்தல் பணி நடக்காததால், கடந்த கல்வியாண்டு முடிவில், எந்த நிலையில் மாணவர் இருந்தாரோ, அதே நிலையில், அடுத்த கல்வியாண்டில் தொடர்வதை, பூஜ்ஜியம் கல்வியாண்டு என்கின்றனர்.  குறிப்பாக, 2019 - 20 கல்வியாண்டில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர், 2021 - 22 கல்வியாண்டில், பிளஸ் 1 வகுப்பு படிக்க நேரிடும். இம்முடிவை, பள்ளி கல்வித்துறை மட்டும் தன்னிச்சையாக செய்ய முடியாது. உயர்கல்வி, பள்ளிக்கல்வி துறைகள் இணைந்து, தொடக்க கல்வி முதல், முதுகலை படிப்பு வரை, அனைத்து மாணவர்களுக்கும் பொருந்தும்படி, பூஜ்ஜியம் கல்வியாண்டாக அறிவிக்க வேண்டும். அதேபோல், மாநிலம் வாரியாக, இம்முடிவு எடுத்தாலும், முறையானதாக இருக்காது. நாடு முழுதும், ஒரே மாதிரி, பூஜ்ஜியம் கல்வியாண்டு அமல்படுத்தினால், யாருக்கும் பாரபட்சம் இருக்காது. இவ்வாறு கூறினார்.

PG, BT Teachers Wanted - 40 Vacancies - Army School - Last Date To Apply 02.01.2021

    இராணுவ பொது பள்ளி (APS) ஆனது தற்போது ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதில்  Teacher பணிகளை நிரப்ப அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள Teacher பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் உதவியுடன் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு விண்ணப்பதாரர்களை கேட்டுக் கொள்கிறோம். நிறுவனம்    -     Army Public School (APS) பணியின் பெயர்    -     Teacher பணியிடங்கள்    -      40 கடைசி தேதி     -     02.01.2021 APS பணியிடங்கள் : APS பள்ளியில் பல்வேறு பாடப்பிரிவுகளில் PGT, TGT மற்றும் PRT, PET ஆசிரியர் பணிகளுக்கு என 40 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இராணுவ பள்ளி கல்வித்தகுதி : சம்பத்தப்பட்ட பாடப்பிரிவில் PG பட்டத்துடன், B.Ed பட்டமும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Psychology பாடப்பிரிவில் Graduate அல்லது Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Computer Science பாடப்பிரிவில் B.Tech அல்லத...

THOUGHT OF THE DAY..

           சில நாய்களுக்கும் ஒரு சிறுத்தைக்கும் இடையில் எந்த விலங்கு வேகமாக ஓடுகிறது என்று ஒரு போட்டி  ஏற்பாடு செய்யப்பட்டது! வானை நோக்கி துப்பாக்கி சுடப்பட்டு போட்டி ஆரம்பமானது. நாய்கள் ஓட ஆரம்பித்தன.. ஆனால் சிறுத்தை தன் கூண்டை விட்டு வெளியே வரவே இல்லை.. போட்டியை பார்க்க கூடியிருந்த அணைத்து மக்களுக்கும் தாள முடியாத ஆச்சரியம். - 'என்ன நடந்தது?' 'ஏன் சிறுத்தை ஓடவில்லை?' என்று போட்டி ஒருங்கிணைப்பாளரிடம் கேட்டார்கள்.. அதற்க்கு அவர் சொன்ன விடை!! “சில சமயங்களில் நீங்கள் சிறந்தவர் என்பதை மற்றவர்களுக்கு நிரூபிப்பது ஒரு அவமானம்”. சிறுத்தை அதன் வேகத்தை வேட்டையாடுவதற்கு மட்டுமே பயன்படுத்தும்.  அதன் வேகத்தையும், வலிமையையும் சில நாய்களுக்கு நிரூபிக்க வேண்டியதில்லை. ஆகவே, நம் வாழ்வில் பல சூழ்நிலைகளில், நாம் சிறந்தவர்கள் என்பதை எல்லோருக்கும் நிரூபிக்க முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை. அப்படி செய்வது நம்மக்குத்தான் கால, பொருள், ஆற்றல் விரயம்.  தேவையில்லாதவர்களிடம், தகுதியற்றவர்களிடம்  நாம் யார் என்பதை நிரூபிக்காமல் இருப்பதே சிறந்த புத்திசாலித்தனம்..

தமிழக பள்ளி மாணவர்களுக்கு. அமைச்சர் புதிய அறிவிப்பு.!!!

    தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொது தேர்வு ரத்து செய்வது பற்றியும் முதல்வரிடம் கலந்தாலோசிப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பள்ளிகள் திறப்பு பற்றி அரசு எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை. அதனால் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. இதனையடுத்து இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த ஐந்து பேருக்கு உருமாறி உள்ள புதிய கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மீண்டும் கொரோனா பரவும் சூழல் உருவாகி உள்ளதால், பள்ளிகள் திறப்பதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால் பொங்கலுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இது பற்றி விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்...

CHRISTMAS SPECIAL THOUGHT..

 அடர்ந்த காடு.. அந்த காட்டுக்குள் எண்ணிலடங்கா மரங்கள் மற்றும் செடி கொடிகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தன. ஒரு நாள் அக்காட்டில் பெரும் சலசலப்பு.. அங்கு வெகு காலமாக வசித்து வந்த மூன்று மரங்களுக்குள் பலத்த வாக்குவாதம். மனிதர்களை போல மரங்களுக்கும் ஆசை தோன்றியதே அதற்கு காரணம்!! அந்த மூன்று மரங்களுக்குள் யாருடைய ஆசை சிறந்தது மிகவும் உயர்ந்தது என்பதே விவாதம்.. ஒவ்வொருவரும் தங்கள் ஆசையை கூற வேண்டும் என்று முடிவாயிற்று. முதல் மரம் சொன்னது, நான் இந்த உலகிலேயே மிகச்சிறந்த பொருட்களை, அதாவது தங்கம், வைரம்,  மற்றும் விலை மதிப்பில்லாத அனைத்து விதமான விலை உயர்ந்த ஆபரணங்களை சேர்த்து வைக்கும் பெட்டியாக மாற வேண்டும் என்றது....... இரண்டாவது மரம் சொன்னது, அற்ப ஆசை உன்னுடையது ஒருபோதும் நிறைவேறாது. எனது ஆசையை கேளுங்கள் என்று கூறத் தொடங்கியது. இந்த உலகில் வீரம், தீரம், போர் திறன், படை பலம், அனைத்தும் பெற்ற மிகவும் சிறந்த மன்னனுக்கு அரியணையாக உருவெடுக்க விருப்பம் என்று கூறி முடித்தது. இப்போது மூன்றாவது மரம் அமைதியாக பேச ஆரம்பித்தது. எனது ஆசை ஒன்று தான், இறைவன் என்னை என்ன காரணத்திற்காக படைத்தாரோ அது முழு...

புத்தகசாலையின் அனைத்து அன்புள்ளங்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்..

 YOU ARE SPECIAL, YOU ARE UNIQUE; MAY YOUR CHRISTMAS BE ALSO AS SPECIAL AND UNIQUE AS YOU ARE!! MERRY CHRISTMAS! CHRISTMAS IS ABOUT SPENDING TIME WITH FAMILY AND FRIENDS.  IT'S ABOUT CREATING HAPPY MEMORIES THAT WILL LAST A LIFETIME. MERRY CHRISTMAS TO ALL MY FRIENDS AND THEIR FAMILIES!! I LOOK FORWARD TO CHRISTMAS EVERY YEAR. IT IS A TIME TO REACH OUT TO THOSE WE HAVE MISSED THROUGH OUT THE YEAR. MAY THIS MESSAGE FIND YOU IN GOOD HEALTH AND SPIRITS.. MAY THE MAGIC OF CHRISTMAS GLADDEN YOUR HEART WITH THE JOYS OF THE SEASON. MAY THE SPIRIT OF CHRISTMAS BLESS YOU WITH GREATER STRENGTH. MAY THE PROMISE OF CHRISTMAS BRING YOU AND YOURS ENDLESS BLESSINGS.. MAY THE JÒY AND PEACE ÒF CHRISTMAS BE WITH YÒU ALL THRÒUGH THE YÈAR. WISHING YÒU A SEASON OF BLESSINGS FRÒM HEAVEN ABÒVÈ.. WARMEST GREETINGS FOR CHRISTMÀS.. 🙋🎉🎅🎈⛪🎈🎅🎉🎄🎄🙋

News regarding PG..

 Friends.. I wanted to share this with everyone who were eagerly waiting for notification of PGTRB2021.. From this picture, we can see that they have asked for vacancies of not only pg assistants but also physical director which means its surely for new pgtrb. When you go through all PG notifications you would be able to see physical director openings also, so there is 100% guarantee that PGTRB 2021 gonna come soon, so prepare well.. And there was a news update yesterday by Mr. Selva Kumar that not to believe in brokers for TET appointment which was published in Thanthi TV, some people reacted like it wss fake news.. News clearly says about TRT too.. Hereby posting its link.. https://youtu.be/fyvWH01P6Js This blog never use to encourage fake news or mere assumptions. This blog is to motivate people who works hard with so many dreams as I was also one among all of you.. All the best to everyone..

தமிழக அரசுப் பள்ளிகளில் கரும்பலகைக்கு மாற்றாக 80 ஆயிரம் ஸ்மார்ட் போர்டுகள்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

    பள்ளிகளில் கரும்பலகைக்கு மாற்றாக 80 ஆயிரம் ஸ்மார்ட் போர்டுகள் அமைக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் கோபி தொகுதிக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 692 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது: 2013 முதல் 52 லட்சத்து 47 ஆயிரம் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்கள் பிளஸ் 2 முடித்தவுடன் வேலைவாய்ப்பினைப் பெறும் வகையில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளில், 177 கேள்விகள் தமிழக அரசின் பாடப்புத்தகங்களில் இருந்து கேட்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் கரும்பலகைக்கு மாற்றாக 80 ஆயிரம் ஸ்மார்ட் போர்டுகள் அமைக்கவும், 742 அடல் டிங்கரிங் லேப் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஜனவரிக்குப் பின் ஐஐடியில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இணையதளம் மூலம் பட்டய கணக்காளர் பயிற்சி அளிக்கப்படுகிறது என்றார்.

இன்றைய சிந்தனை..

 ஒரு அரசன் போட்டி ஒன்றை அறிவித்தான். கோட்டைக் கதவைக் கைகளால் திறந்து தள்ள வேண்டும். வெற்றிபெற்றால் நாட்டின் ஒரு பகுதி தானமாக வழங்கப்படும். தோற்றால் தோற்றவனின் கை வெட்டப்படும். மக்கள் பலவாறாக யோசித்து, பயந்து யாரும் போட்டியில் கலந்து கொள்ளவில்லை. ஒரே ஒரு இளைஞன் மட்டும் போட்டியில் கலந்து கொள்ள முன்வந்தான். 'போட்டியில் தோற்றுவிட்டால் கைகளை வெட்டி விடுவார்கள். உன்னுடைய எதிர்காலம் என்னவாகும்?' என்றார்கள். அவன் சொன்னான், 'ஐயா வென்றால் நானும் ஒரு அரசன், தோற்றால் கைகள் தானே போகும். உயிரில்லையே' என்று கூறிவிட்டு கோட்டைக் கதவை இளைஞன் தள்ளினான். என்ன அதிசயம்! கதவு சட்டென திறந்து கொண்டது. ஏனென்றால் கோட்டைக் கதவுகளில் தாழ்ப்பாள் போடப்படவில்லை. திறந்துதான் இருந்தது. பலபேர் இப்படித்தான் இருக்கிறார்கள். தோற்றுவிடுவோமோ, எதையாவது இழந்து விடுவோமோ என்று எதற்கும் முயற்சிக்காமலேயே விட்டுவிடுகிறார்கள். அனைவரும் அறிந்த 'முயல்-ஆமை' கதையில் முயலின் தோல்விக்கு 'முயலாமையே' காரணம். நம்புங்கள்!!  "முயற்சி திருவினை ஆக்கும்"..

CM CELL REPLY..

 CM cell reply regarding TRT for TET Exam.. Thanks to Radhimani mam..

தமிழகத்தில் மீண்டும் லாக்-டவுன் 28ம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் முதல்வர் !

    தமிழக மருத்துவக் குழுவுடன் வரும் 28-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது அவர் மிக முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார். பிரிட்டனில் மரபியல் மாற்றம் அடைந்த வீரியமுள்ள கொரோனா வைரஸ் தற்போது பரவி வருகிறது. அதனால் அங்கு மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், உலக மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இங்கிலாந்துடனான விமான சேவையை உலக நாடுகள் நிறுத்தியுள்ளன. புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பூடான் அரசு 7 நாள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் பிரிட்டனில் இருந்து டெல்லி வழியாக டென்னை வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் உறுதி செய்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட ராதாகிருஷ்ணன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் பிரிட்டனில் இருந்து வந்த 553 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாவும் அவர்களில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.அவர் ...

அமைதி..

நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம். ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான். இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள். மன்னன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக் கொண்டே வந்தான். அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்து இருந்தார்கள். ஒருவர் அழகான ஏரியை வரைந்திருந்தார். ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமாக இருந்தது. மற்றொருவர் மலர்களை வரைந்திருந்தார். பார்த்தவுடனே பறிக்கத் தூண்டும் வகையில் அம்மலர்கள் தத்ரூபமாக இருந்தது. இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றியவாறு ஓவியத்தில் பிரதிபலித்திருந்தனர். ஒரு ஓவியத்தில் ஒரு மலையின் மீதிருந்து ஆக்ரோஷமாக கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்தது. அதுமட்டுமா இடியுடன் மழை வேறு பொழிந்து கொண்டிருந்தது. இது அமைதியே அல்ல. ...

பொங்கலுக்கு பின் பள்ளிகள் திறப்பு: அதிகாரிகள் குழு ஆலோசனை

    கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்துள்ளதால், பொங்கலுக்கு பின், பள்ளிகளை முழுவதுமாக திறப்பது குறித்து, ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.கொரோனா தொற்று பரவலால், தமிழகத்தில், மார்ச்சில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, பள்ளிகள், கல்லுாரிகள் மூடப்பட்டன. இதையடுத்து, ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டதால், தனியார் பயிற்சி மையங்கள், பாலிடெக்னிக்குகள்திறக்கப்பட்டன.  அதேபோல, டிச., 2 முதல், கல்லுாரிகளில் முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கும், டிச., 7 முதல் இளநிலை, முதுநிலை உள்ளிட்ட அனைத்து இறுதியாண்டு மாணவர்களுக்கும், நேரடி வகுப்புகள் துவங்கின. புத்தாண்டுஇந்நிலையில், பள்ளிகளையும் திறப்பது குறித்து, கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ள னர். தற்போது, டிசம்பர்மாதம் என்பதால், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினம் வருகிறது. அடுத்த இரண்டு வாரங்களில் பொங்கல் பண்டிகையும் வருவதால், அதன்பின் பள்ளிகளை திறக்கலாம் என, அரசு தரப்பிற்குஅதிகாரிகள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, தமிழக பள்ளிகல்வி முதன்மைசெயலர் தீரஜ்குமார் தலைமையில், பள்ளி கல்வித்துறை இயக்குனர்கள் கண்ணப்பன், பழனிச்சாமி, கருப்பசாமி உள்ளிட்டோர் ...

படித்ததில் பிடித்தது..

 கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான். ”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன தெரியும்? நீ  நினைத்தபோது மழையை அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது. பேசாமல், இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்!” என்றான். கடவுள் உடனே,  “ அப்படியா? சரி.  இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்” என்று வரம் அருளிவிட்டுப் போய்விட்டார். விவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. அடுத்த விதைப்பிற்கான பருவம் வந்தது. ”மழையே பெய்” என்றான். பெய்தது. நிறுத்தச் சொன்னபோது,  மழை நின்றது. ஈரமான நிலத்தை உழுதான். தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து,  விதையை தூவினான். மழை, வெயில், காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன. பயிர் பச்சைப்பசேல் என வளர்ந்தது. வயல்வெளியைப் பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருந்தது. அறுவடைக் காலமும் வந்தது. விவசாயி ஒரு கதிரை அறுத்தான். அதனை உதிர்த்து, திறந்து பார்த்தான். அதிர்ந்தான்.. உள்ளே தானியத்தைக் காணவில்லை, மிகச் சிறிய பதர்தான் இருந்தது. அடுத்தது, அதற்கடுத்தது என்று ...

2018ம் ஆண்டு TET தேர்வே நடக்கவில்லை - ஆசிரியர்கள் நியமனம் குறித்து அமைச்சர் அறிவிப்புக்கு தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் கண்டனம்.

  2018 ம் ஆண்டு தகுதி தேர்வே நடத்தாமல் , ஆசிரியர் நியமனம் நடைபெறும் என கல்வி அமைச்சர் அறிவித்துள்ளது கேலிக் கூத்தாக உள்ளது என தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கம் கண்டனம் தெரி வித்துள்ளது.  கல்வி அமைச்சர் செங்கோட்டையன் நேற்று முன்தினம் கோபிச் செட்டிபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் , 2018 ல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு ஓரிரு நாளில் பணி நியமனம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வழக்கம் போல் வெளியிட்டார். அமைச்சரின் அறிவிப்பை கேட்ட ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். காரணம் கடந்த 2018 ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வோ அல்லது முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வோ தமிழகத்தில் நடைபெறவில்லை. அமைச்சரின் அறிவிப்பு அர்த்தமற்று உள்ளதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து , 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்க மாநில ஒருங் கிணைப்பாளர் இளங்கோவன் கூறுகையில் , 2013 ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று ஏறக்குறைய 80 ஆயிரம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த ஏழாண்டுகளாக அடிப்படை வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறோம் . இரண்டாண்டுகளுக்கு முன் பள...

TODAY'S THOUGHT..

 *நகைச்சுவை நடிகர் நாகேஷ்* அவர்களின், *தன்னம்பிக்கை மிக்க அருமையான வார்த்தைகள்...* வானொலிப் பேட்டியொன்றில் நாகேஷ்.. *வானொலி:* நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்? *நாகேஷ்:* நான் கவலையே படமாட்டேன் சார். ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள். கட்டடம் முடிந்து, *கிரஹப் பிரவேசத்தன்று* கட்டடம் கட்டுவதற்கு எது முக்கிய காரணமாக இருந்ததோ, அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால், எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு *கிரஹகப் பிரவேசம்* நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள். அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும். இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா? அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். ஆ...

முழு ஆண்டு தேர்வு நடக்குமா நடக்காதா - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

   

குட்டி சாக்பீஸ்..

ஒரு ஆசிரியையின் கனவு... "பசங்களா..  ஒரு சின்ன கற்பனை.. அடுத்த ஜென்மத்துல மறுபடியும் பிறக்க ஒரு வாய்ப்பு கிடைச்சா நீங்கள்லாம் என்னவா பிறக்க விரும்புவிங்க..? வரிசையா சொல்லுங்க பாப்போம்..!" "மிஸ்.. நான் வந்து ரோஸ்...!" "வாவ்... ஆனா ஏன்..?" "அப்போ தான் வாசனையா இருப்பேன்..!" "ஓ... குட் அடுத்து" "மிஸ்... நான் மயில்..!" "ஹாஹா.. ஏன்..?" "அதுக்கு மழை மேகம் புடிக்கும்ல.. எனக்கும் புடிக்கும்.. அதனால..!" "செம... அடுத்து..?" "மிஸ்... நான் பட்டாம்பூச்சி ஏன்னா.. அதுக்கு றெக்க இருக்கும்...!" "செம... செம... அடுத்து" "மிஸ்... நான் மான் ஏன்னா.. அது துள்ளி துள்ளி ஓடும்..!" "மிஸ்...  நான் ட்ரீ.. ஏன்னா.. அதுல தான் நெறைய பறவைங்க வந்து தங்கும்..!" "ஹே.. வாவ்.. அடுத்து" "மிஸ்... நான் பாரதி.. பெரிய மீசை வெச்சிப்பேன்.." "ஹாஹா.. அடுத்து" "மிஸ்... நான் முயல்.. ஏன்னா..  அது உங்களுக்கு பிடிக்கும்ல.." "ம்... அடுத்து" "எங்களையே கேட்டுட்...

Flash News: TET Weightage Method Canceled - GO Published!

TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு Am publishing this post again for the sake of GO 149..

புதிய தொடக்கப் பள்ளி மற்றும் தரம் உயர்த்தப்பட வேண்டிய பள்ளிகள் கருத்துருக்களை அனுப்ப உத்தரவு.

    தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலைகளில் உள்ள பள்ளி வசதி இல்லாத அனைத்து குடியிருப்புகளிலும் பள்ளி வரைபடப் பயிற்சி மேற்கொண்டு , தமிழ்நாடு இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை விதிகள் 2011 ன்படி , தேவையின் அடிப்படையில் புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட வேண்டிய குடியிருப்புகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டிய தொடக்கப் பள்ளிகளை கண்டறிந்து , சார்ந்த கருத்துருக்களை GIS வரைபடத்துடன் 21.12.2020 க்குள் அனுப்புமாறு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககத்தால் கோரப்பட்டுள்ளது. எனவே , ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் எதிர்வரும் ஆண்டு வரைவுத் திட்டம் 2021 - 22 ல் சமர்ப்பிக்க ஏதுவாக புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட வேண்டிய குடியிருப்புகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டிய தொடக்கப் பள்ளிகள் சார்ந்த கருத்துருக்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து , கீழ்காணும் விவரங்களுடன் முழுவடிவில் அனுப்பப்பட வேண்டும்.   புதிய தொடக்கப் பள்ளி மற்றும் தரம் உயர்த்தப்பட வேண்டிய தொடக்கப் பள்ளி அமைந்துள்ள குடியிருப்பு பகுதி சார்ந்த விவரங்களை புவியியல் தகவல் மு...