பூஜ்ஜியம் கல்வியாண்டு குறித்து கல்வித்துறை உயர் அலுவலர் ஒருவர் கூறியதாவது:
நடப்பு கல்வியாண்டில், கற்பித்தல் பணி நடக்காததால், கடந்த கல்வியாண்டு முடிவில், எந்த நிலையில் மாணவர் இருந்தாரோ, அதே நிலையில், அடுத்த கல்வியாண்டில் தொடர்வதை, பூஜ்ஜியம் கல்வியாண்டு என்கின்றனர்.
குறிப்பாக, 2019 - 20 கல்வியாண்டில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர், 2021 - 22 கல்வியாண்டில், பிளஸ் 1 வகுப்பு படிக்க நேரிடும். இம்முடிவை, பள்ளி கல்வித்துறை மட்டும் தன்னிச்சையாக செய்ய முடியாது. உயர்கல்வி, பள்ளிக்கல்வி துறைகள் இணைந்து, தொடக்க கல்வி முதல், முதுகலை படிப்பு வரை, அனைத்து மாணவர்களுக்கும் பொருந்தும்படி, பூஜ்ஜியம் கல்வியாண்டாக அறிவிக்க வேண்டும். அதேபோல், மாநிலம் வாரியாக, இம்முடிவு எடுத்தாலும், முறையானதாக இருக்காது. நாடு முழுதும், ஒரே மாதிரி, பூஜ்ஜியம் கல்வியாண்டு அமல்படுத்தினால், யாருக்கும் பாரபட்சம் இருக்காது. இவ்வாறு கூறினார்.
- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment