*ஓஷோவும்_அகப்பேய்_சித்தரும்* தூராதி தூரமடி அகப்பேய் தூரமும் இல்லையடி *அகப்பேய்_சித்தர்* ஒரு எளிய விவசாயி, அவன் வாழ்நாளில் முதல் முறையாக ஒரு மலைக்குச் சென்று கொண்டிருந்தான். அவனுடைய வயலிலிருந்து அந்த மலையின் பசுமை நிறைந்த உச்சிகள் தெரிவதால், அவனுள் அடிக்கடி அவற்றை அருகில் சென்று பார்க்க வேண்டும் என்று எண்ணம் ஏற்பட்டது. ஆனால் ஏதோ காரணங்களினால் அவனது பயணம் ஒத்திப் போடப்பட்டு வந்ததால் அவன் அங்கு செல்ல முடியவில்லை. சென்ற முறை அவனிடம் ஒரு விளக்கு இல்லை என்பதற்காக அவன் மலைக்குச் செல்வது தடைப்பட்டு விட்டது. ஏனெனில் இரவே மலையைச் சென்றடைவது மிகவும் அவசியம். சூரிய உதயத்திற்குப் பிறகு அந்த கடினமான மலை மீது ஏறுவது சிரமம். இப்போது அவன் தன்னுடன் ஒரு விளக்கையும் எடுத்து வந்திருந்தான். மேலும் மலையில் ஏறவேண்டும் என்ற அவாவினால் அவ...