Skip to main content

ஒரு தோழியின் டைரியிலிருந்து..

வீடு_முழுவதும்_தோரணங்கள்,
கல்யாண அலங்காரங்கள்,
வீட்டில் முதல் திருமணம்!
மகளின் திருமணம்!
திருமணமாகி இரண்டு நாட்கள் முடிந்துவிட்டது!

என்னைத்தவிர எல்லோருக்கும் சந்தோஷம்!
எப்படி பிரிந்து இருக்கப்போகிறேன்
என்பது தான் என் கஷ்டமும் கவலையும்!

இவ்வளவு பெரிய வீட்டை கட்ட
முதல் செங்கல் எடுத்து கொடுத்தது அவள்தான்!
அவள் பிஞ்சு கைகளை
செங்கல் சிராய்த்து விடும் என்று
கைமுழுவதும் துணியால் சுற்றி
எடுத்து கொடுக்க சொன்னேன்!

இன்று அவளை அனுப்புவதற்காக
வாங்கிய விலையுயர்ந்த காரும்
ரோஜாக்களால் சுற்றப்பட்டு இருக்கிறது!
விடிய விடிய நானே தான் விரும்பி
சுற்றி அலங்கரித்தேன்!
இப்போது வழியனுப்ப முடியாமல்
ரூமுக்குள் அடைந்து உட்கார்ந்து இருக்கிறேன்!

இதழ்களும் இமைகளும் மட்டுமே
வெடிக்கும் அழுகைக்கு வேலி போட்டு
காப்பாற்றிக்கொண்டு இருக்கின்றன!
கிளம்ப தயாராகி விட்டார்கள்,
யாரும் என்னை கூப்பிட வேண்டாம் என்று
சொல்லிவிட்டேன்!
எல்லோருக்கும் என்னை புரியும்,
அதனால் கட்டாய படுத்தமாட்டார்கள்!

கிளம்புவதற்கு முன் என் குழந்தை வந்தது!
அவள் குழந்தையாக இருக்கும்போது
அம்மா திட்டிவிட்டாள் என்று
இதேபோல் தான் வந்து ரூமுக்குள் வந்து
உட்கார்ந்து கொள்வாள் நான் வரும்வரை!
பார்த்த உடன் அவ்வளவு துக்கம்
எங்கிருந்து வருமோ தெரியாது,
அப்படி பொங்கிக்கொண்டு வரும் அழுகை!
காரணம் பெரிதாக இருக்காது,
இவள் சாக்லேட் கேட்டிருப்பாள்,
அவள் கொடுத்திருக்க மாட்டாள் அவ்வளவுதான்!
அதற்கு அவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டம்!
அதற்கு கொஞ்சமும் குறைவில்லாத
ஆர்ப்பாட்டமாக தெரியும் என்னுடைய
இந்த ஆர்பாட்டமும்!

"வெறும் பன்னெண்டு கிலோமீட்டர் தானேப்பா,
எப்போ வேணா ஓடி வந்துடுவேன்,
உங்களுக்கு கூட ஆபீஸ் போற வழிதானே,
எப்போ வேணா வந்து பாத்துட்டு போலாம்,
feel பண்ணாதீங்கப்பா,
அப்புறம் நான் அழ ஆரம்பிச்சேன்னா
எவ்ளோ கஷ்டம்னு உங்களுக்கே தெரியும்,
வந்து tata சொல்லுங்க என்று
கையை பிடித்து  அழைக்க,
எந்த மறுப்பும் சொல்லாமல் எழுந்து நடந்தேன்!
காரில் ஏறினாள்,
கார் கிளம்பி தெருவை கடக்கும் வரை
கையசைத்து கொண்டே இருந்தேன்.

யாரோடும் பேசாமல்
படியேறி அவளுக்கென்று
வடிவமைத்த அறைக்குள் நுழைந்தேன்!
அறை முழுவதும் அவளுக்காக
வாங்கி கொடுத்த உடைகள்.
அவள் துப்பட்டாக்களை எடுத்து
போர்த்திக்கொண்டு அழவேண்டும் போல்
தோன்றியது.
பீரோவைத்  திறந்தேன்,
உள்ளே ஒரு கடிதம்!

"அப்பா, என்னை வழியனுப்பியதும்
இங்குதான் வருவீர்கள் என்று தெரியும்,
என் துப்பட்டாவை தேடுவீர்கள் என்றும் தெரியும்!
கொஞ்ச நாள் என்னுடைய அறையில் தான்
தூங்குவீர்கள் என்று தெரியும்,
உங்களுடைய மாத்திரைகள்,
டைரி, புத்தகங்கள் எல்லாவற்றையும்
என்னுடைய அறையிலேயே வைத்துவிட்டேன்!
என்னை நினைச்சி கவலைப்பட கூடாது.

இவர் நீங்க பாத்த மாப்பிள்ளை,
கண்டிப்பா என்னை  ரொம்ப நல்லா பாத்துக்குவாரு, உங்கள விட என் life ல யாருக்குப்பா அக்கறை இருக்க முடியும்!
அதுனால கண்டிப்பா சந்தோஷமா தான்
இருப்பேன்!

ஒரு நல்ல அப்பாவாக  எல்லாத்தையும்
எனக்கு கொடுத்துட்டீங்க,
ஒரு பெஸ்ட் மகளா எப்பவுமே
உங்க பேரை காப்பாத்துவேன்!

என் friends எல்லாரும் லவ் marriage.
நா எதுக்கு லவ் பண்ணணும்?
உங்களுக்கு தெரியாதா? என் life எப்படி இருக்கனும்னு?

எனக்கு வந்த எல்லா proposal greetings ம்
மூணாவது கப்போர்ட்ல இருக்கு,
போரடிக்கும்போது படிங்க!
Engagement க்கு அப்புறம் கூட
நாலு பேரு propose பண்ணாங்க,
எங்க அப்பாவை பாத்து பேசுங்கன்னு
சொல்லிட்டேன்,
வந்து பாத்தா நல்ல பதிலா
சொல்லி அனுப்புங்கப்பா..

அப்புறம் இன்னொரு விஷயம்,
உங்களோட light orange shirt,
மருதாணி பூசுன fullent  white shirt,
எனக்கு புடிச்ச Sky blue shirt,
உங்களோட Hero pen,
இதெல்லாம் காணோம்னு தேடாதீங்க,
எல்லாத்தையும் நான் எடுத்துட்டு வந்துட்டேன்,
உங்களை பிரியும் வலி எனக்கு மட்டும் இருக்காதா?
Love you more than
anything in this world அப்பா😘😘😘 "
இப்படிக்கு,
ஆயிரம் முத்தங்களுடனும்  அன்பு கண்ணீருடனும் உங்களின் அன்பு மகள்...


Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. வணக்கம் தல

    ReplyDelete
  3. Mam monday trb office poitu poratam pana porankalam.

    ReplyDelete
  4. என்ன போராட்டம்

    ReplyDelete
  5. Porattam vetri Aadaiya vazhthukal. But solli iruntha nangalum vanthu irupom

    ReplyDelete
  6. அப்படியாவது முடிவு வரட்டும்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சா...

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர். குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார். இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவர...

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..