Skip to main content

Tet - ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடு - தகுதித் தேர்வு எழுதியவர்கள் குற்றச்சாட்டு!

  • தமிழ்நாடு அரசுப் பணி யாளர்
தேர்வாணையத் தில் நடந்த முறைகேடுக ளையடுத்து ஆசிரியர் தகுதித் தேர்விலும் பெரிய அளவில் முறைகேடு நடந் துள்ளதாக பட்டதாரிகள் குற்றம் சாட்டுகின்றனர் .

இது குறித்து , 2013ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நலச்சங்கத் தின் மாநில ஒருங்கிணைப் பாளர் இளங்கோவன் , மாநில தலைவர் வடிவேல் சுந்தர் ஆகியோர் கூறியதா வது :

கடந்த 2012ம் ஆண்டு முதன் முதலாக தமிழகத் தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி பணி நியம னம் செய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்தது . அதில் தாள்ஒன்று இடை நிலை ஆசிரியர்களுக்கும் , தாள் இரண்டு பட்டதாரி ஆசிரியர்களுக்கும் நடத் தப்படும் என்று தெரிவிக் கப்பட்டது . அந்த தேர்வை தமிழகம் முழுவதும் 7 லட்சத்து 14 ஆயிரத்து 526 பேர் எழுதினர் . ஆனால் அவர்களில் வெறும் 2448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர் . அதனால் தேர் வில் மதிப்பெண் தளர்வு வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர் . அதனால் மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்தது . இரண்டாவது முறை நடந்ததேர்வில் 19 ஆயிரத்து 261 பேர் தேர்ச்சி பெற்றனர் . ஆனால் அவர்களின் மதிப் பெண்கள் குறித்த விவரங் களை இதுவரை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட வில்லை . ஆனால் இதற்கு முன்னதாக நடந்த தேர் வில் தேர்ச்சி பெற்ற 2448 பேரின் தேர்ச்சி பட்டியல் மட்டுமே வெளியிடப் பட்டது . அதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளது .

குறிப்பாக முதற் கட்ட தேர் வின் போது காலையில் நடந்த இடைநிலை ஆசிரியர்க ளுக்கான தேர்வில் வெறும் 10 , 12 மதிப்பெண்கள் பெற்ற ஆசிரியர்கள் , மதியம் நடந்த இரண்டாம் தாள் தேர்வில் மட்டும் 150க்கு 113 மதிப்பெண் பெற்றுள் ளனர் . இது எப்படி நடந் தது . காலை தேர்வில் 16 மதிப்பெண் பெற்ற ஒருவர் மதியம் நடந்த தேர்வில் 114 மதிப்பெண் பெற்றுள்ளார் . இந்த இரண்டு நபர்கள் ஆசிரியர் தேர்வு எழுதியது ஒரே தேர்வு மையம் , ஒரே தேர்வு அறை என்பதை மறுக்கமுடியாது . அதில் முதலிடம் பிடித்த தேர்வர் அந்த தேர்வு கடினமாக இருந்ததாக பேட்டி அளித் தார் . ஆனால் அவர் 150க்கு 142 மதிப்பெண் பெற்றுள் ளார் . அவர்களுக்கு ஆசி ரியர் பணி வழங்கப்பட் டுள்ளது . அதற்கு பிறகு நடந்த ஆசிரியர் தேர்வுகளில் 3 மணி நேரம் கால அளவு நீட்டிக்கப்பட்டாலும் , 142 மதிப்பெண் பெற்றவ ரைப் போல இது வரை யாராலும் அந்த மதிப் பெண்ணை பெற முடிய வில்லை என்பது தான் வேடிக்கை . அரசுப்பணிக ளுக்கான விதிமுறைகளை மீறி ஆசிரியர் தேர்வு வாரி யம் செயல்பட்டுள்ளதாக தெரிகிறது .

இந்நிலையில் , 2013ம் ஆண்டு நடந்த ஆசி ரியர் தகுதித் தேர்வில் 70 ஆயிரம் பேர் தேர்ச்சிபெற் றும் இது வரை எங்களுக்கு பணி நியமனம் வழங்க வில்லை . ஆனால் முன்பு நடந்த தேர்வுகளில் முறை கேடாக செயல்பட்டு தகு தியற்ற நிலையில் உள்ளே நுழைந்து பணி நியமனம் பெற்று எங்கள் வாழ்வாதா ரத்தை கேள்விக்குறியாக்கி யுள்ளனர் . இது போல ஊழல் செய்து உள்ளே நுழைந்த வர்களை அடையாளம் காட்டியும் ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை . இதையடுத்து கடந்த 2018ம் ஆண்டில் நடந்த தேர்விலும் முறை கேடு நடந்துள்ளது . இது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதி மன்ற கிளையில் வழக்கு தொடரப்பட் டது . அதன்பேரில் பதில் அளிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறைக்கும் , ஆசிரியர் தேர்வு வாரியத் துக்கும் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது . ஆனால் அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவில்லை . தற்போது பல் வேறு தேர்வுகளில் நடந்த முறை கேடுகள் குறித்து செய்திகள் வெளியாகி பரபரப்பு ஏற் பட்டுள்ள நிலையில் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆசிரி யர் தேர்வு வாரியம் தெரி வித்துள்ளது .

அதனால் நீதிமன்றம் தானாக முன் வந்து போட்டித் தேர்வு சார்ந்த அனைத்து முறை கேடுகளையும் விசாரிக்க வேண்டும் . சிபிஐ விசார ணையும் வேண்டும் . அப் படி விசாரித்தால் எங்களி டம் உள்ள ஆதாரங்களை கொடுப்போம் .

Comments

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள். கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கள...