* சருமத்தை மிருதுவாக்கி பொலிவடைய வைக்கிறது பச்சை திராட்சை. தினமும் 4 பச்சை திராட்சையை கைகளால் கசக்கி சாறு எடுத்து, முகத்தில் தடவுங்கள். 10 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிருதுவாகும்.
* எண்ணெய்ப் பசை சருமமாக இருந்தால், அரை டீஸ்பூன் பச்சை திராட்சைச் சாறுடன் அரை டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்யுங்கள். இதனால், எண்ணெய்ப் பசை நீங்கி, பளிங்குபோல் முகம் பிரகாசிக்கும்.
* பருத்தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், பருக்கள் வராமலும் தடுக்கிறது பச்சை திராட்சைச் சாறு. இரண்டு புதினா இலை சாறு, அரை டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இது பேஸ்ட்டாகும் சிறிது திராட்சைச்சாறு, எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசுங்கள். 10 நிமிடம் கழித்து கழுவினால், முகத்தில் இருக்கும் பருக்கள் மறையும். மேற்கொண்டு பருக்கள் வராமல் தடுக்கும்.
Comments
Post a Comment