அமெரிக்க ஜனாதிபதி டிரம்பையும், அவரது மனைவி மெலனியாவையும் சுமந்து வரப்போகிற அதிநவீன விமானம். இது பறக்கும் வெள்ளை மாளிகை. யுனைட்டெட் ஸ்டேட்ஸ் ஆப் அமெரிக்கா என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். அமெரிக்க தேசியக்கொடியும், ஜனாதிபதியின் முத்திரையும் இடம் பெற்றிருக்கும்.
1¾ கிரவுண்ட் விமானம்
இந்த விமானம் 3 அடுக்குகளை கொண்ட பிரமாண்ட விமானம். இதன் மொத்த பரப்பளவு 4 ஆயிரம் சதுர அடி. கிட்டத்தட்ட 1¾ கிரவுண்ட்.
டிரம்புக்கும், அவரது மனைவிக்கும் சொகுசான பிரத்யேக சூட்... அதிலும் எக்சிகியூடிவ் சூட்...
டிரம்பின் மூத்த ஆலோசகர்கள், அவரது பாதுகாப்பை கவனிக்கும் ரகசிய சேவை அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், பிற விருந்தினர்கள் என அனைவருக்கும் அசத்தலான தனித்தனி அறைகள்...
100 பேருக்கு அறுசுவை உணவு
ஒரே நேரத்தில் 100 பேருக்கு அறுசுவை உணவுகளை சமைத்து சுடச்சுட பரிமாற 2 சமையலறைகள்... ஒரு மருத்துவ அறை... எப்போதும் ஒரு டாக்டர்... மருத்துவ அறையை ஆபரேஷன் தியேட்டராக மாற்றிக்கொள்ளவும் முடியும்.
இந்த விமானத்தில் மேம்படுத்தப்பட்ட அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அமெரிக்காவின் மீது ஒரு தாக்குதல் நடைபெற்றால், என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை சொல்லும் கட்டளை மையமாக இந்த விமானமே செயல்படும் வசதிகள் இருக்கிறது.
அதிநவீன ரேடார்கள்
அதிநவீன ரேடார்களும் பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்த ரேடார்களின் சிறப்புத்தன்மை, ஒரு வேளை ஏர்போர்ஸ் ஒன் விமானத்தை தாக்குவதற்கு எதிரிகள் குறிவைத்து ஏவுகணை வீசினால், அந்த ஏவுகணையை குழப்பம் அடைய வைத்து திசை திருப்பி விடும்.
நடுவானில் பறந்து கொண்டிருக்கிறபோதே எரிபொருள் நிரப்பிக்கொள்ள முடியும். எனவே இந்த விமானம் எவ்வளவு தொலைவுக்கும் வரம்பின்றி பறக்க முடியும். தொலைதூர இடங்களில் ஜனாதிபதிக்கு தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கு பல சரக்கு விமானங்கள், ஏர்போர்ஸ் ஒன் விமானத்துக்கு முன்பாக எப்போதும் பறந்து கொண்டிருக்கும்.
இந்த விமானத்தின் இயக்கம், பராமரிப்புக்கு என்று அதிநவீன தொழில்நுட்ப வல்லுனர்களைக் கொண்ட பிரசிடென்ஷியல் ஏர்லிப்ட் குரூப் இருக்கிறது. இது வெள்ளை மாளிகை ராணுவ அலுவலத்தின் ஒரு அங்கம்.
தி பீஸ்ட் கார்
விமானத்தின் சிறப்புகள் இப்படி நீண்டுகொண்டிருக்க, டிரம்ப் எங்கு சென்றாலும் அவரது சாலை வழி பயணத்துக்கு பயன்படுத்தப்படுகிற சொகுசு கார் கேடிலாக் லிமவுசின் கார் ஆகும். இந்த காரின் செல்லப்பெயர் ‘தி பீஸ்ட்’.
இதைப் பற்றி சொல்லாமல் இருக்க முடியுமா? இந்த கார் உச்சக்கட்ட பாதுகாப்பு அம்சங்களை கொண்டதாகும். இதன் விலை அதிகமில்லை. 1.5 மில்லியன் டாலர் (சுமார் ரூ.10½ கோடி மட்டும்தான்). இது குண்டு துளைக்காத கார் ஆகும்.
இந்தக் காரின் எடை 20 ஆயிரம் பவுண்ட் (9 டன்களுக்கும் அதிகம்).
இந்த கார் ஜன்னல்கள் கண்ணாடி மற்றும் பாலிகார்போனேட்டுகளால் ஆன 5 அடுக்குகளை கொண்டதாகும். டிரைவர் அருகேயுள்ள ஜன்னலை மட்டும் 3 அங்குல அளவுக்கு திறக்க முடியும்.
காருக்குள் இருந்தே தாக்குதல் நடத்தும் துப்பாக்கிகள், கண்ணீர்ப்புகை குண்டு வீசும் சாதனங்கள் இருக்கும்.
ஜனாதிபதிக்கு காயம் ஏற்பட்டு, ரத்த இழப்பு ஏற்பட்டால் செலுத்துவதற்காக டிரம்ப் ரத்த பிரிவை சேர்ந்த ரத்த பாட்டில்கள் ஒரு ஃபிரிஜ் நிறைய இருக்கும்.
டிரைவர் கேபினில் அனைத்து அதிநவீன தொலை தொடர்பு சாதனங்களும் பொருத்தப்பட்டிருக்கும்.
ராணுவ பயிற்சி பெற்ற டிரைவர்
இந்த காரின் வெளிப்புறமானது, ராணுவ வாகனங்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய உறுதியான உருக்கு, டைட்டேனியம், அலுமினியம் மற்றும் செராமிக்ஸ் ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
காரின் முன் பாகத்தில் கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசும் கருவி, இரவு நேரங்களில் புகைப்படங்கள் எடுக்கும் கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த கார் டிரைவர், அமெரிக்க ஜனாதிபதிக்கு பாதுகாப்பு அளிக்கும் ரகசிய சேவை படையின் பயிற்சி பெற்றவர். போர்க்கால நடவடிக்கைகள் இவருக்கு அத்துப்படியாக இருக்கும்.
செயற்கை கோள் தொலைபேசி வசதி இணைக்கப்பட்டுள்ளது. இந்த தொலைபேசியில் துணை ஜனாதிபதி மைக் பென்சுடனோ, அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகனுடனோ எந்த நிமிடமும் தொடர்பு கொண்டு பேச முடியும்.
டிரம்புடன் 4 பேர் வசதியாக அமர்கிற வகையில் இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. டிரம்ப், டிரைவர் இடையே ஒரு கண்ணாடி இருக்கும். இதை ஜனாதிபதி டிரம்ப் மட்டுமே திறக்க முடியும்.
நெருக்கடியான காலத்தில் பதற்றமான சூழலில் அழுத்துவதற்காக அவசர கால பொத்தான் (பேனிக் பட்டன்) உள்ளது.
ஆக்சிஜன் சிலிண்டரும் காரில் இருக்கிறது.
காரில் உள்ள ஆயில் டாங்க் மீது குண்டு விழுந்தால் கூட வெடிக்காத அளவுக்கு உறுதியான பாதுகாப்பு கவசங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
வெள்ளை மாளிகையுடன்
தொடர்பு கொள்ளலாம்
இந்த கார் உருக்கு ரிம் கொண்டதாகும். எனவே டயர் பஞ்சர் ஆகாது. டயர் வெடித்தாலும் விபத்து நேராது. தப்பிச்செல்லும் லாவகம் உள்ளது.
காரில் இருந்தவாறு வெள்ளை மாளிகையுடன் எந்த நேரமும் தொடர்பு கொள்ள முடியும்.
டிரம்ப் காருடன் வருகிற பாதுகாப்பு வாகனங்களில் சென்சார் பொருத்தபட்டுள்ளது. இவை அணு, ரசாயன, உயிரி ஆயுத தாக்குதல்களை கண்டுபிடித்து விடக்கூடிய ஆற்றல் வாய்ந்ததாகும்.
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteGood morning Mam
ReplyDeleteவணக்கம் தல
ReplyDeleteபோராட்டம் நல்ல நடக்கும்
ReplyDeletePorattam Enna Achi mam
ReplyDeleteதல போராட்டம் என்ன ஆச்சு
ReplyDeleteBecause of trump's visit they didn't conducted it seems..
ReplyDeletePorattam nadakatha mam
ReplyDeleteபோராட்டம் போச்சா
ReplyDelete