Skip to main content

Posts

Showing posts from May, 2021

உனது பார்வையை நீ சரி செய்..

முல்லாவுக்கு ஒரு பால்கன் பறவை கிடைத்தது. அது புறாவைப் போல இருக்கும். முல்லா இதற்கு முன் இப்பறவையைப் பார்த்ததில்லை. அவருக்கு இப்பறவையின் அகண்ட தாடையும், வளைந்த அலகும் அதிக அளவில் இருக்கும் சிறகும் ரசிக்கத் தக்கதாக இல்லை. "என்ன இருந்தாலும் புறாவின் அழகு வருமா? ஏ பறவையே,உன்னையும் புறா போல அழகாக ஆக்குகிறேன்,” என்று கூறிக்கொண்டே, அதிகமாகவுள்ள இறகுகளைப் பிய்த்தெடுத்தார். வளைந்த அலகை ஒரு சிறு உளி கொண்டு செதுக்கி வளைவைக் குறைத்தார். ஒரு கத்திரியை எடுத்து அதன் அகண்ட தடையின் அளவைக் குறைக்க முயன்றார். பின் திருப்தியாக,’ ‘இப்போதுதான் நீ புறா போல அழகாக இருக்கிறாய்,” என்றார். மனிதர்கள் அனைவரும் இப்படித்தான் இருக்கிறோம். நம்மிடம் இருந்து யாரேனும் ஏதாவது விசயத்தில் மாறுபட்டு இருந்தால், அது சரியா, தவறா என்று பார்க்காமல் நம்முடைய கருத்துக்கு ஏற்றார்போல அவர்களையும் மாற்ற முயற்சி செய்கிறோம். பால்கன் பறவையின் அழகை ரசிக்கத்தவறிய முல்லா போல, நாமும் மற்றவர்களிடம் உள்ள நல்ல விசயங்களை ரசிக்கத் தவறி விடுகிறோம். நம்மிடமிருந்து வித்தியாசமாக இருந்தால் அதை ஒரு தவறாகவே கருதுகிறோம்; அதை நம்மால் பொறுத்துக்கொள்ள ம

தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ்

  ''தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை காக்க முதல்வர் நல்ல முடிவு எடுப்பார்,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் நேற்று அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் கொரோனாவால் 5 லட்சம் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சிலர், கூலி வேலைக்கு செல்வதாக கேள்விப்பட்டு, மனவேதனை அடைந்தேன்.இது குறித்து முதல்வரிடம் பேசியுள்ளேன். தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை காக்க, முதல்வர் நல்லதொரு முடிவை எடுப்பார். தமிழகத்தில் நீட் தேர்வை, எந்த நேரத்திலும் அனுமதிக்க மாட்டோம்.சட்டசபை கூடும் நேரத்தில், அதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். எந்தவித அவசரமும் இல்லாமல், மாணவர்களுக்கு அவகாசம் வழங்கிய பின்னரே, பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

இறைவனை பற்றிக்கொள்ளுங்கள்..

ஒரு கட்டுமான எஞ்ஜினியர்… 13-வது…மாடியிலே வேலை செய்து கொண்டு இருந்தார்…! ஒரு முக்கியமான வேலை… கீழே ஐந்தாவது மாடியில் வேலை செய்து கொண்டு இருந்த கொத்தனாருக்கு ஒரு முக்கியமான செய்தி சொல்ல வேண்டும்…! செல் போனில் கொத்தனாரை கூப்பிட்டார் எஞ்ஜினியர்...! போனை எடுக்கவில்லை...! என்ஜினியரும் உரக்க கத்திப் பார்த்தார்...! அப்பொழுதும் கொத்தனார் மேலே பார்க்கவில்லை…! இவ்வளவுக்கும் கொத்தனார் வேலை செய்யும் இடத்தில் இருந்து, அவரால் என்ஜினியரை நன்றாகப் பார்க்க முடியும்…! எஞ்ஜினியர் என்ன செய்வதென்று யோசித்தார்…! ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து, மேலே இருந்து, கொத்தனார் அருகில் போட்டார்…! ரூபாயைப் பார்த்த கொத்தனார், அதை எடுத்து பையில் போட்டுக் கொண்டார்…! ஆனால் சற்றும் மேல் நோக்கிப் பார்க்கவில்லை… என்ஜினியருக்கு மிகவும் கோபம்... இருந்தாலும் பொறுத்துக் கொண்டு, ஒரு ஐநூறு ரூபாயை கொத்தனார் மேல் போட்டார்…! அதையும் எடுத்து சட்டைப் பையில் வைத்துக்கொண்டு…கொத்தனார் மும்முரமாக இருந்தார்…! எஞ்ஜினியர் பொறுமை இழந்து, ஒரு சின்ன கல்லை எடுத்து, கொத்தனார் மீது போட்டார்…! அது அவரது தோள் மீது பட்டு நல்ல வலியோடு, மேலே

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 10 லட்சம் நிவாரணம்: பிரதமர் மோடி அறிவிப்பு

   கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 10 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பதவியேற்று இரண்டு ஆண்டுகள் ஆகின்றது. இதனையொட்டி பிரதமர் மோடி  கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு  பிஎம் கேர்ஸ் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார். இது தொடர்பாக  வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் 10 லட்சம் வைப்பு தொகை தொடங்கப்படும். இது அவர்களுக்கு  மாதாந்திர தனிப்பட்ட தேவைகளை கவனித்து கொள்வதற்கான மாதாந்திர நிதி உதவியை வழங்க பயன்படும். 18 வயதாகும்போது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு உயர் கல்விக்கு உதவித் தொகை பெறுவதற்கு இது பயன்படும். அவர்கள் 23 வயதை அடையும்போது தங்களது டெபாசிட் தொகையை தனிப்பட்ட அல்லது தொழில்முறை தேவைக்காக பெறுவார்கள்.  குழந்தைகள் இந்த நாட்டின் எதிர்காலத்தை பிரதிபலிப்பதாக இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவு மற்றும் பாதுகாப்பு என அனைத்தையும் அரசு வழங்கும். இதன் காரணமாக அவர்கள் வலுவான குடிமக்களாக வளர்ந்து பிரகாசமான எதிர்காலத்தை பெறுவார்கள். இதுபோன்ற கடினம

TODAY'S THOUGHT..

 பாரதப்போர் முடிவில் கிருஷ்ணர் தேரில் அமர்ந்தபடி, "அர்ஜூனா! போர் தான் முடிந்து விட்டதே! இனியும் ஏன் நின்று கொண்டிருக்கிறாய். தேரை விட்டு இறங்கு!'' என்றார். "மைத்துனா! நீ என்னை போரில் வெற்றி பெறச் செய்தாய். மகிழ்ச்சி! ஆனால், வெற்றி பெற்றவனை, தேரோட்டிதான் கையைப் பிடித்து இறக்கி விட வேண்டும் என்ற சம்பிரதாயம் உண்டே! அதை மறந்து விட்டாயே! அப்படி செய்வது எனக்கும் பெருமை அல்லவா! நீயோ என்னைக் கீழே இறங்கு என்று ஆணையிடுகிறாய். இது என்ன நியாயம்? ''அர்ஜுனனின் வார்த்தைகளை கிருஷ்ணர், காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. "தேரை விட்டு இறங்கு!'' என்றார் கண்டிப்புடன். வருத்தத்துடன் அர்ஜுனன் கீழிறங்கினான். அப்போது அவர், " தேரின் பக்கத்தில் நிற்காதே! சற்று தள்ளி நில்!'' என்றார் அதட்டலுடன்! அர்ஜூனனால் கிருஷ்ணரின் அதட்டலைப் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. வெற்றி பெற்ற மகிழ்ச்சி கூட மனதை விட்டு அகன்றுவிட்டது. ஒன்றும் புரியாதவனாய் தள்ளி நின்றான். வாடிய முகத்துடன் நின்ற அவனைக் கண்டு புன்னகைத்த கிருஷ்ணர், தேரிலிருந்து குதித்து ஓடிச்சென்று, அர்ஜுனனை இறுகக் கட

G.O -204- வேலை வாய்ப்பு - அலுவலகத்தில் -2017, 2018 & 2019 ஆம் ஆண்டுகளில் பதிவினை புதுப்பிக்க தவறிய மனுதாரர்கள் பயன் பெறுவதற்கு சிறப்பு சலுகை -தமிழக அரசு அரசாணை வெளியீடு-PDF FILE

வேலை   வாய்ப்பு - அலுவலகத்தில்-  "2017,2018  மற்றும்  2019  ஆம்   ஆண்டுகளில்   பதிவினை   புதுப்பிக்க   தவறிய   மனுதாரர்கள்   பயன்   பெறுவதற்கு   சிறப்பு   சலுகை "-  தமிழக   அரசால்   இன்று   அரசாணை   வெளியீடு   செய்யப்பட்டுள்ளது . மூன்று   மாதங்களுக்குள்   ஆன்லைன்   மூலமாக   பதிவினை   புதுப்பிக்க   முயற்சிகள் மேற்கொள்ள   முடியும் CLICK HERE  TO DOWNLOAD-PDF FILE

இதுவும் கடந்து போகும்..

                நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த  வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை *வெற்றிகள்* ,  எத்தனை *தோல்விகள்* ,  எத்தனை *மகிழ்ச்சிகள்* ,  எத்தனை *துக்கங்கள்* ... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறதல்லவா? வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை *நண்பர்கள்* ,  எத்தனை *பகைவர்கள்* ,  எத்தனை *உறவுகள்* நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன.  ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் அமைதி சாதாரணமானது அல்ல.  அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். **வெற்றிகள்* கிடைக்கும் போது., *"#இதுவும்கடந்துபோகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள்...கர்வம் தலை தூக்காது. *தோல்விகள் தழுவும் போது.., *"#இது

ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவராக Dr.L.சுப்பிரமணியன், IAS நியமனம்!

ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவராக Dr.L.சுப்பிரமணியன், IAS நியமனம்!

கேள்வி கேளுங்கள்...!

மனித வாழ்கையை புரட்டிப் போட்ட ஒரு சில சொற்கள் உண்டு...! யாரெல்லாம் இவைகளை உச்சரித்து உணர்ந்து இருந்தார்களோ!, அவர்கள் தாங்கள் வேண்டியதைப் பெற்றுக் கொள்கிறார்கள். இது வரலாறு மட்டுமல்ல நிகழ்கால உண்மையும் கூட...! மனிதன் தனக்கு முன் வரும் எல்லா நிகழ்வுகளையும் இந்த சொற்களைக் கொண்டு ஆராய்ந்து பார்க்கவே இந்த அற்புதச் சொற்கள் நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டன... இவைகளைப் பயன்படுத்தியவர்கள் வாழ்க்கையைப் பொருள்படுத்தி மற்றவர்களின் வாழ்க்கையையும் மாற்றி அமைத்தார்கள்... 🔹உலகில் தோன்றிய தத்துவ ஞானிகள்... 🔹உலகை மாற்றி அமைத்த அறிவியல் மேதைகள்... 🔹செல்வத்தை வான் மழையெனக் கொட்டச் செய்த தொழில் மேதைகள்... 🔹உடல் நோயை ஒழித்த மருத்துவ மேதைகள்... எனப் பலரும் ஒவ்வொரு தருணத்திலும் இந்த சொற்களைப் பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி கண்டார்கள்... ஆனால்!, நம்முடைய வாழ்க்கையிலும், நமக்கு வேதனைகளும், சோதனைகளும் வரும் போது, நம்மில் பெரும்பாலோர் இந்த வார்த்தையைப் பயன்படுத்துவது இல்லை... மாறாக, பரிகாரம் தேடி ஜோதிடர்களையும், கோவில்களையும் நோக்கி ஓடிக்கொண்டு இருக்கிறார்கள்... உண்மையில் நாம் கலங்கும் போது இந்த சொற்களைப்

ஆன்லைன் வகுப்புக்கான புதிய விதிமுறைகளை வகுக்க குழு அமைப்பு. -ஆன்லைன் வகுப்புகளை நடத்தும் போது பின்பற்றப் பட வேண்டிய வழிகாட்டுதல்கள்

  Home   press Release   ஆன பள்ளிகள்   நடத்தும்   ஆன்லைன்   வகுப்புகளை   கண்காணிக்க   தமிழக   அரசு   நடவடிக்கை .   ஆன்லைன்   வகுப்புகளை   பள்ளிகளின்   நிர்வாகம்   பதிவு   செய்ய   வேண்டும் .  அந்தப்   பதிவுகளை   பெற்றோர்   ஆசிரியர்   சங்கத்தினர்   இருவர்   அவ்வப்போது   ஆய்வு   செய்ய   வேண்டும்     ஆன்லைன்    வகுப்புகளில்   முறையற்ற   வகையில்   நடந்து   கொள்வோர்   மீது   போக்சோ   சட்டத்தின்   கீழ்   நடவடிக்கை   எடுக்கப்படும்  ---  முதலமைச்சர்   மு . க . ஸ்டாலின்   எச்சரிக்கை. பள்ளிக்கல்வி ஆணையர், கல்லூரிக் கல்வி இயக்கக இயக்குநர், கணினி குற்ற தடுப்பு பிரிவு, காவல் அலுவலர்கள், கல்வியாளர்கள், உளவியல் நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்க முதல்வர்  உத்தரவு. CLICK HERE TO DOWNLOAD-PRESS RELEASE

அப்பா..

 தாங்கி பிடிக்கும் ஊன்று கோல்...  வாழ்க்கையை சுமக்கும் சுமைதாங்கி பறவை..  பிள்ளைகளின் கதாநாயகன்...  கடினபேச்சின் கருணையுள்ளம்..  மகள்களின் மகான்கள்...  கண்ணீர் கண்களில் இல்லை இதயத்தில் வடிப்பார்கள்...  கடின முகம் காட்டி அன்பை மறைப்பார்கள்...  நிழல் படத்தை பார்த்தே வாழ்க்கையின்  நிஜங்களை தொலைத்தவர்கள்...  புன்னகை புதைத்திடும் மணலில் புற முகத்தை மறைத்தவர்கள்... உடலை ஓரிடத்திலும் உயிரை மற்றொரு இடத்திலும் வைத்து கூடு விட்டு கூடு  பாயும் வித்தகர்கள்.... பறவையை போல் இரைத்தேடி பறப்பவர்கள்....  கூடு தேடியும் விரைபவர்கள், தியாகிகள் ஒவ்வொரு குடும்பத்திலும் உண்டு தகப்பன் வடிவில்..... 🙏

மாநில அரசுகளின் கருத்துகளை ஆராய்ந்து பிளஸ் 2 தேர்வு குறித்து ஜூன் 1-ம் தேதிக்குள் முடிவு: மத்திய கல்வி அமைச்சர் தகவல்

  மாநில அரசுகளின் கருத்துகளை ஆராய்ந்து பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவது குறித்து ஜூன் 1-ம் தேதிக்குள் முடிவு எடுக்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. இதனால், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு, ஆன் லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வரு கின்றன. இதனிடையே, பள்ளி பொதுத் தேர்வுகள், உயர்கல்வி நுழைவுத் தேர்வுகளை நடத்துவது குறித்து மத்திய கல்வி அமைச்சகம் பல்வேறு கட்டமாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் கடந்த 23-ம் தேதி காணொலி காட்சி வழியாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கலந்துகொண்டார். தமிழக அரசு சார்பில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, நோய்த் தொற்று குறைந்த பிறகு பொதுத் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று மாநிலங்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆசி ரியர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போட வேண்டும் என்றும் வலியுறுத் தப்பட்டது. இந்நிலையில்,

FLASH NEWS ABOUT TET POSTING..

 Yesterday education minister has discussed abput filling teacher's post using TET passed candidates which was displayed in News18.. Thanks to hasini mam..

ஜூலை 15ம் தேதி பிளஸ் 2 தேர்வு?

    சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வுகளை, ஜூலை 15ல் துவக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  கொரோனா காரணமாக பல மாநிலங்களில் இந்தாண்டு, 10ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப் பட்டு உள்ளது; பிளஸ் 2 தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த மாநில கல்வி அமைச்சர்கள் கூட்டத்தில், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு தொடர்பாக சில யோசனைகள் முன்வைக்கப்பட்டன. இதற்கிடையே சி.பி.எஸ்.இ., நிர்வாக குழு, பிளஸ் 2 தேர்வு குறித்து விவாதிக்க உள்ளது.இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., வட்டாரங்கள் கூறியதாவது:சி.பி.எஸ்.இ., நிர்வாக குழு கூடி, பிளஸ் 2 தேர்வு குறித்து விரைவில் முடிவு செய்யும். தேர்வு குறித்த அறிவிப்பு, ஜூன் 1ம் தேதி வெளியாகும்.  ஜூலை 15ல் துவங்கி, ஆக., 26க்குள் தேர்வு நடத்தி முடித்து, செப்டம்பரில் முடிவுகளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை, இதில் மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு வட்டாரங்கள் கூறின.  கோரிக்கை : 'ஆகஸ்டில் தேர்வுகள் முடிந்து, செப்டம்பரில் முடிவுகள் வெளியாகும் பட்சத்தில், உயர் கல்வியில் மாணவர்கள் சேர முடியாத நிலை ஏற்பட

இன்றைய சிந்தனை..

வாழ்க்கை கடவுள் தந்த பரிசு.. பிறரிடம் ஒரு கடும் சொல்லை சொல்லுமுன் வாய் பேச முடியாதவர்களை நினைத்து பாருங்கள்... உங்கள் சாப்பாட்டை குறை கூறும் முன் சாப்பிடவே வழி இல்லாதவர்களை நினைத்து பாருங்கள்... உங்கள் கணவரையோ அல்லது மனைவியையோ குறை கூறும் முன் வாழ்க்கை துணை வேண்டி வருந்துபவர்களை நினைத்து பாருங்கள்... உங்கள் குழந்தைகளை குறை கூறும் முன் பிள்ளை வரம் வேண்டுபவர்களை நினைத்து பாருங்கள்... உங்களுடைய வீட்டை குறை கூறும் முன் வீடில்லாமல் வீதிகளில் வசிப்பவர்களை எண்ணிப்பாருங்கள்... உங்களுடைய வேலையை குறை கூறும் முன் வேலையில்லாமல் வாடுபவர்களை எண்ணிப் பாருங்கள்... சோகத்தில் உங்கள் முகம் வாடும் பொழுது, *கடவுள் தந்த வாழ்க்கை என்ற  பரிசுக்கு  நன்றி சொல்லி முகத்தில் புன்னகை  தவழ விடுங்கள்....*

செயலர் முதல் சி. இ.ஓ. க்கள் வரை பள்ளி கல்வியில் விரைவில் மாறுதல்

    செயலர் முதல் சி. இ.ஓ. க்கள் வரை பள்ளி கல்வியில் விரைவில் மாறுதல் 

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுடன் மத்திய கல்வி அமைச்சர் ஆலோசனை!

  வரும் 17ஆம் தேதி மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆலோசனை காணொலியில் நடைபெற உள்ள கூட்டத்தில் அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்கள் பங்கேற்கிறார்கள். புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுடன் வரும் 17ஆம் தேதி மத்திய கல்வி அமைச்சர் காணொளி வாயிலாக ஆலோசனை

உண்மையான அன்பு எது..??

ஒரு நாள் குருவும் அவரது சீடனும் குளக்கரையில் அமர்திருந்தார்கள். சீடன் பல கேள்விகளை குருவிடம் கேட்டுக் கொண்டிருந்தான்; குருவும் நிதானமாக பதிலளித்துக் கொண்டிருந்தார். "குருவே! சுயநலமிக்க அன்பிற்கும் சுயநலமில்லாத அன்பிற்கும் வித்தியாசம் என்ன?" எனக்கு கொஞ்சம் விளக்கமாக கூறுங்களேன் என்றான். குரு சீடனுக்கு பதிலை எப்படி விளக்குவது என்று சற்றும் முற்றும் பார்த்தார். ஒரு இளைஞன் குளக்கரையில் தூண்டிலைப் பிடித்துக் கொண்டு அமர்திருந்தான். அவனருகில் கூடையில் அவன் பிடித்துப் போட்ட மீன்கள் துடித்துக் கொண்டிருந்தது. குரு, அந்த இளைஞனிடம் பேச்சு கொடுத்தார். தம்பி! மீன் என்றால் ரொம்ப பிடிக்குமோ? என்றார். அவனும் ஆமாம் ஐயா மீன் என்றால் எனக்கு உயிர். பிடித்து வைத்த மீன்களையெல்லாம் இன்றிரவு என் மனைவியை சமைக்கச் சொல்லி ஒரு பிடி பிடிக்கப் போகிறேன். உங்களுக்கு வேண்டுமானால் கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள். குளத்தில் நிறைய மீன் கிடைக்கிறது என்றான். குருவோ, எனக்கு வேண்டாம் தம்பி என்று புன்சிரிப்புடன் கூறி மறுத்து விட்டார். நடப்பதையெல்லாம் சீடன் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான். அந்த இளைஞனும் சற்று நேரத்தி

5000 காலிப்பணியிடங்கள். டிகிரி முடித்தவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு

    பாரத ஸ்டேட் வங்கியில் (SBI ) பல்வேறு வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம் : பாரத ஸ்டேட் வங்கி பணி: Junior Associate மொத்த காலியிடங்கள்: 5000 (சென்னைக்கு 473 + புதுச்சேரிக்கு 2 இடங்கள் ) வயதுவரம்பு: 01.04.2021 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.17,900 - ரூ.47,920 வரை. தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் ( https://sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்) விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.750 . கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை. விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.05.2021 மேலும் விவரங்கள் அறிய  https://www.sbi.co.in/documents/77530/11154687/060421-Detailed_Advertisement_JA_2021.pdf/df0c82ff-afdd-0ab5-af90-027b7fb90818?t=1619441279335  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பயப்படாதே மகனே, நான் அடுத்த பெட்டியில் இருக்கிறேன்..

 ஒவ்வொரு ஆண்டும் ஒரு இளம் சிறுவனை அவனது  பெற்றோர் கோடை விடுமுறையில் அவனது பாட்டி வீட்டிற்கு அழைத்துச் செல்வர்.  ரயிலில் போகும் அவர்கள் 15 நாட்களுக்குப் பிறகு அதே ரயிலில் திரும்புவர். சில வருடங்களுக்குப் பிறகு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் வயது வந்ததும், அந்த சிறுவன்  நான் இப்போது வளர்ந்திருக்கிறேன், இந்த வருடம் நான் தனியாக பாட்டி வீட்டிற்கு செல்கிறேன் என்கிறான். சிறிது யோசனைக்குப் பிறகு பெற்றோர் ஒப்புக்கொள்கிறார்கள். ரயில் நிலைய நடைமேடையில் நின்று, சிறுவனிடம் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அவனது தந்தை அறிவுரை கூற, “எனக்குத் தெரியும், நீங்கள் ஏற்கனவே என்னிடம் பல முறை சொல்லியிருக்கிறீர்கள்” எனறான் அந்த சிறுவன். ரயில் புறப்பட தயாரான நிமிடம் தந்தை காதுக்கருகில் மெதுவாக  “மகனே, வழியில் திடீரென்று மோசமாகவோ அல்லது பயமாகவோ உணர்ந்தால், இது உனக்கானது” என்று கூறி சட்டைப்பையில் ஒரு காகிதத்தை வைத்தார். பயண சந்தோசத்தில் சிறுவன் அதை கவனிக்கக் கூட இல்லை. முதல் முறையாக, பெற்றோர் இல்லாமல், தனியாக ரயில் பயணம், அந்த சிறுவனுக்கு உற்சாகமாகவும், த்ரில்லாகவும் இருந்தது. ஓடும் ரயிலில் வேக வேகமாகப் பி

அரசு ஊழியர்களுக்கு, கொரோனா நிவாரணம் வழங்க தடை கோரிய வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.

அரசு ஊழியர்களுக்கு, கொரோனா நிவாரணம் வழங்க தடை கோரிய வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்செந்துாரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனு: கொரோனா நிவாரணம் முதல் தவணையாக, அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு 2,000 ரூபாய் வழங்க, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது; 2.07 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு 4,153 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது.மத்திய - மாநில அரசு ஊழியர்கள், அரிசிக்கான ரேஷன் அட்டை வைத்துஉள்ளனர். ஊரடங்கு அறிவிக்கப்பட்டாலும், அரசு ஊழியர்களுக்கான சம்பளம் வந்து விடுகிறது. ஆனால், ஒரு தரப்பு மக்கள், சாப்பாட்டுக்காக போராடுகின்றனர். தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றும் முயற்சியாக, முதல்வரின் இந்த அறிவிப்பை எதிர்க்கவில்லை. அனைத்து அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கும் கொடுப்பதற்கு, இது உகந்த நேரம் இல்லை.பயனாளிகள் பலரும் சம்பளம் பெறுபவர்களாக உள்ளனர். அவர்கள் பணத்துக்கு கஷ்டப்படவில்லை. தற்போது, மருத்துவ உட்கட்டமைப்புக்காக, கணிசமான நிதி தேவைப்படுகிறது. ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அதிகரிப்பது; கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்துவது தான் தற்போது

மாற்றங்கள்..

ஒரு புகழ்பெற்ற ஞானியிடம் சிலர் சென்று, நாங்கள் புண்ணிய யாத்திரை சென்று புனித நதியில் நீராடி வரலாம் என்று இருக்கிறோம்.! நீங்களும் எங்களோடு வந்தால் நன்றாக இருக்கும் என அவரை அழைத்தார்கள்…! ஞானியோ, இப்போது வருவதற்கான சாத்தியம் இல்லை என்று கூறி விட்டு, அவர்களிடம் ஒரு பாகற்காயை தந்து, ”எனக்காக ஒரு உதவி செய்யமுடியுமா?” என்று அவர்களை பார்த்துக் கேட்டார். அவர்கள் ”என்ன செய்ய வேண்டும் கட்டளை இடுங்கள் மகராஜ்’ என்றனர். ”ரொம்ப பெரிய வேலை எல்லாம் இல்லை. நீங்கள் புனித நதியில் முழுகும் போதெல்லாம் , இந்த பாகற்காயையும் முழுக்கி என்னிடம் திரும்ப கொண்டு வந்து இதை சேர்த்து விடுங்கள்” என்றார். அன்பர்கள் ஞானி சொன்ன மாதிரியே செய்தனர்..! திரும்ப வந்து அவரிடம் அந்த பாகற்காயை பத்திரமாக ஒப்படைத்தனர். அவர் அந்த பாகற்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, எல்லாருக்கும் ஒரு துண்டை கொடுத்தார்..! புனித நதியில் முழுகி வந்த பாகற்காய்..! இப்போ சாப்பிட்டுப் பாருங்க தித்திக்கும் என்றார்…! ஆர்வமுடன் வாங்கிய அன்பர்கள் வாயில் போட்டு மென்ற வேகத்தில் முகம் மாறியது….. ! தித்திக்கும்னு சொன்னீங்க..ஆனா கசக்குதே…!என்றார்கள் . ஞானியிடம் ஏமாற்

ஆசிரியர்களுக்கு 25 முதல் பணி..

ஆசிரியர்களுக்கு 25 முதல் பணி ஊரடங்கு முடிந்ததும் ஆசிரியர்களை பள்ளிக்கு வரவழைத்து பள்ளிக் கல்வி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தற்காலிக ஊரடங்கு முடிந்தபின் இம்மாதம் 25ஆம் தேதி  முதல் ஆசிரியர்களை நேரடியாக பள்ளிக்கு வரவழைத்து அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர் அடுத்த வாரம் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.