Skip to main content

இதுவும் கடந்து போகும்..

               



நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த
 வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும்.

எத்தனை *வெற்றிகள்* , 
எத்தனை *தோல்விகள்* , 
எத்தனை *மகிழ்ச்சிகள்* , 
எத்தனை *துக்கங்கள்* ...

எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன.

வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறதல்லவா?

வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா?

எத்தனை *நண்பர்கள்* , 
எத்தனை *பகைவர்கள்* , 
எத்தனை *உறவுகள்* நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்?

வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. 
ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா?

இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் அமைதி சாதாரணமானது அல்ல. 
அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள்.

**வெற்றிகள்* கிடைக்கும் போது.,

*"#இதுவும்கடந்துபோகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள்...கர்வம் தலை தூக்காது.

*தோல்விகள் தழுவும் போது..,

*"#இதுவும்கடந்துபோகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள்...சோர்ந்து விட மாட்டீர்கள்.

*நல்ல மனிதர்களும், நண்பர்களும் உங்கள் வாழ்க்கையில் வரும் போது.,

*"#இதுவும்கடந்துபோகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருக்கும் போது - அவர்களை கௌரவிப்பீர்கள்.அவர்கள் விலகும் போது பெரிதாக பாதிக்கப்படாமல் இருப்பீர்கள்.

*தீய மனிதர்களும், பகைவர்களும் உங்கள் வாழ்வில் வரும் போது..,

*"#இதுவும்கடந்துபோகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். - தானாகப் பொறுமை வரக் காண்பீர்கள். பெரிதாக மனஅமைதியை இழக்க மாட்டீர்கள்.

*நெற்றி சுருங்கும் போதெல்லாம்..,

*"#இதுவும்கடந்துபோகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள்.- சுருக்கம் போய் முகத்தில் புன்னகை தவழக் காண்பீர்கள்.

வாழ்க்கையின் ஜீவநாதமாக இந்த உண்மை உங்கள் இதய ஆழத்தில் பதிந்து போய் விட்டால்.,

அந்தப் *புன்னகை* நிரந்தரமாக உங்கள் முகத்தில் தங்கி விடுவதை மற்றவர்கள் காண்பார்கள்..

Comments

  1. Mam unga opinion posting a pathi enna mam

    ReplyDelete
    Replies
    1. Pg ku epdi vacancies iruko adhu pola nichayama BT and SGT kum postings irukum but romba minimum ah irukum, so indha year kulla minimum number of postings poda chances iruku..

      But adhukkula tet ku nalla clarity kedaikkanum, trt ah illa vera enna method nu oru decision eduthutangana nalla irukkum.. Let's wait and see..

      Delete
    2. Somehow we all should get posting mam. Tet candidates suffering a lot.

      Delete
  2. One thing is very sure, existing education minister is very active and if we approach him, soon we can arrive at a wonderful solution..

    ReplyDelete
  3. 2013 candidates should give space for others also. Already posting allotted for them so they should not expect now also

    ReplyDelete
    Replies
    1. 2013validity mudinthu vidum.

      Delete
    2. அக்டோபர் வரை உள்ளது

      Delete
  4. Mam years poi kondu irukirathu aanal namakku endha naladhum nadakka villai.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. First 2013 tet passkku vali sollunga sir

    ReplyDelete
  7. First 2013 tet passkku vali sollunga sir

    ReplyDelete
    Replies
    1. Neenga than ellathukkum Karanam case pottu pottu unga life um pochu enga life um Sethu pochu so please live and let be live

      Delete
  8. 2013 candidates yum kastapattavanga dhan, naanum oru 2013 candidate dhan..

    Indha madhiri namakulla adichukittadhala dhan inum oru naladhu kuda nadakkala.. Issue ah epdi solve panradhunu yosinga, perusu panna venam..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here 

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர். குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார். இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவர