Skip to main content

Posts

Showing posts from November, 2019

படித்ததில் பிடித்தது..

👉👉சீனாவில், லீ லீ என்ற பெண்ணுக்குத் திருமணமாகி ,தன் கணவன் வீட்டிற்குச் சென்று வாழத் துவங்குகிறாள்.அங்கு லீ லீக்கும் அவள் மாமியாருக்கும் எந்த விஷயத்திலும் ஒத்துப் போகவில்லை. எதற்கெடுத்தாலும் வாக்குவாதம்,சண்டை, சச்சரவு.நாள்தோறும் இருவர்க்கிடையே வேற்றுமை வளர்ந்து கொண்டே இருந்தது. லீ லீயின் கணவனோ இருதலைக் கொள்ளி எறும்பு போல திண்டாடினான்.  ஒரு நாள் லீ லீ,அவள் தகப்பனாரின் நண்பரைப் பார்க்கச் சென்றாள்.அவர் பச்சிலை,மூலிகை மருத்துவத்தில் கைதேர்ந்த மருத்துவர்.  அவரிடம் லீ லீ, தனக்கும் தன் மாமியாருக்கும் உள்ள சண்டை பற்றிக் கூறி,மாமியாரைக் கொன்றுவிட வழி கேட்டார். அந்த நாட்டு மருத்துவர்,மூலிகைப் பொடி ஒன்றைக் கொடுத்து,- இது மெல்லக் கொல்லும் நஞ்சு,இதைத் தினம் 👉👉👉உன் மாமியார் சாப்பாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக கலந்து கொடு, ஒரு சில மாதங்களில் இயற்கை மரணம் போல் இறந்து விடுவார் -என்று கூறினார். மேலும், - மிகவும் கவனமாக செயல் படவேண்டும்; முக்கியமாக உன் மாமியாரிடம் மிகுந்த அன்போடு நடந்து கொள் ,அப்பொழுதுதான் உன் மேல் யாருக்கும் சந்தேகம் வராது. எல்லாம் ஒரு சில மாதங்கள் தா...

அரசின் தவறான கொள்கையால், 60,000 கணினி ஆசிரியர்கள் நிலை கேள்விக்குறி

1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 6வது பாடமாக சேர்க்கப்படுமா? சிறப்பு செய்தி தமிழகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சமச்சீர் பாடத்திட்டத்தை உருவாக்கி, அதில் 6 முதல் 10ம் வகுப்பு வரை கணினி பாடத்தை தனிப்பாடமாக கொண்டு வந்து செயல்படுத்தினார். பின்னர் வந்த அதிமுக அரசின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதி கொண்டு வந்த கணினி அறிவியல் பாட புத்தகம் தவறாக உள்ளது என கூறி பல லட்சம் புத்தகங்களை வெளியில் விடாமல் அழித்தார். அதன் பிறகு தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் கணினி பாடத்தை அறிவியல் பாடத்துடன் மூன்று பக்கமாக இணைத்து, வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கடந்த 1992 முதல் 2019 வரை சுமார் 60 ஆயிரம் கணினி ஆசிரியர்கள் படித்து முடித்து விட்டு வேலைக்காக காத்திருக்கின்றனர். தமிழக அரசு, கடந்த 2014ம் ஆண்டு கணினி ஆசிரியர்களை, கணினி பயிற்றுனர்கள் என கூறி, பணியில் சேருவதற்கு இளங்கலை மட்டும் இருந்தால் போதுமானது என்றனர். ஆனால், கடந்த மார்ச் மாதம் முதுகலை படிப்பு வேண்டும் என அரசாணையை மாற்றினர். இதனால் சுமார் 30 ஆயிரம் கணினி ஆசிரியர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் உரிய வேலை கிடைக்காதத...

இனி ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வில் உதயமாகும் தமிழ்மொழி..!

இந்தியாவில் புகழ்பெற்ற நிறுவனமான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி) இந்தியாவில் அமைந்துள்ள உயர்கல்விக்கான தன்னாட்சி பொது நிறுவனங்கள் ஆகும். இந்தியா முழுவது அமைந்துள்ள இந்நிறுவனம் ஐ.ஐ.டி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களுக்குக்கான ஜே.இ.இ (joint entrance examination) நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வந்தது. இதற்கு முன்னர் (ஐ.ஐ.டி) படிக்க வரும் மாணவர்களுக்கு நுழைவு தேர்வில் ஆங்கிலம், ஹிந்தி , குஜராத்தி போன்ற சில மொழிகளில் மட்டுமே எழுத்தி வந்தனர். இதனால் மற்ற மொழியில் பயிலும் மாணவர்கள் சிரமத்துக்கு உள்ளானார்கள். இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு வரும் 2021-ம் ஆண்டு முதல் தமிழ், தெலுங்கு, உருது உள்ளிட்ட 11 மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் நுழைவுத்தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கிடையே மத்திய அரசின் இந்த முடிவை வரவேற்று வருகிறார்கள்.

நாட்டிலேயே முதல் முறையாக தனியார் ஆசிரியைகளுக்கும் 6 மாதம் பேறுகால விடுப்பு : கேரள அரசு உத்தரவு

திருவனந்தபுரம்: இந்தியாவிலேயே முதன் முதலாக கேரளாவில் அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியைகள் மற்றும் பெண் ஊழியர்களுக்கும் 6 மாதம் பேறுகால விடுப்பு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே சம்பளத்துடன் கூடிய ேபறுகால விடுப்பு வழங்கப்பட்டு வந்தது. இது அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கும் பொருந்தும். ஆனால் இந்த சலுகை தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு கிடையாது. இந்த நிலையில் இந்தியாவிலேயே முதன் முறையாக கேரளாவில், தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியைகள் மற்றும் பெண் ஊழியர்களுக்கு 6 மாத கால சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதோடு 1000 சிகிச்சை உதவியும் அந்தந்த நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2 மாதத்தில் இந்த உத்தரவு அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடையாளம்..

மனைவி இறக்கும்போது, *அவருக்கு வயது 45 இருக்கும்*. உறவினர்கள், *நண்பர்கள்* அனைவரும் *அவரை* *மறுமணம்* செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியும், *அவரால்* *அதை ஏற்றுக்கொள்ள* *முடியவில்லை* . என் மனைவி, *அவள் நினைவாக* எனக்கு *ஒரு மகனை* விட்டு சென்றிருக்கிறாள். *அவனை வளர்த்து* ஆளாக்குவது ஒன்றே *இனி என் வேலை*. அவன் சந்தோஷத்தில் *அகமகிழ்ந்து*, அவன் வெற்றியில் நான் *திளைத்திருப்பது* எனக்கு போதும். *அவனுக்காக* *வாழ போகிறேன்*. இன்னொரு துணை *எனக்கு தேவையில்லை* என்று சொல்லிவிட்டார். வருடங்கள் உருண்டோடியது. மகன் வளர்ந்து பெரியவனானதும், தன் வீட்டையும், வியாபாரத்தையும் மகனிடம் எழுதி கொடுத்துவிட்டு ஓய்வு பெற்றார். மகனுக்கு திருமணமும் செய்து வைத்து, அவர்களுடனேயே தங்கியும் விட்டார். ஒரு வருடம் போனது. ஒரு நாள் வழக்கத்துக்கு மாறாக, கொஞ்சம் சீக்கிரமாக காலை உணவு உண்ண, *மருமகளிடம்* ரொட்டியில் தடவ *வெண்ணெய் தருமாறு கேட்டார். *மருமகளோ* , *வெண்ணை* *தீர்ந்துவிட்டது* *என்று சொல்லி விட்டாள்*. மகன் அதை கேட்டுக் கொண்டு, தானும் உணவருந்த உட்கார, தகப்பன் வெறும் ...

TRB - Computer Instructors Grade I (PG Cadre) - 2018 - 2019 - CV List Published!

*  Computer Instructors Grade I (PG Cadre) - CV List - Download here *  Annexure I - Download here *  Annexure II - Download here CERTIFICATE VERIFICATION – Intimation In continuation of Publication of Examination results for the direct recruitment of Computer Instructors Grade I (PG Cadre), the list of candidates shortlisted for Certificate Verification, is hereby published. Candidates are required to upload additional details and documents through website from 02.12.2019 to 05.12.2019. Candidates are required to upload the details and documents within the given time and no extension of time will be granted. The list of documents to be uploaded is as per Annexure – I. It is also informed that the date and venue for the Certificate Verification will be intimated to the shortlisted candidates through website only. Disclaimer : Utmost care has been taken in preparing the provisional CV list and in publishing them. Teachers Recruitment Board reserves the right to correct any...

5, 8 வகுப்புகளுக்கான பொதுத்தோ்வு அட்டவணை வெளியீடு

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் 5, 8 வகுப்புகளுக்கான பொதுத்தோ்வு கால அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் தற்போது, 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையில் அனைத்து மாணவா்களையும் கட்டாயத் தோ்ச்சி செய்யும் முறை அமலில் உள்ளது. இதனால், மாணவா்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. எனவே, 5 -ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தோ்வு நடத்த வேண்டும் என்றும் மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாகக் கூறிவந்தது. இந்த நிலையில் ஐந்து, எட்டாம் வகுப்புகளில் கட்டாயத் தோ்ச்சி நடைமுறைக்கான சட்டத் திருத்தம் மத்திய அரசிதழில் கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில், ‘நாடு முழுவதும் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு ஆண்டின் இறுதியில் கட்டாயத் தோ்வு நடத்தப்பட வேண்டும். இதில் தோல்வியடையும் மாணவா்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கும் வகையில், தோ்வு முடிவு வெளியான இரண்டு மாதங்களில் உடனடித் தோ்வு நடத்த வேண்டும். அதிலும் மாணவா் தோல்வியடைந்தால் அவா்களை அடுத்த வகுப்புக்கு அனுமதிக்காமல், 5 அல்லது 8-ஆம் வகுப்பிலேயே மீண்டும் தொடர அனுமதிக்க வேண்டும். அதே நேரம், ஒரு மாணவா் தொடக்கக் கல...

படித்ததில் பிடித்தது..

ஒரே ஒரு உண்மையான நற்செயல் போதும். சொர்க்கம் கிடைத்து விடும் சுவாமி! கயிலைமலைக்கு வந்து யாத்திரை முடிப்பவர்களுக்கு புண்ணிய கதி கிடைக்கிறது. காசி வந்து கங்கையில் நீராடி விஸ்வேஸ்வர தரிசனம் செய்பவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கிறது. ஆனால், இப்படி ஏதும் செய்ய முடியாதவர்கள் பலர் இருக்கிறார்கள். வாழ்க்கையை நல்லவிதமாக அமைத்துக் கொள்ள முடியாத பலர் இருக்கிறார்கள். அவர்களுடைய கதி என்ன?'' என்று சிவனிடம் கேட்டாள் பார்வதிதேவி. ""உனக்குத் தெரிய வேண்டுமா? என்னுடன் வா!'' என்று காசிக்கு அவளை அழைத்துச்சென்றார் சிவன். பார்வதிதேவி ஒரு மூதாட்டியாக உருவத்தை மாற்றிக் கொண்டாள். சிவபெருமான் தொண்டுக் கிழவரானார். விஸ்வநாதர் கோயில் முன் குறுகலான சந்தில் அவர்கள் நின்றனர். கிழவருக்கு மூச்சு வாங்கியது. மனைவியின் மடியில் தலை வைத்து படுத்துவிட்டார். கிழவி போவோர் வருவோரைப் பார்த்து, ""ஐயா! அம்மா! என் கணவருக்கு உயிர் பிரியும்நிலை வந்துவிட்டது. யாராவது கொஞ்சம் கங்கை நீர் கொண்டு வந்துவாயில் விடுங்களேன். என்னால் எழுந்து போக முடியவில்லையே...'' என்று கை குவித்துக் கெஞ்சினா...

Flash News : கணினி பயிற்றுநர் பணி இடங்களை அதிகரிப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம்

கள்ளர் பள்ளிகளுக்கு 10 கணினி பயிற்றுநர்  பணி இடங்களை அதிகரித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிக்கை வெளியீடு. A total of 10 vacancies are notified herewith additionally to the details of  vacancies already notified as per para 2 the Details of Vacancies vide  Notification No. 09/2019, dated 01.03.2019.   The details are as follows :-  2(a). Kallar Reclamation Schools (Current Vacancies) :-   A total of 10 vacancies are notified herewith for the Post of Computer  Instructors Grade – I (Post Graduate cadre) in Kallar Reclamation Schools  under Director of Most Backward Classes and Denotifed Communities.       

1060 பாலிடெக்னிக் விரிவுரையாளர் நியமனத் தேர்வுக்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு.

Applications are invited from eligible candidates for Direct Recruitment for the post of Lecturers in Government Polytechnic Colleges and Special Institutions (Engineering / Non Engineering) Tamil Nadu Educational Service for the year. 2017-2018 only through online mode Click - Notification Click - Syllabus Click - Press News

BEO பதவி நேரடி நியமனம் - TRB அறிவிக்கை வெளியீடு

97 வட்டாரக் கல்வி அலுவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு. Applications are invited only through online mode from eligible candidates for the Direct Recruitment for the post of Block Educational Officer in Elementary Education department for the year 2018-2019 Important Dates :- * Date of Notification : 27 .11.2019 * Date of Commencement application through online mode : Will be announced shortly. * Last date for submission of application through online mode : Will be announced shortly. * Date of Online Computer Based Examination : Will be announced later Click - Notification Click - Syllabus Click - Press News

எண்ணம் போல் வாழ்க்கை..

ஒரு நாள் குருவை பார்க்க ஒருவன் சென்றிருந்தார்.... அவர் பாதம் தொட்டு கும்பிட்டுவிட்டு., அவர் பாதம் கழுவி பின் குருவை பணிந்து வணங்கி நின்றான்.... அவனை மேலும் கீழுமாக பார்த்தவர்., ஏதோ எதிர்பார்ப்புடன் வந்திருக்கிறாய் போல என்று முகத்தை பார்த்து கேட்டார். அவன் மௌனமாக ஆமாம்.! என தலையாட்டிவிட்டு மெல்ல ஆரம்பித்தான். நான் நினைப்பதெல்லாம் நடக்கவேண்டும். இதற்கு என்ன வழி..? என்று ஒரு கேள்வியை கேட்டான். குரு புன்முறுவலாக சிரித்துக்கொண்டே., அவனை அருகில் அழைத்தார். மெல்ல அவன் தலையை கோதிவிட்டு., கன்னங்களை தட்டிக்கொடுக்க..... அவனுக்கு முணுக்கென  கண்களில் எட்டிப்பார்த்த கண்ணீரை மெதுவாக துடைத்து விட்டு., என் சிஷ்யன் கலங்கக்கூடாது என்று ஆறுதல் படுத்தியவர்.,  நான் ஒரு கதை சொல்லப் போகிறேன்., பொறுமையாக கேள் என்று மெல்ல ஆரம்பித்தார். ஒரு ஊர்ல ஒரு இளவரசன் இருந்தான். ஒரு நாள் அவன் காட்டுக்கு வேட்டையாடப் போனான். வழியில் அவன் பரிவாரங்களை விட்டு வழி தவறி போய் விட்டான். அவர்களை தேடித் தேடி காட்டுக்குள் ரொம்ப தூரம் போய் விட்டான். ரொம்ப களைப்பு., பசி., தாகம்., கொஞ்சம் பயம் வேறு. சோர்ந்து...

Flash News : ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் தீ விபத்து!!

சென்னை டிபிஐ வளாகத்தில் அமைந்துள்ள ஆசிரியர் தேர்வு வாரிய கட்டிடத்தில் இன்று மதியம் தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாகவும் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சாம்பலாகி விட்டதாகவும் தேர்வு வாரிய தலைவர் லதா தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள் Whatsapp, Facebook களில் அதிக நேரம் செலவழிப்பதை கண்காணிக்க குழு அமைப்பு !!

ஐந்து மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வை அனைவரும் எதிர்க்கும்போது மாணவர்களை நீட் தேர்வுக்கு எப்படி தயார்படுத்த முடியும்? என அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பி உள்ளார். கோபி அருகே  நம்பியூரில் வேளாண் அலுவலக கட்டிடம் கட்டும் பணியை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று துவக்கி வைத்தார். அதன்பின் அவர் அளித்த பேட்டி: நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதே மாநில அரசின் கொள்கையாக உள்ளது. அதன்படி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, நிலுவையில் உள்ளது. வழக்கு முடிந்த பிறகுதான் இது குறித்து கருத்து கூற முடியும். இவ்வாறு அவர் கூறினார். நீட் தேர்வுக்கென 412 மையங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இருப்பினும், அரசு பள்ளி மாணவர்கள் ஒருவர்கூட அரசு மருத்துவக்கல்லூரியில் சேரவில்லையே என்று கேட்டபோது அமைச்சர் கூறியதாவது: 5 மற்றும் 8ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு கொண்டு வருவதை அனைவரும் எதிர்க்கும்போது நீட் தேர்வுக்கு மாணவர்களை எப்படி தயார்படுத்த முடியும்?. 8ம் வகுப்பு வரை அனைவரையும் தேர்ச்சி பெற வைப்பதால் மாணவர்களின் திறமையை கண்டறிய முடிவதில்லை. அதே நேரத்தில் பொதுத்தேர்வு குறித்து மா...

இன்றைய சிந்தனை..

*முன் அனுபவம்தான்'* .................................. ஒருவன் ஒரு தொழிலில் முன்பு பெற்ற அனுபவமே அவன் தொழில் திறனை வளர்க்க உதவும்.. *முன் அனுபவங்களை கொண்டு..தொழிலின் போலித் தன்மையையும், உண்மைத் தன்மையையும் பிரித்து அறிந்து. தொழிலில் ஈடுபட்டால் எந்த தொழிலும் வெற்றி பெறலாம்..* ஒரு தொழில் தொடங்கும்போது அந்த தொழிலில் ஏற்கனவே நன்கு அனுபவம் பெற்ற சரியானவர்களை  கண்டு அறிந்து அவர்களை பயன் படுத்திக் கொள்ள வேண்டும். *முந்தைய அனுபவமே ஒருவருக்கு எல்லா வகையிலும் உதவும்..தொழில் முன்அனுபவமே செய்யும் தொழிலின் தனித்தன்மைக்குக் காரணமாகும்.* ஒரு விவசாயி அந்த ஊரிலிருக்கும் ஞானியிடம் சென்றார். ‘என் தோட்டத்திற்கு ஒரு தோட்டக்காரன் தேவை’ என்றார். ‘ இன்னும் மூன்று மாதம் கழித்து வா. உனக்குத் தேவையான இளைஞனை அனுப்புகிறேன்’ என்றார் ஞானி.. மூன்று மாதங்களுக்குப் பிறகு ஓர் இளைஞனைத் தோட்டப் பணிக்கு அனுப்பி வைத்தார். தனக்குக் கிடைத்த பணியாளர் மலர்களில் ஒன்றையும் பறிக்காமல் நேசிப்பதையும், ஒரு இலையும் விடாமல் நீரூற்றுவதையும், சருகுகள் மீது கால் படாமல் நடந்து கொண்டு இருப்பதையும் கண்டு மனம் மகிழ்ந்த...

FLASH NEWS : குரூப் 4 பணியிடங்கள் எண்ணிக்கை 6491-ல் இருந்து 9398 ஆக அதிகரிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

கொக்கென்று நினைத்தாயோ, கொங்கணவா....

எல்லோரும் மகாபாரதம் படிக்கிறார்கள். ஆனால், வெறும் கதை சுவாரஸ்யம் தான் அனுபவிக்கிறார்களே ஒழிய உயிரையே "சுளீர்' என்று சாட்டை சொடுக்கித் தாக்கும் பகுதிகளை உணர்வதில்லை. கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா'...... ஓர் கண்ணோட்டம்..... ஆயிரம் கீதைக்குச்சமமாகும் வரிகள்...... தெரிந்த கதை என்றாலும், கொஞ்சம் தெரியாத உண்மை உள்ளது. பொறுமையாக இதைப்படியுங்கள். கவுசிகன் என்ற வேதியர் காட்டில் கடுந்தவம் செய்கிறார். நெடுநாள் செய்த தவம் பலித்துக் கண் விழித்தார். அப்போது மரத்திலிருந்த கொக்கு அவர் தலையில் எச்சமிட்டது. கோபம் பொங்க கொக்கைப் பார்த்தார். கொக்கு பற்றி எரிந்து நெருப்பால் செத்தது. ஆஹா! நம் தவம் சித்தியாகி விட்டது' என்கிற வெற்றிக் களிப்புடன் ஊருக்குள் போனார். அவர் வயிற்றில் பசி நெருப்பு பற்றி எரிந்தது. ஒரு பெண்ணிடம் பிட்சை கேட்டார். அவள் "திண்ணையில் உட்காருங்கள் சுவாமி! உணவு கொண்டு வருகிறேன்' என்று சொல்லி விட்டு அவசரமாக உள்ளே ஓடினாள். அதற்குள் எதிர்பாராத விதமாகக் கணவன் வந்து விட்டதால் அவனுக்குரிய பணிவிடைகளைச் செய்ய வேண்டி வந்தது. அன்புடன் அவனுக்க...

PGTRB 2019 - Tamil Subject Case Court Order

! முதுகலை ஆசியர் பணிக்கு தேர்வானவல்களின் இறுதிப் பட்டியல் தமிழ் பாடம் தவிர்த்து மற்ற பாடங்களுக்கு சில தினங்களுக்கு முன்பு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. தமிழ் பாடத்திற்கு மட்டும் வழக்கு காரணமாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடாமல் இருந்தது. தற்போது வழக்கு தொடர்பான ஆணையினை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.   High Court - Judgement Order - Download here... இதன் மூலம் தமிழ் பாடத்துக்கு தேர்வானவர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் எனத்தெரிகிறது.

ஆசிரியர் தேர்வில் MBC, SC பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை அமல்படுத்தாமல் அநீதி - அன்புமணி ராமதாஸ் அறிக்கை!!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் நடத்திய முதுநிலை ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளில் தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.  வேதியியல் பாடத்திற்கான ஆசிரியர் தேர்வில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் நிகழ்ந்த குளறுபடிகள் காரணமாக, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 17 பாடங்களுக்கான 2144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை  போட்டித் தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிக்கை கடந்த ஜூன் 12-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து செப்டம்பர் 27, 28, 29 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட ஆன்லைன் எழுத்துத் தேர்வுகளில் ஒரு லட்சத்து 47,594 பேர் கலந்து கொண்டனர். அத்தேர்வுகளின் முடிவுகள் அக்டோபர் 21-ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், அவர்களில் ஒவ்வொரு பணியிடத்திற்கு இருவர் வீதம் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். நவம்பர் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் சான்று சரிபார்ப்பு நடைபெற்று முடிந்த நிலையில், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், உயிரியல், விலங்கியல், புவியியல்  உள...

TODAY'S THOUGHT..

இடது பக்கமாக படுங்க என்றார் ஒருவர். படுத்தேன்.. வலது பக்கமாக படுங்க என்றார் இன்னொருவர் படுத்தேன். குப்புற படுக்காதீங்க என்றார். மல்லாக்க படுக்காதீங்க என்றார் இன்னொருவர்.. படுக்கவிடாமல் படுத்தாறங்களே... காலையில் நடக்க சொன்னார்கள்.. நடந்தேன். நேராக நடக்க கூடாது, எட்டு போட்டுத் தான் நடக்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள். காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து கொண்டு இருந்தேன். போதாது போதாது..  அதனுடன் எலுமிச்சையும் பிழிந்து குடிக்க வேண்டும் என்று சொன்னார்கள் .. கேன்சர் உறுதியாக வராதாம்.!! உருளைக்கிழங்கு அளவோடுதான் ருசியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். வாயு என்றார்.. வாயில் படுவதை மறந்தேன்... உலக நாடுகளில் இது மட்டும்தான்... வேற வழியில்லை.. சாப்பிடுங்க என்றார்கள்... இனிப்பை தொட்டுவிடாதீர்கள்.. அவ்வளவுதான்.. Sugar ஏற்றிவிடும் என்றார்.. சரி என்று நிறுத்தினேன். நடக்கும் போது நண்பர் சொன்னார்.. low sugar ஆகிவிடும், பாத்துக்குங்க.. அப்பப்ப கொஞ்சம் சாப்பிடுங்க என்றார்.. இப்படித்தான் குளிக்க வேண்டும் என்றார்... ஐயோ, தப்பு, அப்படி குளிங்க என்றார்... குளிக்கக்கூட சுதந்திரம் ...

அரசுப் பள்ளியில் ஆசிரியா் இல்லாத அவலம்: பாதிப்புக்குள்ளாகும் பழங்குடியினக் குழந்தைகள்

ஈரோடு: பட்டேபாளையம் அரசு உண்டு, உறைவிடப் பள்ளி தரம் உயா்த்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில், போதுமான ஆசிரியா்கள் நியமிக்கப்படாதது, பள்ளியில் விடுதி இல்லாதது போன்றவற்றால் பழங்குடியின மாணவா்களின் இடைநிற்றல் அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்டம், அந்தியூா் வட்டம், பா்கூா் மேற்கு மலையில் சாலை முடிவடையும் கடைசி கிராமமான பட்டேபாளையம் (கொங்காடை அருகில்) கிராமத்தில் அரசு சாா்பில் பழங்குடியினருக்கான இலவச உண்டு உறைவிடப் பள்ளி, கொங்காடை அரசு உண்டு உறைவிடப் பள்ளி என்ற பெயரில் இயங்கி வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையில் உள்ள இந்தப் பள்ளியில் 277 மாணவா்கள் படிக்கின்றனா். ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை கட்டுப்பாட்டில் செயல்படும் இப்பள்ளி நடுநிலைப் பள்ளி என்ற நிலையில் இருந்து 2017 ஆம் ஆண்டு உயா்நிலைப் பள்ளியாகத் தரம் உயா்த்தப்பட்டது. ஆனால், 2017-2018 கல்வி ஆண்டில் 9 ஆம் வகுப்பில் மாணவா் சோக்கை தொடங்கப்படவில்லை. இந்நிலையில், இப்பள்ளியில் 49 மாணவா்கள் 2018-2019 கல்வி ஆண்டில் சோக்கப்பட்டனா். இதில், 19 போ மாணவிகள். இந்த 49 மாணவா்களில் இந்த ஆண்டு 10 ஆம் வகுப்பில் 18 போ மட்ட...

பள்ளிக் குழந்தைகளுக்கு 6 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவ முகாம்: அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன்

பள்ளிகளில் சிறுநீா் தொற்றால் குழந்தைகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க குழு அமைத்து கண்காணிக்கப்படும் என்றும், பள்ளிக் குழந்தைகளின் நலன் காக்க ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கட்டாயமாக மருத்துவ முகாம் நடத்தப்படும் என்றும் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் கூறினாா். சென்னை செல்வதற்காக தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் சனிக்கிழமை ஓமலூரில் உள்ள சேலம் விமான நிலையத்துக்கு வந்தாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியது: பள்ளிகளில், குறிப்பாக தனியாா் பள்ளிகளில் குழந்தைகள் சிறுநீா் தொற்றால் அதிகமாகப் பாதிக்கப்பட்டு வருவது கவனத்துக்கு வந்துள்ளது. அதுகுறித்து குழு அமைத்து கண்காணிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், குழந்தைகளை இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு பாடவேளையின்போதும் பத்து நிமிடம் தண்ணீா் அருந்தவும், இயற்கை உபாதைகளுக்கும் நேரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அனைத்துப் பள்ளிகளும் கடைப்பிடிக்க வேண்டும். மாணவா்கள் நலனில் அக்கறையில்லாத பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாணவா்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வக...

படித்ததில் பிடித்தது..

ஆறு வயது சிறுவன் ஒருவன் தன் நான்கு வயது தங்கையை அழைத்து கொண்டு கடை தெருவின் வழியே சென்று கொண்டு இருந்தான். ஒரு கடையின் வாசலில் இருந்த பொம்மைகளை பார்த்து தயங்கி நின்ற தங்கையை பார்த்து, "எந்த பொம்மை வேண்டும்?'' என்றான். அவள் கூறிய பொம்மையை எடுத்து அவள் கையில் கொடுத்து விட்டு ஒரு பெரிய மனிதனின் தோரணையுடன் கடையின் முதலாளியை பார்த்து... ''அந்த பொம்மை என்ன விலை?'' என்று கேட்டான். அதற்கு சிரித்துக்கொண்டே அந்த முதலாளி, ''உன்னிடம் எவ்வளவு உள்ளது?'' என்று கேட்டார். அதற்கு அந்த சிறுவன்.... தான் விளையாட, சேர்த்து வைத்து இருந்த கடல் சிப்பிகளை தன் பாக்கெட்டில் இருந்து எடுத்து கொடுத்தான்! ''இது போதுமா...?" என்று கவலையுடன் கேட்டான். அதற்கு அந்த கடைக்காரர் அவனின் கவலையான முகத்தை பார்த்து கொண்டே...., "எனக்கு நான்கு சிப்பிகள் போதும்!'' என்று மீதியை கொடுத்தார். சிறுவன், மகிழ்ச்சியோடும் மீதி உள்ள சிப்பிகளோடும்.... தன் தங்கையோடு அந்த பொம்மையை எடுத்துக்கொண்டு சென்றான். இதை எல்லாம் கவனித்து கொண்டு இருந்த அந்த கடையின் வேலையாள்.....