Skip to main content

இன்றைய சிந்தனை..


*முன் அனுபவம்தான்'*
..................................

ஒருவன் ஒரு தொழிலில் முன்பு பெற்ற அனுபவமே அவன் தொழில் திறனை வளர்க்க உதவும்..

*முன் அனுபவங்களை கொண்டு..தொழிலின் போலித் தன்மையையும், உண்மைத் தன்மையையும் பிரித்து அறிந்து. தொழிலில் ஈடுபட்டால் எந்த தொழிலும் வெற்றி பெறலாம்..*

ஒரு தொழில் தொடங்கும்போது அந்த தொழிலில் ஏற்கனவே நன்கு அனுபவம் பெற்ற சரியானவர்களை  கண்டு அறிந்து அவர்களை பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.

*முந்தைய அனுபவமே ஒருவருக்கு எல்லா வகையிலும் உதவும்..தொழில் முன்அனுபவமே செய்யும் தொழிலின் தனித்தன்மைக்குக் காரணமாகும்.*

ஒரு விவசாயி அந்த ஊரிலிருக்கும் ஞானியிடம் சென்றார். ‘என் தோட்டத்திற்கு ஒரு தோட்டக்காரன் தேவை’ என்றார். ‘

இன்னும் மூன்று மாதம் கழித்து வா. உனக்குத் தேவையான இளைஞனை அனுப்புகிறேன்’ என்றார் ஞானி..

மூன்று மாதங்களுக்குப் பிறகு ஓர் இளைஞனைத் தோட்டப் பணிக்கு அனுப்பி வைத்தார்.

தனக்குக் கிடைத்த பணியாளர் மலர்களில் ஒன்றையும் பறிக்காமல் நேசிப்பதையும், ஒரு இலையும் விடாமல் நீரூற்றுவதையும், சருகுகள் மீது கால் படாமல் நடந்து கொண்டு இருப்பதையும் கண்டு மனம் மகிழ்ந்தார் அந்த விவசாயி..

ஞானியிடம் சந்தித்து நன்றி சொல்லி விட்டு,,''எதற்காக இவரை அனுப்ப உங்களுக்கு மூன்று மாதங்கள் தேவைப்பட்டது என நான் தெரிந்து கொள்ளலாமா?’ என்று கேட்டார்.

நான் உரிய நபரைத் தேர்ந்தெடுத்து மூன்று மாதங்கள் காகிதப் பூக்கள் செய்கிற தொழிற் சாலைக்குப் பணிக்கு அனுப்பினேன்.

அங்கே வாசனை அற்ற பொய் மலர்களைப் பார்த்தவனுக்கு உயிர் உள்ள மலர்களுடன் பழகுவதில் களிப்பும், ருசியும் ஏற்பட்டது..

அவன் இந்த அழகிய பூ, செடிக்கு மட்டுமே சொந்தம் என கருதி அதைப் பறிக்காமல், வாடவிடாமல் செடிகளை பாதுகாத்தான்...

ஆம்.,போலியிலிருந்து உண்மையைப் புரிந்து கொள்ளும் போதுதான் அது வரமாக வாய்க்கிறது’ என்றார் ஞானி.

ஆம்.,நண்பர்களே..,

*அனுபவமும் எந்த செயலிலும் முக்கியம்... அனுபவங்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று கேட்பவரும் இருக்கவே செய்கின்றனர். உண்மைதான்.*

*அனுபவம் மட்டும் இருந்தால் போதாதுதான். அதைத் தொடர்ந்து உபயோகமாக பயன் படுத்த வேண்டும்.*

*நாம் எதையும் கற்றுக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.💐🙏🏻🌹*

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Very nice motivating thought mam

    ReplyDelete
  3. என்ன தல நமக்கு மட்டும் விடிவு காலம் இல்லையா

    ReplyDelete
  4. சிறப்பாசிரியர் பணிநியமனம் முடிச்சாச்சு

    முதுகலை ஆசிரியர் பணி நியமனம் நடக்கப்போகிறது

    கணிணி ஆசிரியர் தேர்வு பட்டியல் விட்டாச்சு

    அரசு கலைக்கல்லூரி உதவி பேராசிரியர் நியமனப் பணிகள் நடைப்பெறுகிறது

    அப்படியே தற்சமயம் இருக்கும் இடைநிலை பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களையும் நிரப்பாட்டீங்கனா நன்றாக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. அத மட்டும் பண்ணவே மாட்றாங்க அருள் சார்

      Delete
    2. இவங்க நியமனத்தேர்வுக்கான பாடத்திட்டம் நியமன முறை அனைத்தும் வெளியிட்டு அதற்கு கருத்து கேட்டு பொறுமையா குழு அமைத்து செய்யட்டும் அதற்கு முன் இருக்கும் காலிபணியிடத்தை நிரப்பட்டும்

      சரிதானெ

      Delete
    3. பண்ணமாட்றாங்களே அருள் சார்

      Delete
    4. நம்மை மட்டும் நிம்மதியாக உறங்க விடமாட்டார்கள் போல அருள் நண்பரே

      Delete
  5. வணக்கம் அட்மின் சகோதரி. இன்றைய கருத்து மிகவும் அருமை.

    ReplyDelete
  6. ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தீ விபத்து. 3 லட்சம் ரூபாய் அளவிலான பொருட்கள் எரிந்து நாசம்... Trb chairman பேட்டி

    ReplyDelete
  7. எல்லாரோட வயித்தெரிச்சல் சும்மா விடுமா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள். கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கள...