Skip to main content

Posts

வலிகள்..

வலிகளே நல்ல வழிகாட்டி...!"* வலிகளை ஏற்றுக்கொள்ளாத வரையில் வாழ்க்கையில் வளங்களைக் காணமுடியாது. பெரும்பாலான வெற்றியாளர்களின் சாதனைகளை உரம் போட்டு வளர்ப்பதே அவர்களின் பெருந் தோல்விகளும், பொறுக்க முடியாத வலிகளும்தான்... வலி வந்தபோதுதான் நாம் இந்த பூமிக்கு வருகிறோம். வலியோடுதான் நம் தாய் நம்மைப் பிரசவிக்கிறாள். வலிகளால் நிரப்பப்பட்டதுதான் இந்த வாழ்க்கை... உடற்பயிற்சி செய்யும்போது ஏற்படும் வலிகளைப் பொறுத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் பயிற்சி செய்யும்போதுதான் அழகான உடற்கட்டைப் பெறமுடிகிறது... இப்படித்தான் இந்த வாழ்க்கையிலும் வலிகளை ஏற்றுக்கொள்ளும்போதுதான் வளமான வாழ்க்கை வாழ முடியும்... 'வலியை அனுபவியுங்கள்'; அதை பரிபூரணமாக உணருங்கள், ஒரு கட்டத்திற்குப் பின், அந்த வலியிலிருந்து நீங்கள் விலகி நின்று கவனிக்க ஆரம்பித்து விடுவீர்கள்... *'வலி குறைந்த பின், அதற்கான தீர்வு எளிதாகிவிடும்', வலி என்பது ஒரு துன்பம். அந்த துன்பம் ஓர் எச்சரிக்கை; அது ஒரு வழிக்காட்டியும் கூட...!* வலி நம்மை நம் சூழ்நிலைகளுக்கு ஏற்ப வாழத் தூண்டி, அதன் மூலம் சுய மேம்பாட்டிற்கு வழிகாட்டும்... நமக்கு ஏற்படும்...

பிளஸ்-2 வகுப்புகள் நடத்துவதில் சிக்கல் : 7-ந்தேதிக்கு பிறகு பள்ளிகளை மூட திட்டம்? தமிழக அரசு பரிசீலனை

    கொரோனா பரவலால் பிளஸ்-2 தேர்வை ஜூன், ஜூலை மாதத்துக்கு தேர்வு தள்ளிப்போகலாம் என்று கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. பிளஸ்-2 வகுப்புகள் நடத்துவதில் சிக்கல்: 7-ந்தேதிக்கு பிறகு பள்ளிகளை மூட திட்டம்? தமிழக அரசு பரிசீலனை. கடந்த ஆண்டு கொரோனா தொற்று வேகமாக பரவியதையடுத்து பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப் பட்டன. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடந்து வந்தது. ஆனால் ஜனவரி மாதம் 19-ந்தேதி முதல் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 ஆகிய மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்தன. கொரோனாவுக்காக பல விதிமுறைகளை பின்பற்றி வகுப்புகளை நடத்தினார்கள். ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஷிப்ட் அடிப்படையில் வகுப்புகள் நடந்தன. அதன்பிறகு சில நாட்கள் கழித்து 9-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்த நிலையில் 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டார். அதன்பிறகு அவர்களுக்கான நேரடி வ...

TODAY'S THOUGHT..

 மருத்துவமனையிலிருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்புகையில் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து என் தெரு முழுக்கவும் ரோஜா சாமந்தி பூக்களின் இதழ்கள் சிதறிக்கிடந்தன. தூரத்தில் எங்கோ பறையொலி கேட்டது. யாராயிருக்கும்? என்று யோசித்துக் கொண்ட தெருவில் மெல்ல நுழைந்தேன். பெரியவர் கோவிந்தன் வீட்டு வாசலில் நிறைய மலர்களின் இதழ்கள்... ஒரு வேளை பெரியவர்..? ச்சே இருக்காது. அப்படி இருந்திருந்தால் எனக்கு தகவல் வந்திருக்குமே. அப்போ அவர் வீட்டில் குடியிருக்கும் யாராவது...! வாசலில் வண்டி நிறுத்தும் போதுதான் கவனித்தேன் தெருவின் எல்லா பகுதியிலுமே பூவிதழ்கள். புரியாமல் வீட்டிற்குள் நுழைந்தேன். ஷோபாவில் சப்பணமிட்டு அமர்ந்திருந்த பையன், "ஹாய்! டாடி" என்று சொல்லிவிட்டு மடியிலிருந்த புத்தகத்தில் மீண்டும் கண் செலுத்தினான். லஞ்ச் பையை வாங்கிய மனைவியிடம் கேட்டேன். "யாரு"? "யாருன்னா"? "தெருவெல்லாம் பூவா இருக்கே, அதான் யாருன்னு கேட்டேன்".   மனைவி சிரிக்க மகன் சொன்னான் "அப்பா ...கட்சி வேட்பாளரு ஓட்டுக் கேட்க வந்தாரு. நம்ம வீட்டுக்குள்ளேயே வந்துக் கேட்டாருப்பா...

குறிப்பிட்ட காலத்திற்குள் உபரி ஆசிரியர்களுக்கு பணி: ஐகோர்ட் கிளை உத்தரவு.

  உபரி ஆசிரியர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் பணி வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர் நியமனங்களை அங்கீகரிக்க மறுப்பதை எதிர்த்தும், அங்கீகரிக்கக் கோரியும் ஐகோர்ட் மதுரை கிளையில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.  இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: கட்டாய கல்வி சட்டப்படி ஆசிரியர் - மாணவர் விகிதம் 1:30 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். பணியிடம் என்பது ஒவ்வொரு பள்ளியையும் தனி அலகாக பார்க்க வேண்டும். பல பள்ளிகளை சேர்த்து ஒரே அலகாக பார்க்கக் கூடாது. உபரி ஆசிரியர் பணியிடம் ஏற்பட்டால், குறிப்பிட்ட காலத்திற்குள் அந்த உபரி ஆசிரியருக்கு பணி வழங்க வேண்டும். அதன் பிறகும் உபரி ஆசிரியர்கள் இருந்தால் அவர்களை மாவட்டத்தில் உள்ள பிற பள்ளிகளில் நிரப்ப வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் அக்.15க்குள் நிரப்பும் பணியை முடிக்க வேண்டும். 2 மாதத்திற்குள் உபரி ஆசிரியர் பணியிடங்களை கணக்கெடுத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த உத்தரவுகளை நிறைவேற்றியது குறித்து, பள்ளி கல்வித்துறை சார்பில் அ...

இன்றைய சிந்தனை..

அயல் நாட்டில் மது அருந்தி கலாட்டா செய்த குற்றத்திற்காக மூவர் கைது செய்யப்பட்டனர்...! ஒரு ரஷ்யன்.. ஒரு சீனன்.. ஒரு தமிழன்.. அவர்களுக்கு 50 சவுக்கடிகள்.. தண்டனையாக அளிக்க உத்தரவிடப்பட்டது..! ஆனால் அதற்கு முன்..  அவர்கள்  வேண்டுவது 'இரண்டு' செய்யப்படும் என சொல்லப்பட்டது..! முதலில் ரஷ்யன்..!! "எனக்கு.. 50 சவுக்கடிகளில் பாதியாக குறைத்து.. 25 ஆக கொடுங்கள்..!" என்றான்..! ஒப்புக்கொள்ளப்பட்டது..! இரண்டாவது என்ன..? என்று கேட்டனர்..! "என் முதுகில்.. ஒரு பெரிய தலையணை ஒன்றை கட்டுங்கள்..!" என்றான்..!  அவ்வாறே செய்யப்பட்டது..!! பத்து சவுக்கடியில் தலையணை கிழிந்து...  அவன் பலமான காயத்துக்கு ஆளானான்..! அடுத்து சீனன்..!! "எனக்கும் 50 சவுக்கடியில்.. பாதியாக குறைத்து 25 அடி கொடுங்கள்" என்றான்..! ஒப்புக்கொள்ளப்பட்டது..!!  இரண்டாவது... "என் முதுகில் இரண்டு தலையணைகளை கட்டுங்கள்..!" என்றான்..! அவ்வாறே செய்யப்பட்டது..! 15 சவுக்கடிகளில் தலையணைகள் கிழிந்து..  அவன் முதுகு பிளந்தது..!! அடுத்ததாக தமிழன்..! அவன் அமைதியாக சொன்னான்.. "எனக்கு 50 சவுக்கடியை... 75 ஆக உய...

உபரியாக உள்ள ஆசிரியர்களை காலியாக உள்ள தேவைப்படும் பள்ளிக்கு அக்டோபர் -15 க்குள் பணி மாறுதல் செய்ய உத்தரவு!

  அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை காலியாக உள்ள தேவைப்படும் பள்ளிக்கு அக்டோபர் -15 க்குள் பணி மாறுதல் செய்து நவம்பர் மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவின் நகல். Click here to download pdf

நிம்மதியை தேடி..

*தொலைத்த* அத்தனையிலும் துரோகத்தின் சாயல்.... *கிடைத்த* அத்தனையிலும் நிம்மதியின் சாயல்....!!! உன் எண்ணம் விண்ணைத் தொட வேண்டுமென்றால்..... உன் வியர்வை மண்ணைத் தொட வேண்டும்....!!!!! அச்சம் இருக்கும் வரை முன்னேற்றத்திற்கு இடமில்லை..... முயற்சி இருக்கும் வரை பின்னடைவுக்கு இடமில்லை..... தன்னம்பிக்கை இருக்கும் வரை தோல்விக்கு இடமில்லை.....!!!! ஏமாற்றம் வலியாய் தெரிந்தாலும்..... நல்வழியைக் காட்டும் வாழ்க்கைக்கு...!!!! கெட்டவன் சாகும் போன்ற தான் கஷ்டப்படுவான்.... நல்லவன் சாகுற வரைக்கும் கஷ்டப்படுவான்....!!!! நிஜங்கள் எழுதும் கதையில்..... நினைவுகள் மட்டுமே இங்கு கதாபாத்திரங்கள்.....!!!! வலிகளைத் தாங்கும் பொறுமையும்..... அதைக் கடந்து செல்ல சிறு புன்னகை இருந்தாலே போதும்.... எதுவுமே பெரிதாகத் தெரியாது....!!!! நீங்கள் பெரிய வெற்றியை அடையப் போகிறீர்கள் எனில்.... இரண்டு விஷயங்கள் நடந்தே தீரும்....!!! ஆரம்பத்தில் தோல்வியை மட்டுமே காண்பீர்கள்..... உங்கள் முயற்சி அதிகம் கேலி செய்யப்படும்....!!;! தைரியத்தின் முதல் சோதனை.... தோல்வியில் மனம் தளராமல் இருப்பது தான்....!!!!! நம்மை மிகச் சரியாக அறிந்தவர்கள்........

மாணவர்களுக்கு ரகசிய திட்டம் ஒன்று உள்ளது - அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு

    12 -ஆம் மாணவர்களுக்கு ரகசிய திட்டம் ஒன்று உள்ளது - அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு!- காணொளி காட்சி https://youtu.be/g9WbOiesaWU

பணம்..

பலரின் ஆறாத காயங்களுக்கு காரணம் மனங்கள் மட்டுமல்ல பணமும் தான்.! உயிர் இருக்கும் உறவுகளும் நட்புகளும் கூட உயிரற்று போகிறது உயிரில்லாத இந்த பணத்தால். இந்த உலகில் உறவுகளை பார்க்க மட்டுமல்ல.. கடவுளை பார்க்க கூட பணம் தேவைப்படுகின்றது. பயணம் இல்லாமல் கூட வாழ்க்கை இருக்கலாம் ஆனால் பணம் இல்லாமல் வாழ்க்கை இல்லை. பணத்தால் கடிகாரத்தை வாங்கி விட முடியும் ஆனால் நேரத்தை வாங்க முடியாது என்பதை என்றும் நினைவில் வைத்திருங்கள்.   பணத்தால் மெத்தை கட்டில்களை வாங்கி விட முடியும் ஆனால் நிம்மதியான தூக்கத்தை வாங்கிவிட முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். தாயின் கருவறையில் இருந்து வெளிவரவும் பணம் இறுதியில் கல்லறைக்கு போகவும் பணம். இந்த பணத்தால் அழிந்தது மனிதர்களின் நல்ல குணம். வாழ்க்கையில் ஒருவித மகிழ்ச்சிக்கு பணம் ஒரு தேவை வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு பணம் மட்டுமே தேவையில்லை. பணம் சில சமயம் நண்பனை எதிரியாகும்.. எதிரியை நண்பனாக்கும். பெற்றுக்கொள்ள இரு கைகள் நீண்டிருக்க கொடுத்துச்செல்ல ஒரு கையும் நீள்வதில்லை. குணம் இல்லாதவருக்கு இவ்வுலகில் இடமில்லை என்பது சென்று.. பணமில்லாதவருக்கு இவ்வுலகில் இடமில்லை என்றாகிவ...

தேர்தலுக்கு பிறகு மீண்டும் ஊரடங்கு ? தமிழக அரசு தொடர் ஆலோசனை

  தமிழகத்தில் தேர்தலுக்கு பிறகு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக சுகாதாரத்துறையினர் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தேர்தலுக்கு பிறகு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக சுகாதாரத்துறையினர் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 500-க்கும் கீழ் இருந்த நிலையில், தற்போது தினசரி பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் அதிகமாகியுள்ளது. குறிப்பாக சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர், தஞ்சை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. பள்ளி, கல்லூரிகள் திறப்பு , தேர்தல் பிரசாரத்தால் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனை தடுக்கும் வகையில் ஏப்ரல் 2-வது வாரம் முதல் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக இரவு நேர ஊரடங்கு, தனியார் துறை ஊழியர்களை வீட்டில் இருந்து பணியமர்த்தல் ஆகியவை அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சென்னை, கோவை, செங்கல்ப்பட்டு உள்ளிட்ட கொரோனா பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வ...

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள். வெளியான திடீர்அறிவிப்பு.!!!

    தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார் தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்த வேண்டிய அவசியம் தற்போது இல்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து...

இயற்கை..

 மனிதன் தனது அறிவுக்கூர்மையால் எவ்வளவோ சாதித்தாலும், இயற்கை ஒரு சிலுப்பு சிலுப்பினாலே நிலைகுலைந்து போகும் சூழல் இன்றுவரை நீடிக்கிறது. இதோ, தற்போது மணல் புயல் தனது விளையாட்டைக் காட்டியதில் உலக வர்த்தகமே ஸ்தம்பித்துள்ளது. நம் அறிவுக்கூர்மையின் அடையாளமாக அமைந்திருப்பது சூயஸ் கால்வாய். மத்திய தரைக்கடற்பரப்பையும், செங்கடலையும் இணைக்கக்கூடிய சுமார் 196 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த சூயஸ் கால்வாய், முழுக்கமுழுக்க மனித உழைப்பால் உருவாக்கப்பட்டது. தினசரி உலக வர்த்தகத்தில் 12% இதன்வழியாகத்தான் நடந்துவருகிறது. இந்த கால்வாயில் நாளொன்றுக்கு 50 கப்பல்கள்வரை பயணிக்கின்றன. இந்த கால்வாய் இல்லையென்றால் ஆப்பிரிக்காவையே ஒரு சுற்று சுற்றித்தான் கப்பல்கள் பயணிக்க வேண்டியிருக்கும். அத்தகைய பயண நேரத்தை வெகுவாகக் குறைப்பதால் இக்கால்வாய், வர்த்தக உலகில் முக்கியத்துவம் பெறுகிறது.  கடந்த செவ்வாயன்று காலையில், தைவான் நாட்டைச்சேர்ந்த எவர்கிரீன் என்ற பிரமாண்டமான வர்த்தகக்கப்பல் (220,000 மெட்ரிக் டன் எடை, 1,312 அடி நீளம்) இந்த கால்வாயைக் கடந்துகொண்டிருந்தபோது பலமான மணல் புயல் வீசியிருக்கிறது. இந்த மணல் புயல் குற...

பொதுத்தேர்வுக்கு முன் மாடல் தேர்வு : பெற்றோரிடம் வலுக்கிறது எதிர்பார்ப்பு

    பொதுத்தேர்வு நடத்தும் முன்பு, மாவட்ட அளவில் வினாத்தாள் தயாரித்து, மாடல் தேர்வு நடத்தினால், மாணவர்கள் கற்றல் நிலை தெரியவரும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, வழக்கமாக அரையாண்டு தேர்வுக்கு முழு பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் இடம்பெறும்.இதற்கு பிறகு, மூன்று திருப்புதல் தேர்வுகளை மாணவர்கள் சந்தித்த பிறகு, பொதுத்தேர்வு எழுதுவர்.  ஆனால், கொரோனா தொற்று பரவுவதால், பிளஸ் 2 மாணவர்களுக்கு, கடந்த ஜன.,ல் தான் பள்ளிகள் திறக்கப்பட்டன.ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் முழுமையாக பங்கேற்காததால், பள்ளி திறந்த பிறகு தான், பாடங்கள் கையாளப்பட்டன. தற்போது சிலபஸ் முடிக்கப்பட்ட நிலையில், செய்முறை பொதுத்தேர்வுக்கு, அறிவிப்பு வெளியிடப்பட்டது.தேர்தலுக்காக பள்ளிகள் ஒருவாரம் மூடப்பட்டிருக்கும்.  அதன் பின், மாவட்ட அளவில் ஆசிரியர் குழுக்களை கொண்டு வினாத்தாள் தயாரித்து, மாடல் பொதுத்தேர்வு நடத்த வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.பெற்றோர் சிலர் கூறுகையில், ' பிளஸ் 2 மதிப்பெண்கள் கொண்டு தான், உயர்கல்வியில் பாடப்பிரிவுகள் தேர்வு செய்ய முடியும். மே மாதம் தேர்வு நடத்த, அ...

உலகம் போலியானது..

 ஒரு மருத்துவர், நோயாளி ஒருவருக்கு அவசர சிகிச்சை தேவைப்படுவதாக அழைக்கப்பட்டிருந்ததால், வேகமாக மருத்துவமனைக்குள் நுழைந்தார்... விரைவாக தன் உடைகளை மாற்றிக்கொண்டு சிகிச்சைப் பிரிவுக்கு சென்று கொண்டிருந்தார்... அங்கே சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய இளைஞனின் தந்தை மருத்துவரின் வரவுக்காக காத்துக்கொண்டிருந்தார். மருத்துவரைக் கண்டதும் #கோபமாக, "என் மகன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான்... ஏன் நீங்கள் இங்கு வர இவ்வளவு தாமதம்? உங்களுக்கு பொறுப்புணர்ச்சி இருக்கிறதா?" என்று கதறினார். மருத்துவர் புன்னகையுடன், "மன்னியுங்கள், நான் மருத்துவமனையில் இல்லை... எனக்கு அழைப்பு வந்ததும் என்னால் இயன்ற அளவு விரைந்து வந்தேன்... சற்று #பொறுமையாக இருங்கள்" என்று கூறினார். "பொறுமையாக இருக்கவா?" அந்த தந்தை மேலும் ஆத்திரத்துடன், "உங்கள் மகன் இவ்வாறு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தால் நீங்களும் பொறுமையாக இருப்பீர்களா? உங்கள் மகன் இறக்க நேர்ந்தால் என்ன செய்வீர்கள்" என்று கொந்தளித்தார். மருத்துவர் சிரித்த முகத்துடன், "எங்களால் இயன்ற அளவு முயற்சி செய்கிறோம், நீங்களும் கடவுளிட...

தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு: ஐகோர்ட் தடை

அரசுப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பொது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை ஏப்.,30 க்குள் நடத்த தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் அமர்வு இடைக்காலத் தடை விதித்தது. ராமநாதபுரம் மாவட்டம் கிடாதிருக்கை அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஜேக்கப் ஏற்கனவே தாக்கல் செய்த மனு:தலைமையாசிரியர்களுக்கு முதலில் பொது இடமாறுதல் கலந்தாய்வு, பின் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவது வழக்கம். 2020 ல் கொரோனா ஊரடங்கால் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தவில்லை. 2021ல் பொது இடமாறுதல் கலந்தாய்வு மூலம் சொந்த மாவட்டத்திற்கு செல்லும் எதிர்பார்ப்பில் இருந்தேன். பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்தாமல், பொது பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டது. பணியில் மூத்த தலைமையாசிரியர்கள் நடப்பு கல்வியாண்டில் பொது இடமாறுதல் கவுன்சிலிங்கை எதிர்பார்த்திருந்தனர். அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அரசின் நடவடிக்கை உள்ளது. இதில் விதிமீறல் உள்ளது. உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பொது பதவி உயர்வு கலந்தாய்விற்கு தடை விதிக்க வேண்டும். பொது இடமாறுதல் கலந்தாய்வு ...

இன்றைய சிந்தனை..

 ஒரு செயலை செய்வதற்கு முன் அதை ஏன்.? செய்ய வேண்டும் என்ற கேள்வியை உங்களிடம் கேளுங்கள்.! உங்களை நீங்கள் புரிந்து கொண்டால் தான்.. பிறரை உங்களால் புரிந்து கொள்ள முடியும்.! நீங்கள் எந்த அளவிற்கு மன உறுதியுடன் இருக்கிறீர்களோ.? அந்த அளவிற்கு வாழ்க்கையில் முன்னேறலாம். எண்ணங்கள் என்னும் மந்திர சாவியை சரியாக பயன்படுத்தினால்.. திறக்காத கதவுகளையும் திறக்க முடியும்.! அடுத்தவரை குறை சொல்வதை நிறுத்தும் போது தான் உண்மையான மகிழ்ச்சியை உணர தொடங்குவீர்கள். பகை எண்ணங்களுக்கு சக்தி கொடுப்பது வீட்டிற்குள் விஷ செடிகளை வளர்ப்பதற்கு சமம்.! பகையை வளர்த்து சக்தி பெறாமல்.. அன்பை வளர்த்து சக்தியை பெறுங்கள். உங்களை தாழ்த்திக்கொண்டு இன்னொருவரை உயர்வாக பேச வேண்டும் என்று அவசியம் இல்லை.! மிக பெரிய தோல்வியில் தான்.. மிக பெரிய வாய்ப்புக்கள் ஒளிந்திருக்கிறது. சந்தேகம் தரும் எண்ணங்களை நீக்கி.. நம்பிக்கை தரும் எண்ணங்களை சேர்த்தால்.. வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.!

கெட்ட கொழுப்புக்களை கரைக்கும் உணவு வகைகள் என்ன தெரியுமா?

  உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதால் தான். அதிலும் தற்போது கடைகளில் அனைவரும் விரும்பி சாப்பிடப்படும் சுவைமிக்க உணவுப்பொருட்கள் அனைத்திலும், கொழுப்புக்கள் தான் பெருமளவில் நிறைந்துள்ளன. பார்லி: தானியங்களுள் ஒன்றான பார்லியில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், இதனை உண்டால், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அதிகரிப்பது தடைபடுவதோடு, கொலஸ்ட்ராலும் கரைந்து விடும். கத்திரிக்காய்: கத்திரிக்காயில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதை விட, கலோரிகளே இல்லை என்று சொல்லலாம். ஆனால் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இதனை உட்கொண்டால், உடலில் கொலஸ்ட்ரால் உறிஞ்சப்படுவது குறைக்கப்படும். மீன்: மீன்களில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதால், மீன்களை அதிகம் உட்கொண்டால், கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் சேர்வதை தவிர்க்கலாம். ஆகவே மீன்களில் சால்மன் மற்றும் டூனா போன்றவற்றை சாப்பிட்டு, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறையுங்கள். நட்ஸ்: நட்ஸில் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளதால், இது கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும். ஆகவே ஸ்நாக்ஸ் நேரத்தி...

அயல்நாட்டுக்காரி..

ஒரு முறை #நேருவிடம் சில அமைப்பினர் மல்லுக்கு நின்றார்கள், அந்த #தெரசா மதமாற்றம் செய்கின்றார் அவரை நாட்டை விட்டு வெளியேற்று என குட்டிகரணம் அடித்தார்கள்.. #நேரு அமைதியாக சொன்னார், "வாருங்கள்  செல்வோம் அப்படி அவர் மதமாற்றம் செய்தால் இன்றே அனுப்பிவிடுவோம்" என சொல்லிவிட்டு #கல்கத்தா விரைந்தார்.. #அந்த_கோஷ்டிக்கு மகிழ்ச்சி தாளவில்லை, செல்வோம் அங்கே அந்தம்மா #ஞானஸ்நானம் கொடுத்துகொண்டிருக்கும், இன்றே தூக்கிவிடலாம் என மகிழ்வோடு சென்றார்கள்.. நேரு அவர்கள் உள்ளே நுழைய அக்கும்பலுக்கு அதிர்ச்சி காத்திருந்தது, அங்கே #தொழுநோயாளிகள் புண்களுக்கு சிலர் மருந்து இட்டுகொண்டிருந்தனர், சிலர் முதியவர்களுக்கு உணவு ஊட்டினர், சிலர் அவர்களை குளிப்பாட்டி கொண்டிருந்தனர்.. சீழ்பிடித்த அந்த நோயாளிகளை, மற்றவர்கள் அருகே செல்லும் அந்த வியாதிக்காரர்களை எந்த கூச்சமுமின்றி அவர்கள் பராமரித்து கொண்டிருந்தார்கள். ஜெபமாலையும், கர்த்தராகிய இயேசு வாழ்க, #அல்லேலூயா என்ற சத்தம் கேட்கும் என சென்றவர்களுக்கு கடும் அதிர்ச்சி.. நேரு கேட்டார் "இந்த நோயாளிகள் எந்த நாட்டுக்காரர்கள்".. #அந்த அமைப்பினர் சொன்னது "நம்...

திட்டமிட்டபடி பிளஸ் 2 பொதுத்தேர்வு..

    தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு திட்டமிட்டபடி மே 3-ஆம் தேதி தொடங்கும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மாா்ச் மாதம் முதல் பள்ளிகள் காலவரையற்று மூடப்பட்டன. இதையடுத்து மாணவா்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, இணையவழி, கல்வித் தொலைக்காட்சி மூலமாக பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்தன. அதன்பின்னா் கரோனா தாக்கம் குறைந்ததால், பொதுத்தேர்வை எழுதும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு கடந்த ஜனவரி 19-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.  இதற்கிடையே மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. தொடா்ந்து மே 3-ஆம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கி மே 21-ஆம் தேதி நிறைவடையும் என அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 6-ஆம் தேதி நடக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ஆம் தேதி எண்ணப்படுகின்றன. இதனால் அதற்கு மறுநாளான மே 3-ஆம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு திட்டமிட்டபடி தொடங்கப்படும...

யாரிடமும் கோபமே படாத ரகசியம்..!!

யார் எப்படி நடந்து கொண்டாலும் கோபமே படாதவர் அந்த துறவி. அவரை அவமானப்படுத்தினாலும் கூட கண்டுகொள்ள மாட்டார். பலர் எப்படி எப்படியோ முயற்சி செய்தும் அவரைக் கோபப்படுத்தவே முடியவில்லை! எப்படி இவரால் இருக்க முடிகிறது?என்று அந்த ரகசியத்தை அறிந்து கொள்வதில் அவரின் ஒரு சிஷ்யருக்கு ஆர்வம். தன் கேள்வியை துறவியிடமே கேட்டு விட்டார். துறவி அவரிடம் பொறுமையாக தான் யாரிடமும் கோபமே படாத ரகசியத்தை விளக்கினார். “ஒரு ஏரியில் காலியான படகில் அமர்ந்து தியானம் செய்வது என் நெடுநாள் வழக்கம். அப்படி ஒருமுறை தியானத்தில் இருந்தபோது நான் அமர்ந்திருந்த படகை வந்து முட்டியது ஒரு படகு." என் தியானம் கலைந்தது. ‘இப்படி அஜாக்கிரதையாக படகை முட்டவிட்டது யார்?’ என்று கோபமாகக் கண்களைத் திறந்து பார்த்தால்,அது ஒரு வெற்றுப்படகு! காற்றுக்கு அசைந்து அசைந்து வந்து நான் தியானம் செய்த படகு மீதி மோதியிருக்கிறது. என் கோபத்தினை அந்தப் படகிடம் காட்டி எதுவும் பிரயோஜனம் உண்டோ சீடனே? யாராவது என்னைக் கோபப்படுத்தும்போது எனக்கு அந்த சம்பவம் நினைவுக்கு வரும். இதுவும் "வெற்றுப் படகுதான்" என்று அமைதியாகி விடுவேன்” என்றார். கோபத்தின் ப...

ஏப் 1ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்.!

  ஏப்ரல் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக ஓரளவு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு தற்போது தான் திரும்பி வருகின்றனர். ஆனால், கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவல் குறித்து ஆலோசிக்க டெல்லியில் பிரதமர்  நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.  மத்திய அமைச்சரவை கூட்டம் முடிந்தப்பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தகுதியுள்ள அனைவரும் உடனடியாக பதிவு செய்து தடுப்பூசி போட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றார்.  விஞ்ஞானிகள் மற்றும் உலக விஞ்ஞானிகள் அமைப்புகளின் ஆலோசனையின்படி, குறிப்பாக COVISHIELD கொரோனா தடுப்பூசியின் 2வது டோஸை 4-வது மற்றும் 8-வது வாரத்தில...

இன்றைய சிந்தனை..

 கணிப்புகளோ, திணிப்புகளோ, நீயே அறிந்தவர் ! ! இனியொருபோதும் வேண்டாம் இந்த பாசிச ஆட்சி . ஒற்றுமை தேசம் சிதைபடாமல் இருக்க ஆட்சிமாற்றம் ஒன்றே தீர்வு.  அதை உம் அருளைக்கொண்டு நடத்திக்காட்டுவீராக ! மாட்டை நேசித்து மனிதனை கொல்வது மாற, மனிதத்தை நேசிப்போர் அரியனை ஏற நீரே அருள் புரியும் ! உம் தீர்ப்பு எதுவாகினும் ஏற்பது எம் பணி. ஆனாலும் கேட்பதும் கெஞ்சுவதும் உமக்கு பிடிக்கும் தானே ! அதனால் கேட்கிறோம். நல்ல தீர்ப்பை வழங்கும் இறைவனே ! பொல்லாதோர் இல்லாத எம் தேசம் மீண்டும் வேண்டும். இந்துவோ, முஸ்லிமோ, கிருத்துவரோ, சீக்கியரோ, பௌவுத்தரோ, எவராகினும் உம் படைப்பே. அனைவரும் இந்தியர் என்ற குடையின் கீழ் இணைந்து வாழ இந்த ஆட்சி உகந்ததல்ல. ஒரு சார்பை தூக்கிப்பிடித்து, மறு சார்பை தாக்கி அழிக்கும் பாசிசம் வேண்டாமே. மக்கள் எப்படியோ அப்படியே ஆட்சியாளன் என்ற உம் வாக்கு நினைவில் வருகிறது. பிழை செய்யும் எங்களுக்கு பிழையான ஆட்சியாளனை தந்துவிடாதேயும் ! வாக்கு எந்திரங்கள் தவறு செய்யலாம். பெட்டிகளும் மாறலாம்.  சூழ்ச்சிகாரனுக்கெல்லாம் மேலான மாயவல்லவன் நீரல்லவா..! தீய சூழ்ச்சியை உம் தூய அற்புதத்தால்  மாற...

G.O -327- கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.

      ORDER : Whereas on considering the recommendations of the expert team of the Doctors and Public Health Specialists and based on the directives of Government of India , Ministry of Home Affairs , State - wide lockdown was extended from time to time and lastly extended till 24.00 hours of 31.03.2021 under the Disaster Management Act , 2005 in G.O. ( Ms ) . No.318 , Revenue and Disaster Management ( DM - IV ) Department , dated : 28.02.2021 .  2. In the G.O. 1 " read above , following the Standard Operating Procedures , Final year Classes for all Colleges / Universities including Arts , Science , Technical , Engineering , Agriculture , Fisheries , Veterinary Colleges were permitted to function from 07.12.2020 . Further , Hostels for the above college students were also permitted .  3.In the G.O. 2nd read above , following the Standard Operating Procedure , all Under Graduate and Post Graduate Classes ( including Diploma Classes ) in all Colleges / Universitie...

இறை..

 நான்  யார்? அதைக் கற்றேன்- இதைக் கற்றேன்- அறிவாளி நான் என இறுமாந்தேன். அதைச் செய்தேன்- இதைச்செய்தேன- சாதனையாளன்  நான் என, சவடால்  விட்டேன். அன்றொரு நாள் அதிகாலை, யாரே தீண்ட திடுக்கிட்டு  விழித்தேன். ஏதோ ஒன்று, ஏளனமாய் எனைப் பார்த்து சிரித்தது. யார் நீ என்றேன்? நீ தான் என்றது அது. நீதான நான் என்றால் பிறகு நான் யார் என்றேன். நான்தான் நீ என்றது. குழப்ப வந்த குட்டிச்சாத்தானா- என கோபமாய் கேட்டேன். நான் எத்தகைய  ஆற்றல் மிக்கவன் -அறிவாளி - என்னையே குழப்புகிறாயா என்று ஏளனமாய் கேட்டேன். அப்படியா சரி என்று அது ஒரு கேள்வி கேட்டது. நீ பெறும் அறிவாளிதானே- உன் அறிவைக்கொண்டு நீ உண்ணும் உணவின் உட்கூறுகளை தனித்தனியே பிரித்து- வைட்டமின்கள் ,தாது உப்புக்கள்,புரதம்  என அந்தந்த உறுப்புகளுக்கு தேவையானதை  தனித்தனியேஅனுப்பி  வைத்திடு என்றது. திடுக்கிட்டேன். உணவின் உள்நுழைந்து உட்கூறு பிரிக்கும் அறிவெனக்கேது. பிரித்தாலும் அந்தந்த உறுப்புகளுக்கு எங்ஙனம் அனுப்புவேன். சற்றே தடுமாறி நின்றேன். மீண்டும் கேட்டது நீ பெறும் ஆற்றல் உள்ளவன் தானே. உன் ஆற்றலைக்கொண்டு, ஒரு ஐந்து ...

நிரந்தர பணிக்கு ஆசிரியர் தேவை!

  அரசு உதவிபெறும் பள்ளிக்கு       ஆசிரியர் தேவை  பணியிடம் : தையல் ஆசிரியர் ( நிரந்தரம்) | பிரிவு : அருந்ததியர் ( SCA ) ஆண் / பெண் கல்வித்தகுதி : +2 with TTC . , Passed ( Needle Work and Dress Making ) தகுதியுடையவர்கள் உடன் விண்ணப்பிக்கவும் .  விண்ணப்பிக்கவேண்டிய முகவரி செயலர் திருமதி ரெ.வள்ளியம்மை ஆச்சி உயர்நிலைப்பள்ளி , பட்டமங்கலம் - 630 204. சிவகங்கை மாவட்டம் .