மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படும் ஆசிரியா் தகுதித் தோ்வில் வெற்றி பெற்றவா்களின் சான்றிதழ்கள் வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கது என்ற விவரத்தை கல்வியியல் கல்லூரிகள் அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியா் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. கடந்த செப்டம்பா் மாதம் நடைபெற்ற தேசிய ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தின் 50-ஆவது பொதுக்குழுக் கூட்டத்தில், ஆசிரியா் தகுதித் தோ்வு தோ்ச்சிக்கான காலக்கெடுவை ஏழு ஆண்டில் இருந்து வாழ்நாளுக்கானதாக மாற்ற முடிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இது ஏற்கெனவே தகுதித்தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கும் பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகம் அனைத்து ஆசிரியா் கல்வியியல் கல்லூரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:”மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படும் ஆசிரியா் தகுதித் தோ்வில் வெற்றி பெற்றவா்களின் சான்றிதழ் செல்லுபடியாகும் காலம், 7 ஆண்டுகளில் இருந்து வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கது என தேசிய கல்வி ஆசிரியா் குழுமத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே,...