Skip to main content

கரப்பான்பூச்சி கோட்பாடு..

*சுந்தர்பிச்சை சொல்லும் 'கரப்பான்பூச்சி' கோட்பாடு* 

ஒரு உணவகத்தில் கரப்பான் பூச்சி ஒன்று எங்கிருந்தோ பறந்து வந்து ஒரு பெண் மீது அமர்ந்து கொண்டது. உடனே அந்தப் பெண் பயத்தில் கூச்சலிட ஆரம்பித்தார். மிகவும் கஷ்டப்பட்டு, அந்த கரப்பானை அவர் மீதிருந்து விலக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். அதுவரை அமைதியாக இருந்த அவருடன் வந்தவர்களுக்கும் இப்பொழுது அந்த பதற்றம் தொற்றிக் கொண்டது.

மிகவும் கஷ்டப்பட்டு அவர் அந்த கரப்பானை தன் மீதிருந்து விலக்கி விட்டார். ஆனால் அந்த கரப்பான் இப்பொழுது வேறொரு பெண் மீது சென்று அமர்ந்து கொண்டது. இப்பொழுது இந்தப் பெண் அதே போல் கூச்சலிட ஆரம்பித்தார். அமைதியாக இருந்த மொத்த உணவகமும் இப்பொழுது அமைதியிழந்து காணப்பட்டது.
இதை பார்த்துக் கொண்டிருந்த பணியாளர் சூழ்நிலையை சரி செய்ய விரைந்தார். இந்த முறை கரப்பான்பூச்சி, பறந்து சென்று அந்த பணியாளர் மீது அமர்ந்து கொண்டது. பணியாளர் தன்னை நிதானித்துக் கொண்டு தன் சட்டையின் மீது அமர்ந்திருக்கும் கரப்பானின் நடத்தையை கவனித்தார். அது தன் நகர்தலை நிறுத்தியதும், தன் விரல்களால் அதை பிடித்து உணவகத்திற்கு வெளியே வீசியெறிந்தார்.
நான் என் காபியைப் பருகிக் கொண்டே இதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். என் மனது இந்த நிகழ்ச்சியிலிருந்து சில கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தது. அவர்களின் அந்த நடத்தைக்கு கரப்பான்பூச்சி தான் காரணமா? அப்படியெனில் அந்தப் பணியாளர் ஏன் அதன் மூலம் அமைதி இழக்கவில்லை? அவர் மட்டும் எந்த ஆரவாரமுமின்றி அதை நேர்த்தியாகக் கையாண்டார். எனவே அந்த பெண்களின் நடத்தைக்கு கரப்பான் பூச்சி காரணம் அல்ல. அந்த கரப்பான்பூச்சி ஏற்படுத்தும் தொந்தரவைக் கையாள முடியாத அவர்களின் இயலாமை தான் அவர்களின் அந்த நடத்தைக்குக் காரணம்.

இதன் மூலம் நான் உணர்ந்தது என்னவெனில், என் தந்தை அல்லது மனைவி அல்லது முதலாளியின் கடுமையான பேச்சு என்னை அமைதியிழக்கச் செய்யவில்லை, அந்த வாக்குவாதத்தை கையாள முடியாத என் இயலாமை தான் என்னைத் தொந்தரவு செய்கிறது. என் அமைதியை குலைக்கிறது. சாலையில் உள்ள போக்குவரத்து நெரிசல்கள் என்னை தொந்தரவு செய்யவில்லை. *ஆனால், அந்த நெரிசல்களைக் கையாள முடியாத என் இயலாமை தான் என்னைத் தொந்தரவு செய்கிறது.* என் வாழ்வில் எந்தவொரு குழப்பத்தையும் எந்தவொரு சிக்கலும் உருவாக்குவதில்லை, அந்த குழப்பங்களுக்கு நான் செய்யும் எதிர்வினைகள் தான் சிக்கல்களை உருவாக்குகிறது. இதன் மூலம் நான் கற்றது வாழ்வில் நான் எதிர்வினை ஆற்றக் கூடாது, பதிலளிக்க வேண்டும் (I should not react in life, I should always respond). நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டு நடக்கும் நிகழ்ச்சிகள் நம்மிடம் உள்ள அனைத்தையும் பறிக்கக் கூடும் ஒன்றைத் தவிர. அது தான் ஒரு சூழ்நிலைக்கு நாம் எவ்வாறு பதிலளிக்கிறோம் என்பதைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம். *வாழ்வில் நமக்கு நடக்கும் விஷயங்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அதற்கு நாம் எப்படி பதிலளிக்கிறோம் என்பதை நம்மால் கட்டுப்படுத்த முடியும். எத்தனைத் தெளிவான பாடமாக அமைந்திருக்கிறது*

கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை அவர்களால் பகிரப்பட்ட இந்தக் கதையை ஆழ்ந்து வாசித்து பயன்படுத்தினால், நீங்கள் இருக்கும் இடத்திலேயே வாழ்க்கையை கொண்டாட துவங்குவீர்கள்! நம் வெற்றியும், தோல்வியும் நம் கைகளில் தான் என்பதை உணர்வீர்கள்!... அட! வெற்றி, தோல்விகளை விட வாழ்க்கையை அனுபவித்து வாழக் கற்றுக் கொள்வீர்கள்!

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
    Replies
    1. Good morning mam.
      PG trb ku age limit enna mam.

      Delete
    2. Gudmrng Ananthi Mam..

      For PG also same criteria only mam, upper age limit is 40 and 5years relaxation for backward classes..

      Delete
  2. Goodmor admin mam. Trb office working or not mam, call not going.

    ReplyDelete
    Replies
    1. Gudnoon Swetha mam..

      TRB office is working, they purposely avoid the calls..

      Delete
  3. இவர்களது ஆட்சியில் தான் பி.எட் கல்லூரிகளை தனியாருக்குத் தாரை வார்த்தார்கள். வயது வரம்பை 57 வரை உயர்த்தி பி.எட் படிக்கலாம் என்று அனைவரையும் பி.எட் கல்லூரிகளில் சொத்துக்களை விற்று பி.எட் படிக்க வைத்து பி.எட் கல்லூரிகளின் சேர்க்கையை உயர்த்தி அவர்களை வாழ வைத்தார்கள். தற்போது தகுதித் தேர்வு என்று ஒன்றைக் கொண்டுவந்து சமீப பாடத்திட்டத்தில் படித்த சிறுவயதினரை மட்டும் (மகத்தான மதிப்பெண் முறையைக் கொண்டுவந்து) வேலைக்கு அமர்த்தும் வகையில் கொண்டுவந்தார்கள். இதிலும் சில வருடங்களுக்கு முன்பு படித்தவர்களுக்கு தகுதித் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றும் பணி கிடைக்கவில்லை. இப்படியே 30 வயதைக் கடந்தவர்களை 40-க்கும் மேலாக ஆக்கிவிட்டு இப்போது நடுத்தெருவில் கொண்டுவந்து நிறுத்தியுள்ளார்கள். எதிர்காலத்தையே நாசமாக்கிவிட்டார்கள். இதில் பலர் நல்ல அனுபவங்களைக் கொண்டிருந்தாலும் நல்ல திறமையானவர்கள் என்று தனியார் பள்ளிகளில் அரசுப்பணிக் கனவோடு பணியாற்றிக் கொண்டிருந்தாலும் அவர்களின் எதிர்காலத்தையே கெடுத்துவிட்டார்கள். ஏன் இப்படி அனைத்திலும் வயிற்றில் அடிக்கிறார்கள்? ஏழைகளுக்கு கனவே அரசுப்பணி தான். அவர்களின் கனவைத் தகர்த்தால்???????

    ReplyDelete
  4. நாங்கள் பி.எட் படித்து முடித்தவுடன் எங்களுக்கு பணிவழங்கியிருக்கலாம்
    அல்லது.
    டெட் பாஸ் (2013)செய்தவுடன் பணிவழங்கியிருக்கலாம்.
    ஏழு வருடங்களாக நாட்களை கடத்திவிட்டு இப்பொழுது வயதைக் காரணம் சொல்லி வாழ்க்கையை வீணடிக்கிறீங்களே இது நியமா???

    ReplyDelete
    Replies
    1. நம்ம வயித்துல அடிச்சு அவங்க வாழ பழகிட்டாங்க

      Delete
  5. என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே

    இருட்டினில் நீதி மறையட்டுமே

    தன்னாலே வெளிவரும் தயங்காதே

    ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே

    ReplyDelete
  6. எப்பொழுதுமே இந்த ஆளும் அரசு பணக்காரர்களுக்கு மட்டும் சாதகமாக செயல்படும்.இந்த மங்குனிகள் ஆளும் வரை இப்படிதான் இருக்கும் தேர்தலில் நாம் இவர்களை ஒழித்து வீட்டுக்கு அனுப்புவோம்.

    ReplyDelete
  7. ஆசிரியர் சமுதாயத்திற்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி. இந்த ஆணையை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...