Skip to main content

Posts

கதை அல்ல நிஜம்😜😜!!

காக்கையும் குருவியும் இரை தேடியது குருவிக்கு நெல்மணி கிடைத்தது காக்கைக்கு முத்து கிடைத்தது நெல்லைத் தின்றுவிட்டது குருவி முத்தை வைத்து விளையாடியது காக்கை எனக்கு அதைக் கொடு என்று அதிகார தோரணையில் கேட்டது குருவி தர மறுத்த காக்கை, மரத்தில் போய் உட்கார்ந்தது காக்கையை விரட்டு என்று மரத்திடம் சொன்னது குருவி. மறுத்தது மரம். மரத்தை வெட்டு என்று மரவெட்டியிடம் சொன்னது குருவி. அவன் மறுத்தான். மர வெட்டிக்கு தண்டனை கொடு என்று பஞ்சாயத்து தலைவரிடம் கேட்டது.மறுத்தார் தலைவர். பஞ்சாயத்து தலைவரை நீக்க அரசனிடம் சொன்னது. அரசன் மறுத்தான். ராஜாவை திட்ட ராணியிடம் சொன்னது.  ராணி மறுத்தாள். ராணியின் ஆடையை கடிக்க எலியிடம் சொன்னது.  எலி மறுத்தது. எலியைக் கொல் என்று பூனையிடம் சொன்னது.  பூனை மறுத்தது. பூனையைக் கடி என்று நாயிடம் சொன்னது. நாய் மறுத்தது. பக்கத்தில் கிடந்த குச்சியிடம் அந்த நாயை அடி என்றது. குச்சி மறுத்தது. தீயிடம் சென்று குச்சியை எரி என்றது. தீ மறுத்தது. கடலிடம் சென்று நெருப்பை அணைக்கச் சொன்னது. கடல் மறுத்தது. யானையிடம் சென்று கடலை குடி என்றது. யானை மறுத்தது. கொசுவிடம் சென்று ...

அரசுப்பள்ளிகளில் காலியாகவுள்ள பட்டதாரி,இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் பட்டியலை ஜூன் 6 க்குள் அனுப்ப உத்தரவு

வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் 824 முதுகலை கணினி ஆசிரியர்கள்!

தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) 2019 - ஆம் ஆண்டு அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 824 முதுகலை கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பினை 01.03.2019 அன்று வெளியிட்டு, கணினி வழி தேர்வாக ஜுன் மாதம் 23,27ஆகிய தேதிகளில் நடத்தினர். பின்னர் இத்தேர்விற்கான தேர்வு முடிவினை ஆசிரியர் தேர்வு வாரியமானது நவம்பர் மாதம் 25 - ஆம் தேதி வெளியிட்டது. பின்னர் சான்றிதல் சரிபார்ப்பானது ஜனவரி மாதம் 8,9,10 ஆகிய தேதிகளில் முடிக்கப்பட்டு, தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலானது ஜனவரி 11 - ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் கணினி ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெறாத சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள் காரணமாக முதுகலை கணினி ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படாமல் இருக்கின்றது. முதுகலை கணினி ஆசிரியர் அறிவிப்பாணைக்குப் பின் 12.06.2019 அன்று வெளியிடப்பட்ட முதுகலை ஆசிரியர் (PGTRB) 2144 பணியிடத்திற்கு தேர்வு நடத்தப்பட்டு கடந்த 12.02.2020 ஆம் தேதியன்று பணியில் அமர்த்தப்பட்டார்கள். ஆனால் வழக்குகள் காரணமாக தெரிவு செய்யப்பட்ட 697 முதுகலை கணினி ஆசிரியர்களுக்கு எந்தவித கலந்தாய்வும் நடைபெறவில்லை. மேலும் க...

எந்த ஆசிரியரும் 21.05.2020 முதல் பள்ளிக்கு வரத் தேவையில்லை

10 - ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளதால் எந்த ஆசிரியரும் 21.05.2020 முதல் பள்ளிக்கு வரத் தேவையில்லை. முதுகலை ஆசிரியர்கள் 26.05.2020 அன்று பள்ளிக்கு வர வேண்டும். (மதிப்பீட்டு பணியை உறுதி செய்ய) விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்

ஒத்திவைக்கப்படுகிறதா 10ம் வகுப்பு தேர்வு?: அமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை

பத்தாம் வகுப்பு தேர்வு நடத்துவது தொடர்பாக பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார். இதையடுத்து, பத்தாம் வகுப்பு தேர்வு ஜூலை மாதம் தள்ளிப் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மார்ச் 25ம் தேதி முதல் தமிழகத்தில் பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது முதல்வர் நேற்று வெளியிட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் இந்த ஊரடங்கு நான்காவது கட்டமாக 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஒத்தி வைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு, பிளஸ் 1 தேர்வில் 3 தேர்வுகள் ஜூன் 1ம் தேதி முதல் நடக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவித்து இருந்தார். இந்நிலையில் நேற்று ஊரடங்கு நீடிக்கும் என்று முதல்வர் அறிவித்துள்ளதாலும், கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதாலும், பெரும்பாலான மாணவர்கள் வெளியூர் சென்று இருப்பதாலும், கிராம மலைப்பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத வர முடியாத சூழல் இருப்பதால் பத்தாம் வகுப்பு தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்று ஆசிரியர்கள், கல்வியாளர்கள், அரசியல் கட்சித்தலைவர் கோரிக்கை வைத்து வருகின்றனர்...

வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் 329 வேதியியல் ஆசிரியர்கள்!

தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) 2019 - ஆம் ஆண்டு அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2144 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பினை 12.06.2019 அன்று வெளியிட்டு, கணினி வழி தேர்வாக செப்டம்பர் மாதம் 27,28,29 ஆகிய தேதிகளில் நடத்தினர். பின்னர் இத்தேர்விற்கான தேர்வு முடிவினை ஆசிரியர் தேர்வு வாரியமானது அக்டோபர் மாதம் 20 - ஆம் தேதி வெளியிட்டது.பின்னர் சான்றிதல் சரிபார்ப்பானது நவம்பர் மாதம் 9, 10 ஆகிய தேதிகளில் முடிக்கப்பட்டு, தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலானது பாடவாரியாக நவம்பர் 20 - ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் வேதியியல் தெரிவுப் பட்டியலில் இடஒதுக்கீட்டு விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை என கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் காரணமாக வேதியியல் பாடம் தவிர்த்து ஏனைய பாடங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 9,10 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடத்தப்பட்டு, 14 பாடங்களை சேர்ந்த சுமார் 1503 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையானது வழங்கப்பட்டது.ஆனால் வழக்குகள் காரணமாக வேதியியல் பாடப்பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 329 முதுகலை ஆசிரியர்களுக்கு எந்தவித கலந்தாய்வும் நட...

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒவ்வொரு தேர்வுக்கும் ஒரு நாள் விடுமுறையில் மே மாதம் நடைபெறும் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

தற்போது: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி! 10ஆம் வகுப்பு தேர்வு கண்டிப்பாக நடைபெறும். . . மே மாதம் 3ஆம் தேதி வரை மத்திய அரசு விடுத்துள்ள ஊரடங்கு முடிந்தவுடன் 10ஆம் வகுப்பு தேர்வு நடத்துவது குறித்து முடிவு செய்யபடும்!- பள்ளிகல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி! கொரோனா நோய் பாதிப்பு காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது : மத்திய அரசு மே 3 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதால் அதன் பிறகு தேர்வு அட்டவணையானது வெளியிடப்படும். மே மாதத்தில் கண்டிப்பாக தேர்வு நடைபெறும். ஒவ்வொரு தேர்வுக்கும் ஒரு நாள் இடைவேளையில் தேர்வு நடைபெறும். ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்பட்டதற்கு பின்னர் , 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறும்

நீங்க என்ன செய்யப்போறீங்க டீச்சர்?- ஆசிரியர்கள் மத்தியில் வைரலாகும் வலைதளப் பதிவு

கரோனா தொற்று அச்சத்தால் பள்ளிகள் கால வரையறையற்று மூடப்பட்டிருக்கின்றன. ஒன்பதாம் வகுப்பு வரை தேர்வு நடத்தாமலே தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்புத் தேர்வுக்கு இன்னமும் தேதி குறிக்கமுடியாத நிலையில் மே மாத இறுதியில் பள்ளிகளைத் திறந்து தேர்வுகளை நடத்தலாமா என்று அரசு சிந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், பள்ளி ஆசிரியர்களோ குழப்பமான மனநிலையில் உள்ளனர். அவர்களின் மனநிலையை அப்பட்டமாக பிரதிபலிக்கும் வகையில், ‘என்ன செய்யப்போறீங்க டீச்சர்?’ என்ற தலைப்பில் ஒரு ஆசிரியர் எழுதிய வலைதளப் பதிவு ஆசிரியர்கள் மத்தியில் இப்போது வைரலாகி வருகிறது. ஆசிரியர்களின் உள்ளக் குமுறலை அப்படியே பிரதிபலிக்கும் அந்தப் பதிவு... ''எதிர்வரும் கல்வியாண்டு ஆசிரியர் சமூகத்திற்கும் சவால் நிறைந்தாக இருக்கப் போகின்றது. கல்வியாண்டு மட்டும் புதிதாக இருக்கப் போவதில்லை... கற்றுக் கொடுக்கும் கல்வியே புதிதாகத்தான் இருக்கப் போகிறது. காலாண்டுகூட இல்லாத ஆண்டாக மாறலாம். அதுமட்டுமா! நெருக்கமாய் அழைத்து புத்தகத்தில் உள்ள கேள்விகளுக்குப் பதில் சொன்ன ஆசிரியர்கள் இனி, குழந்தைகள் நெருங்குவதை அச்சமின்றி அனுமதிப்பார்களா? ப...

படித்ததில் பிடித்தது..

20 வருட கடும் போராட்டத்துக்கு பின் வியட்நாம் அமெரிக்காவை வென்றது..(1955-1975) போர் முடிந்ததும் ஒரு செய்தியாளர் வியட்நாம் அதிபரை பார்த்து கேட்டார்... இது எப்படி சாத்தியம்..??? ஒரு சிறிய தெற்காசிய நாடு..வல்லரசு அமெரிக்காவை தோற்கடித்தது எப்படி??? அதற்கு அந்த அதிபர் அமெரிக்க போன்ற வல்லரசை தோற்கடிப்பது மிகவும் கடினம்.. ஆனால் ஒரு சரித்திர புகழ்பெற்ற மாவீரனின் வீரமும் தீரமும் செறிந்த கதையை படித்தேன்.....அது எனக்குள் எழுப்பிய கனலால்தான் இந்த வெற்றி சாத்தியமாகியது...அவரின் போர் தந்திரங்கள்.. யுக்திகளை எங்கள் போரில் கடைபிடித்தோம்..வெற்றி கிடைத்தது என்றார்... யாரந்த மாவீரன்... பேரரசன்..என பத்திரிகையாளர் வினவ... வேறு யாருமில்லை..  கிழக்காசியாவை வென்ற ராஜராஜ சோழன் தான்...  வியட்நாமில் மட்டும் இப்படி ஒரு மாவீரன் அவதரித்திருந்தால் இந்நேரம் உலகம் எங்கள் கைகளில் இருந்திருக்கும்..என்றார். சில வருடங்கள் கழித்து அந்த அதிபர் இறந்து போனார்... அவரது கல்லறையில் அவரது விருப்பப்படி பொறிக்கப்பட்ட வாசகம்... ""ராஜராஜனின் பணிவான பணியாள் இங்கே ஓய்வெடுத்து கொண்டிருக்கிறார்..."" இப்பொழு...

எந்த வயதில் எந்த மாதிரியான உடற்பயிற்சியை செய்ய வேண்டும் எனத் தெரியுமா?

நம் உடல் வயதிற்கு ஏற்ப மாற்றமடையும். அதனால் தான் ஒரே வகையான உடற்பயிற்சி அனைத்து வயதினருக்கும் பொருந்துவதில்லை. வாழ்வின் ஒவ்வொரு நிலையை அடையும் போது, நீங்கள் செய்யும் உடற்பயிற்சியிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தால், அதற்குரிய சரியான பலனைப் பெறலாம். சரி, எந்த வயதில் எந்த மாதிரியான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது என்று நீங்கள் கேட்கலாம். எனவே தமிழ் போல்ட்ஸ்கை எந்த வயதில் எந்த உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் சரியான நன்மையைப் பெற முடியும் என்று கொடுத்துள்ளது.அதைப் படித்து ஆண்கள் தவறாமல் பின்பற்றி வந்தால், வாழ்நாளின் அளவை நீட்டித்து ஆரோக்கியமாக வாழலாம். 16-19 வயது இந்த வயதில் ஓர் சிறுவன் மெதுவாக ஆணாக மாற ஆரம்பிப்பதால், ஹார்மோன்களின் செயல்பாடு வேகமாக இருக்கும். எனவே இந்த வயதில் பளு தூக்கும் உடற்பயிற்சிகளை செய்வதற்கு பதிலாக, நல்ல விளையாட்டுக்களில் ஈடுபடுவது, அவர்களின் உடலை நெகிழ்வுத்தன்மையுடன் வைத்துக் கொள்ளும். மேலும் விளையாட்டுக்களில் ஈடுபடுவதால் தடகள திறன்கள் மேம்படுத்தப்பட்டு, நல்ல தடகள வீரராக ஆகும் வாய்ப்புள்ளது. 20-30 வயது இந்த வயதில் ஓர் ஆண் தசைகளை வளர்க்கும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்ல...

கரோனா - க்கு பின் TNPSC தேர்வாணையம் சந்திக்க இருக்கும் சவால்கள்

கொரோனா கோளாறு -குழப்பத்தின் உச்சத்தில் கல்வித்துறை

நாளை முதல் அனைத்து அரசு அலுவலகங்கள் இயங்கும்: முகக்கவசத்துடன் பணிக்கு வர உத்தரவு

தமிழகத்தில் திங்கள்கிழமை (ஏப். 20) முதல் அனைத்து அரசு அலுவலகங்களையும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறைந்த எண்ணிக்கையில் சுழற்சி முறையில் முகக் கவசத்துடன் ஊழியா்கள் பணிக்கு வர வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பணிக்கு வருவது எப்படி என்று அரசு ஊழியா்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்படுகிறது. கரோனா தொற்று காரணமாக, தமிழகம் முழுவதும் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில் அத்தியாவசியத் துறைகளான சுகாதாரம், காவல், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, குடிநீா் வழங்கல், உணவுப் பொருள் வழங்கல் ஆகிய முக்கிய துறைகளைச் சோந்த ஊழியா்கள் மட்டுமே கடந்த மாா்ச் 24 முதல் பணிக்கு வருகின்றனா். ஊரடங்கு காலத்திலும் அவா்கள் தொடா்ந்து பணியாற்றுகின்றனா். பிற துறை ஊழியா்கள்: அத்தியாவசியத் துறைகள் அல்லாத பிற துறைகளைச் சோந்த அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதுடன், ஊழியா்களும் பணிக்கு வரவில்லை. இந்த நிலையில், ஊரடங்குக் காலம் மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.அதேசமயம், வரும் திங்கள்கிழமை (ஏப். 20) முதல் ஊரடங்கில் தளா்வு...

விடுமுறை..

உலகம் கண்டிராத விடுமுறை  உலகளவில் முதல் விடுமுறை    குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் விடுமுறை  வீட்டுக்குள்ளே மகிழ்ச்சியைக் காணும் விடுமுறை  வீட்டை விட்டு வெளியில் வரமுடியாத விடுமுறை  வாழ்க்கையைப் பல கோணங்களில் புரிய வைக்கும் விடுமுறை  வாழ்க்கையில் இப்படி இனி வரக்கூடாத ஒரு விடுமுறை  வாகனங்கள் இல்லாத விடுமுறை  பிள்ளைகளுக்கு சிறப்பு வகுப்புகள் இல்லாத விடுமுறை  சுற்றுலா இல்லாத நீண்ட விடுமுறை  சுற்றத்தார் வீடுகளுக்குச் செல்லாத விடுமுறை  திருவிழாக்கள் இல்லாத விடுமுறை  எது எல்லாம் இல்லாமல்  மனிதன் வாழ முடியும் என புரிய வைத்த விடுமுறை செலவுகள் குறைவான விடுமுறை உலகமே நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடிய விடுமுறை  இயற்கையைப் பாதுகாக்கும் விடுமுறை  *இருப்பினும் பெண்களுக்கு இல்லை விடுமுறை* ஏனென்றால் பசிக்கு இல்லை              விடுமுறை 😂

தேர்வுகள், வகுப்புகள் குறித்த புதிய அட்டவணை விரைவில் வெளியிடப்படும் அண்ணா பல்கலைக்கழகம் தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கும் நிலையில், நடப்பாண்டுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள், அடுத்த கல்வியாண்டின் தொடக்கத்தில் நடத்தப்படும் என்று உயர்க்கல்வி துறை அறிவித்து இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக அண்ணா பல்கலைக்கழகம் அதன் கீழ் செயல்படும் என்ஜினீயரிங் கல்லூரிகள் மற்றும் உறுப்பு கல்லூரிகளுக்கு அது தொடர்பாக அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் வளாக கல்லூரிகள்,அதன் கீழ் செயல்படும் இணைப்பு கல்லூரிகளில் அனைத்து இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த வகுப்புகள், செமஸ்டர் தேர்வுகள், திட்ட மதிப்பீடுகள் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது. மீண்டும் வகுப்புகள் தொடங்குவதற்கான தேதி மற்றும் இறுதி செமஸ்டர் தேர்வுகள், திட்ட மதிப்பீடுகள் அந்த சமயத்தில் எப்போது நடக்கும்? என்பது குறித்து புதிய அட்டவணை விரைவில் வெளியிடப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கல்வியாண்டில் விடுமுறையின்றி செமஸ்டர் தேர்வு

'அடுத்த கல்வியாண்டில், காலை, மாலை இரு வேளைகளிலும், விடுமுறையின்றி செமஸ்டர் தேர்வு நடத்தப்படும்' என, உயர்கல்வி துறை அறிவித்துள்ளது. சென்னை பல்கலையும், இந்த தேர்வு முறையை அறிவித்துள்ளது.கொரோனா பரவலை தடுக்க, மே, 3ம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதனால், கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், மே மாதம் நடத்தப்படவிருந்த செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன.'அடுத்த கல்வி ஆண்டின் துவக்கத்தில், முதல் செமஸ்டர் கால ஆரம்பத்தில், தேர்வுகள் நடத்தப் படும்' என, உயர்கல்வி துறை செயலர், அபூர்வா அறிவித்தார். இந்நிலையில், அனைத்து கல்லுாரி மற்றும் பல்கலைகளுக்கு, உயர்கல்வி செயலர், அபூர்வா அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு காரணமாக, தேர்வுகள் மற்றும் சிறப்பு வகுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.இந்த செமஸ்டர் காலத்தில் நடத்த வேண்டிய தேர்வுகளை, அடுத்த கல்வி ஆண்டின் துவக்கத்தில் நடத்துவதற்கு, பல்கலைகளும், கல்லுாரிகளும் திட்டமிட வேண்டும். காலை மற்றும் மாலை என, இடைவேளை இல்லாமல், வரிசையாக அனைத்து தேர்வுகளையும் நடத்த வேண்டும். விடுமுறை இல்லாமல், தேர்வுக...

வீட்டில் இருந்து பணி புரிவதால் 67% இந்தியர்கள் தூக்கமின்மையால் அவதி

இந்தியர்கள் 67 சதவீதம் பேர் வீட்டிலிருந்து பணி புரியும் சூழ லால் தூக்கத்தை தொலைத்து நிம்மதியின்றி கடும் நெருக்கு தலுக்கு ஆளாகியிருப்பது தெரிய வந்துள்ளது. பன்னாட்டு நிறுவனத்தில் பணி புரியும் வர்த்தக மேலாளரான அன்கீத் சிங் (42) வீட்டிலிருந்து பணி புரிவது என்பது மிகவும் சிரமமானதாக உள்ளதாகக் கூறியுள்ளார்.இதற்குமுன் வீட்டிலிருந்து அலுவலக பணி புரிவது என்ற சிந்தனையே இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஊரடங்கு தொடங்கியதிலிருந்து தனக்கு ஓய்வு என்பதே இல்லை என்று குறிப்பிடும் அவர், தினசரி காலை 5 மணிக்கு எழுந்துவிடுவதாகவும் அலுவலகப் பணிகளை முடித்து லேப்டாப்பை மூடும்போது இரவு 10 மணி ஆகிவிடுவதாகவும் தெரி வித்துள்ளார். வழக்கமாக 7 மணிக்கு பணிகளை முடித்து வீடு திரும்பி விடும் அவர் தற்போது இரவு 10 மணி வரை போராட வேண்டியிருப்பதாகக் குறிப்பிடு கிறார். கடந்த 20 நாட்களுக்கும் மேலான இந்த வேலைப் பளு வினால் ஏற்பட்ட உளைச்சலில் இருந்து விடுபட தற்போது உளவி யல் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று வருகிறார். வீட்டிலிருந்து அலுவலகப் பணிகளை மேற்கொள்வதில் பெரும்பாலானோர் மிகப் பெரும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளனர்.இதற்குக் காரணமே பணி...

ஆன்லைன் கிளாஸில் கல்லா கட்டும் தனியார் பள்ளிகள்!

கொரோனா தொற்று அதிகமான மார்ச் மாதம்தான் 11 மற்றும் 12 - ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கியது . 12 - ம் வகுப்புத் தேர்வுகள் முடிந்த நிலையில் , 11 - ம் வகுப்புத் தேர்வில் ஒன்று மட்டும் மீதமிருக்க , நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் , அதுவும் ரத்து செய்யப்பட்டுவிட்டது .பள்ளி மாணவர்கள் எல்லாம் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள் .ஏற்கனவே , ஆன்லைன் மூலம் பாடம் நடத்தும் பைஜூஸ் , வேதாந்தா , அப்கிரேட் , அக்காடமி போன்ற பல தனியார் நிறுவனங்கள் , இந்த நேரத்தைப் பயன்படுத்தி கல்லா கட்டி வருகின்றன . அதே பாணியில் 10 மற்றும் 11 - ம் வகுப்பு மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுப்பதாகத் தெரிகிறது. இதுகுறித்து 10 - ம் வகுப்பு படிக்கும் தனியார் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் விசாரித்தபோது , 10 - ம் வகுப்பு தேர்வுக்காக நாங்கள் கடுமையாக தயாராகிக் கொண்டிருந்தோம் இந் நிலையில்தான் , கொரோனா தொற்று இந்தியாவில் வேகமாகப் பரவத் தொடங்கியது .பிரதமர் ஊரடங்கை அமல்படுத்தியபோதுகூட தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் என்று காத்திருந்தோம் . ஆனால் , மார்ச் 25 - ம் தேதி முதல் 21 நாள் ஊர...

கொரோனாவுடன் நூறுநாட்கள், இரண்டேஇறப்புகள்.. எதிர்கொண்டகேரளம்..

♦ கொரோனா வைரஸின் முதல் நோயாளி குறித்து அறிவிப்புகள் வெளியாகி இன்றோடு நூறு நாட்கள் ஆனது.  ♦கேரளாவில் தான் முதன்முறையாக கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.  ♦ஆரம்பம் முதலே வெளிப்படைத் தன்மையுடன் அம்மாநில நடந்து கொண்டது தான் மக்கள் மத்தியில் கொரோனா விழிப்புணர்வு தீவிரமாக சென்றடைய காரணமாக அமைந்தது.  ♦மேலும் கொரோனா நோய் தொற்று குறித்து மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் முதல்வர் பினராயி விஜயனே நேரில் அறிவிக்கிறார்.  ♦மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கேட்டறிந்து அதனை செயல்படுத்துவதிலும் அதிக முனைப்பு காட்டுகிறது அம்மாநில அரசு. ♦பொதுமக்களின் தேவையை உணர்ந்து முதலில் பாதுகாப்பான முறையில், சிறையில் மாஸ்க்குகள் செய்யும் பணியை தீவிரப்படுத்தியது கேரளா.  ♦அனைவரும் N95 மாஸ்க்குகள் தான் உதவும்.  ♦இது  தேவைக்கு ஆகாது என்று பலரும் அப்போது கேலி செய்தனர்.  ♦ஆனால் தற்போதையை இந்திய அரசின் சுகாதாரத்துறை “வீட்டிலேயே மாஸ்க்குகளை தயாரித்து பயன்படுத்திக் கொள்ளலாம்.  ♦ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பருத்தி ஆடையையும் கூட 5நிமிடங்கள...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்பு

கரோனா பாதிப்பு, தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடித்தல் ஆகியவற்றின் காரணமாக தமிழகத்தில் அரசு, தனியாா் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்புள்ளது. கரோனா நோய்த்தொற்று காரணமாக தமிழகத்தில் பொதுத்தோவுகள், விடைத்தாள்கள் திருத்தம், ஆண்டு இறுதித்தோவு என கல்வி சாா்ந்த செயல்பாடுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதேவேளையில், மாணவா்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு கடந்த மாா்ச் 22-ஆம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டு, ஒன்பதாம் வகுப்பு வரை அனைவரும் தோச்சி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பள்ளிக் கல்வித் துறையின் வழக்கமான கால அட்டவணையின்படி பள்ளிகளை ஜூன் 1-ஆம் தேதி திறக்க வேண்டும். ஆனால், தற்போதுள்ள சூழலில் பள்ளிகள் திறக்கப்படும் நாள் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து அதிகாரிகள் சிலா் கூறுகையில், நிகழாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தோவு கட்டாயமாக நடைபெறும். அதற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. தோவுக்கு குறைந்தபட்சம் 15 நாள்கள் முன்பாக அது குறித்த அட்டவணை வெளியாகும். மேலும் பொதுத்தோவுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெறவுள்ளது. இ...

தமிழகத்தில் 22 மாவட்டங்கள் " ஹாட் ஸ்பாட் " - மத்திய அரசு அறிவிப்பு.

இந்தியாவில் மொத்தம் 170 மாவட்டங்கள் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் 22 மாவட்டங்கள் " ஹாட் ஸ்பாட் " என மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 22 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிப்பு. அவை : 1.சென்னை 2.திருச்சி 3.கோவை 4.நெல்லை 5.ஈரோடு 6.வேலூர் 7.திண்டுக்கல் 8.விழுப்புரம் 9.திருப்பூர் 10.தேனி 11.நாமக்கல் 12.செங்கல்பட்டு 13.மதுரை 14.தூத்துக்குடி 15.கரூர் 16.விருதுநகர் 17.கன்னியாகுமரி 18.கடலூர் 19.திருவள்ளூர் 20.திருவாரூர் 21.சேலம் 22.நாகை x

வருக புத்தாண்டே..

ஆண்டே! வருக! - மேலும் ஆள்பவளே வருக! - எங்களுக்கு ஆனந்தம் தருபவளே வருக! கடந்த ஆண்டுகள் எல்லாம் கல்லை விழுங்கியக் கடலாய்க் கரைந்துப் போனது. படிகாரங்கள் கற்கண்டுகளாய் பதம் பார்த்ததுப் போல் இதம் பாராமல் சென்றது ஆண்டுகள். கடல் விழுங்கியக் கதை எல்லாம் போய் சதை விழுங்கும் சண்டாளர்கள் சாதனையாளர்களாய் சாதிக்க வைத்தது அந்த ஆண்டுகள். இனி இவையெல்லாம் உன் ஆண்டில் இல்லாமல் மறைந்துப் போகட்டும். நீ வருவதற்கு முன் - எங்களின் நிம்மதியையும் அரித்துவிட்டது சென்ற ஆண்டுகள். - ஆம் வந்தோரை வரவேற்று - தேநீர் விருந்தளிக்கவும் தேவையான பால் விலையும் ஏறிவிட்டது. இருட்டில் தவித்த வீடுகளில் இலவச மின் இணைப்பும் உல்லாசமாக எரியாமல் மின்வெட்டில் மழுங்கிவிட்டது. மின் விநியோக உபயோகக் கட்டணமும் உயர்ந்துவிட்டது. இன்னும் நாங்கள் உயரவே இல்லை. நீண்ட தூரப் பயணிக்கவும் நாலுக் காசும் எங்களுக்கில்லை. பேருந்துக் கட்டணமும் ஏறிவிட்டது. - இன்னும் நாங்கள் ஏற்றமிகு வாழ்க்கையில் வாழவே இல்லை. அரசுப் பணியில் இருந்தாலும் அரசுக்கு செலுத்தும் வரியும் அகலவே இல்லை. - சென்ற ஆண்டில் இரு அரசும் அரசுப் பணியாளர்களுக்கு அள்ளித்தந்த சம்பளம...

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு.!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு வரை அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டது. அதேபோல பத்தாம் வகுப்புத் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டன. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் தேர்வு நடைபெறுமா..? அல்லது ரத்து செய்யப்படுமா.? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் சமீபத்தில் முதலமைச்சர் பழனிச்சாமி அளித்த பேட்டியில் பத்தாம் வகுப்பு தேர்வு முக்கியமானது. அதனால் அது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவித்தார். இதையெடுத்து தமிழகத்தில் ஊரடங்கு ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டால் 10-ம் வகுப்பு தேர்வை பள்ளிக்கல்வித்துறை ஒத்திவைத்துள்ளது.தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளதே தவிர ரத்து செய்யப்படவில்லை என பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.மேலும் தேர்வு நடத்தப்படும் தேதி ஆலோசனைக்கு பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு

கொரானா - மறந்து சிரிப்போம்..

1.பெரிய துணிக்கடை அதிபரா இருந்தாலும், அவருக்குப் பிறக்கிற குழந்தை என்னமோ அம்மணமாத்தான் இருக்கும்.😊 💞2. அதிக மார்க் வாங்கி மாநிலத்திலேயே முதல் மாணவனா வந்தாலும், ஆம்லெட் சாப்பிடணும்னு ஆசைப்பட்டால் முட்டை வாங்கித்தான் ஆகணும்...😊 💞3. என்னதான் இட்லி மல்லிகைப்பூ மாதிரி இருந்தாலும் அதை தலையில் வச்சிக்க முடியாது...😊 💞4. ஒரு பெண் எவ்வளவு சிவப்பாக இருந்தாலும், அவங்க நிழல் கருப்பாகத்தான் இருக்கும்😊 💞5. பொங்கலுக்கு மட்டும் தான் அரசு விடுமுறை. ஆனால் இட்லி தோசைக்கு எல்லாம் விடுமுறை விடுவதில்லையே ஏன்....?😊 💞6. என்னதான் நீ மாடா உழைச்சாலும் உனக்கு கொம்பு முளைக்காது😊 💞7. குச்சி மிட்டாய்ல குச்சி இருக்கும். பல்லி மிட்டாய்ல பல்லி இருக்காதுப்பா....😊 💞8. என்னதான் அரசியல்வாதிங்க கட்சி தாவினாலும்.... அவங்களுக்கு வால் முளைக்காது....😊 💞9. பிளேன் என்னதான் உயர உயர பறந்தாலும்.... பெட்ரோல் போட கீழே வந்துதான் ஆகணும்.....😊 💞10. என்னதான் ஒருத்தருக்குத் தலைகனம் இருந்தாலும்.... அது எத்தனை கிலோனு எடைபோட்டு பார்க்க முடியாது....😊 💞11. கோழிக்கு கோடி கணக்குல தீனி வாங்கி போட்டாலும் அது முட்டைதான...