பத்தாம் வகுப்பு தேர்வு நடத்துவது தொடர்பாக பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார். இதையடுத்து, பத்தாம் வகுப்பு தேர்வு ஜூலை மாதம் தள்ளிப் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மார்ச் 25ம் தேதி முதல் தமிழகத்தில் பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது முதல்வர் நேற்று வெளியிட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் இந்த ஊரடங்கு நான்காவது கட்டமாக 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஒத்தி வைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு, பிளஸ் 1 தேர்வில் 3 தேர்வுகள் ஜூன் 1ம் தேதி முதல் நடக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் நேற்று ஊரடங்கு நீடிக்கும் என்று முதல்வர் அறிவித்துள்ளதாலும், கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதாலும், பெரும்பாலான மாணவர்கள் வெளியூர் சென்று இருப்பதாலும், கிராம மலைப்பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத வர முடியாத சூழல் இருப்பதால் பத்தாம் வகுப்பு தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்று ஆசிரியர்கள், கல்வியாளர்கள், அரசியல் கட்சித்தலைவர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனால், பத்தாம் வகுப்பு தேர்வை ஒத்தி வைக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு எடுக்க உள்ளது.
இந்நிலையில், 3வது கட்ட ஊரடங்கு நேற்று முடிவடைந்த நிலையில் மேலும் 31ம் தேதி வரை ஊரங்கு நீடிக்கும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டும், பத்தாம் வகுப்பு தேர்வு நடத்துவது தொடர்பாகவும் பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் இன்று பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர், மற்றும் இயக்குநர்களுடன் அவசர ஆலோசனை நடத்த உள்ளார். இன்று நடக்கும் ஆலோசனை கூட்டம் குறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது: தள்ளி வைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு ஜூன் மாதம் 1ம் தேதிமுதல் நடக்கும் என்று கடந்த வாரம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். அதை ஒத்தி வைக்க வேண்டும் என்று பல கோரிக்கைகள் வந்ததாலும், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதாலும் பத்தாம் வகுப்பு தேர்வு ஜூலை மாதம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்படும்.
பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி 27ம் தேதி தொடங்குவது உறுதியானதால் அனைத்து தேர்வுகளுக்கும் விடைத்தாள் திருத்தி முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் ஜூன் மாதம் நடக்க உள்ள பிளஸ் 1 தேர்வு குறிப்பிட்ட தேதியில் நடத்தப்படும். ஆனால் பத்தாம் வகுப்பு தேர்வு மட்டும் மீண்டும் ஒத்தி வைக்கும் அறிவிப்பு இன்று வெளியாகும் என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hi mam ,how are you
ReplyDeleteAny news about pg trb mam
ReplyDeleteHi friend, yes as how government so stubborn in conducting 10th exam similarly after corona reaches saturation point, sure we will have pgtrb..
ReplyDeleteAnd however its gonna be online, so there will be no issues.. Whoever preparing for next og, prepare well..
ReplyDelete*pg
DeleteSgt post podunga
ReplyDeleteSgt notification varuma
ReplyDelete