Skip to main content

ஒத்திவைக்கப்படுகிறதா 10ம் வகுப்பு தேர்வு?: அமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை





பத்தாம் வகுப்பு தேர்வு நடத்துவது தொடர்பாக பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார். இதையடுத்து, பத்தாம் வகுப்பு தேர்வு ஜூலை மாதம் தள்ளிப் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மார்ச் 25ம் தேதி முதல் தமிழகத்தில் பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது முதல்வர் நேற்று வெளியிட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் இந்த ஊரடங்கு நான்காவது கட்டமாக 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஒத்தி வைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு, பிளஸ் 1 தேர்வில் 3 தேர்வுகள் ஜூன் 1ம் தேதி முதல் நடக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவித்து இருந்தார்.

இந்நிலையில் நேற்று ஊரடங்கு நீடிக்கும் என்று முதல்வர் அறிவித்துள்ளதாலும், கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதாலும், பெரும்பாலான மாணவர்கள் வெளியூர் சென்று இருப்பதாலும், கிராம மலைப்பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத வர முடியாத சூழல் இருப்பதால் பத்தாம் வகுப்பு தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்று ஆசிரியர்கள், கல்வியாளர்கள், அரசியல் கட்சித்தலைவர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனால், பத்தாம் வகுப்பு தேர்வை ஒத்தி வைக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு எடுக்க உள்ளது.
இந்நிலையில், 3வது கட்ட ஊரடங்கு நேற்று முடிவடைந்த நிலையில் மேலும் 31ம் தேதி வரை ஊரங்கு நீடிக்கும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டும், பத்தாம் வகுப்பு தேர்வு நடத்துவது தொடர்பாகவும் பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் இன்று பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர், மற்றும் இயக்குநர்களுடன் அவசர ஆலோசனை நடத்த உள்ளார். இன்று நடக்கும் ஆலோசனை கூட்டம் குறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது: தள்ளி வைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு ஜூன் மாதம் 1ம் தேதிமுதல் நடக்கும் என்று கடந்த வாரம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். அதை ஒத்தி வைக்க வேண்டும் என்று பல கோரிக்கைகள் வந்ததாலும், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதாலும் பத்தாம் வகுப்பு தேர்வு ஜூலை மாதம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்படும்.

பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி 27ம் தேதி தொடங்குவது உறுதியானதால் அனைத்து தேர்வுகளுக்கும் விடைத்தாள் திருத்தி முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் ஜூன் மாதம் நடக்க உள்ள பிளஸ் 1 தேர்வு குறிப்பிட்ட தேதியில் நடத்தப்படும். ஆனால் பத்தாம் வகுப்பு தேர்வு மட்டும் மீண்டும் ஒத்தி வைக்கும் அறிவிப்பு இன்று வெளியாகும் என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comments

  1. Any news about pg trb mam

    ReplyDelete
  2. Hi friend, yes as how government so stubborn in conducting 10th exam similarly after corona reaches saturation point, sure we will have pgtrb..

    ReplyDelete
  3. And however its gonna be online, so there will be no issues.. Whoever preparing for next og, prepare well..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தங்க ஓடும் தமிழ்நாடும்..

ஒரு ஊரில் ஒரு பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான். அவனுடைய சொத்து என்று பார்த்தால் அழுக்குப் பிடித்த உடை, கரிபிடித்த ஒரு பிச்சை ஓடு என இவ்வளவுதான். இந்த சூழ்நிலையில் தினமும் அவன் அந்த பிச்சை ஓட்டை நீட்டி எல்லோரிடமும் பிச்சை கேட்பது அவன் வழக்கம். எவன் வந்தாலும் பிச்சை கேட்பான். ஒருநாள் ஒரு துறவியிடம் போய் தன் பிச்சை ஓட்டை அவர் முகத்துக்கருகில் நீட்டி பிச்சைக் கேட்டான். முதலில் முகம் சுழித்த அவர், சற்று நிதானத்துக்கு வந்து, அவனையும், அந்த ஓட்டையும் மாறி மாறி பார்க்க தொடங்கினார். சட்டென்று அவனிடமிருந்த அந்த பிச்சை ஓட்டை பிடுங்கினார். பிச்சைக்காரன் பயந்து போனான். துறவி தன் பிச்சை ஓட்டை எடுத்துக் கொள்வாரோ என்னு பயந்தான். ஆனால் அந்த துறவியோ அந்த ஓட்டை மேலும் கீழும் ஆராய்ந்தார். பிறகு பிச்சைக்காரனைப் பார்த்து “எவ்வளவு காலமா பிச்சை எடுக்கறே?” எனக் கேட்க, “நெனப்பு தெரிஞ்ச காலத்துல இருந்தே இதாங்க சாமி!” என்றான் பிச்சைக்காரன். இந்தப் "பிச்சை" ஓட்டை எவ்வளவு  காலமா வச்சிருக்க? என அவர் மறுபடியும் கேட்க.. எங்க தாத்தா, அப்பான்னு இரண்டு தலைமுறைக்கு முன்னாடில இருந்தே இந்த ஓட்டை வச்சிருக்கோம்.  யார

கர்மா..

 கர்மா பொல்லாதது.. அதை வெல்ல யாராலும் முடியாதது..  இறைவனே கர்மாவுக்கு கட்டுப்பட்டவன் .. மறைந்ந பிரதமர் இந்திராவால் சஞ்சய்காந்தி அரசியல்வாதியாகப் பயிற்சிபெற்றார். ராஜீவ்காந்தி விமானியாகப் பயிற்சி பெற்றார்.. ஆனால், ராஜீவ்காந்தி அரசியல்வாதி ஆனார். சஞ்சய்காந்தி விமான விபத்தில் மாண்டார். எம்ஜிஆர் மறைவுக்கு பின் ஜானகி அம்மாள் முதல் அமைச்சர் ஆனார், ஆர் எம் வீரப்பன் வசம் அதிகாரம் போய்விடும் என்று எண்ணிய திருநாவுக்கரசு ஜெயலலிதாவை முன்னிறுத்தி அதிகாரத்தை தன் கைக்குள் கொண்டு வந்து விடலாம் என்று எண்ணிய திருநாவுக்கரசை கட்சியில் இருந்து ஜெயலலிதாவால் தூக்கி எறியப்பட்டார். ஸ்டாலினும் சசிகலாவும் , வைகோவும் 30 வருசமா முதல்வர் கனவில் இருந்தாங்க... ஆனால்... ஓபிஎஸ், ஈபிஎஸ் முதல்வர்கள் ஆகி பிரபலமானார்கள்... எம்ஜிஆர், அண்ணாதுரை, காமராஜர் எதிர்பாராத நிலையில் மரணித்தார்கள் பிரபலமாக இருக்கும் போதே... ராஜீவும், பிரபாகரனும் தங்களின் பிரபல்யம் சறுக்கும் போது மரணித்தார்கள்... அதுவும் வேரொருவரால் கொல்லப்பட்டார்கள்... ஈவேரா விநாயகர் சிலையை கல் என கூறி தூக்கி ஏறிந்தார்... ஆனால், தனது சிறுநீரகத்தில் உருவான கல்லை கூட

TODAY'S THOUGHT..

ஓருவர் ஒரு வங்கியில் பணம் எடுத்துக்கொண்டு, பணப்பெட்டியை பின்னால் மாட்டிக்கொண்டு டூவீலரில் வேகமாகச் செல்லுகிறார். வண்டியின் அதிர்வில் அந்தப் பெட்டி லேசாகத் திறந்துகொண்டு, 100 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட ஒரு கட்டு கீழே விழுந்துவிடுகிறது. அது தெரியாமல் அந்த நபர் வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றுவிடுகின்றார். (அந்த நபர் இக்கதையில் இனி வரமாட்டார்) கீழே விழுந்த வேகத்தில் 100 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட அந்த கட்டிலிருந்து ஒரே ஒரு பத்துரூபாய்நோட்டு மட்டும் விடுபட்டு காற்றில் பறந்து சிறிது தூரத்தில் கிடக்கிறது. அந்த ஒற்றை பத்துரூபாய் நோட்டு இருந்த வழியில் ஒருவன் வருகிறான். இந்த நோட்டைக் கண்டு, ',இன்று நரி முகத்தில் விழித்திருக்கிறேன் போல' என நினைத்து, மிகவும் சந்தோஷமடைகிறான். அந்த நோட்டை எடுத்துக்கொண்டு ஹோட்டலுக்குப் போனான். இரண்டு இட்லி - ஒரு காப்பி (அன்றய விலைவாசியில்) சாப்பிட்டான், அருகிலிருந்த பிள்ளையார் கோவில் உண்டியலில் மீதியிருந்த ஒரு ரூபாயைப் போட்டு, பிள்ளையாருக்கு நன்றி சொன்னான்.  சந்தோஷமாக வீடு திரும்பினான். மீதி 99 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட கட்டு அது விழுந்த இடத்திலேயே கிடந்தது. அ