தர்ம குணம் படைத்த மன்னன் போஜனிடம் விவசாயி ஒருவர், மகளின் திருமணத்திற்காக பணம் பெற எண்ணினார். தலைநகருக்கு புறப்பட்டார்... வழியில் சாப்பிட ரொட்டி கட்டிக் கொண்டார். வழி நெடுக, கடவுளே! திருமணத்திற்கு வேண்டிய அளவு பணம் தர மன்னர் சம்மதிக்க வேண்டும், என வேண்டிக் கொண்டார். பசியெடுக்கவே, ஒரு குளக்கரையில் அமர்ந்து ரொட்டியைக் கையில் எடுத்தார். மனதிற்குள், இந்தஉணவைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி, என்றார். அப்போது நாய் ஒன்று அவர் எதிரில் எலும்பும், தோலுமாக வந்து நின்றது. இரக்கப்பட்ட அவர் ஒரு ரொட்டியை அதன் முன்வீசினார். ஒரே விழுங்காக உள்ளே தள்ளிய நாய், மீண்டும் ஆவலுடன் பார்த்தது. இரக்கப்பட்ட விவசாயி அத்தனை ரொட்டியையும் கொடுத்து விட்டார். ஒரு நாள் சாப்பிடா விட்டால் என்ன உயிரா போயிடும்? ராஜா அவர் தகுதிக்கு தானம் கொடுத்தால், பிரஜையான நாமும் முடிந்ததை செய்வது தானே முறை எனதனக்குள் சொல்லிக் கொண்டார். பசியைப் பொறுத்துக் கொண்டுதலைநகரை அடைந்தார். அங்கிருந்த தர்மசத்திரத்தில் சாப்பிட்டார். பிறகு மன்னனைச் சந்தித்து, தான் வந்தவிஷயத்தை தெரிவித்தார். போஜன் அவரிடம்,என்னிடம் தர்மம் கேட்டு வந்துள்ளீர்களே...